June 2024

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️

நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள பாராங் கல்லின் மீது தனது ஜேக்கெட்டை முகத்தின் மேல் வெயிலுக்காக போர்த்திக் கொண்டு தன்னை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தவனின் துயிலைக் கலைக்குமாறு யாரோ ஒருத்தி பாறைக்கு அந்தப் பக்கமாக அழுது கொண்டிருக்க அவள் புலம்பலை காது கொடுத்துக் கேட்கலானான். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்ன பொருத்த வரைக்கும் நான் என் மனசாட்சிக்கு நியாயமாதான் நடந்துக்குறேன். ஆனால் எனக்கு நடக்குற எதுவுமே நியாயமா இல்லையே. முதல்ல அந்த கடவுள் என்கிட்ட இருந்து […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️

வந்த முதல் நாளே இவ்வளவு மேசமாக செல்ல, ஆதவன் உன் பணி முடிந்துவிட்டது என்றால் கிளம்பு. நான் என் பணியைத் தொடர வேண்டும் என்று மதியை அயல் நாட்டிற்கு துரத்திவிட அனைவரது துயிலும் கலைந்தது. யூவி எழுந்து யன்னலை எட்டிப் பார்க்க பனி சூரிய வெளிச்சத்தை மறைத்தருந்தது. மணியை கடிகாரத்தில் பார்த்தாள். 05:15 எனப் பல்லைக் காட்டியது. “15 நிமிசம் லேட்டா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டு எங்கு குளிப்பது என்று யோசித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️

இங்கு அபி தன் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தாள். “ஏன்டி இப்படி பண்ண? போயும் போய் அவன்கிட்டயா வம்பிழுப்ப? அவன போய் பகைச்சிக்கிட்ட. நீ சும்மா இருந்திருந்தா அவன் யாரோ பொண்ணு வீட்டுல இருந்தா இருந்துட்டு போறான்னு நினைச்சிருப்பான். இதுக்குள்ள நாம நாடகம் வேற போட்டுட்டு இருக்கோம். இதுக்கு நீ ஆதித்ய வர்மா மாமா பொண்ணுன்னு தெரிஞ்சா நம்ம கதை காலி. எனக்கு பயமா இருக்குடி. முதல்ல கிளம்பு. நீ இங்க இருக்க வேணாம். கார்த்திக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️ Read More »

நாணலே நாணமேனடி – 01

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை, “நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. “ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்!

நாணலே நாணமேனடி – 01 Read More »

வருவாயா என்னவனே : 23

காத்திருப்பு : 23 முனிவரின் வாக்கினைக்கேட்ட கேட்ட மதி மயங்கி விழுந்தார். பின் கமலேஷ் பரிசோதித்துப் பார்க்க அதிர்ச்சியினால் மயங்கி விழுந்துள்ளார் என்றார். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்தில் எழுந்தார். முனிவரிடம் சென்றார். முனிவர் புன்னகையுடன் நான் சொல்ல வந்ததை முழுமையாக கேளம்மா என்றார். ” பலரின் அவச்சொல்லின் மத்தியிலே உன் மகன் திருமணம் நடக்கும். சூழ்ச்சியில் அகப்பட்டு நண்பன் துணையால் சூழ்ச்சியினை வெல்வான். மனைவியை பிரிந்திருக்கும் காலம் வரும். சில காலங்கள்தான். மீண்டும் அவனவள்

வருவாயா என்னவனே : 23 Read More »

வருவாயா என்னவனே : 22

காத்திருப்பு : 22 தேவியின் அம்மா என்ற குரலுக்கு மதியும் குமாரும் ஓடி வந்தனர். “என்னம்மா தேவி ஏன் இப்பிடி கத்தின?” “இங்க பாருமா வதனா முகத்தை” வதனாவின் மதிமுகத்தில் சூர்யாவின் ஐந்துவிரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்தது. “என்ன மதி இரு இப்பிடி அறைஞ்சிருக்கான். தேவி முதல்ல கமலேஷ்கு போன் பண்ணி வதனா பற்றி சொல்லி சீக்கிரமா வரச்சொல்லுடா” “சரிப்பா” “அவனுக்கு கோவம் வந்தா இப்பிடித்தாங்க. இருங்க அத்தைட்ட சொல்லிட்டு வர்றன். இந்த தேவி சத்தம்போட்டதில

வருவாயா என்னவனே : 22 Read More »

வருவாயா என்னவனே : 21

காத்திருப்பு : 21 சூர்யாவின் அறைக்கதவைத் திறந்த வதனா பதற்றத்தில் ஜூஸ்ஸை தவறவிட்ப்போக அதனைப் பார்த்த சூர்யா விரைந்து வந்து ஜூஸைப் பிடித்தான். “ஏய் என்னாச்சினு ஜூஸ்ஸை கீழ போடப் பார்த்த?” அவனைக்கண்டதிலேயே பயந்த வதனா அவன் சத்தமிட்டதும் அழத் தயாரானாள். “ஸ்… ஏன் இப்ப அழப்பாக்குற?” “நீ….ங்…..க…..ஏ…..ன்.. இ….ப்….பி…டி….நி…..க்….கு…றீ…..ங்…..க?” “எப்பிடி ” என்றவன் அப்போதுதான் தன்னைப் பார்த்தான். குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் இருந்தான். குளித்ததற்கு அடையாளமாக வெற்றுமார்பினில் காணப்பட்ட நீர்த்துளிகளுடன் இருந்தான். பின்பு வதனாவைப்

வருவாயா என்னவனே : 21 Read More »

வருவாயா என்னவனே : 20

காத்திருப்பு : 20 நானும் உங்களோட உக்காரலாமா என்ற குரலில் திரும்பிய தேவி கண்டது தன்னவனைத்தான். “நீங்க எப்பிடி கமலேஷ் இங்க?” “ஒரு பிரண்ட் வர்றன் என்னு சொன்னான் அப்புறம் வேலை வரலடா என்று சொல்லிட்டான். சரி கிளம்பலாம்னு பாத்தா நீ வர்ற அதுதான் பாத்திட்டு போலாம்னு வந்தன்” “சரி வாங்க பிரண்ட்ஸ் இது கமலேஷ்வர் என்னோட வருங்காலக் கணவர். கமலேஷ் இவங்க என்னோட பிரண்ட்ஸ்.” “hello” “hi sir” “sir எல்லாம் வேணாம் friendlyya பேசுங்கம்மா”

வருவாயா என்னவனே : 20 Read More »

வருவாயா என்னவனே : 19

காத்திருப்பு : 19 ஆதவன் தன் கரங்களை நீட்டி மக்களை அணைத்தவாறு எழுந்து வந்தான். விடியலிலேயே கண் விழித்த வதனா குளித்துவிட்டு பாட்டியை பார்த்துவிட்டு கீழே வந்தாள்.சமையலறைக்கு சென்றாள். அங்கு யாரும் இல்லாமையால் அவளே காபி போட்டாள். அப்போது அங்கு வந்த மதி “என்னம்மா நேரத்துக்கு எழும்பிட்டயாடா?” “ஆமா அத்தை அதுதான் நானே காபி போட்டுடன் நீங்க மாமாக்கு எடுத்துட்டு போங்க நான் மற்றவங்களுக்கு கொடுக்கிறன்” “உனக்கெதுக்குமா கஸ்ரம் நானே கொடுக்கிறன்” “பரவால்ல அத்தை நீங்க போங்க”

வருவாயா என்னவனே : 19 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02

காதல் : 02 தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்  அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள். “என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு. சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02 Read More »

error: Content is protected !!