22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(69)

சொர்க்கம் – 22

தவளை தன் வாயால் கெடும் என்பார்களே அப்படித்தான் அவளும் சமாளிப்பதாக ஏதோ கூறி அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள்.

அவனோ அங்கே இருந்த கல் பெஞ்சில் சாவதானமாக அமர்ந்து கொள்ள அவளோ மெல்ல அங்கிருந்து நழுவத் தொடங்கினாள்

“எங்க போற..?”

“…..”

“ஸ்டே ஹியர்..”

அவளுக்கோ அருகே கிடந்த கல்லைத் தூக்கி அவன் தலையில் போட்டால் என்ன என்றுதான் தோன்றியது.

வேறு வழி இன்றி அவள் அப்படியே நிற்க அவனுடைய பார்வையோ அவளின் முகத்தை ஆராய்ந்தது.

முகம் சற்றே வீங்கி இருப்பதைக் கண்டவன் நேற்று இடைவிடாமல் அழுததன் விளைவு என்பதை உணர்ந்து கொண்டான்.

“காலைல எத்தனை மணிக்கு வாக்கிங் வந்த..?” எனக் கேட்டான் அவன்.

“நாலு மணி இருக்கும்..” என வேண்டா வெறுப்பாக பதில் கொடுத்தாள் அவள்.

“உன்னோட ஸ்ட்ரக்சர் எல்லாம் பெர்ஃபெக்ட்டா சூப்பராதானே இருக்கு.. அப்புறம் எதுக்காக ஓவரா ஒர்க் அவுட் பண்ற..? நீ எல்லாம் ஆறு மணிக்கு எந்திரிச்சு 30 மினிட்ஸ் நடந்தாலே போதும்..” என அவளுடைய உடலைப் பார்த்தவாறு அவன் கூறியதும் தலையை தாழ்த்திக் கொண்டாள் அவள்.

“ஓகே நாளைக்கு என் கூட ஆறு மணிக்கு ஜாயின் பண்ணிக்கோ..” என்றவன் எழுந்து கொள்ள ‘அப்பாடா தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணு சாமி..’ என மனதிற்குள் கூறிக் கொண்டாள் அவள்.

“கம் வித் மீ..” என்றவன் மீண்டும் அந்தப் பாதை வழியே ஓடத் தொடங்கி விட,

“நீ போடா நான் எதுக்கு..?” என மனதில் அவனைத் திட்டியவள் அசையாது நிற்க ஓடிக் கொண்டிருந்தவன் சட்டென நின்றான்.

அவனுடைய தீப்பார்வை அவளை மீண்டும் எரிக்கத் தொடங்க அதற்கு மேல் அந்தப் பார்வையை தாங்க முடியாது அவன் பின்னே தானும் ஓடத் தொடங்கினாள் அவள்.

‘தெரியாத்தனமா வாக்கிங்னு இவன்கிட்ட உளறி வச்சுட்டோமே.. தூங்குறதுக்காகதான் வந்தேன்னு உண்மையை சொல்லி இருக்கலாம்..’ என மனதிற்குள் நினைத்தவாறு அவன் பின்னே கடனே என ஓடிக் கொண்டிருந்தாள் செந்தூரி.

சற்று தூரம் ஓடியதுமே அவளுக்கு மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது.

மூச்சு வாங்கிய படி நின்று விட்டவள் “நீங்க கண்டினியூ பண்ணுங்க.. நான் ரொம்ப நேரமா வாக் பண்ணிட்டேன்.. ரொம்ப டயர்டா இருக்கு..” எனக் கூற அவளுடைய உடலை மேலிருந்து கீழ் வரை பார்த்தவனுக்கு அந்த உடலில் ஒரு துளி வியர்வை கூட தென்படாது போனதுதான் பரிதாபம்.

“உன்ன பாத்தா டயட்டானவ மாதிரியே தெரியலையே..”

‘ஐயோ சாவடிக்கிறானே..’

“ஓகே நீ என்னவோ பண்ணிக்கோ.. ஆனா இன்னும் 30 மினிட்ஸ்ல ரூம்ல இருக்கணும்..” எனக் கூறிவிட்டு அவன் சென்று விட பெருமூச்சோடு மீண்டும் நடந்து வந்து அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.

அதுவும் நேற்று இரவு நடந்ததை நினைத்தாலே இப்போதும் அழுகை வந்துவிடும் போல இருந்தது.

மிகக் கடினப்பட்டு அதைப்பற்றி நினைக்கவே கூடாது என தன்னுடைய மனதை அங்கே மலர்ந்திருந்த மலர்களின் மீது திசை திருப்பினாள் மாது.

என்னதான் சிந்திக்கும் மனதை திசை திருப்பினாலும் இன்றும் இரவு வரத்தானே போகின்றது என்ற எண்ணம் அவளை அதீதமாய் கலங்க வைத்தது.

20 நிமிடங்கள் அமைதியாக அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தவள் அதற்கு மேல் அங்கே தாமதித்தால் யாராவது வந்து தன்னை அழைக்கக் கூடும் என்பதை உணர்ந்து அவனுடைய அறையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தரையை துடைத்துக் கொண்டிருந்த ஒருவன் எழுந்து பணிவுடன் குனிந்து நிற்க,

தலையை தாழ்த்தியவாறு வேகமாக அவனைக் கடந்து படிகளில் ஏறத் தொடங்கினாள் அவள்.

எவ்வளவுதான் தலையை தாழ்த்தினாலும் இங்கே இருக்கும் அனைவருக்கும்தான் அவளைத் தெரிந்தாகி விட்டதே.

தங்களுடைய பாஸின் வப்பாட்டி என அனைவரும் நினைத்து இருப்பார்கள்.. அப்படித்தானே கூறி வைத்திருக்கிறான் என எண்ணியவளுக்கு உள்ளம் வேதனையில் அரித்தது.

போதும் அழுததெல்லாம் போதும்.. எல்லாவற்றையும் கடந்து சீக்கிரமாக இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற முடிவோடு அவனுடைய அறைக்குள் நுழைந்தவள் அங்கே குளித்துவிட்டு இடையில் துவாலையுடன் நின்றவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

“அச்சோ சாரி.. தெ… தெரியாம உள்ள வந்துட்டேன்..” எனப் பதறியவாறு கூறியவள் வந்த வழியே கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல முயன்ற கணம்,

“பரவால்ல உள்ள வா.. நீ என்னோட உடம்பை பார்த்துட்டேன்னு உன்ன மாதிரி எல்லாம் நான் அழ மாட்டேன்.. பார்த்தா பாத்துக்கோன்னு சொல்ற கேட்டகிரிதான்..” என கைகளை விரித்தவாறு வெற்று மார்புடன் நின்று அவன் கூற,

‘ச்சை மானங் கெட்டவன்..’ என மனதிற்குள் திட்டிக் கொண்டாள் அவள்.

அவனைப் பார்க்காது சோபாவில் சென்று அமர்ந்தவள் அதன் பின்னர் அவன் நின்ற பக்கம் திரும்பவே இல்லை.

அவனோ தனக்கான க்ரீன் டீயை தயாரித்து முடித்தவன் இன்னொரு கப்பில் அவளுக்கும் ஊற்றிக் கொண்டு வந்த அவளுடைய கரத்தில் கொடுக்க வியப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

‘இந்த திமிர் பிடித்தவன் இப்படி எல்லாம் பண்ண மாட்டானே..?’ என எண்ணியவள் நேற்று முழுவதும் எதுவும் சாப்பிடாததால் மிகுந்த பசியில்தான் இருந்தாள்.

இனியும் சாப்பிடவில்லை என்றால் மயங்கிதான் விழ நேரும் என எண்ணியவள் மறுக்காமல் அவன் கொடுத்த கப்பை வாங்கிக் கொள்ள அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து டீயை பருகத் தொடங்கினான் அவன்.

செந்தூரியோ கப்பை வாயில் வைத்து ஒரு மிடறு குடித்தவளுக்கு முகம் அஷ்ட கோணலாக மாறியது.

‘உவ்வே.. என்ன இது இப்படி கசக்குது..’ என விளக்கெண்ணெயை குடித்தது போல அதிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்க்க அவனோ அவளுடைய முகபாவணையைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

“இட்ஸ் கிரீன் டீ.. லைட்டா கசக்கத்தான் செய்யும்..”

“இல்ல எனக்கு வேணாம்.. இது ரொம்ப கசப்பா இருக்கு..”

“ஃபூல்.. இந்த கிரீன் டீயோட பெனிபிட்ஸ் எவ்வளவு இருக்குன்னு தெரியுமா..? அட்லீஸ்ட் இதோட மதிப்பாவது தெரியுமா..? இட்ஸ் 400 டாலர்..” என்றதும் அவளுடைய விழிகளோ சாசர் போல விரிந்தன.

அவளுடைய குட்டி மூளையோ வேகமாக அந்த அமெரிக்கா டாலர்களை இந்திய பணத்தில் மாற்றும் பொருட்டு கணக்கைப் பார்க்கத் தொடங்க,

“இன்டியன் மணி ல தேர்ட்டி த்ரீ தௌசன்ட்..” என அவனே கூறினான்.

“என்னது முப்பத்திமூனாயிரமா…?எங்க அப்பத்தா இருக்கும்போது அவங்க போட்டுத் தர கசாயமே இதைவிட நல்லா இருக்கும்.. எவனோ உங்களை நல்லா ஏமாத்திட்டான்.” எனப் பட்டெனக் கூறியவள் அவன் கொடுத்த கப்பை கொண்டு சென்று மேஜை மீது வைத்து விட்டு சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

எதுவும் கூறாமல் தன் கரத்தில் இருந்த டீயை பருகியவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தன.

தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டு அவள் குளியலறைக்குள் நுழைந்து விட அவனுக்கும் அவளை இன்னும் எத்தனை நாட்கள் எங்கே வைத்து படுத்தி எடுப்பது என்ற கேள்வி மூளைக்குள் ஓடத் தொடங்கியது.

‘சீக்கிரமே இவளை அனுப்பி வச்சிடணும்.. இவ அழுது அழுது நம்மளையும் தூங்க விடமாட்டா..’ என எண்ணிக் கொண்டவன் அவனுக்காக கொண்டு வந்திருந்த பத்திரிகையை எடுத்து படிக்கத் தொடங்க சிறிது நேரத்தில் ஈரத் தலையுடன் ஆடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள் செந்தூரி.

அவளோ அவனைப் பார்க்காது தன்னுடைய தலையைத் துவாலையால் துவட்டி முடித்துவிட்டு பசித்த தன்னுடைய வயிற்றை ஒற்றைக் கரத்தால் தடவிக் கொடுத்தாள்.

‘ரொம்ப பசிக்குதே…’

அவளுடைய நீளமான கூந்தலோ இடை தாண்டி அழகாக அவளுடைய பின் உடலில் படர்ந்து இருந்தது.

எந்த ஒப்பனையும் இல்லை என்றாலும் இவள் மிகச்சிறந்த அழகி தான் என ஒத்துக்கொண்டது அவனுடைய ரசனை படைத்த மனம்.

“ஹேய் இங்க வா..” என அழைத்தான் அவன்.

“இப்போ எதுக்கு கூப்பிடுறான்ன்னு தெரியலையே..?” என மனதுக்குள் புலம்பியவாறு அவன் அருகே வந்து நின்றாள் அவள்.

“செல்பி எடுக்கலாமா..?” என அவன் புருவம் உயர்த்திக் கேட்க,

“நீங்க எடுத்துக்கோங்க.. எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல..” என்றாள் அவள்.

“அடிங்க… உன்கிட்ட யார் பர்மிஷன் கேட்டது..? நான் கேட்டா நீ எஸ்னு மட்டும்தான் சொல்லணும்..” என அவன் அழுத்தமாகக் கூற,

‘இதுக்கு எதுக்குடா நீ கேக்குற..’ என எண்ணிக்கொண்டது அவளுடைய மனம்.

சரி என்றவள் பதுமை போல அவன் அருகே வந்து நிற்க ஒற்றைக் கரத்தால் அவளைப் பிடித்து இழுத்து தன்னுடைய மடியில் அமர வைத்தான் அவன்.

அவளுக்கு நொடியில் உள்ளமும் உடலும் பதறிப் போனது.

உடல் கூசி போக,

“ப்ளீஸ் லீவ் மீ..” என்றவளை முறைத்தவன்,

“ப்ச்.. நான் ஒன்னும் பண்ண ட்ரை பண்ண மாட்டேன்.. டோன்ட் மூவ்..” என்றவன் தன்னுடைய விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசியை எடுத்து அவளை அணைத்திருப்பது போல சில புகைப்படங்களை கிளுக்கத் தொடங்கினான்.

“ஏய் சிரிடி..” அதட்டினான் அவன்.

“சிரிப்பு வரலையே..”

“வரலைன்னாலும் சிரிக்கணும்..”

தன் விதியை நொந்து கொண்டு உயிர்பின்றிய சிரிப்பை உதிர்த்தாள் அவள்.

அவர்கள் இருவரையும் அழகாக கிளுக்கிக் கொண்டது அவனுடைய அலைபேசி.

அவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டிருக்க அவளை விடுவித்தான் அவன்.

வேகமாக அவனிடமிருந்து விலகி நின்றவள்,

“எ.. எதுக்கு இந்த போட்டோ..?” எனத் திணறலாகக் கேட்டாள் அவள்.

“வேற எதுக்கு இன்ஸ்டால எஃபி ல எல்லாம் போஸ்ட் பண்ணத்தான்..” என்றான் அவன்.

“எ.. என்னது..?!” என அதிர்ந்து விழித்தாள் அவள்.

யாருக்குமே தெரிந்துவிடக் கூடாது என இவள் முயன்று கொண்டிருக்க இவனோ ஊருக்கே மைக் போட்டுக் கூறி விடுவான் போல இருக்கிறதே.

இதற்காகத்தான் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்தானா..?

அவளுக்கோ உள்ளம் பதறியது.

“ஹேய் பேப்..”

‘ஆரம்பிச்சுட்டான் பேப் சூப்னு ச்சை..’

“ஏய் உன்னைத்தான்டி..”

“ஹாங்.. சொ.. சொல்லுங்க..”

“செல்ஃபி வித் கீப்னு கேப்ஷன் போட்டோ சும்மா லைக் பிச்சுக்கும்ல..” என்றதும் அலறி விட்டாள் செந்தூரி.

“நீங்க என்ன பண்றீங்கனு உங்களுக்குத் தெரியுதா..? இப்படி நீங்க போட்டோ போட்டா எல்லாரும் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க..? என அவள் கேட்க,

“எல்லாரும் உன்னப் பத்தி அப்படி நினைக்கணும்னுதான் போஸ்டே போடப் போறேன்..” என நிதானமாக அவளுடைய தலையில் மிகப்பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் விநாயக்.

“உங்களுக்கு இன்னும் இந்த வன்மம் தீரவே இல்லையா..? என்ன இங்க வச்சு இவ்வளவு டார்ச்சர் பண்றீங்களே.. இது பத்தாதா..? இன்னும் என்ன அசிங்கப்படுத்தணுமா..?” என உடைந்து போன குரலில் அவள் கேட்டாள்.

“என்கூட நின்ன போட்டோவ போடுறதுல உனக்கு என்னடி அசிங்கம் வரப்போகுது..? நீ இன்னும் ஃபேமஸ் ஆயிடுவ பேப்..” என இமை சிமிட்டிச் சிரித்தவன் அடுத்த நொடியே “வித் மை டார்லிங்..” என்ற கேப்ஷனோடு அவளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 69

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!