28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(67)

சொர்க்கம் – 28

அதன் பின்னர் அவள் விநாயக்கை பொருட்படுத்தவில்லை.

அவனுக்கு எப்படி இயல்பில் திமிர் இருக்கின்றதோ அதேபோல நேர்மையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தைச் சொந்தக் காலில் நின்று இதுவரை காப்பாற்றி வந்த பெண்ணவளுக்கும் சற்றே திமிர் இருக்கத்தான் செய்தது.

ஆதலால்தான் அவன் வார்த்தைகளை தீயாய் உமிழும் போதெல்லாம் இவளும் பதிலுக்கு பதில் பேசி விடுகின்றாள்.

அடிக்கடி அழுது கெஞ்சி அவளுக்கும் பழக்கமில்லை தானே.

அன்னையிடம் மட்டும் கோபத்தை அடக்கிக் கொள்பவளால் யாரோ ஒருவனிடம் தன்னுடைய கோபத்தை அடக்க முடியவில்லை.

தான் எதற்கு அடிபணிய வேண்டும் அதுதான் அவன் கொடுத்த பணத்திற்கு தினம் தினம் இரவு என்னை வதைக்கிறானே அது போதாதா..?

என்னுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும் அவனுடைய காலடியில் கிடத்தி விட வேண்டுமா என்ன..?

அவனைத் திரும்பியும் பாராது தயாராகி அவள் கீழே சென்றுவிட அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்த விநாயக்கின் உதடுகள் விரிந்தன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கோ சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

இதுவரை அவன் பார்த்த பெண்கள் எல்லாம் அவனுடைய கண் அசைவிலேயே ஓடிவந்து காலடியில் கிடப்பார்கள்.

அவன் கூறுவதற்கு முதலே உடலுறவில் பிஎச்டி முடித்ததைப் போல ஆடைகளை அகற்றிவிட்டு படுக்கையில் சேவை புரிய பெண் புலியாய் தயாராகி விடுவார்கள்.

இந்தக் கூச்சம் வெட்கம் அழுகை பதற்றம் துணிவு நிமிர்ந்து பார்க்கும் திடம் கோபம் இவை அனைத்தையும் அவன் இதுவரை சந்தித்த பெண்களிடம் பார்க்காமல் போனதுதான் பரிதாபம்.

இதோ இவை அனைத்தையும் உள்ளடக்கியவளாய் ஒருத்தி தன்னையே எதிர்த்து நிற்கிறாளே.

சிங்கத்தின் குகைக்குள் இருக்கிறோம் எனத் தெரிந்தும் சிங்கத்தையே எதிர்த்து வாயாடும் இவளும் பெண் சிங்கமோ..?

என்னதான் இருந்தாலும் இவள் ஸ்பெஷலானவள் என எண்ணிக்கொண்டது அவனுடைய மனம்.

இதற்கு பின்னர் தன்னை எதிர்த்து வாயாடும் பெண்ணை அவன் சந்திப்பானோ என்னவோ..?

‘இருந்தாலும் ரொம்ப ஓவரா பண்றா..?’ என எண்ணிக்கொண்டது அவனுடைய மனம்.

அவளுடைய சிந்தனைகளை அகற்றிவிட்டு தானும் குளித்துத் தயாராகி வெளியே வந்தவன் லைலாவுடன் பேசிக்கொண்டிருந்த செந்தூரியின் மீது தன்னுடைய பார்வையை பதிய விட்டான்.

அவனைக் கண்டதும் விரிந்த சிரிப்போடு எழுந்து நின்றாள் லைலா.

செந்தூரி எழுந்து நிற்கவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளைப் பொறுத்த வரைக்கும் அவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

நல்லது செய்யும் நல்லவர்களையும் வயதிற்கு மூத்தவர்களையும் மதித்தால் போதும் என்ற எண்ணம்தான் அவளுக்குள் இருந்தது.

விநாயக்கின் பார்வையோ இரு பெண்கள் மீதும் படிந்தது.

ஒருபுறம் ஒப்பனையே இன்றி அழகில் பேரழகியாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் செந்தூரி.

மறுபக்கம் நேர்த்தியான ஒப்பனையில் மிக அழகாக நவ நாகரிக யுவதியாக மிளிர்ந்து கொண்டிருந்தாள் மேக்அப் ஆர்டிஸ்ட் லைலா.

அவளுடைய விரிந்த புன்னகை தனக்கானது என்பதை உணர்ந்தவன் இதழ்களைப் பிரித்து சிறு அளவு கூட புன்னகையை உதிக்காது தலையை மட்டும் அசைக்க,

“குட் மார்னிங் சார்.. உங்கள பாத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம்..” எனக் கூறியவளின் வார்த்தைகள் சற்றே படபடப்பில் தடுமாறியது.

அவன் அருகே வந்ததும் அவள் பதற்றம் ஆகிவிட்டாள் என்பதை உணர்ந்த செந்தூரியின் விழிகள் அடச்சை எனும் விதமாக மறுபுறம் திரும்பிக் கொண்டன.

“தேங்க்ஸ்..” என்றவன் அவளை அமரும்படி விழிகளால் சைகை செய்ய,

“உங்களை இத்தனை வருஷமா தெரியும்.. பட் இப்போதான் சார் உங்க வீட்டுக்குள்ள வர முடிஞ்சிருக்கு..” என வழிந்தவாறு கூறியவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“இங்கே வெளி ஆளுங்க யாரையும் நான் அலோவ் பண்றது கிடையாது.. செந்தூரிய உங்க பார்லருக்கு அனுப்புறதுல எனக்கு இஷ்டம் இல்ல.. அதனாலதான் உங்கள இங்க வரவழைச்சேன்..” என்றான் அவன்.

அவன் கூறிய விதத்தில் செந்தூரியை திரும்பிப் பார்த்த லைலாவுக்கும் சற்றே பொறாமையாகத்தான் இருந்தது.

“சார் என்னால மட்டும் இவங்கள ரெடி பண்ண முடியாது.. என்னோட அசிஸ்டன்ட் ஒருத்தரையும் நீங்க உள்ளே அலோவ் பண்ணனும்.. அவங்க வெளிய கார்லதான் இருக்காங்க ப்ளீஸ்..” என லைலா கேட்க,

சில நொடி அமைதியாக இருந்தவன் பதில் கூறுவதற்கு முன்னரே செந்தூரி இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

“இட்ஸ் ஓகே.. நான் உங்க பார்லருக்கே வரேன்.. அங்கேயே ரெடி ஆகிடலாம்..” என அவள் கூற,

இப்போது அவனுடைய விழிகளில் கனல் வழிந்தது.

“நோ உன்னோட அசிஸ்டன்ட்டை இங்கேயே கூப்பிடு லைலா..” என ஒருமையாக அவளிடம் பேசியவன் செந்தூரியை அழுத்தமாகப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் அமைதியாகிவிட்டாள் அவள்.

அவளுக்கென்ன அவளை தயார்படுத்துவதற்காக இங்கே ஆட்கள் வந்தாலும் சரிதான் இல்லை அவள் வெளியே போக வேண்டும் என்றாலும் சரிதான்.

அவளுக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

சற்று நேரத்தில் லைலாவின் அசிஸ்டன்ட்டும் உள்ளே வந்துவிட “ஓகே கேர்ள்ஸ் யூ கேரி ஆன்..” எனக் கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான் விநாயக்.

“சார் இப்போல்லாம் உங்கள பார்ட்டி ல பார்க்கிறதே இல்லையே.. முடிஞ்சா நைட் டின்னருக்கு என் கூட வர முடியுமா ப்ளீஸ்…?” என அவள் அவனுடன் இரவு தங்குவதற்காக கேட்க அவளுடைய அப்பட்டமான அழைப்போ செந்தூரிக்கு புரியவில்லை.

“வை நாட்..? மீட் பண்ணலாமே.. நைட் எனக்கு கால் பண்ணி ரிமெம்பர் பண்ணு..” என லைலாவிடம் இமை சிமிட்டிக் கூறியவன் அங்கிருந்து சென்றுவிட எதுவும் புரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

விநாயக் இருக்கும் வரை தன்னுடைய அத்தனை பற்களையும் காட்டியவாறு சிரித்துக்கொண்டே இருந்தாள் லைலா.

அவன் அங்கிருந்து சென்றதும் அவளோ தன்னுடைய வேலையில் முழுமூச்சாக இறங்கி விட லைலாவின் அசிஸ்டன்ட் கார்த்திகாதான் பேச்சைத் தொடங்கினாள்.

“அக்கா இவங்க ஹேர் ரொம்ப அழகா இருக்கு.. ஆல்ரெடி ஸ்ட்ரைட்டா இருக்கிறதால ஸ்ரைட்டிங் பண்ண தேவையில்லைதானே..?” எனக் கேட்டாள் கார்த்திகா.

“இல்ல இப்படியே இருக்கட்டும்.. கொஞ்சம் ஷைன் மட்டும் பண்ணி விடுவோம்..” என்றாள் லைலா.

அவள் யாருக்கு வந்த விருந்தோ என கால்களை ஒருபுறம் நீட்டியவாறு சாய்ந்து அமர்ந்து விட அவளுடைய தோற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கி இருந்தனர் அந்த அழகு கலை நிபுணர்கள்.

“ஏய் கார்த்தி சார் எவ்வளவு ஹேண்ட்சமா இருக்காரு பாத்தியா..? ஸ்கிரீன்ல மட்டும்தான் ரொம்ப அழகா இருப்பாருன்னு நினைச்சேன் பட் நேர்லயும் ரொம்ப சூப்பரா இருக்காருடி.. அவர் வந்து நின்னாலே என் ஹார்ட்டு படபடன்னு அடிச்சிக்குது..” என லைலா கூற,

“ஐயோ என்னக்கா நீங்க..? மேடம் இருக்காங்க.. அவங்களுக்கு முன்னாடியே சார் பத்தி இப்படிப் பேசுறீங்களே..?” என அச்சத்துடன் கேட்டாள் கார்த்திகா.

“இதுல என்ன இருக்கு..? மேடம் நம்மள மாதிரி ஒருத்தங்கதானே.. சாருக்கு பிடிச்ச வரைக்கும் கூட வச்சுருப்பாரு.. அதுக்கு அப்புறமா இன்னொருத்தங்களை இதே இடத்துக்கு கொண்டு வந்துருவாரு..” என இலகுவாக கூறிய லைலாவோ,

“அப்படித்தானே மேடம்..?” எனப் புன்னகையை சிந்தியவாறு செந்தூரியிடம் கேட்க தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது செந்தூரிக்கு.

“மேடம் உங்க கிட்டதான் பேசுறேன்..” என்றாள் லைலா.

“ப்ளீஸ் அக்கா, உங்கள விட எனக்கு வயசு கம்மிதான். என்ன மேடம்னு சொல்லாதீங்க.. செந்தூரின்னே கூப்பிடுங்க..” என்றாள் அவள்.

“சோ ஸ்வீட் ஆஃப் யூ செந்தூரி… சரி சாரைப் பத்தி சொல்லு.. உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார்..?”

லைலா இரகசியப் புன்னகையுடன் அப்படிக் கேட்டதும் இவள் எதைப் பற்றிக் கேட்கிறாள் எனப் புரியாது குழம்பிப் போனவள் அவன் மீது உள்ள ஆத்திரத்தில் “அவரு ரொம்ப மோசமா நடந்துப்பாருக்கா..” என்றாள்.

ஐயோ என்றாகிப் போனது லைலாவுக்கு.

கார்த்திகாவும் லைலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப் புன்னகையை சிந்திக் கொண்டனர்.

“ஹையோ.. அப்படியா சொல்ற..?”

“ஆமாக்கா அவரு ரொம்ப ரொம்ப மோசம்..” எரிச்சலுடன் கூறினாள் செந்தூரி.

“அந்த விஷயத்துல மோசமா நடந்துக்கிட்டாதானே நல்லா இருக்கும்..” எனக் கூறியவாறு கிளுக்கிச் சிரித்த லைலாவோ “அது சரி உன்ன சாஃப்டா ஹேண்டில் பண்ணுவாரா..? இல்ல முரட்டுத்தனமாக ஹேண்டில் பண்ணுவாரா..?” என ஆர்வத்துடன் கேட்க,

செந்தூரியோ ‘இந்த மனசாட்சியே இல்லாதவன் எப்படி சாஃப்டா ஹேண்டில் பண்ணுவான்…?’ என எண்ணியவள் வெளியே,

“சாஃப்ட்டுனா என்னனே அவருக்குத் தெரியாது.. முரட்டுத்தனமாதான் நடந்துப்பாரு…” என மீண்டும் கோபத்தில் பதிலைக் கூறி அவர்களைத் திகைக்க வைத்திருந்தாள்‌.

அவர்களோ அவன் படுக்கையில் எப்படி இருப்பான் என்பதை அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்டால் அவளோ அது புரியாமல் அவன் எப்படி எல்லாம் தன்னை கொடுமைப்படுத்துகிறான் என்பதை விம் போட்டு விளக்கிக் கொண்டிருந்தாள்.

“சினிமா மாதிரி இதுலையும் ஹாட் வர்க் பண்ணுவாரா..?” எனக் கேட்க அவன் தன்னைக் கட்டம் கட்டி தூக்குவதற்கு என்னவெல்லாம் செய்தான் என்பதை நினைவு கூர்ந்தவள்,

“ஆமாக்கா அவர் நினைச்சத நடத்தி முடிக்கும் வரைக்கும் ஓயவே மாட்டார்..” என்றதும் அவ்வளவுதான் கார்த்திகாவுக்கு முகம் சிவந்து போனது.

லைலாவோ இப்போதே அவனுடன் சல்லாபித்து விட வேண்டும் என்று ஆசைத் தீயில் தகிக்கத் தொடங்கினாள்.

அடுத்த கேள்வி அவள் கேட்க முயன்ற கணம் “இவ்ளோ கேள்வியே போதும்னு நினைக்கிறேன்..” என அவளைப் பார்த்தவாறு கூறியிருந்தான் விநாயக்.

திடீரென அங்கே வந்து நின்றவனின் குரலைக் கேட்டதும் கார்த்திகாவும் லைலாவும் திகைத்துப் போயினர்.

அவளோ அதற்கு மேல் எதுவும் பேசாது தன்னுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கி விட செந்தூரியோ அவனைப் பற்றி எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என‌ப் பயந்துவிட்டான் போலும் என எண்ணிக் கொண்டாள்

“செந்தூரி இங்க வா..” அழைத்தான் அவன்.

‘ஐயோ சைத்தான் எதுக்கு கூப்பிடுறான்னு தெரியலையே..’

என எண்ணியவாறு எழுந்து கொண்டவள் அருகே இருந்த அறைக்குள் அவன் செல்வதைப் பார்த்து அவன் பின்னாலையே தானும் சென்றாள்.

“அவங்க உன்கிட்ட எதப் பத்தி பேசுறாங்கன்னு உனக்குப் புரிஞ்சுதா இல்லையாடி..?’

“ஆமா உங்கள பத்திக் கேட்டாங்க சொன்னேன்..”

அவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.

அவளுடைய தலையில் தன் கரத்தைப் பதித்தவன்,

“இந்த தலைக்குள்ள மூளை இருக்கா இல்லையா..?”

அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

“சரியான இம்சைடி நீ..”

“எதுக்கு உங்கள பத்தி எல்லாம் உண்மையும் சொல்லிடுவேன்னு பயமா இருக்கா..?”

“அடிங்க… நான் எதுக்குடி எவனுக்கும் பயப்படணும்..? அவளுங்க மேட்டர் பத்தி பேசிட்டு இருக்காளுங்க..”

“மேட்டரா..? அப்படின்னா..?”

“இதுவும் தெரியாதா..?” என சலித்துக் கொண்டவன் அவளை தன்னருகே இழுத்து அவளுடைய காதுகளில் விளக்கம் கொடுக்க சட்டென முகம் சிவந்து போனவள் “சீச்சீ…” என அலறியே விட்டாள்.

“இப்போ அவகேட்ட கேள்விக்கு நீ கொடுத்த பதில மறுபடியும் சொல்லிப் பாரு..” என சிரித்தவாறே கூறியவன் அந்த அறையில் இருந்து வெளியேறிவிட மீண்டும் அந்தக் கேள்விகளையும் அவள் கூறிய பதில்களையும் நினைத்துப் பார்த்தவளுக்கு ஐயோ என்றாகிப்போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 67

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!