என்ன நடக்கின்றது என்பதை முழுவதுமாக உணர்ந்து கொள்வதற்கு முன்பே வர்மாவின் முழு அணைப்பில் நின்றிருந்தாள் நந்தினி.
அவனுடைய ஒற்றைக் கரம் அவளுடைய இடையை வருட இன்னொரு கரமோ அவளுடைய கழுத்து வளைவைத் தீண்டியது.
அவளுக்கோ தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடலில் கூச்சம்.
இயல்பான கணவன் மனைவி போல அவர்கள் நடந்து கொள்வதில்லையே.
இயல்பான பேச்சுவார்த்தை அவர்களுக்கு இடையே இருந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு கூச்சமும் தயக்கமும் தோன்றியிருக்காது.
அவனுடைய தொடுகையில் இயல்பாக கரைந்து கலந்து உருகிப் போயிருப்பாள்.
ஆனால் அவனோ பேசுவதற்கும் அவளுடன் நேரம் செலவழிப்பதற்கும் கூலி கேட்பவன் ஆயிற்றே.
திடீரென அணைத்து உடலால் மட்டும் நெருக்கம் காட்டினால் எந்தப் பெண்ணால் தான் சட்டென ஒட்டிக் கொள்ள முடியும்..?
எவ்வளவோ முயன்றும் அவளால் அவனுடன் இலகுவாக ஒன்ற முடியவில்லை.
தடுமாறினாள்.
அவளுக்கு மட்டும்தான் அந்தத் தடுமாற்றம்.
அவனுக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை.
படபடத்துப் போய் விழிகள் மூடி அமைதியாக நின்றவளின் சிவந்த இதழ்களைத் தன்னுடைய அதரங்களால் முற்றுகையிட்டான் யுகேஷ் வர்மா.
நீண்ட முத்தம் அது.
கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய உணர்வுகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான் அவன்.
அவனுடைய மெல்லின முத்தமோ வல்லினமாக மாறியது.
அவளுடைய இதழ்களை முழுதாக விழுங்கிக் கொள்பவன் போல முத்தமிட ஆரம்பித்ததும் அவளுக்கு கால்கள் தள்ளாடத் தொடங்கின.
இப்படி ஒரு அதிரடி முத்தத்தை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவே இல்லை.
விழிகளை மூடிக் கொண்டவளோ திறக்கவே இல்லை.
அதீத வெட்கம் அவளை ஆட்கொண்டது.
தொய்ந்து சரிந்தவளின் இடையை அழுத்தமாகப் பற்றி தன்னோடு நெருக்கிக் கொண்டவன் “டீப் கிஸ்னா இப்படி இருக்கணும்..” என்றான்.
அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. மூச்சு வாங்கியவாறு அவனுடைய விழிகளைச் சந்திக்க தைரியம் இன்றி அவனுடைய மார்பில் தன் பார்வையைப் பதித்தாள் மங்கை.
அவனோ அவளது நாடியில் கை வைத்து தன்னுடைய முகத்தைப் பார்க்கும் வண்ணம் உயர்த்தியவன் “நீ உங்க வீட்ல போட்டிருந்த ட்ரஸ் நல்லா இருந்துச்சு..” என்றான்.
அவளுக்கு மீண்டும் முகம் சிவந்தது.
அவன் கொஞ்சமே கொஞ்சம் மாறியிருக்கிறான் என்று தோன்ற அவளுடைய மனதுக்கோ நிம்மதி.
முன்பு இப்படி கூட பேச மாட்டானே.
நெருக்கம் கூடக் கூட அவனும் கொஞ்சமே கொஞ்சம் மாறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டதும் அடுத்த நெருக்கத்துக்கு அடித்தளமாக மெல்ல அவனை நெருங்கி அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் நந்தினி.
அவளாக வந்து அணைத்ததும் அதிர்ந்துதான் போனான் அவன்.
அவள் அணைத்ததும் எழுந்த உணர்வை உணர்ந்து கொண்டவனுக்கு உதடுகளில் புன்னகை கூட மலர்ந்தது.
அப்படியே அவளைத் தன் கரங்களில் தூக்கிக் கொள்ள பதறி அவனுடைய டீ-ஷர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.
“செம அழகுடி நீ..” என்றான் வர்மா.
பட்டென விழிகளை மூடிக் கொண்டாள் அவள்.
அவளது உதடுகளில் சிறு புன்னகை தவழ்ந்தது.
அதன் பின்னர் அனைத்தும் அவனுடைய விருப்பப்படி தான் நடந்தது.
அவளைப் படுக்கையில் கிடத்தி ஆடைகள் அகற்றி வெற்றுடலின் மீது படர்ந்து அவளைத் தவித்து தகிக்கச் செய்தவன் தன் கூடலை ஆரம்பித்து விட அவனை இறுக அணைத்துக் கொண்டாள் பெண்.
நந்தினியை முழுதாக ஆண்டு முடித்து விட்டு அவன் விலகிப் படுத்து விட மெல்ல போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக் கொண்டவள் சிறு எதிர்பார்ப்புடன் அவனுடைய முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனுக்குள் எழுந்து பேயாட்டம் போட்ட உணர்வுகளோ தற்சமயம் வடிந்து விட்டிருந்தன.
அந்தத் திருப்தியுடன் அவன் விழிகளை மூடி உறங்கி விட அவளுக்கோ ஏமாற்றமாகிப் போனது.
முதல் முறையாக அவளும் அவனுக்கு இணங்கி வந்திருக்கிறாள்.
அவளுடைய விருப்பத்துடன் நடந்த முதல் கூடல் அல்லவா இது..?
இதைப் பற்றி எதுவுமே சொல்லத் தோன்றவில்லையா…?
வலித்ததா இல்லையா என்று கூட கேட்கவில்லையே.
சரி ஒற்றை வார்த்தை கூட பேச வேண்டாம். ஆனால் இவ்வளவு நேரமும் அணைத்து அவனுடைய கை வளைவுக்குள் வைத்துக் கொஞ்சி தன்னை உருகிக் கரைய வைத்தவனுக்கு கூடல் முடித்ததும் சிறு நெற்றி முத்தமோ ஒற்றை அணைப்போ வழங்கத் தோன்றவில்லையே.
எதுவுமே நடக்காதது போல விலகிப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அதிருப்தியே எழுந்தது.
அழுகை வந்துவிடும் போல இருந்தது.
சட்டென தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் நந்தினி.
இன்று முழுதும் அவனுக்கு ஏராளமான வேலைகள் அல்லவா.
பாவம் நடுவீதியில் நின்றவாறு கொட்டும் வெயிலில் ஓய்வே இன்றி வேலை செய்துவிட்டு வந்தவனுக்கு களைப்பு இருக்கத்தான் செய்யும். அதனால்தான் தூங்கி விட்டான் போல என்று எண்ணி தன்னைத் தேற்றிக் கொண்டவள் அவனுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
பேரழகன் தான்.
அவளுடைய மனம் வெட்கத்துடன் மெச்சிக் கொண்டது. மெல்ல எழுந்து போர்வையுடன் குளியலறைக்குள் சென்றவள் சற்று நேரத்தில் வெளியே வந்த போது வர்மாவோ படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தான்.
அவனைக் கேள்வியாகப் பார்த்தவாறு வந்தவள் “என்னாச்சுங்க..” என்று மென்மையாகக் கேட்க,
சட்டென அந்த அறையே அதிரும் வண்ணம் “ஷட் அப்..” எனக் கர்ஜித்தான் அவன்.
அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
இப்படி கத்தும் அளவுக்கு அவள் அப்படி என்ன தவறு செய்து விட்டாள்..?
சட்டென விழிகள் கலங்கிப் போயின.
அப்போதுதான் அவனுடைய கரத்தில் அலைபேசி இருப்பதைப் பார்த்தவள் அவன் அழைப்பில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.
“இடியட்.. ஒரு மிஷனைக் கூட உங்களால ஒழுங்கா பண்ண முடியாதா..” என்று அழைப்பில் யாரையோ திட்டி விட்டு கோபத்தில் தன்னுடைய போனைத் தூக்கி சோபாவின் மீது எறிந்தவன் மீண்டும் படுக்கையில் சரிந்து விட நந்தினிக்கோ கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
தன் உடலில் சுற்றியிருந்த போர்வையை இறுகப் பற்றியவாறு தன்னுடைய ஆடைகளை எடுத்தவள் ஆடை மாற்றும் அறையை நோக்கி நகர “ட்ரஸ் வேணாம் நந்தினி..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
என்ன சொல்கிறான் இவன்..?
ஆடை வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்…?
தன்னை இப்படியே ஆடையின்றி இருக்கச் சொல்கிறானா..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
காதலாகக் கரைந்து ஏக்கத்தோடு கணவன் இப்படிக் கூறினால் மனைவிக்கு வெட்கம் வந்தாலும் வரக்கூடும்.
ஆனால் இவ்வளவு கோபமாகத் திட்டிவிட்டு ஆடை அணியாதே என்று வேறு சொன்னால் அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்..?
உள்ளுக்குள் வெடிக்கும் நிலையில் இருந்தாள் நந்தினி.
மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டவள் “எனக்குத் தூக்கம் வருது..” என்றாள்.
“உன்னை தூங்க வேணாம்னு நான் சொல்லவே இல்லையே.. ஆனா இப்படியே தூங்கு.. ட்ரஸ் வேணாம்..” என்று அவன் அழுத்திக் கூற அவளுக்கு அது பிடிக்கவில்லை.
அசையாமல் நின்றாள்.
“இங்க வா நந்தினி..” என்று அழைத்துவிட்டான் அவன்.
“என்ன..” என்பது போல அவனுடைய அருகே வந்து நின்றவளின் கரத்தைப் பிடித்து ஒரே இழுவையில் இழுத்தவன் அவள் படுக்கையில் விழுந்ததும் அவளுடைய உடலை மறைத்திருந்த போர்வையை விலக்கி அவளுடைய வெற்று உடலில் தன் முகத்தைப் புதைத்து அணைத்தவாறு விழிகளை மூடிக் கொள்ள அவளுக்கு தேகம் நடுங்க ஆரம்பித்து விட்டது.
படபடத்துப்போய் விலகிய போர்வையை எடுக்க முயன்றவளால் அசையவே முடியவில்லை.
அவன்தான் அவள் மீது மொத்தமாகப் படர்ந்திருந்தானே.
விக்கித்துப் போனாள் நந்தினி.
தன்னுடைய உணர்வுகளுக்கு அவனிடத்தில் மதிப்பே இல்லையா என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்தது.
அவளால் அப்படியே தூங்க முடியவில்லை.
ஒரு மாதிரியாக இருந்தது.
அவனுடைய இரும்புக் கரம் தன் மீது இருந்து விலகாது என்பது புரிய தூங்காமல் அப்படியே விழித்துக் கிடந்தாள்.
அவள் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் அவன் நன்றாக உறங்கி விட்டான் என்பது புரிந்ததும் மெல்ல தன்னுடைய உடலில் இருந்து அவனைத் தள்ளினாள் அவள்.
அவனோ சரிந்து படுத்ததும் வேகமாக எழுந்து ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு எதிலோ தோற்றுப் போன உணர்வு.
அழுதவாறே தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டவள் மீண்டும் வெளியே வந்தபோது வெகு நேரம் ஆகியிருந்தது.
அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் அருகே சென்று தூங்குவதற்கு கூட அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டவளுக்கு ‘என்ன மனிதன் இவன்..’ என்று தோன்றியது.
அதன் பின்னர் அவளை அறியாமலேயே அந்த சோபாவில் உறங்கி விட்டிருந்தாள் நந்தினி.
ஆதவன் வானில் உதித்து காலைப் பொழுதை உணர்த்திய சற்று நேரத்திலேயே தன் விழிகளை மலர்த்தினாள்.
சட்டென அவளுடைய பார்வை படுக்கையை நோக்கித்தான் பாய்ந்தது.
அங்கே படுக்கை வெறுமையாக இருந்தது.
நிமிர்ந்து அமர்ந்தவாறு தன் விழிகளை அவள் அறையைச் சுற்றிப் படரவிட யூனிஃபார்ம் பட்டன்களைப் போட்டவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா.
பதறி எழுந்து நின்றாள் அவள்.
இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமா என்ற குற்ற உணர்வு அவளை ஆட்கொண்டது.
அவளை நெருங்கி வந்தவன் “எதுக்கு சோபால படுத்த..” என்று கேட்டான்.
அவனுடைய பார்வை அவளுடைய கழுத்தில் பதிந்தது.
“தெரியல..” என்றாள் அவள்.
நிஜமாகவே அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
“நைட் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா..” என்று அடுத்த கேள்வி அவனிடமிருந்து வந்தது.
‘மனசளவுல நான் சந்தோஷமா இல்ல..’ என்று சொல்லி விடலாமா என்று நினைத்து விட்டாள் அவள்.
அவளோ அமைதியாக இருக்க அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்து வந்து அங்கிருந்த கண்ணாடியின் முன்பு நிறுத்தியவன் அவளின் பின்புறம் வந்து நின்று கொண்டான்.
அவளோ நிமிர்ந்து அவளுக்கு முன்பு இருந்த கண்ணாடியில் தெரிந்த அவனுடைய பிம்பத்தைப் பார்க்க தன்னுடைய ஒற்றை விரலால் அவளுடைய கழுத்தை வருடியவன் “நேற்று நைட் லைட்டா தானே கடிச்சேன்.. ஆனா இப்படி சிவந்திருக்கு..” என்றான்.
அப்போதுதான் அவளும் அதைப் பார்த்தாள்.
சிறிய தழும்பு போல அவளுடைய கழுத்து வளைவில் சிவந்து போயிருந்தது.
“ஏய்.. என்ன ஆச்சு உனக்கு.. ஏன் சைலன்ட்டா இருக்க..” என்று கேட்டான்.
அடுத்த நொடியே அவன் அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டை சட்டென கழற்றி விட பதறிப்போய் தன் உடலை கைகளால் மறைத்துக் கொண்டவளுக்கு அவன் மீது அவ்வளவு கோபம் வந்தது.
“ஐயோ.. என்ன பண்றீங்க.. என் ட்ரஸ்ஸ கொடுங்க..” என்று சீறியவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டவன் அவளுடைய உடலை ஆராய்ச்சியாகப் பார்க்க அவளுக்கு நிலத்திற்குள் புதைந்து போய் விடலாமா என்பது போல இருந்தது.
கழுத்துக்கு கீழேயும் இடுப்பிலும் சிவந்திருப்பதைப் பார்த்தவன் “எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற.. நான் பார்த்தது தானே..” என்று அவளை அடக்கிவிட்டு அவளுடைய உடலை ஆராய்ந்து முடித்து விட்டு நிமிர அவள் கையில் இருந்து டீ-ஷர்ட்டைப் பறித்து வேகமாக அணிந்து கொண்டவள் அவனை விட்டு விலகி அந்த அறையின் பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.
கோபத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.?
உணர்வுகள் அற்ற பொம்மை என்று நினைத்துவிட்டானா.?
கண்ணீர் விழிகளில் இருந்து தாரை தாரையாக வழிந்தது.
நடந்த அனைத்தையும் நினைக்க நினைக்க அவளுக்குள் கோபம் தீயாய்ப் பரவியது.
சற்று நேரத்தில் அங்கே வந்த வர்மாவோ அவளுடைய தோளில் கரத்தை பதிக்க சட்டென அவனுடைய கரத்தை வேகமாகத் தட்டி விட்டவள்,
அவளுடைய சிவந்த மேனிக்கு பூசுவதற்கு களிம்பை எடுத்து வந்தவன் அவள் இப்படிக் கத்தவும் கொதித்துப் போனான்.
“ஏய்.. நீ பாவம்னு தான் உடம்பில் எங்கேயாவது காயம் இருக்கான்னு பார்த்தேன்.. மத்தபடி வேற ஒன்னும் இல்ல.. இதைக் கொடுக்கறதுக்கு தான் வந்தேன்..” என்றவன் தன் கையில் இருந்த களிம்பைத் தூக்கி தரையில் விசிறி அடித்துவிட்டு “சரிதான்.. போடி..” என்றவாறு அங்கிருந்து கோபத்தில் விருட்டென வெளியேறினான்.