கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து, போலீஸ் கம்யூனிகேஷன் வழியாக டாக்டர் சஞ்சீவ் இருப்பிடம் கண்டறியப்பட்டு, அவரிடம் விசாரணை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அடுத்த நாள் காலை, கமிஷ்னர் கூறிய தகவலுக்கு ஏற்ப கார்த்திகேயன் நேராக தனியார் வைத்தியசாலைக்கு சென்று, டாக்டர் சஞ்சீவை அவரது தனி அறையில் சந்தித்தான்.
சஞ்சீவின் மனதில் உள்ள குழப்பமும், பயமும் அவனது கண்களில் வெளிப்படையாகவே விளங்கியது.
அவரை சந்தேகக் கண் கொண்டு மேல் இருந்து கீழ் வரை நன்கு கண்களால் அளவெடுத்து கவனித்த பின்பே கார்த்திகேயன் தனது பேச்சை ஆரம்பித்தான்.
“டாக்டர் உங்கள நான் இப்போ எதுக்கு தேடி வந்து இருக்கேன்னு உங்களுக்கு நல்லா தெரியும் நீங்களா உங்களோட வாயால எல்லா உண்மையையும் சொல்லிட்டீங்கன்னா ஒரு பிரச்சனையும் இல்லை
அதோட இந்த பிரச்சனை வெளிய தெரியாம பார்த்துக் கொள்வதும், உங்களோட கெரியருக்கு எந்த பிராப்ளமும் வராமல் பார்த்துக் கொள்வதும் என்னோட பொறுப்பு நீங்க சொல்ற பதில்லதான் ஒரு குடும்பத்தோட சந்தோஷமே இருக்கு..” என்று கார்த்திகேயன் மெதுவாக அவரது மனதை தாக்கும்படி அழுத்திக் கூறினான்.
சஞ்சீவ் ஒரு கணம் அமைதியாக எதனையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார்.
“நீங்க நினைக்கிற மாதிரி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஆனா என்னோட நேம் அண்ட் என்னோட சைன் இத இரண்டையும் யாரோ தப்பா யூஸ் பண்ணி இருக்காங்க யாரோ பிளான் பண்ணி இதை செய்து இருக்காங்க…”
“அப்போ உண்மையிலேயே இதை நீங்க பண்ணலையா..?” என்று கார்த்திகேயன் அவர் கூறிய விடயத்தை நம்புவதா இல்லையா என்ற எண்ணத்துடன் சந்தேகமாகக் கேட்டான்.
சஞ்சீவ் காதுகளைப் பொத்தியபடி,
“இல்ல தம்பி இந்த பாவமான செயல நான் பண்ணவே இல்ல நான் ஒருபோதும் பண்ணவும் மாட்டேன்..” என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தினார்.
“ஆனா எத்தனையோ டாக்டர்கள் இந்த ஊரில் இருந்தும் உங்களோட பெயரை மட்டும் இதுக்காக ஏன் யூஸ் பண்ணனும்..”
“அது எனக்குத் தெரியாது ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் அவன் கேட்ட அந்தப் போலி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் விஷயத்தை நான் செய்து முடிக்கலன்ன கோபத்துல தான் அவன் இப்படி என்னை சிக்கல்ல மாட்டிவிட்டு இருக்கணும் அது மட்டும் நல்லா புரியுது…”
“என்ன சொல்றீங்க டாக்டர் அவன்னா யாரு..?” என்று புருவங்கள் சுருக்கிக் கேட்க,
“எனக்குத் தெரியாத தம்பி அவன நான் நேர்ல சந்திக்கல ஆனா அவன் என் கூட பேசினான் அந்தக் குரல்… அந்தக் குரல்தான் என்னை இதுக்குள்ள தள்ளிச்சு…”
“யார் அந்தக் குரல்..?”
“தெரியலை…! அவர் யாருன்னே தெரியலை… ஆனா அவன் என்னை தினமும் கண்காணிச்சுக் கொண்டு தான் இருக்கின்றான் என் மகள்… என் மனைவி – எல்லாரையும் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்…”
“அவரா தங்களை மிரட்டி இந்தப் போலி ரிப்போர்ட்டை ரெடியாக்க வைத்தாரா?”
“இல்ல, நான் அதுக்கு ஒப்புக்கொள்ளாம இருந்ததால என் பெயர வைத்து வேறு ஒருத்தன் அந்த ரிப்போர்ட்ட எழுத வெச்சிருக்கான் ஆனா என்னால அதை நிரூபிக்க முடியாது ஏன்னா நம்புற மாதிரி அதில என் கையொப்பம் அப்படியே அச்சு அசலா இருக்கு..”
கார்த்திகேயன் மெதுவாக முன் நிமிர்ந்து, சஞ்சீவின் கண்களை பார்த்தவன், அதில் ஏதும் பொய்கள் தெரிகின்றனவா என ஆராய்ந்தான்.
ஆனால் சஞ்சீவின் கண்களில் பயத்துடன் ஒரு இயலாமையும் வெளிப்பட்டது.
“சரி, அவர் யாரென்று கண்டுபிடிக்க உங்ககிட்ட இருந்து சில விஷயங்கள் எனக்கு தேவைப்படுது ஃபார் எக்ஸாம்பிள் தொலைபேசி அழைப்புகள், குரல் பதிவு ஏதாவது வச்சிருக்கீங்களா..?”
“கொஞ்ச நாள் முன்னாடி அவர் என்கிட்ட ஒரு சிம் கார்டு கொடுத்து விட்டிருந்தார் அதில் இருந்து மட்டும்தான் அவர் தொடர்பு கொண்டார். நான் அதை நீங்க எங்கேயோ தான் வச்சிருந்தேன்…” என்று தேடினார்.
“அதை உடனே எடுத்து தாங்க…” என்று கார்த்திகேயனும் சேர்ந்து மேசை மேல் தேடினான்.
தனது கைப்பைக்குள் இருந்து அந்த சிறிய சிம் கார்டை கண்டுபிடித்த சஞ்சீவ் சந்தோஷத்துடன் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். அதை சைபர் கிரைம் பிரிவில் கொடுத்து, அதில் இருந்த குரல் பதிவுகள் மீட்டெடுக்கப்பட்டன.
அந்த சிம் காட்டில் வந்த அழைப்புகளை மீண்டும் மீண்டும் கார்த்திகேயன் கேட்டான்.
அதில் பேசியவனது குரலோ,
“நீ என்னை சிக்க வைக்க நினைச்சா… உன் பொண்ணு உனக்குக் கிடைக்காம போய்டுவா அடுத்த வான்டட் போஸ்டரா உன் பொண்ணோட போட்டோ மாறும்… உனக்கு எத்தனையோ போலீஸ் சப்போர்ட் இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனா நீ என்ன மீறி ஒன்னும் செஞ்சிட முடியாது அப்படி மீறி செஞ்ச நீ கதறிக் கதறி அழகுற அளவுக்கு உன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்…” என்ற அந்தக் குரல் மிகவும் அமைதியாக இருந்தாலும் அதில் ஒரு கொடூரத்தன்மை இருந்தது அதனால் கார்த்திகேயனின் மனம் பதைத்தது.
“இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேன்… யாரோடதா இருக்கும் இது…” என்று எண்ணிய உள்மனம் சிந்தனையில் அவனை சிறை செய்தது.
உடனே கமிஷனருக்கு அழைப்பினை எடுத்து,
“ஹலோ அங்கிள் நான் அனுப்பின வொய்ஸ் ரெக்கார்ட கேட்டீங்களா..? எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு நீங்க அவரை விசாரிப்பதற்கு எனக்கு உதவி செய்யனும்..”
“கண்டிப்பா அதோட இன்னொரு விஷயமும் சொல்லணும் கார்த்திகேயன் நீ சொன்ன மாதிரி அந்த எரிஞ்ச பாடிய ரீபோஸ்ட்மாட்டத்துக்கு அனுப்பி விட்டோம் நீ ஒரு தடவை பார்க்கணும்னு கேட்டல்ல இப்ப வந்து பார்த்துட்டு போ கருணாகரனை கூட கூட்டிட்டு வா..”
“சரி அங்கிள் ஆனா அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கள..?”
“அது பத்தின விசாரணை போய்கிட்டு இருக்கு இன்னைக்குள்ள போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததுக்கு அப்புறமா யாருடையது என்று சொல்றேன் நீ அதுக்கு முன்னுக்கு வந்து அந்த பாடிய பார்த்துட்டு போயிட்டா அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்க செய்து முடித்து விடலாம்..”
அந்தப் பிண அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றுவருக்கு அனைத்தும் புகை மூட்டமாகவே இருந்தது. அவ்வளவு குளிர் அந்த நடுக்கத்திலும் மிகவும் நிமிர்ந்த நேரான நடையுடன் கார்த்திகேயன் முன்னே செல்ல அதனை சிறிது அதிர்ச்சியுடன் பார்த்தார் கருணாகரன்.
பிண அறையில் அந்த பாடியை திறந்து காட்ட மேலிருந்து கீழ் வரை கார்த்திகேயன் நன்றாக அதனை அளவெடுத்தான்.
மிகவும் பார்க்க முடியாத அளவு கொடூரமாக இருந்தாலும் ஒரு சிறு முகக் கோணல் கூட இல்லாமல் கார்த்திகேயன் அதன் அங்கங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்த படி நின்றான்.
“நாம போகலாம் அது போலீஸ்ட வேலை அதுதான் நம்மளோட நிவேதா கிடைச்சிட்டால்ல அதுக்கு அப்புறம் இன்னொரு சிக்கல் நாமளே போய் மாட்டிக் கொள்வது எனக்கு நல்லதா படல ஏற்கனவே இங்க பல சிக்கல்கள் இருக்கு இதுல இது வேறயா..”
“இல்ல அங்கிள் அப்படி சும்மா விட முடியாது ஒருத்தன் நம்மளோட நிவேதாக்கு இப்படித்தான் நடக்கும்ன்னு அதை செஞ்சு காட்டிட்டு போயிருக்கான் அப்புறம் இதுவும் ஒரு பொண்ணு தானே
நிவேதாவை நாம தேடின மாதிரி இந்த பொண்ணையும் அவங்கட அப்பா, அம்மா ஓயாம தேடிக்கிட்டு இருப்பாங்க அட்லீஸ்ட் அவங்க பொண்ண உயிரோட தான் கொடுக்க முடியல இறந்ததுக்கு அப்புறமாவது கடைசியா அவங்க அம்மா, அப்பாக்கு பார்க்கக் கிடைக்கலன்னா எப்படி சார்..?” என்று மிக வேதனையுடன் கார்த்திகேயன் கூற,
அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் கருணாகரனுக்கு நெஞ்சில் குத்தீட்டியாகக் குத்தியது.
‘என்ன ஒரு பறந்த மனப்பான்மை, தன்னலமற்ற செயல், பிறர் வேதனையை அறிந்து அதற்கேற்றால் செயல்படும் சிறந்த மனிதன்..
இப்படி ஒரு மனிதனைக் காண்பது இவ்வுலகில் அரிது தான்..’ என்று நினைத்து மெச்சிக்கொண்டார் கருணாகரன்.
அந்த பிணத்தை ஆராய்த்தவனது கண்கள் மின்னல் அடித்தது போல் மின்னிட, அவன் எதனையோ கண்டு விட்டது போல கருணாகரனை பார்த்து,
“சார் இது ரீனா தான்..” என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒன்று சேரக் கூற,
அதே நிலையுடன் கருணாகரனும்,
“ரீனாவா அவ நிவேதாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆச்சேப்பா அவ எப்படி..?” என்று திகைத்துப் போய் கருணாகரன் நிற்க,
அப்போதுதான் கார்த்திகேயனுக்கு ஒவ்வொரு முடிச்சுகளும் மெதுவாக அவிழ்வது போல் தெரிந்தது.
“நிவேதாவும், ரீனாவும் ஒன்றாக பார்ட்டியிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார்கள் அப்போது திடீரென யாரோ ஒரு மர்ம நபர் அவர்களை துரத்தி வந்திருக்க வேண்டும் அதில் விபத்து ஏற்பட உடனே அந்த நபர் நிவேதாவை தூக்கி வைத்துவிட்டு ரீனாவை கொளுத்தி எரித்திருக்க வேண்டும்..” என்று ஊகத்தின் மூலம் கருனாகரனுக்கு சில விஷயங்களை சிந்தனையின் அடிப்படையில் கூறினான் கார்த்திகேயன்.
“அப்படி என்றால் இதற்கு..?”
“இதற்கு முழு காரணமும் நிவேதாவை வைத்து எங்களை மிரட்டுவது தான் எங்களது சொத்தின் மீது இருந்த ஆர்வமா அல்லது நிவேதா மீது இருந்த ஆர்வமா என்று இன்னும் விசாரித்தால் தான் தெரியும்..”
“சரி அது எப்படி ரீனா தான்னு நீ கரெக்டா கண்டுபிடிச்ச..?”
“லாஸ்ட்டா பார்ட்டில அவ நிவேதா கூட நிற்க்கும் போது இதோ பாருங்க கையில இந்த டாட்டோ போட்டு இருந்தத நான் பார்த்தேன் இது சாதாரண டாட்டோ இல்ல சைனீஸ் எழுத்துல அவளோட பேர அவள் டாட்டோ போட்டு இருக்கா அதை வைத்து தான் கண்டுபிடிச்சேன்..” என்று கூறியதும் கருணாகரன் கார்த்திகேயனின் புத்திக் கூர்மையை கண்டு மனதிற்குள் மெச்சிக் கொண்டார்.