இவனை எல்லாம் குனிய வச்சு பொறடியிலேயே நாலு குத்து குத்தணும்… இடியட்..
ஏதோ மருமகன்னு மரியாதை கொடுத்து இவனுக்காக எங்க அம்மா சமைச்சு வச்சா, அதை சாப்பிடுறதுக்கு இவன் டீல் வேற பேசுவானா..? கல்லுளிமங்கன்..’
“ஏய் எதுவா இருந்தாலும் ஓப்பனா பேசுடி.. இப்போ எதுக்கு மனசுக்குள்ள பொலம்பிட்டு இருக்க..?” என வர்மா அழுத்தமாகக் கேட்டவுடன், இவளுக்கோ உடல் உதறியது.
‘அடப்பாவி… இவன் முன்னாலே நிம்மதியா மனசுல கூட திட்ட முடியலையே…
ஐயோ இதையும் கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சிடுவான். இனி மனசுல எதையுமே இவன் முன்னாடி நினைக்கக் கூடாது..’ என எண்ணியவள் அவனைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தாள்.
அவளுடைய மறுப்பான தலை அசைப்பை பார்த்து “வாட்..?” எனக் கேட்டான் அவன்.
“நோ டீல்..” என்றாள் அவள்.
“டாம்.. டீலை ரிஜக்ட் பண்றியா..?”
‘ஆமா இது பெரிய அமெரிக்க டீல்..’ என எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் மனதில் கூறிக் கொண்டவள்,
வெளியே “நீங்க சாப்பிட்டா சாப்பிடுங்க.. சாப்பிடலைன்னா போங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது..” எனக் கூறி விட்டாள்.
“ஓஹ் ஓகே..” என தோள்களைக் குலுக்கிக் கொண்டவன் கிளம்புவதற்குத் தயாராகினான்.
அவனுடைய காக்கிச் சட்டையில் இருந்த உதிரமும் தூசியும் மாயமாக மறைந்திருந்தது.
அவன் தூங்கிய நேரத்தில் அவள்தான் இதைப் பண்ணியிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவன், அதனை எடுத்த கணம், நந்தினியின் அலைபேசி அலறியது.
“ஒரே வீட்ல இருந்துக்கிட்டு எதுக்கு இவங்க இப்போ கால் பண்றாங்க..?” எனப் புலம்பியவாறு, அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“நான் என்ன வெளிநாட்டுலையா இருக்கேன்..? கீழே இருந்துக்கிட்டு எதுக்கும்மா கால் பண்றீங்க..” எனக் கேட்டாள்.
“அடியேய்.. உன் புருஷனைக் கூட்டிட்டு வா.. டின்னர் ரெடி..” என்றார் நிர்மலா.
“இல்லம்மா.. அவருக்கு பசிக்கலையாம்.. கிளம்புறேன்னு சொன்னாரு..” என்றவளின் அருகே வந்தவன்,
அவளுடைய கரத்தைப் பற்றி, போனை ஸ்பீக்கரில் போட, அவனை முறைத்துப் பார்த்தாள் நந்தினி.
“என்னடி சொல்ற.. சம்பந்திகிட்ட கேட்டு மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்.. சாப்பிடாம போகப் போறாருன்னு சொல்றியே..”
“அதுக்கு நான் என்னம்மா பண்ணட்டும்..” என அவஸ்தையுடன் கேட்டாள் அவள்.
“நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது.. எப்படியாவது அவரை நம்ம வீட்ல சாப்பிட வை..” என நிர்மலா கூற, புருவத்தை ஏற்றி இறக்கினான் வர்மா.
நிர்மலா அழைப்பைத் துண்டித்தவுடன் நந்தினிக்கோ அவஸ்தை கூடிப் போனது.
“ஓகே பை..” என்றவன் அவளைத் தாண்டி வெளியேற முயன்ற கணம், “எனக்கு டீல் ஓகே..” என்றாள் அவள் தயக்கத்துடன்.
யுகேஷ் வர்மாவின் உதடுகள் சிரிப்பில் விரிந்தன.
அவளைப் பார்த்தவாறு நடந்து சென்று அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தவன், அவளை விழிகளால் வரவழைத்தான்.
அவளுக்கு நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே போனது.
“என்ன.. அங்கேயே நிக்கிற.. நீதானே டீல் ஓகேன்னு சொன்ன.. பக்கத்துல வா..” என அவன் கூறியதும், தயங்கித் தயங்கி அவன் அருகே வந்தவள் சற்று எரிச்சலுடன் “இப்போ நான் என்ன பண்ணனும்..” எனக் கேட்டாள்.
“கிஸ் பண்ணு..” என்றான் அவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.
எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளுக்கு தலை சுற்றி மயக்கம் வந்து விடும் போலிருந்தது.
‘சரியான கல்லுளி மங்கன் சே.. நான் கிஸ் பண்ணலன்னா இப்படியே இருப்பான் போல..’ என மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.
“ம்ம் கொடு..” என்றான் அவன்.
வேறு வழி இன்றி குனிந்து அவனுடைய தாடி ட்ரிம் செய்யப்பட்ட கன்னத்தில் மென்மையான ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு, ஏதோ உலக சாதனை செய்தவள் போல பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேற முயன்ற கணம், சட்டென அவளுடைய கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டான் யுகேஷ் வர்மா.
“ப்ளீஸ்.. கைய விடுங்க..” படபடத்தாள் அவள்.
“ஏய்.. நான் உன்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பண்ற..”
“ஏன்.. நா.. நான்தான் கிஸ் பண்ணிட்டேனே..” என்றாள் அவள் புரியாமல்.
“உன்னை யார் கன்னத்துல பண்ணச் சொன்னது..? நான் லிப்ஸ்ல தானே கேட்டேன்..” என்றதும், அவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
முகம் குங்குமமாகச் சிவந்து விட, அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறியவள்,
“இதெல்லாம் டூ மச்..” என்றாள்.
“இதுல என்ன டூ மச்..? கன்னத்துல கொடுத்ததை உதட்டுல கொடுன்னு சொன்னேன்.. அவ்வளவுதான்..” என்றான் அவன் சாதாரணமாக.
வெட்கம் ஏறி தடுமாறிக் கொண்டிருந்தவளைப் பார்க்கப் பிடித்தது அவனுக்கு.
“ப்ளீஸ்.. உங்க டீலுக்கு ஏதாவது ஆஃபர் கொடுக்க முடியாதா..? கன்னத்து முத்தமே போதுமே.. ஏதாவது டிஸ்கவுண்ட் கொடுங்களேன்..” எனக் கெஞ்சலாகக் கேட்டாள் நந்தினி.
சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டான்.
“ப்ச்.. சொன்னா சொன்னது போல பண்ணனும்..” என்றான் அவன்.
“எ.. எனக்கு கூச்சமா இருக்கு..”
“பட் அது என் பிரச்சனை இல்லையே..”
அவனை முறைத்துப் பார்த்தவள், “சரி.. கண்ண மூடுங்க..” என்றாள் கோபத்துடன்.
“முடியாது.. வேணும்னா நீ மூடிக்கோ..”
அவளுக்கோ அவனுடைய கன்னத்தில் நான்கு அப்பு அப்பினால் என்னவென்று தோன்றியது.
வேறு வழி இல்லை.
கடலுக்குள் இறங்கி விட்டாள், இனி கரையைச் சென்று சேர்ந்துதானே ஆக வேண்டும்.
வேகமாகத் துடித்த இதயத்தைத் தன் கரத்தால் மெல்ல வருடிக் கொண்டவள், அவனை மெல்ல நெருங்கி, அவனுடைய உதடுகளில் நடுக்கத்துடன் பட்டும் படாமலும் ஒரு சிறிய முத்தத்தைக் கொடுத்து விட்டு, மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வில் வேகமாகப் பதறி விலக, அவனுக்கோ மின்னல் தாக்கிய உணர்வு.
ஒரு நொடி மொத்தமாக அவன் நிதானத்தைத் தொலைத்து விட்டான்.
அவளோ வெட்கம் பொங்கி வழிய, அவனைப் பார்க்க முடியாமல், “இப்போ ஓகே தானே.. நான் கிளம்புறேன்..” எனக் கூற, மீண்டும் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான் அவன்.
இப்போது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகின்றானோ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
“நான் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா இல்லையா..? நான் டீப் கிஸ் வேணும்னு சொன்னேன்..” என்றான் அவன் கரகரப்பான குரலில்.
அவளோ அழுது விடும் நிலையில் இருந்தாள்.
மீண்டும் மீண்டுமா என்ற பதற்றம் அவளுக்குள் தோன்றியது.
இந்த ஒற்றை முத்தத்திற்கே அவளின் சித்தம் தொலைந்தது போலிருந்தது.
அதற்குள் ஆழமான முத்தம் வேறு வேண்டுமென்று கேட்கின்றானே.
கரங்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
அவளுடைய மொத்த கோபமும் தன் அன்னையின் மீதுதான் பாய்ந்தது.
‘இப்போ இவனுக்கு சமைச்சு போடணும்னு என்ன அவசியம் வந்துச்சு…?
இந்த அம்மா என்னை இப்படிக் கோர்த்து விட்டுட்டாங்களே…’
“ஏன்டி எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேச மாட்டியா..? மனசுக்குள்ளேயே பேசிப்பியா..” என அழுத்தமாகக் கேட்டான் அவன்.
‘ஐயோ கடவுளே, இவன் முன்னாடி மனசுல கூட நினைக்க முடியலையே..’ என எண்ணியவள் “சாரி.. எனக்கு டீப் கிஸ் பண்ணத் தெரியாது..” என்றாள் தடுமாறியவாறு.
அவளை ஒரே இழுப்பில் இழுத்து அவளைத் தன் மடி மீது அவன் அமர்த்திக் கொள்ள, அவளுக்கோ சர்வமும் நடுங்கி விட்டது.
“ஐயோ..” எனப் பதறி எழ முயன்றவளின் இடையில் தன்னுடைய கரத்தை அழுத்தமாகப் பதித்து, அவளை அசைய விடாமல் செய்தவன்,
“இட்ஸ் ஓகே… நான் கிஸ் பண்ண சொல்லித் தர்றேன்..” என்றான்.
மீண்டும் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள் அவள்.
அவளுடைய வளைந்த இடையில் இருந்த அவனுடைய கரத்தின் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போனது.
அவள் அணிந்திருந்த ஆடை தாண்டி, அவனுடைய கரத்தின் வெப்பம் அவளுடைய இடையைச் சுட, அவளுக்குள் ஏதோ உருகும் உணர்வு.
அவனுடைய கரம் அவளுடைய வயிற்றில் படர்ந்தது.
அவனுக்கோ அவளைத் தன் மடி மீது அமர்த்தியதில் இருந்தே சோதனைக் காலம் ஆரம்பித்தது.
அவனுடைய உணர்வுகள் எழுந்து, அவள் வேண்டும் என்று அடம் பிடிக்க, அவனுடைய கரங்களைக் கட்டுப்படுத்துவதே அவனுக்கு மிகப் பெரும் சவாலாகிப் போனது.
அவளுடைய இடையில் இருந்த கரம், அவளுடைய வயிற்றை வருடி, மெல்ல மேல் நோக்கி நகர ஆரம்பிக்க, பதறி அவனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டவள், “ஐயோ வேணாம்… நானே கிஸ் பண்ணிடுறேன்..” என்றாள் வேகமாக.
அவன் கேட்டது போல முத்தத்தைக் கொடுத்தால் சீக்கிரமாகச் சென்று விடலாமே.
இப்படி தேவையில்லாத அவஸ்தைகள் எல்லாம் அவள் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா..?
அவனுடைய வருடலுக்கு அவளுடைய உடல் வளைந்து கொடுப்பதை உணர்ந்து, உள்ளுக்குள் அதிர்ந்தவள், அவனைப் பார்க்கவே தயங்கினாள்.
“சரி.. அப்போ நீயே கிஸ் பண்ணு..” என்றான் வர்மா.
படபடத்த தேகத்தை அடக்கியவள், மிகவும் அருகில் இருந்த அவனுடைய முகத்தை ஒரு நொடி பார்த்தாள்.
அவனுடைய விழிகளைச் சந்தித்ததும், வெட்கம் பிடுங்கித் தின்றது.
‘கடவுளே.. இந்த ஒரே ஒரு கிஸ் பண்றதுக்கு மட்டும் எனக்கு தைரியத்தைக் கொடு..’ என மாரி ஆத்தாவிற்கு வேண்டுதல் ஒன்றை வைத்தவள்,
வேகமாக அவனுடைய உதடுகளில் தன்னுடைய இதழ்களைப் பதித்து விட்டு, அதே வேகத்தில் விலக அவனோ அவளுடைய பின்னந் தலையில் தன் கரத்தைப் பதித்து, அவளை நகர விடாமற் செய்தவன், அவளுடைய உதடுகளை விழுங்கிக் கொண்டான்.
திணறிப் போனாள் பெண்ணவள்.
அவன் கேட்ட ஆழமான முத்தத்தை அவனே அவளுக்குக் கற்றுக் கொடுத்தான்.
இந்த முத்த யுத்தத்தில் ஆண்மை ஓங்கும் போது பெண்மை எதிர்க்கத் துணியவில்லை.
மயங்கிக் கிறங்கியது.
பின்தலையில் பதித்திருந்த அவனுடைய கரம் மெல்ல கீழிறங்கி அவளுடைய கழுத்து வளைவைப் பற்றிக் கொள்ள, அவளுக்கோ உடலில் ஒரு விதமான அதிர்வு.
ஆழமான முத்தம் கேட்டவன் அவளுக்கு முடிவில்லாத முத்தத்தை வழங்கிக் கொண்டிருந்தான்.
முத்தத்தை முடிக்கும் எண்ணம் அவனுக்கு சிறிதும் இல்லை.
இனி எப்போது இந்த வாய்ப்பு வருமோ என எண்ணியவன், கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.
அவளோ உணர்ச்சிகளைத் தாங்க முடியாமல் துவண்டு அவனுடைய மடியில் இருந்தவாறு அவன் மார்பின் மீது சாய, அவளை இறுக்கமாக அணைத்து, அப்படியே தன் கரங்களில் தூக்கிக் கொண்டவன் அவளைப் படுக்கையில் கிடத்தி அவள் மீது படர்ந்து விட்டான்.
இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்தேறி விட்டது.
ஒற்றை முத்தத்தோடு விலகும் நிலையில் அவன் இல்லை.
அவளுடைய முன் உடல் முழுவதும் படர்ந்து, அவளுடைய இரு கைகளையும் தன்னுடைய ஒற்றைக் கரத்தால் சிறை செய்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முத்தம் பதித்து, கரங்களால் எல்லை மீறி இன்பம் துய்க்க, அவனுடைய இழுப்புக்கு எல்லாம் விழிகள் மூடி இசைந்து கொடுத்தாள் நந்தினி.
அவன் ஒன்றும் வேற்று ஆடவன் கிடையாதே.
அவளுடைய கணவன் அல்லவா.
உடல்கள் உருகும் அந்த நிலையில், அவனுக்கும் அவளுக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் எல்லாம் அவளுக்கு மறந்தே போயின.
“ஏய்.. யூ ஆர் கில்லிங் மீ..” என்றவன், இன்னும் ஆழமாக அவளில் புதைய முயன்ற கணம் அந்த அறைக் கதவு தட்டப்பட்டது.
சட்டென அவனைத் தன்னிலிருந்து தள்ளி விட்ட நந்தினியோ பதறி விட்டாள்.
“ஐயோ போச்சு போச்சு யாரோ வந்துட்டாங்க…” எனக் கைகளை உதறியவளின் உதடுகள் வீங்கி இருப்பதைக் கண்டவன் தன் சிகையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.
1 comment
Super super super super super super super super super super super super super super