போதைப் பொருள் கடத்த பெண்களின் வயிற்றை ஒரு பொருள் போல உபயோகிக்கின்றனர்.
இவ்வளவு கொடூரங்கள் எல்லாம் அவர்கள் இருக்கும் நாட்டில் தானே நடக்கின்றது.
அப்படி இருக்கும் போது, அதைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ சிந்திக்காமல் இந்த நள்ளிரவில் தனியாக வந்திருக்கின்றாளே..
அவனுக்கோ மனதின் பதற்றம் தீரவே இல்லை.
வேகமாக அவளை நெருங்கி வந்தவனைக் கண்டதும் அதிர்ந்து விட்டாள் வர்ணா.
அவள் எதுவும் பேசுவதற்கு முன், அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன், சற்றுத் தள்ளி நிறுத்தியிருந்த தன்னுடைய காரை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.
அவளுக்கு எதுவும் புரியவில்லை.
திகைப்பாக இருந்தது.
விபத்து என்றல்லவா சொன்னான்.?
இப்போது நன்றாகத் தானே இருக்கின்றான்.
காருக்குள் அமர்ந்ததும், விழிகளில் கண்ணீரோடு “உனக்கு ஒன்னும் ஆகலையே..” என்று அவள் கேட்க, அவனுக்கோ வேதனையாக இருந்தது.
அவளுடைய விழிகள் அவனுடைய தலை முதல் கால் வரை ஆராய்ச்சி நடத்த,
“ஐ ஆம் ஓகே.. கால்ல லேசா அடிபட்ருக்கு.. பட் நான் சொன்னேனே சின்ன ஆக்ஸிடென்ட்தான்.. பெருசா எதுவும் இல்லடி..” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான் அவன்.
அவள் சற்றும் சிந்திக்காமல் சட்டென குனிந்து அவனுடைய காலைப் பற்ற, பதறி அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டவன் “ரிலாக்ஸ் பேபி கேர்ள்.. எனக்கு எதுவுமே இல்ல.. நீ பார்த்தா கூட தெரியறதுக்கு அங்க எந்தக் காயமும் இல்ல.. சின்ன வீக்கம் மட்டும்தான்..”
“பாத்து பைக் ஓட்ட மாட்டியா.. இப்படித்தான் கேர்லஸ்ஸா இருப்பியா..?” என்றவளின் கரம் பரிதவிப்போடு அவனுடைய பின் தலையில் பதிய, உருகித்தான் போனான் அவன்.
அவளுடைய இந்தப் பரிதவிப்பெல்லாம் தனக்கானது அல்லவா..?
அவளுடைய கரங்களை மென்மையாகப் பற்றிக் கொண்டவன் “ஏய்.. ஐ ஆம் ஓகேடி.. எனக்கு எதுவுமே இல்ல.. நீ டென்ஷன் ஆகாத ப்ளீஸ்..” என்றான்.
சற்று நேரத்தில் அவள் அமைதியாகி விட,
“இந்த மிட்நைட்ல எதுக்குடி தனியா வந்த..? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?” எனத் திட்டத் தொடங்கினான் அவன்.
“பைத்தியம் மாதிரி பேசாத ஸ்பைடர்மேன்.. உனக்கு ஆக்ஸிடென்ட்னு தெரிஞ்சதும் வீட்ல பெட்ஷீட்டைப் போர்த்திட்டு தூங்க சொல்றியா..? இல்ல எனக்கு தூக்கம்தான் வருமா..? எப்படி பதறிப் போய்ட்டேன் தெரியுமா..? என்னவோ ஏதோன்னு நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருந்துச்சு.. அதனாலதான் வீட்ல இருந்த ஸ்கூட்டியை எடுத்துட்டு கிளம்பி வந்துட்டேன்..” என்றாள் அவள்.
“சரிமா.. எனக்குப் புரியுது.. பட் நான்தான் கால் பண்ணி பேசினேன்ல.. நான் நல்லா இல்லைன்னா கால் பண்ணி பேசுவேனா..? அதை யோசிக்க மாட்டியா..? இந்த மிட்நைட்ல தனியா வந்து உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன்..? தயவு செஞ்சு இனி முட்டாள்தனமா இப்படி பண்ணாத வர்ணா..”
“ஏன் ஸ்பைடர் மேன்.. என்னைத் திட்டுற..” என்று அழுது விடுவது போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“ஏன்னா எனக்கு உன்னோட பாதுகாப்பு முக்கியம்.. முதல்ல உங்க வீட்டு ஆளுங்களுக்கு அடிக்கணும்.. பொண்ணு ரூம்ல இருக்காளா இல்லையான்னு கூட அவங்களுக்குத் தெரியல.. ஸ்கூட்டர் எடுத்துட்டு கிளம்பி வந்திருக்க.. அது கூட அவங்களுக்கு தெரியல..”
“அவங்களுக்கு சத்தம் கேட்கக் கூடாதுன்னு ஸ்கூட்டியை கொஞ்ச தூரம் உருட்டிட்டு வந்தேன்.. அதுக்கப்புறம்தான் ஸ்டார்ட் பண்ணேன்.. சோ அவங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல..” என்றவளை முறைத்தான் அவன்.
“டேய்.. இப்போ எதுக்குடா முறைக்கிற..? உனக்கு ஏதாவது ஆயிருச்சோன்னு பதறிப் போய் கிளம்பி வந்துட்டேன்.. அந்த டைம்ல எனக்கு என்னைப் பத்தி யோசிக்கத் தோணவே இல்ல.. என்னோட மொத்த மைன்டும் உன்னப் பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டு இருந்துச்சு.. நான் என்ன பண்ணட்டும்..?” எனக் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
“நீ எப்படி பேசுறன்னு உனக்குப் புரியுதா..” என அவளை ஆழ்ந்து பார்த்தவாறு கேட்டான் அவன்.
“எப்படிப் பேசுறேன்..?” எனப் புருவம் உயர்த்தி, அவனைத் தலை சாய்த்துப் பார்த்தவாறு கேட்டாள் அவள்.
“ஏதோ நீ கட்டிக்கிட்ட புருஷனுக்கு ஆக்ஸிடென்ட் ஆன மாதிரியும்.. அத உன்னால தாங்கிக்கவே முடியாம பதறி ஓடி வந்த மாதிரியும் பேசுற.. உனக்கு என் மேல லவ் இருக்கு பேபி கேர்ள்..” என்றான் அவன்.
அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது.
“அப்படியெல்லாம் இல்லையே..” சட்டென மறுத்தாள் அவள்.
அவளுடைய பார்வை தடுமாறியது.
விழிகள் அலை பாய்ந்தன.
அவள் பொய் சொல்கின்றாள் என்பதைக் கண்டு கொண்டான் அவன்.
காதல் இல்லாமல்தான் இந்த நள்ளிரவு நேரத்தில் அவளைப் பற்றி துளிகூட சிந்திக்காமல், என்னைப் பார்ப்பதற்கு இந்த மருத்துவமனைக்கு ஓடோடி வந்தாளா..?
“டேய்.. மறந்துட்டியா.. நீதானே ஹாஸ்பிடல் பில் பே பண்ண பணம் இல்லைன்னு சொன்ன.. இந்த செயினை வித்துடு.. இதுல வர்ற பணத்தை வச்சு பில் பே பண்ணிக்கோ..” என சாதாரணமாகக் கூறியவளை அதிர்ந்து பார்த்தான் அவன்.
“பைத்தியக்காரி.. உன்னை சாவடிச்சிடுவேன்..” எனத் திட்டியவன், அவள் கொடுத்த செயினை மீண்டும் அவளிடமே கொடுத்தான்.
“டேய் லூசு.. உன்னை விட இந்தச் செயினா எனக்கு முக்கியம்..? இது போனா போகுது.. இதை வச்சு நீ பில் பே பண்ணிக்கோ..”
“இல்லமா.. எனக்கு பணம் கிடைச்சிடுச்சு..”
“பொய் சொல்லாத.. என்கிட்ட நீ பேசும்போது பணம் இல்லைன்னு தான சொன்ன.. இந்த மிட்நைட்ல எவன் வந்து உனக்கு பணம் கொடுக்கப் போறான்.. இதை வச்சுக்கோ ஸ்பைடர்மேன்..”
தினம் தினம் ஒவ்வொரு செயல்களால் தன்னுடைய மனதை நெகிழ்த்தும் இவளை என்னதான் செய்வது..?
“அடியே.. என் பிரண்டு ஜீபே பண்ணினான்..”
“நிஜமாவா..” என அவனை நம்ப முடியாமல் கேட்டாள் அவள்.
“நிஜமாதான் குல்ஃபி..” என்றவன், அந்தத் தங்கச் சங்கிலியை எடுத்து அவளின் அருகே நெருங்கி, அவளுடைய கழுத்தில் அணிவித்தான்.
அவனுடைய கரங்கள் அவளுடைய கழுத்தைத் தொட,
அவளுக்கோ கூச்சமாக இருந்தது.
அவனுக்கும் என்னவோ போலத்தான் இருந்தது.
அவளுடைய கழுத்தின் மென்மையை உணர்ந்து சிலிர்த்துப் போனான் அவன்.
அவளுடைய கழுத்து வளைவிலேயே குடி இருக்க அவனுடைய மனம் ஏங்கத்தான் செய்தது.
“எனக்கு கிடைச்ச பொக்கிஷம் பேபி நீ.. எப்பவுமே நான் உன்னை விட மாட்டேன்..”
அவளோ அவனை வெறுமையாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் அவனுடைய மனம் துணுக்குற்றது.
“என்ன பேபி கேர்ள்.. நீ எதையோ மனசுல வச்சுட்டு இப்படி எல்லாம் பேசறேன்னு மட்டும் புரியுது.. என்னனு என்கிட்ட சொல்லு.. எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் நான் சரி பண்றேன்..” என்றவனின் கரங்களைப் பற்றிக் கொண்டவள்,
“அப்படியெல்லாம் எதுவுமே இல்ல ஸ்பைடர்மேன்.. நாம நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம்..” என்றாள்.
“ஃப்ரண்ட்ஸா..? ஃப்ரண்ட்டை பாக்கத்தான் இப்படி மிட்நைட்ல தனியா வருவியா..?”
“ஐயோ சாமி.. இனி வரவே மாட்டேன்.. போதுமா..”
“இனி வந்தா நானே உன்னை அடி வெளுத்திடுவேன்.. எல்லா நேரமும் நமக்கு சாதகமா இருக்காது வர்ணா.. யாரோட துணையும் இல்லாம நைட் நீ எங்கேயும் போகக் கூடாது.. வீட்டுக்கு தெரியாம மிட்நைட் வெளிய வரவே கூடாது.. உன்னைப் பாக்கணும்னா நான் வருவேன்.. நீ வரக்கூடாது.. நீ பத்திரமா வீட்லதான் இருக்கணும்..” என குழந்தைக்கு கூறுவது போல எடுத்துக் கூறினான் அவன்.
அவளோ வேறு வழியின்றி அவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
நேரமோ நகர்ந்து கொண்டே இருந்தது.
“சரிடா.. நான் கிளம்பவா..?”
“வாட்.. நான் இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் தனியா கிளம்புறேன்னு சொல்றியா..”
“அப்போ நான் எப்படி போறது..”
“உன் ஸ்கூட்டி கீய கொடு.. நானே உன்னை உங்க வீடு வரைக்கும் விடுறேன்..”
“டேய்.. நீயே உடம்பு முடியாம இருக்க.. கால்ல அடி வேற பட்ருக்கு.. நீ போய் ரெஸ்ட் எடு..”
“பணக்கார ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருப்பாங்க போலயே..”
“ஆமா ஆமா.. நிறைய பேர் இருக்காங்க..” என்றவன்,
தோள் பக்கம் சற்று விலகி இருந்த அவளுடைய ஆடையை அவனே சரி செய்து விட்டான்.
“வண்டி ஓட்டும்போது பத்திரமா இரு ஸ்பைடர்மேன்..” என்றாள் அவள் மீண்டும்.
“ஓகேம்மா..” என்றவன் அவளுடைய கரத்தைப் பிடித்தான்.
“என்னடா..?”
“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என அவன் கேட்டதும், அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
“நான்தான் நாம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸா..” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, சட்டென அவளுடைய பின் தலையில் கரம் பதித்து அவளுடைய முகத்தை தன்னை நோக்கி இழுத்தவன்,
தனக்கு மிக அருகே வந்த அவளுடைய அழகிய சிவந்த உதடுகளை, தன் மற்றைய கையின் பெரு விரலால் அழுத்தமாக வருட, அவளுக்கோ தேகம் படபடத்துப் போனது.
“நாம ஃப்ரெண்ட்ஸ் இல்ல.. இப்ப கூட என்னால உன்னை கிஸ் பண்ண முடியும்.. நான் கிஸ் பண்ணா நீ என்னத் தடுக்க மாட்டேன்னும் தெரியும்.. உன்னை எனக்கு பொண்டாட்டியா மாத்திட்டு அதுக்கப்புறம் இதெல்லாம் பண்ணலாம்னு கஷ்டப்பட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. புரியுதா..” என அவன் அழுத்தமாகக் கேட்க,
அவனுடைய அதிர்ந்த முகத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தவள் காரை விட்டு இறங்க முயன்ற கணம் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் அடுத்த நொடியே அவளுடைய செவ்விதழ்களை ஆழமாக கவ்விக் கொண்டான்.
1 comment
🙈🙈🙈🙈 super super super super super super super super super super super super