21. தொடட்டுமா தொல்லை நீக்க

4.8
(105)

தொல்லை – 21

மிதமான காலை வெயிலோ சாளரங்களினூடாக உள்ளே நுழைந்து அஞ்சலியின் முகத்தில் மென்மையான பொன் ஒளியைப் பரப்பியது.

கதிரின் பிரம்மாண்டமான படுக்கை அறையில் தயாராகி நின்றவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள்.

இளஞ் சிவப்பு நிறத்தில் மின்னும் நவீன லாங் ஃப்ராக் அவளுக்கு தேவதையின் தோற்றத்தை அளித்தது.

கதிர் அவளுக்காக வாங்கிக் கொடுத்த மெல்லிய வைர நகைகளும் அவிழ்ந்து புரளும் கூந்தலும் அவளை இன்னும் அழகாக்கின.

தன் கணவனுடைய தேர்வை அவளால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

அந்த ஆடை அவளுக்கு மிகவும் சௌகரியமாகவும் அழகாகவும் இருந்தது.

சின்னச் சின்ன கற்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை தன் கரங்களால் வருடிக் கொண்டாள் அஞ்சலி.

கதிரோ அவளைப் பார்த்து மெய்மறந்து போனான்.

“அம்மு… இந்த லுக்குல நீ ஏஞ்சல் மாதிரி இருக்க… இன்னைக்கு காலேஜ்ல எல்லாரையும் உன்னை திரும்பி பார்க்க வைக்கப் போற…” என இரசனையாகக் கூறினான் அவன்.

அஞ்சலியின் கன்னங்கள் சிவந்து போயின.

“போங்க மாமா… எப்பவும் இப்படி கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கீங்க…” என சிணுங்கினாள் அவள்.

“எதே கிண்டலா..? நிஜமாதான்டி சொல்றேன்.. நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க..” என்றான் அவன்.

அவளுடைய மனதில் ஒரு இனம்புரியாத உற்சாகம் தவழ்ந்தது.

“இந்த ட்ரெஸ் ரொம்ப அழகா இருக்குங்க..”

“இது நம்ம கம்பெனில ஸ்பெஷலா ரெடி பண்ணது… நேத்து நைட் உனக்காக வர வச்சேன்..” என்றான் அவன்.

எந்தவித ஒப்பனையும் இன்றி அழகாக ஜொலித்தவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என பரபரத்த கரங்களை மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் அவன்.

“நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க மாமா..” என்றாள் அவள்.

அவளுடைய முட்டை விழிகளும் அவனை ரசிப்பதை கண்டு கொண்டான் அவன்.

அந்தப் பார்வையில் அவனுடைய கட்டுப்பாடுகள் தகர்ந்து விட்டன.

வேகமாக அவள் அருகே நெருங்கி வந்தவன் அவளுடைய இடையை அழுத்தமாகப் பற்றி அவளுடைய சிவந்த உதடுகளில் தன்னுடைய அதரங்களை அழுத்தமாகப் புதைத்தான்.

அந்த அழுத்தமான நீண்ட முத்தத்தில் உருகிப் போனாள் அவள்.

அவளோ தொய்ந்து அவன் மார்பில் சாய்ந்து விட, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,

“என்ன என்னடி பண்ணி வச்சிருக்க..? என்னால கண்ட்ரோலாவே இருக்க முடியல..” என்றான் கரகரப்பான குரலில்.

அவளுக்கோ முகம் சிவந்து போனது.

“நீங்கதான் மாமா என்னை எ…என்னவோல்லாம் ப… பண்றீங்க..”

“ஹா… ஹா… பேபி பங்ஷனுக்கு இன்னும் 30 மினிட்ஸ் டைம் இருக்கு.. மறுபடியும் 15 நிமிஷத்துல உன்னால ரெடியாக முடியுமா..?” என அவன் கேட்க,

அவளுக்கோ ஏன் இப்படிக் கேட்கிறான் என்று புரியவே இல்லை.

“ஆமா மாமா பத்து நிமிஷத்துலையே ரெடியாயிடுவேன்..” என அவள் புரியாமல் பதில் கூற,

அவ்வளவுதான் கடகடவென அவளை பின்னால் திருப்பி அவள் அணிந்திருந்த அந்த நீளமான ஆடையின் ஜிப்பை முதுகில் இருந்து கீழ் இடைவரை கழற்றியவன் அவளுடைய ஆடையை அகற்றத் தொடங்கி விட பதறிப் போய் அவனை விட்டு விலகி நின்றவளுக்கோ முகம் செங்கொழுந்தாக மாறிப்போனது.

தோளில் இருந்து நழுவிய ஆடையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள்,

“ஐயோ மாமா என்ன பண்றீங்க..?” எனப் பதறினாள்.

“இவ்வளவு அழகான பொண்டாட்டிய எதுவுமே பண்ணலேன்னா எப்படி..?” என அவன் மீண்டும் அவள் அருகே வர,

“அச்சோ… மாமா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாதீங்க… முதல்ல இருந்து குளிச்சு ட்ரெஸ் பண்ண 10 நிமிஷம் பத்தாது‌.. அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடும்.. ப்ளீஸ் ப்ளீஸ்..” என அவள் கெஞ்ச,

அவனுக்கோ தன் தாபத்தை அடக்க முடியவில்லை.

அவளை நெருங்கி இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவளுடைய உதடுகளில் மட்டும் கவி எழுதிவிட்டு விலகினான்.

அவன் கழற்றிய ஆடையை அவனே அவளுக்கு அழகாக அணிவித்து விட அவளுக்கோ அவனுடைய கொஞ்சலும் நெருக்கமும் பிடிக்கத்தான் செய்தது.

“ஏங்க ஏதோ ஃபங்ஷன்னு சொன்னீங்க… என்ன ஃபங்ஷன்னு இப்போ வரைக்கும் சொல்லவே இல்லையே..” எனக் கேட்டாள் அவள்.

“இன்னைக்கு நம்ம காலேஜோட ஆண்டு விழா… அதுதான் ஸ்பெஷல்… இன்னைக்கு உன்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தணும்…” எனக் கூறியவன் அவளை காரை நோக்கி அழைத்துச் சென்றான்.

அஞ்சலியின் மனதில் ஆர்வமும் பதற்றமும் கலந்து புரண்டன.

“மாமா… உங்க காலேஜ் எப்படி இருக்கும்? நான் அங்க பொருந்துவேனா?” எனக் கேட்டாள் அவள்.

“அம்மு… நீ இருக்கிற இடத்தை அழகாக்கிடுவ… கவலைப்படாத… நான் உன்கூட இருக்கேன்ல..” என்றான்.

அவர்களுடைய கார் சென்னையின் பரபரப்பான தெருக்களை கடந்து ஒரு பிரம்மாண்டமான ஃபேஷன் டிசைனிங் கல்லூரியின் முன் நின்றது.

கல்லூரி வளாகம் வண்ண மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆண்டு விழாவிற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

மதுராவும் தன் நண்பர்களுடன் அங்கே வந்திருந்தாள்.

அவளுடைய மனம் ஆர்வத்தால் நிரம்பியிருந்தது.

அவளுடைய நண்பன் அர்ஜுனோ அவளைப் பார்த்து “மது… இன்னைக்கு நம்ம காலேஜோட ஓனர் வர்றாராம்…” என்றான்.

“ஓஹ்..” என்றவள் அலட்சியமாக திரும்பி விட,

“அடிப்பாவி நான் எவ்வளவு முக்கியமான ஒருத்தரை பத்தி சொல்றேன் நீ கண்டுக்காம அந்த பக்கம் திரும்புற..”

“ஜஸ்ட் இந்த காலேஜோட ஓனர் தானே..? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..? வயசு போனவரா இருப்பாரு.. அவரப் பார்த்து நான் என்னடா பண்ணப் போறேன்..?” எனக் கேட்டாள் மதுரா.

“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நிஜமாவே அவர் பெரிய அப்பாடக்கர்தான்.. சென்னைலயே மிகப்பெரிய பணக்காரர் அவரு… அவரோட பிஸ்னஸ் உலகம் முழுக்க பரவி இருக்கு… ஃபேஷன் டிசைனிங் மட்டுமில்ல… ஹோட்டல்ஸ் ஜூவல்லரி எக்ஸ்போர்ட்ஸ்னு எல்லாமே அவரு கைல இருக்குடி..” என்றான் அவன்.

மதுராவின் விழிகள் வியப்பில் விரிந்தன.

“என்ன சொல்ற அர்ஜுன்… இப்படி ஒரு ஆளு இந்த காலேஜோட ஓனரா… வாவ் அவரு பேரு என்ன?” எனக் கேட்டாள்.

அவளுடைய தோழி சுபாவோ சிரித்தவாறு “மது… நீ நினைக்கிற மாதிரி இவரு வயசானவரு இல்லை…. பக்கா ஹேன்ட்ஸம் ஆளுடி… அவரைப் பார்த்தாலே எந்தப் பொண்ணுக்கும் மயக்கம் வரும்… அப்படி ஒரு ஸ்டைலிஷ் லுக்… ஷார்ட்டா சொல்லணும்னா இந்தக் காலேஜோட கனவுக் கண்ணனே அவர்தான்..

இந்த காலேஜ்ல அவருக்கு காம்பெடிஷன் அதிகம்டி… எப்படியாவது அவரைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட லைஃப் ஸ்டைலே மாறிடும்..” என்றாள் அவள்.

“ஏய் அவரு என் ஆளு..” என்றாள் இன்னொருத்தி.

மதுராவுக்கு வியப்பு மேலிட “யாருடி இந்த அழகன்…? இவ்வளவு பெரிய ஹேன்ட்ஸமான பணக்காரன நான் பாத்தே ஆகணுமே.‌” என்றாள்.

அவளுடைய நண்பர் கூட்டமோ கலகலத்துச் சிரித்தது.

அவளுடைய மனம் அந்த ஃபேமஸான நபரைப் பார்க்க ஆவலில் துடித்தது.

சற்று நேரத்தில் விழா இனிதே தொடங்கியது.

முதல்வர் உரையாற்றி முடித்ததும் “நமது கல்லூரியின் உரிமையாளரும் இந்த விழாவின் முதன்மை விருந்தினருமான திரு. கதிர்வேலன் அவர்களை மேடைக்கு வரவேற்கிறோம்…” என மேடையில் அறிவிக்கப்பட்டது.

கதிர்வேலன் என்ற பெயரில் மதுராவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

“கதிர்வேலனா…? அவனா…?” என மனதிற்குள் அதிர்ந்தவள் அடுத்த நொடியே தன்னுடைய எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்தாள்.

இவ்வளவு பெரிய இடத்தில் நிச்சயம் அந்தப் பட்டிக்காட்டு கிராமத்தானால் இருக்கவே முடியாது என எண்ணியவள் மேடையை நோக்கினாள்.

அங்கே கம்பீரமாக அஞ்சலியின் கரத்தைப் பற்றி மேடை ஏறிய கதிரைக் கண்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

பட்டிக்காட்டான் என எண்ணியிருந்த அவனுடைய தோற்றம் இப்போது மாறி இருந்த விதத்தைக் கண்டவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.

அதிர்ச்சி தாங்க முடியாது தன் அருகே இருந்த அர்ஜுனின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் அவள்.

கருப்பு பிளேஸரும் வெள்ளை சட்டையும் அணிந்து மேடையில் நின்ற கதிரின் தோற்றம் அவளை உறைய வைத்தது.

அவனருகே அஞ்சலி இளஞ் சிவப்பு நிற ஃப்ராக்கில் மின்னியவாறு நின்றாள்.

மதுராவின் தேகம் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கத் தொடங்கியது.

“டேய் அ.. அர்ஜூன்… இ.. வனா இந்த காலேஜோட ஓனர்…? எல்லாரும் புகழ்ந்து தள்ளுற அந்த மிகப்பெரிய பணக்காரன் இவனா…?” என திணறியவளாய் கேட்டாள் அவள்.

“ஆமாடி.. என்னடி அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற.. அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா..?” என்றவன் மேடை பக்கம் திரும்பி விட மதுராவிற்கோ இதெல்லாம் கெட்ட கனவாக இருக்கக் கூடாதா என ஏங்கியது மனம்.

கதிரோ தேவதை போல நின்ற அஞ்சலியை அங்கே இருந்த இருக்கையில் அமரச் செய்தவன் மைக் பிடித்து பேசத் தொடங்கினான்.

அந்த ஜோடியைக் கண்ட பெண்களின் கூட்டமோ கவலையில் மூழ்கிப் போனது.

“ஹாய் ஸ்டுடன்ஸ்… எல்லாரும் எப்படி இருக்கீங்க..?” எனக் கேட்டவன் அவர்களை நோக்கி மைக்கை நீட்ட மாணவர் கூட்டமோ கத்தி ஆர்ப்பரித்தது.

“ஓகே ஓகே கூல்.. இந்த ஆண்டு விழால உங்களையெல்லாம் சந்திச்சதுல நான் ரொம்ப ஹேப்பி.. இந்த காலேஜ் என்னோட வீடு மாதிரி.. இந்த வீட்ல இருக்க எல்லாரும்…. எஸ் நீங்க எல்லாரும் என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ்தான்..

சோ நான் எப்பவும் உங்களுக்கு சொல்ற ஒரே அட்வைஸ் உங்க ஃப்யூச்சர போக்கஸ் பண்ணுங்க.. காலேஜ்ல இருக்க வளங்களை யூஸ் பண்ணுங்க.. நம்ம கே.வி காலேஜ்ல படிக்கிற ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் எதிர்காலத்துல பெரிய இடத்தை அடையணும்…” என்றதும் கைதட்டல்கள் அந்த இடத்தை நிரப்பியது.

“இன்னொரு குட் நியூஸ்ஸ உங்க கூட ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்… இதோ இங்க தேவதை மாதிரி ஒருத்தி இருக்காளே.. ஷீ இஸ் மை வைஃப்…” என அவர்களுக்கு அவன் அஞ்சலியை அறிமுகப்படுத்த, மாணவர்களின் குதூகலக் குரல் அதிகரித்தது.

“அம்மு… இங்க வா..” என்று கூறியவன் அஞ்சலியை புன்னகையுடன் பார்த்தான்.

அவனுடைய அம்மு என்ற அழைப்பில் ஆண்களோ விசில் அடிக்க,

கதிரின் அருகே வந்து நின்ற அஞ்சலியோ வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.

“இவ பேரு அஞ்சலி.. எனக்கு அம்மு.. ஃப்ரம் நௌ ஆன் ஷீ வில் பி தி அதர் பார்ட்னர் ஆஃப் திஸ் காலேஜ்.” என்றான் அவன்.

மதுராவோ அவர்களைப் பார்த்து பொறாமையால் பொங்கினாள்.

‘யாருக்கு யார் பொண்டாட்டி..?’ என தன் மனதிற்குள் குமுறினாள் மதுரா.

உடல் முழுவதும் பற்றி எரிவதைப்போல இருந்தது.

அர்ஜுனும் சுபாவும் அஞ்சலியைப் பார்த்து திகைத்தனர்.

“மது… இந்த அஞ்சலி உன்னைப் போலவே இருக்காடி… எப்படிடி இது…?” என அர்ஜுன் ஆச்சரியமாகக் கேட்டான்.

சுபாவோ “ஆமா மது… இவ உன்னோட ட்வின்ஸ் மாதிரி இருக்கா… ரொம்ப லக்கிடி இந்தப் பொண்ணு… இவளுக்கு எல்லாமே கிடைச்சிருக்குல… ” என வெளிப்படையான பொறாமையுடன் கூறினாள்.

மதுராவல் பேச இயலவில்லை.

பேசும் நிலையிலும் அவள் இருக்கவில்லை.

இப்போது அஞ்சலி நின்று கொண்டிருக்கும் இடத்தில் தான் அல்லவா நின்றிருக்க வேண்டும் என்ற எண்ணமே அவளுடைய மனதில் தீயாய் எரிந்து கொண்டிருந்தது.

‘இந்த இடம், இந்த காலேஜ், இந்தப் பணக்கார வாழ்க்கை எல்லாம் கடவுளாப் பார்த்து எனக்குக் கொடுத்தது.. அவசரப்பட்டு அஞ்சலியை இதுல இழுத்து விட்டுட்டேனே..’ என தன்னையே நொந்து கொண்டவளின் பார்வை கதிரின் மீது அழுத்தமாக பதிந்தது.

நுனி விரலால் டிஷ்யூவை எடுத்து தன் கரங்களைத் துடைத்தவாறு ஸ்டைலாக நின்று பேசிக் கொண்டிருந்தவனின் புதிய பரிமாணத்தில் பிரமித்துப் போனாள் அவள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 105

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “21. தொடட்டுமா தொல்லை நீக்க”

  1. 💜💜💜💜 ஸ்ரீமா சூப்பர் டா 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  2. நல்லா வயிறு எரிந்து சாகத் தோணுதா மது? பார்த்து பத்திரம். நீ ஏதாவது அஞ்சலியை ஏமாற்ற நினைத்தால் கதிர்வேலனின் இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டும்.👌👌👌👌👌👌👌👏👏👏👏🤩🤩🤩🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!