இவனிடம் பேசி வெல்ல முடியாது என மனதிற்குள் சலித்துக் கொண்டவள் நேரே குளியலறைக்குள் செல்வதற்காக அவனைத் தாண்டி நடக்கத் தொடங்க,
அவளுடைய கரத்தை எட்டிப் பிடித்தான் விநாயக்.
பதறிப் போனவளாய் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க,
“நேத்து நைட் இந்த கை தானே எனக்கு உன்னோட மயி×× தூக்கிக் காட்டிச்சு..?”
“………….” எதுவும் பேசாது தன்னுடைய கரத்தை அவனிடமிருந்து உருவிக் கொள்ள முயன்றாள் செந்தூரி.
“ரொம்ப தைரியம் வந்துருச்சு போல..?”
“ஸ்ஸ்.. கை.. கைய விடுங்க..”
அவளுடைய அழகிய வெண்டைப் பிஞ்சு விரல்களை ஒவ்வொன்றாக வருடியவன் “உடைச்சிடவா..?” எனக் கேட்டானே பார்க்கலாம்.
அவளுக்கோ அச்சத்தில் வியர்வையே அரும்பத் தொடங்கி விட்டது.
“ப்ளீஸ்.. வேணாம் வலிக்கும்..” எனப் பதறியவாறு நின்றவளின் கரத்தை விடுவித்தான் அவன்.
“நீ கெஞ்சும் போது ரொம்ப க்யூட்டா இருக்க..’
‘அட நாசமா போனவனே…’
அவளோ விட்டால் போதுமென நினைத்து வேகமாக அந்த இடத்தை விட்டு நகர முயன்ற நொடி அவளுடைய அலைபேசி சிணுங்கத் தொடங்கியது.
அவளுடைய அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்தவன் யாரிடமிருந்து அழைப்பு வருகின்றது என்பதைப் பார்த்தான்.
அவளுடைய சிறிய அலைபேசியின் திரையில் ஹபி2 என சேமித்திருந்த எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டவனது விழிகள் இடுங்கின.
“பார்ரா உங்க ஃப்யூச்சர் ஹஸ்பண்ட் நம்பர் டூகிட்ட இருந்து கால் வருது போலையே… இது அந்த மேக்கப் மேன்தானே..?” எனப் புருவங்களை சுருக்கி சிந்தித்தவாறு விநாயக் கேட்க,
சேகரின் ஒரு எண்ணை மட்டுமே பிளாக் செய்த தன்னுடைய மடத்தனத்தை அக்கணம் நொந்து கொண்டவள்,
சேகர் எதற்கு இப்போது அழைப்பு எடுக்கின்றான் என சினமடைந்தாள்.
தன்னுடைய உணர்வுகளை முகத்தில் காட்டாது அழைப்பைத் துண்டிக்க சொல்வதற்கு முதலே அழைப்பை ஏற்று அவுட் ஸ்பீக்கரில் போட்டிருந்தான் விநாயக்.
இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
‘இவன் எப்படி என்னுடைய போனை ஆன் செய்யலாம்..? என்னுடைய பர்சனில் தலையிட இவன் யார்..?’ என சினம் துளிர்த்தாலும் அதைக் காட்ட முடியாத நிலையில் அல்லவா அவள் இருக்கிறாள்.
முதலில் அவள் ஆடைகளை அணிய வேண்டும்.
இப்படி அரைகுறையாக இவன் முன்பு நிற்க வேண்டி இருக்கிறதே எனத் தனக்குள் கசந்தவள் அழைப்பைத் துண்டித்து விடலாம் என அவனை நெருங்க,
அதற்குள் அழைப்பில் இருந்த சேகரோ பொரியத் தொடங்கி விட்டான்.
“என்னடி பெரிய உத்தமி மாதிரி என்கிட்ட வேஷம் போட்ட..? இப்போ அந்த ஹீரோ வீட்டுல தானே நீ இருக்கியாம்.. லவ் பண்ணும் போது ஒரு முத்தம் கேட்டதுக்கே, நீ என்ன இவ்வளவு அலையவிட்ட.. இதுவரைக்கும் என்ன எதுவுமே பண்ண விடலையே.. ஆனா பணக்காரன்னதும் அவன்கிட்ட போயிட்டல்ல.. வெட்கங்கெட்டவளே உன்னப் போய் நல்லவன்னு நம்பினேன் பாரு என்ன சொல்லணும்..”
என அவன் கொச்சை வார்த்தைகளால் அவளை அசிங்கமாகத் திட்டத் தொடங்கி விட இவளுக்கோ சினம் பொங்கியது.
“உனக்கு என்னடி மரியாதை..? அதான் அந்த ஹீரோவோட சேர்ந்து போட்டோல மினுக்கிறியே..”
சுவாரசியமாக அவளுடைய முகத்தையும் அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் விநாயக் மகாதேவ்.
அன்னைக்கு ப்ரொடியூசர் சார் உன்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டதுக்கு எவ்வளவு சீன் போட்ட..? இப்போ நீ எங்க இருக்க.?”
“இதெல்லாம் உனக்கு எதுக்கு..? நீ உன்னோட வேலைய மட்டும் பாரு.. என்னோட விஷயத்துல தலையிடாத..”
“அது எப்படி நான் தலையிடாம இருப்பேன்..? இவ்வளவு நாளும் என்ன நல்லா பயன்படுத்திட்டு என்னை ஏமாத்திட்டியே..”
அவனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்கு சினம் உச்சிக்கேறியது.
இவ்வளவு நாளாக அவள் அவனை பயன்படுத்தினாளாமே..
இந்த வார்த்தைகளைக் கூறும் போது அவனுக்கு கொஞ்சமும் கூசவில்லையா..?
“என்ன சொன்ன..? நான் உன்ன பயன்படுத்தினேனா..? வார்த்தையை விடும் போது யோசிச்சு பேசு.. உன்கிட்ட இருந்து பத்து ரூபா கூட நான் வாங்கினது கிடையாது.. லவ்வுங்கிற பேர்ல என் பின்னாடி நாய் மாதிரி சுத்திக் கெஞ்சினது நீதான்… நீதான் என்னத் தேடி வந்த… இப்போ நமக்குள்ள எதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு.. நான் எங்க போன உனக்கு என்ன..? எங்க இருந்தா உனக்கு என்ன..? என்னோட விஷயத்துல தலையிடாத..”
“ஒரு வருஷமா உன்ன நான் லவ் பண்ணிருக்கேன்டி.. அதுக்காவது நீ ஏதாவது பண்ணித்தான் ஆகணும்..”
“மரியாதையா ஃபோன வச்சிடு..” சீறினாள் அவள்.
“எவன் கூடயோ எல்லாம் ஒன்னா இருக்க.. என் கூட ஒரு நாள் இருந்துட்டுப் போ… நான் வேணும்னா 50 ஆயிரம் பணம் தர்றேன்..” என்றதும் விக்கித்துப் போய் விட்டாள் அவள்.
அவளுக்கோ பதில் பேசவே முடியவில்லை.
அன்று வட்டிப் பணத்திற்காக மோகன் அவளை இழுத்துச் சென்றபோது அன்னை அவனிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டதற்கு இல்லை என்றானே பாவி..
இப்போது அவனோடு படுப்பதற்கு 50,000 தருகிறேன் என்றல்லவா சொல்கிறான்.
நிஜமாகவே என்னைக் காதலித்து இருந்தால் இப்படி எல்லாம் இவனால் பேச முடியுமா..?
கொஞ்சம் கூட வெட்கமே இன்றி படுக்கைக்கு அழைக்கும் இவனை எப்படி மனித ஜென்மத்தில் சேர்ப்பது..?
விழிகள் சட்டென கலங்கிவிட அதிர்ந்து போய் நின்றவளை அழுத்தமாகப் பார்த்தான் விநாயக்.
அவள் இதுக்கு மேல் பேச மாட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவன் போனை தன்னுடைய முகத்துக்கு நேரே திருப்பினான்.
“ஹாய் மேக்கப் மேன்..” என அவன் உற்சாகமான குரலில் அவனுடன் உரையாட மறுபுறம் இருந்த சேகருக்கு உடலும் உள்ளமும் பதறிவிட்டது.
“சார் நீங்களா..? அது நான் வந்து ஏதோ..” என அவன் அச்சத்தில் உளற,
“கூல் நீ பேசுன எல்லாத்தையும் கேட்டுகிட்டுதான் இருந்தேன்.. இப்போ அவ என் கூட தான் இருக்கா.. என்னோட கோட்டோ முடிஞ்சதும் நீ அவகிட்ட அப்ரோச் பண்ணிக்கோ..” எனக் கூறிவிட்டு விநாயக் அழைப்பைத் துண்டித்து விட சாணியை அள்ளி அவளுடைய முகத்தில் பூசியது போல இருந்தது அவனுடைய செயல்.
அவள் அசையவே இல்லை அப்படியே நின்றாள்.
கண்ணீர் மட்டும் வரவில்லை என்றால் அவளும் அகலிகை சிலை போலத்தான் இருந்திருப்பாள்.
அழுகையை அடக்க முடியாது அவளுடைய சிவந்த உதடுகள் துடிக்கத் தொடங்கின.
“என்னாச்சு பேப்..? ஏன் ஸ்டன்னாகி அப்படியே நிக்கிற..?” என எதுவுமே நடவாதது போல அவன் வினவ,
“ஐ ஹேட் யு..” என அலறினாள் அவள்.
“ஆஹான்..”
“நீ ரொம்ப தப்பு பண்ற விநாயக்.. என்ன இன்னொருத்தன்கிட்ட தரக்குறைவா நீ எப்படி பேசலாம்..? உனக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது..? உனக்கும் எனக்கும் மட்டும்தான் பிரச்சனை.. நடுவுல எதுக்காக எவனையோ கொண்டு வர்ற..?”
“நான் எங்க கொண்டு வந்தேன்..? உன்னோட ஹபிதானே கால் பண்ணான்.”
“சே… உன்ன மாதிரி ஒருத்தர நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.. இனியும் பார்க்கக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்..”
“அப்படியே ஆகட்டும்..” எனச் சிரித்தான் அவன்.
அவனுடைய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க அவளுக்கோ உடல் முழுவதும் பற்றி எரிவதைப் போல இருந்தது.
பொங்கிய அழுகையை அவன் முன்பு காட்டாமல் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டவளுக்கு அழுகை பீறிட்டது.
எவ்வளவு பெரிய அவமானம் இது.
தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஆண்கள் அல்ல. பிணந்தின்னி கழுகுகள் என எண்ணிக் கொண்டாள் அவள்.
‘கடவுள்னு ஒருத்தர் இருந்தா நிச்சயமா இவன் ஆடுற ஆட்டத்தை அடக்குவாரு.. மரியாதைன்னா என்ன மனிதாபிமானம்னா என்னன்னு இவனுக்கும் கூடிய சீக்கிரமே புரியவரும்..’ என அழுதவாறு எண்ணியவள் ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழே நின்றாள்.
அவளுடைய போர்வையுடன் சேர்ந்து அவளுடைய உடலும் குளிர்ந்த நீரில் நனைந்தது.
அந்தக் குளிர்ந்த நீர் பட்டும் கூட அவளுக்குள் எரியும் தீ அணையாது போக வலியுடன் விழிகளை மூடிக்கொண்டாள் அந்த பேதை.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ அவளே அறியாள்.
அதன் பின்னர்தான் தனக்காக வெளியே ஒரு பெண் காத்திருப்பதே நினைவில் வந்தது.
வேக வேகமாக குளித்துவிட்டு ஆடையைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் ஆடை எதுவும் எடுத்து வரவில்லை என்பது புத்திக்கு புரிந்தது.
தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டவள் அங்கே இருந்த துவாலையைப் பார்த்தாள்.
பெருமூச்சோடு அதனை எடுத்து தன்னுடைய உடலில் சுற்றிக் கொண்டவள் ஈரக் கூந்தலை மார்பின் மீது படரவிட்டவாறு கதவைத் திறந்து கொண்டு வெளியே வர எதேர்ச்சியாக நிமிர்ந்தவனுடைய பார்வை அவள் மீது இரசனாய் படிந்தது.
அவளுடைய கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்த நீர் அவளுடைய துவாலைக்குள் புகுந்து துவாலை மறைக்காத முழங்கால்களின் மீது படர்ந்து கீழே வழிவதை பார்த்தவனுக்கு ஒரு நொடி மூச்சு நின்றது போலத்தான் இருந்தது.
வேகமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன்,
“என்னடி என்ன டெம்ப்ட் பண்ணப் பாக்குறியா..?” எனக் கேட்டான்.
அவளோ நீ எல்லாம் ஒரு ஆளா என்பது போல அற்ப பார்வையை அவன் மீது வீசிவிட்டு தன்னுடைய ஆடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விட கொதித்துப் போனான் விநாயக்.
என்னதான் செய்தாலும் இவளுடைய திமிரையும் கோபத்தையும் மட்டும் அடக்க முடியவில்லையே என்ற வெறி அவனுக்குள் வஞ்சமாய் எழுந்தது.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 64
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,092
2 thoughts on “27. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Malar
Ivan ellam manusan thana 🤬🤬🤬🤬🤬🤬🤬 rendu perayum than soldren 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Ivan ellam manusan thana 🤬🤬🤬🤬🤬🤬🤬 rendu perayum than soldren 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Ivanukku marana adi valanum