குருஷேத்திரனின் வார்த்தைகள் அபர்ணாவைத் திகைக்க வைத்தன.
“அவ யாரோ ஒருத்தி இல்ல என்னோட 12 வருஷ வாழ்க்கையை மொத்தமா திருடிக்கிட்டவ..
நான் என்னைத் தொலைச்சு நரக வாழ்க்கையை வாழ்றதுக்கு காரணமா இருந்தவ.. என்ன காரணத்தை சொல்லி என்ன வேணாம்னு விட்டுட்டுப் போனாளோ அதே காரணத்தை இன்னைக்கு அவ உன் முன்னாடி சொன்னதும் மறுபடியும் ஒரு ஆம்பளையா நான் தோத்திடக் கூடாதுன்னு நினைச்சேன்..
அதனாலதான் என்ன மீறி உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்.. அந்த நிமிஷம் எனக்கே எதுவும் புரியல அபர்ணா.. அவ சொன்னதுக்காக உன்கிட்ட நான் ரியாக்ட் பண்ணது ரொம்ப ரொம்ப டூ மச் தான்..
சில வார்த்தைகளால எல்லாரோட வலியையும் சொல்லிட முடியாது என்னோட வலி சொன்னாலும் உனக்குப் புரியாது..
அவளோ தன்னை அணைத்திருந்தவனின் அணைப்பிலிருந்து வேகமாக விலகியவள்,
“அவங்க உங்கள காயப்படுத்திட்டு போனதுக்கு நீங்க என்ன காயப்படுத்துறது சரியா..? நான் என்ன தப்பு பண்ணினேன்..?
ஆறு மணி நேரமா எங்க போறதுன்னு கூட தெரியாம ரோட்ல நிக்கவும் முடியாம அந்த செடிக்குள்ள கால மடக்கி உட்கார்ந்து இருந்த எனக்கு அந்த நிமிஷம் வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி இருந்துச்சு.. என்னைத் தாண்டி அந்த ரோட்ல எத்தனையோ கார் போகும் போதெல்லாம் இப்படியே போய் அந்த கார்ல விழுந்து செத்துடலாமான்னு கூட தோணுச்சு.. ஆனா அவ்வளவு தைரியம் எல்லாம் எனக்கு சுத்தமா இல்ல…
பூனை கண்ண மூடிக்கிட்டா உலகமே தன்ன பாரர்க்காதுன்னு நினைக்குமாம் அதே மாதிரி தான் நானும் என்னோட கண்ண ரொம்ப நல்லா இறுக்கமா மூடிக்கிட்டு யாருமே இல்லாத தனியான உலகத்துக்குள்ள போன மாதிரி இருந்தேன்..
அங்க என்ன வலிக்க செய்றதுக்கு நீங்க இல்ல… எனக்கு ரூல்ஸ் போடுறதுக்கு என்னோட புருஷன் இல்லை.. என்ன கட்டாயப்படுத்தி அங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது.. நான் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கிறதுக்கு அந்த கற்பனை உலகமே போதும்னு தோணுது..” என்றவளின் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன்,
“போதும் அபர்ணா..” என்றான்.
அவன் தன்னுடைய கன்னங்களைப் பற்றிக் கொண்டதும் மீண்டும் அவனுடைய கரங்களை விலக்கியவள்,
“இப்ப நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க..” எனக் கேட்டாள்.
“நான் உன்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்கல.. ஒரு சின்னப் பொண்ண ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோனு எனக்குள்ள தவிச்சுக்கிட்டு இருக்க மனசாட்சிய அமைதிபடுத்த ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்..”
“அப்போ திருந்திட்டீங்களா…?” என வெகுளியாக கேட்டவளைப் பார்த்து அவனுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல இருந்தது.
‘அரை மணி நேரத்திற்கு மேலே கோபத்தைக் கூட இவளால் கடைபிடிக்க முடியவில்லை..’ என எண்ணி கொண்டவன்,
“எனக்கே தெரியல..” என்றான்.
“ஓ.. அப்போ என்ன பார்த்தா பாவமா இருக்கா…? சிம்பதி பார்த்து இப்படி எல்லாம் பேசுறீங்களா..?”
“உண்மையச் சொல்லணும்னா உன்ன பார்த்தா பாவமா தான் இருக்கு, சாரி..” என்றான் அவன் மீண்டும்.
“உங்களுக்கு எப்படி அடி பட்டிச்சு..?” எனக் கேட்டாள்.
“நீ போனதுக்கு அப்புறம் தூங்கிட்டேன்.. அப்படியே உருண்டு பெட்ல இருந்து கீழே விழுந்துட்டேன்.. அப்போதான் அடிபட்டுருச்சு..” எனப் பொய் கூறியவன் தன்னுடைய வீங்கிப் போன நெற்றியை சற்றே அழுத்தமாக வருடி விட்டான்.
“எனக்கு ஓகே..” என்றவன் அப்படியே படுக்கையில் படுத்துக்கொண்டான்.
“ஓகேவா..? டூ மினிட்ஸ்ல வந்துடுறேன்..” என்றவள் அந்த அறையை விட்டு வேகமாக ஓடிச் செல்ல நொடியில் தன்னுடைய வலிகளை மறந்து விட்டு புன்னகையோடு தனக்கு உதவ வெளியே சென்றவளை எண்ணி வியந்து போனான் அவன்.
“இவ்வளவுதான் அபர்ணா..”
முதல் முறையாகத் தன்னுடைய வயதுக்கு இவள் ஏற்றவள் அல்ல என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.
பருவ மங்கை என அவன் எண்ணி இருக்க குழந்தை போல அல்லவா நடந்து கொள்கிறாள் இவள்..
இதற்கு மேல் அவளை எதற்கும் வற்புறுத்தக் கூடாது என்ற முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டான் அவன்.
சற்று நேரத்தில் சிறிய பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து வந்தவள் கைக்குட்டையை சுடுநீரில் அமிழ்த்தி ஒரு அளவான சூட்டோடு வீங்கி இருந்த அவனுடைய நெற்றியில் ஒத்தடம் கொடுக்க இதமாக இருந்தது அவனுக்கு.
“நான் எல்லாம் அடிக்கடி இப்படி எங்கேயாவது போய் முட்டிப்பேன்.. அம்மாதான் இப்படி ஒத்தடம் கொடுத்து சரி பண்ணிடுவாங்க..” என்றவளின் ஒரு கரம் அவனுடைய நெற்றிக்கு மருந்து இட மற்றைய கரமோ சுடுநீரை எடுத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டு இருந்தது.
அவனோ மெல்ல நகர்ந்து அவளுடைய மடியில் படுத்துக்கொண்டவன்,
“12 வருஷத்துக்கு முன்னாடி நான் உன்ன சந்திச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்..” எனக் கூற
திடீரென அவன் தன்னை நெருங்கி வந்து மடியில் படுத்துக்கொண்டதும் அதிர்ந்து போனவள், தன்னை மீண்டும் ஏதாவது செய்து விடுவானோ என அச்சமாக அவனைப் பார்க்க அவனோ தன்னுடைய விழிகளை மூடித் தூங்குவதற்கு தயாராகினான்.
நிம்மதிப் பெரு மூச்சோடு அவனைப் பார்த்தவள் கூச்சத்தில் நெளிய, “நான் சொன்னதுக்கு நீ ஒண்ணுமே சொல்லலையே..!” என்றான் அவன்.
“ஹாங்…? என்ன சொன்னீங்க..?”
“12 வருஷத்துக்கு முன்னாடியே உன்னை பார்த்து இருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொன்னேன்..” என மீண்டும் கூறினான் அவன்.
“அப்போ எனக்கு பத்து வயசு தான் இருந்திருக்கும் பரவாயில்லையா..?” எனச் சிரித்தாள் அவள்.
“நீ ஏன் இவ்வளவு லேட்டா பிறந்த..?”
“அத நீங்க என்னோட அப்பா, அம்மா கிட்ட தான் கேட்கணும்..”
“நீங்க ரொம்ப முன்னாடியே பிறந்துட்டு எங்க அப்பா அம்மாவை குறை சொல்றீங்களா..?” என்றாள்.
இதழ்கள் பிரிந்து சிறு புன்னகை அவனுடைய அதரங்களில் தோன்றியது.
சற்று நேரத்தில் அப்படியே அவன் உறங்கி விட்டதை உணர்ந்து கொண்டவள் மெல்ல அவனுடைய தலையை தன்னுடைய மடியில் இருந்து நகர்த்தி விட்டு அந்த அறையோடு அமைக்கப்பட்டிருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.
அவனுடைய கரங்கள் சிதைந்திருந்த விதமும் அவனுடைய நெற்றி புடைத்து இருந்த விதமும் அவன் படுக்கையில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்டதல்ல என்பதை புரிந்து கொண்டவள் அவனே தன்னைக் காயப்படுத்தி இருக்கிறான் என சரியாக எண்ணிக் கொண்டாள்.
இன்று பார்த்த அந்தப் பெண்ணால் இவன் மிகவும் காயப்பட்டு இருக்கிறான் போலும் என்று எண்ணியவளுக்கு மனதில் வேதனை சூழ்ந்து கொண்டது.
’12 வருஷத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் முடிஞ்சதுன்னா.. ஏன் கல்யாணம் நடக்கல..? ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஏதாவது..’ என எண்ணியவளுக்கு சுருக்கென இதயத்தில் வலி எடுத்தது.
அதனாலதான் அவரோட இயலாமையை சொல்லிக்காட்டி அந்தப் பொண்ணு பிரிஞ்சு போயிடுச்சோ.. இவரோட வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல..
அவ்வளவு கோபப்பட்டு எவ்வளவோ கவலைப்பட்டு இந்த வீட்டை விட்டு வெளியே போன எனக்கு கொஞ்ச நேரத்திலேயே எல்லாமே ஏன் மறந்து போச்சு.. அவர் வந்து நாலு வார்த்தை நல்லா பேசியதும் அப்படியே மாறிட்டேனே.. வர வர வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் எதுவுமே இல்லாம போயிடுச்சோ..!
ஒருவேளை இவர ஏத்துக்க பழகிக் கொண்டேனா..?
பார்க்கலாம் இனி எனக்கு பிடிக்காத எதையுமே பண்ண மாட்டேன்னு பிராமிஸ் பண்ணிருக்காரு.. அவரோட கடந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு.. இப்போ நான் மட்டும் தான் நிகழ்காலம்.. என்னோட வாழ்க்கையை நான் தான் சரிபடுத்தியாகணும்..
என்னால முடிஞ்சா இவரோட வலியை சீக்கிரமாவே இல்லாம ஆக்கிடுவேன்..’ என எண்ணிக் கொண்டவளுக்கு இதைவிட பெரும் வலியை குருஷேத்திரன் கொடுக்கப் போகிறான் என அக்கணம் தெரியவில்லை.
Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️❤️