உறவு – 03
தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை.
அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே.
கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது.
இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான தருணம் அது.
அந்த உத்வேகம் அவனின் முகத்தில் அப்பட்டமாக வெளித்தெரிந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் தொடர்பான கம்பனி ஒன்றின் புராஜெக்ட் ஒன்றை தன் வசப்படுத்த வேண்டும் என்ற இலக்கு மட்டுமே அவன் மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. அதனை பெற்றுவிடுவது அத்தனை சுலபமான காரியமல்ல என்பதும் அவனுக்கு தெரியும்.
ஒரு சில நிமிடங்களில் விதார்த் வரவேண்டிய இடத்திற்கு வந்திருந்தான்.
“வெல்கம் மிஸ்டர் விதார்த்” எனக்கூறி அறைக்கதவை திறந்து விட்டாள் ஓர் அழகிய பெண். மிக விசாலமான அவ்வறையின் நடுவில் போடப்பட்டிருந்த செவ்வக வடிவ கண்ணாடி மேசையை சுற்றி ‘ப‘வடிவில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
தனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டவன் “ஐ வில் நாட் மிஸ் திஸ் ஆபயூனிட்டி” என தன் மனதிற்குள் கூறிக் கொண்டவன் கம்பீரமான தோரணையுடன் அங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரையும் தன் பார்வையால் எடை போட்டவாறு அமர்ந்திருந்தான்.
அதே நேரம் அந்த கான்பரன்ஸ் ஹாலினுள் திடகாத்திரமான தேகத்துடனும் கம்பீரமான நடையுடனும் உள்நுழைந்தான் அவன்.
அவன் ஆலோசனை மேலாண்மைத் தொழிலின் தற்போதைய அதிபதி..!!
அவன் லோகஜித்…!!
அங்கு இருக்கும் எவரையும் அவன் பொருட்டாக எண்ணவில்லை என்பதை அவனின் கண்களும் உதட்டோரம் தவழ்ந்து கொண்டிருந்த ஏளனப் புன்னகையும் ஒருத்தனைத் தவிர மற்ற அனைவரையும் கலங்க வைப்பதாக இருந்தது.
எதிரே வந்தவன் லோகஜித் என்பதை அறிந்திருந்தான் விதார்த்.
பிரபலமான அதிக கம்பனிகளின் ஆலோசனை மேலாண்மையில் லோகஜித்தின் பங்கே இருந்தது.
விதார்த்தும் நன்றாகவே தயாராகி இருந்தான். சொல்லப்போனால் விதார்த்திற்கு அம்மா, அப்பா, குடும்பம், வீடு எல்லாமே ஒன்று தான். ஒன்று மட்டுமேதான். அது அவனின் தொழில் தான். அதனால் தான் குறுகிய காலத்தில் இவ்வளவு உயரத்திற்கு அவனால் வரமுடிந்தது.
விதார்த்தோ ‘இட்ஸ் ஃபார் மீ. இட்ஸ் நாட் எனிஒன்‘ என முணுமுணுத்தான்.
விதார்த்தின் நேர் எதிரே வந்திருந்தான் லோகஜித். அவன் பார்வையில் அதே ஏளனம். ‘என்னை மிஞ்ச இங்கு யாரடா.?’ என எண்ணியபடி அமர்ந்தான்.
அனைத்து கம்பனி எம்டிக்களின் அறிமுக நிகழ்வின் இறுதியில் அவர்கள் ஒவ்வொருவரின் அந்தரங்க காரியதர்சிகள் அந்த அறையினுள் பிரவேசித்தார்கள்.
சற்று நேரத்தில் ஒருவித நிசப்த அமைதியின் பின் ஒவ்வொரு நிறுவனத்தின் பி.ஏ க்களும் தங்கள் எம்டியின் திட்டங்களை முன்மொழிய ஆயத்தம் ஆனார்கள்.
தனசேகரன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நேரத்துடனேயே வந்திருப்பான். இன்னும் தனசேகரனின் வருகை தாமதமாகிக் கொண்டிருந்தது.
விதார்தின் கோபம் தலைக்கேறி கொந்தளிக்க தொடங்கியது. ‘இடியட் எங்கே போய்த் தொலைஞ்சான் இவன்.?’’ என மனதுக்குள் சலித்தபடி,
அவன் ஃபோனை எடுக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்நுழைந்தாள் தன்ஷிகா. சற்று தலையைக் குனிந்து புடவையின் நடு மடிப்புக்களை தனது கால்களுக்கு இடையில் சரி செய்துவிட்டு நிமிர்ந்தாள் அவள்.
மாம்பழக் கலரில் புடவை உடுத்தி ஒற்றை ஜடை போட்டிருந்தாள் அவள். அவளது கொடி உடலுக்கு கச்சிதமாக பொருந்தியிருத்தது அந்தப்புடவை.
அவள் பேரழகிதான். பார்ப்பவரை அடுத்த நொடியே மீண்டும் உற்றுப் பார்க்க வைக்கும் வசீகரமான அழகுக்கு சொந்தக்காரியும் கூட.
வேகமாக அடி எடுத்து வைத்தவள் இரண்டு எட்டில் விதார்த்தின் அருகில் வந்தாள்.
அவனுடைய முகம் பார்த்ததும் மீண்டும் உள்ளம் வதைபட திகைத்தாள். அவளுடைய மெல்லிய இதயமோ மிக மிக வேகமாக துடிக்கத் தொடங்கியது.
“வ… வருண்….” என மெல்ல அழைத்தவளுக்கு உள்ளம் வேதனையில் விஞ்சியது. கண்ணெதிரே காதல் கணவன் என எண்ணியவள் அடுத்த கணமே, அடுத்த கணமே தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு,
“சாரி சார் கொஞ்சம் லேட் ஆயிருச்சு” என அவன் காதருகே கிசுகசுத்தாள்.
“ப்ச் நீ எங்க இங்க…? முதல்ல நீ யாரு..? யாரைக் கேட்டு உள்ளே வந்த.? என்னோட பீ.ஏ தனசேகரன் எங்க…?” எனச் சீற்றமாய் வெளிவந்தது அவனுடைய குரல்.
‘எத்தனை கேள்வி கேட்குறான். ஹய்யோ.’ என மனதுக்குள் சலித்துக் கொண்டவள்,
“சார் அவருக்கு ஆக்ஸிடன்ட்…. மேனேஜர் சார் தான் என்னை அனுப்பி வெச்சார்.” என்றாள்
“வாட் நான்ஸஸ்.? இதைப்பத்தி உனக்கென்ன தெரியும்..?, இட்ஸ் நாட் அ கேம்…. ” என்றவன் மேனேஜர் முத்துராமனின் மீதும் கடிந்து கொண்டான்.
‘ச்சை என் உயிரை எடுக்கிறதுக்குன்னே வந்திருக்கா போல. நானே எக்பிளைன் பண்ணுறேன்’ என எண்ணியவன் பின் ‘ஓ காட் இதை கன்போர்மா பி.ஏ தானே பண்ணணும்.’ என்று சலிப்படைந்தான்.
வந்திருந்த பி.ஏக்கள் ஒவ்வொருவராக தங்களது திட்டங்களையும் நுணுக்கங்களையும் கூறிமுடித்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாக அழைக்கப்பட்டது வி.வி.எம்.ஜி மேலாண்மை ஆலோசனைக்கம்பனி அது விதார்த்தினுடைய கம்பனி.
தன்ஷிகாவின் வெண்ணிறம் இந்தியர்களுக்கு உரித்தான எலுமிச்சம்பழ மஞ்சள் நிறத்தையும் தாண்டி மேற்கத்தேய அழகி போல் அவளைக் காட்டியது.
விதார்த் எழ முயல, அவனை முந்திக் கொண்டு எழுந்தவள், விதார்த் தயாரித்த திட்டங்களை திரையில் காட்சிப்படுத்தி முன்மொழியத் தொடங்கினாள்.
அவளுடைய செம்பவள இதழ்களின் உச்சரிப்புக்கு ஏற்ப, அவளுடைய கொடி உடலின் அசைவுகளும் பார்ப்போரை இமை சிமிட்ட விடாது செய்திருந்தது.
அவளோ விதார்த்தின் திட்டங்களையும் அமைப்புக்களையும் விபரிக்கலானாள்.
சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல தன்னுடைய பல் மொழித்திறனை இடையிடையே புகுத்திக்கொண்டிருந்தாள்.
வாடிக்கையாளர்களை கையாள்வதில் அவளின் நுண்ணறிவும் உளவியல் பாங்கும் அங்கிருந்த எல்லோரையும் வாய் பிளக்க வைத்தன.
விதார்த்தின் ஒவ்வொரு படிநிலையும் அந்த ரியல்எஸ்டேட் கம்பனியின் தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யும் படி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அது விதார்த்தின் அறிவின் நுண்மையை புலப்படுத்தியது. அதனை தன்ஷிகா ஒப்புவிக்கும் தோரணையில் அந்த ஹால் அவள் கைப்பிடியில் சிக்குண்டது போல் மயங்கிக் கிடந்தது.
விதார்த் கூட ஒரு நிமிடம் அவள் பேச்சில் அசந்துதான் போனான். அவள் விபரிக்கும் அழகிலும் அவளுடைய உடல் அசைவுகளிலும் அவன் அசைவற்றுப் போனான்.
அவனுடைய தடித்த உதடுகளோ அவனை மறந்து,
“வாவ்… எஸ் தட்ஸ் மை கேர்ள்.” என அவள் விபரிப்பை ரசித்துக் கொண்டிருந்தன. (அட வெட்கம் கெட்டவனே..)
தன்ஷிகாவின் இடது கைப்பக்கமாக இருந்த லோகஜித் அவள் அழகை இரசித்த வண்ணமிருந்தான். அவன் கண்கள் அவளின் ஏற்ற இறக்கங்களினுடாக பயணம் செய்து அவளின் இடையின் அழகை அள்ளிப் பருகியது எனலாம்.
“வாவ் வாட் அ ப்யூட்டி.?” என தன் அதரங்கள் முறுவலிக்க முணுமுணுத்தான்.
தன்ஷிகாவிடமிருந்து அவனது கண்களை நகர்த்த முடியாத அளவில் அவளது அழகும் பேச்சும் இருந்தன.
“இந்த திறமையான அழகி என் அருகில் அல்லவா இருக்க வேண்டும்.” எனக் கூறியவன் தான் வந்த நோக்கத்தையே மறந்திருந்து அவளில் லயித்துப் போயிருந்தான் லோகஜித்.
தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தன்ஷிகா முழுநிறைவாகச் செய்து முடித்து விட்டு நிமிர அனைவரின் பாராட்டுக்களும் அவள் மீது மழையாய் பொழிந்தன. அதில் சிறு வெட்கம் வதனத்தில் தூவலாய் தோன்ற, தலை சரித்து அழகாய் புன்னகைத்தாள் அவள்.
அந்த ஒற்றைப் புன்னகையில் லோகஜித் உட்பட பலரின் இதயம் இடறி தரையில் வீழ்ந்தது.
முப்பது நிமிட ஓய்வைத் தொடர்ந்து,
“இங்கு நடந்த பர்ஃபோமன்ஸ் ஓவரோலா பார்க்கும் போது, மிஸ்டர் விதார்த் அன்ட் மிஸ்டர் லோகஜித் ரெண்டு பேரோட திட்டங்கள், செயற்பாடுகள், தரகுகள் நிறுவனங்களுக்கு மறுஅளவிடுதல், புதிய கணினி அமைப்புகளை அறிமுகப்படுத்துதல், நிர்வாகக் குழுவை உருவாக்குதல் அல்லது சீன சந்தையில் நுழைதல்னு எல்லா செயற்பாடுகளும் கிட்டத்தட்ட ஒரே நிலையையும் அமைப்பையும் கொண்டிருக்கு. இட்ஸ் கிரேட். உங்க ரெண்டு பேரோட ப்ளான்ஸ் என்னை மிகவும் கவர்ந்திருச்சு” எனக் கூறியவர் மேலும் தொடர்ந்தார்.
“பட் அதை ப்ரசன்ட் பண்ற விதம் அன்ட் பாடி லாங்குவேஜ் வெரி இம்பார்ட்டன்ட். ஏன்னா கஸ்டமரை அப்ரோஜ் பண்ண அது ரொம்ப தேவை. அந்த வகைல திட்டங்களை கையாளும் திறன், நுட்பம் என்பன விதார்த் கம்பனியின் பி.ஏ தன்ஷிகா அவர்களிடம் அற்புதமா இருக்கு. ஐ லைக் இட் வெரி மச்.
சோ இந்த புராஜெக்ட்டை வி.வி.ஜி.எம் கம்பனி மிஸ்டர் விதார்த்துடன் லாக் பண்றோம்.” எனக்கூறி விதார்த்தை பார்த்து “மிஸ்டர் விதார்த் ப்ளீஸ் கம்” என்றார்.
இதைக் கேட்டதும் விதார்த்தோ கம்பீரப் புன்னகையோடு எழுந்தவன் “ எஸ்….ஐ டூ இட்” எனக் கூறிக்கொண்டு “வெல் தன்ஷிகா. இந்த புராஜெக்ட் ல நீ என் கூடவே இருக்கனும். ஓகே கம் வித் மீ.”என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமலே இருக்கையை விட்டு எழுந்து சென்றான்.
“இவர் சொன்னதும் நான் இவர் பின்னாலேயே போகனுமா…? என்ன ஒரு திமிர்… இந்த திமிர் பிடிச்சவனோட என்னால ஒர்க் பண்ண முடியாது” என சலிப்படைந்தாள் அவள்.
லோகஜித்தோ புராஜெக்ட் தன் கையை விட்டுப் போகும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னதான் நடந்தாலும் அவன் கம்பனிதான் மிகப் பிரபல்யமாக இருந்ததால் இந்த வேலையும் தனக்கு எளிதாக கிடைத்து விடும் என எண்ணியிருந்தான். அதில் அத்தனை உறுதி அவனுக்கு.
ஆனால் லோகஜித்தின் எண்ணத்தை தவிடுபொடியாக்கிவிட்டிருந்தான் விதார்த்.
லோகஜித்துக்கோ புராஜெக்ட் கைமாறியது பெரிய ஏமாற்றமாக இருந்தது. சற்றும் எதிர்பார்க்காத இந்த அடி விதார்தை வஞ்சம் தீர்க்க நினைத்தது.
“ஐ லொஸ்ட் த பஸ்ட் டைம். ஐ கேன் நாட் ஃபார்கெட் திஸ்.” என வெறியோடு முணுமுணுத்தவன் ‘விதார்த்…. நீ இந்த இண்டஸ்ரியலில் இன்னைக்கு முளைச்ச காளான். உன்ன விட மாட்டேன். இனி உனக்கு ஒரு புராஜெக்ட் கூட கிடைக்காது கிடைக்கவும் விட மாட்டேன்.’ என மனதில் கருவிக்கொண்டான்.
ஆனால் அவன் எதிரே இருந்த விதார்த்தின் மனவோட்டம் வேறு விதமாக இருந்தது.
‘உண்மையில் விதார்த்திற்கு இது மிகப்பெரிய வெற்றி. ஏன் அவனின் தொழில் பயணத்தில் இது ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அவன் மனம் இந்த வெற்றியை கொண்டாடவில்லை. இது அவன் ஏற்கனவே யூகித்து வைத்த ஒன்று தான். விதார்த்தை பொறுத்தவரையில் அவனுடைய பிஸ்னஸ் நாடு முழுவதும் பரவியிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவனின் ஃபோன் மணி ஒலித்தது காதில் உள்ள ப்ளுடூத்தை ஆன் செய்து,
“ஹலோ….” என குரலை செருமினான் விதார்த்.
“சார் நான் மேனேஜர் முத்துராமன் பேசுறேன்.”
தனது இடது கையின் சுட்டு விரலால் இடது புருவத்தை வருடிய வண்ணம் “ம்ம் சொல்லுங்க முத்து.” என்றான்.
“சாரி சார் தனசேகரனுக்கு சின்னதா ஒரு ஆக்ஸிடன்ட். எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல சார்…! அந்த சிட்டுவேஷன்ல தன்ஷிகா பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு அந்த பொண்ணுக்கு தான் மல்டி லாங்குவேஜ் அன்ட் ஐ.கியூ ஸ்கிள் நல்லா இருக்கு, அதனாலதான் அவங்களை அங்கே அனுப்ப வேண்டியதா போச்சு.” என தயங்கிய குரலில் கூறி முடித்தார்.
இது அனைத்தையும் கூறி முடிப்பதற்குள் அவருக்கோ உடல் வியர்வையால் குளித்தது.
காரசாரமான திட்டு எக்கச்சக்கமாக தன் மீது கொட்டப் போகின்றது என எண்ணிய முத்துராமன் பதற்றத்தோடு காத்திருக்க,
“எஸ் முத்துராமன் உங்க கெஸ்ஸிங் ஹன்ரட் பர்சன் ரைட். தன்ஷிகா ஃபெபோமன்ஸ் இஸ் குட். நீங்க என்ன செய்றீங்கன்னா இந்த நீயூ புராஜெக்ட் முடியும் வரைக்கும் அக்ரிமண்ட் ரெடி பண்ணி தன்ஷிகாவை லாக் பண்ணி வைங்க ஓகே.” எனக் கட்டளையிடும் தொனியில் கூறியவன் முத்துராமனின் பதிலை எதிர் பாராது அழைப்பை துண்டித்தான்.
அருகே நின்றவளின் முகமோ அவனுடைய பேச்சில் மாறியது.
‘இவன் நிச்சயமா என்னோட வருண் இல்லை. உடம்பு முழுக்க திமிர்.’ என எண்ணிக் கொண்டாள் அவள்.
“ஓகே லெட்ஸ் கோ” என அதிகார தொனியில் கூறியவன் அறையை விட்டு வெளியேறினான்.
தன்ஷிகா ‘இவன் சிரிக்கவே மாட்டானா? எந்த நேரமும் சுடுதண்ணியை தன் மேல கொட்டியவன் மாதிரி இருக்கானே….! இவன் என் புருஷனாக இருக்கவே முடியாது.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டே பின் தொடர்ந்து சென்றாள்.
அவளோ ஏதேதோ சிந்தனையை தன்னுள் சுமந்தவாறே அவனுக்குப் பின்னால் வர, அவளை திரும்பிப் பார்த்தவன், “ஹேய் என்ன இவ்ளோ ஸ்லோவ்வா வர்ற…? ஆடி அசைஞ்சு வரும் தேர்னு நினைப்பா..? கம் குயிக் ஒர்க் அக்ரிமன்ட் சைன் பண்ணனும். அன்ட் ஒர்க் பத்தி முத்துராமன் உன்கூட பேசுவார்” எனக் கூறியவாறே தனது காரில் ஏறினான்.
அவள் அவன் அருகே சென்று காரில் ஏற முயல, அவனோ கார்க் கதவை சட்டென மூடியவன் “சாரி டு சே திஸ். நான் எந்த பொண்ணையும் என்னோட கார்ல ஏத்துறது இல்ல. ஏதாவது டாக்ஸி பிடிச்சு வந்து சேரு.” என்றவன் காரை விருட்டென கிளப்பிச் செல்ல தன்ஷிகாவின் முகமோ சட்டென இறுகிப் போனது.
“சென்ஸ் இல்லாத இடியட். இவன் கூட வேலை பார்க்கிறதுக்கு இந்த கோவா பீச்ல இருந்து சுண்டல் விக்கலாம் ச்சை. நீ எல்லாம் மனுஷனே இல்லைடா.” என எரிச்சலில் முணுமுணுத்தவள் தன் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டியவாறு டாக்ஸி ஏதேனும் கிடைக்குமா என பார்வையிடத் தொடங்கினாள்.
********
கான்ப்ரன்ஸ் அறையில் கோபத்தின் உச்சத்தில் இருந்த லோகஜித்தால் நிலமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அவனுடைய பிஸ்னஸ் மைன்ட்டோ ‘எப்படியும் இன்று தன்ஷிகாவுடன் பேசி அவளை என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும்’ என எண்ணிக் கொண்டது.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் எல்லாம் தன்னை வெல்வதா என எண்ணி எரிச்சல் அடைந்தவன் விதார்த்தை இனி ஒரு போதும் வெற்றி என்பதன் மணத்தை கூட நுகர விடப் போவதில்லை என அவனுள் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தவன் தன் கண்களால் தன்ஷிகாவை அலசினான்.
சற்று தூரத்தில் புடவையுடன் நிற்கும் அந்த அழகியைக் கண்டவனின் முகம் சிறு புன்னகையை கடன் வாங்கிக் கொண்டது.
அவளைப் பார்த்ததும் மனதில் ஒரு விதமான இதம் பரவ,
தன் கறுப்பு நிறக் காரில் ஏறியவன் நடந்து சென்று கொண்டிருந்தவளின் அருகே தன் காரை நிறுத்தினான்.
தன் அருகே திடீரென விலை உயர்ந்த கார் ஒன்று வந்து நிற்பதைக் கண்டு திகைத்தவள் காரில் இருந்து இறங்கியவனை கேள்வியாகப் பார்த்தாள்.
“ஹாய் ப்யூட்டி….” என கம்பீரமாக ஒலித்தது லோகஜித்தின் குரல்.
“ஹாய் நீங்க யாரு.?” அவளுடைய வில் போன்ற புருவங்கள் உயர்ந்து வளைந்தன.
“ஓ மை காட். கோவால இருந்துகிட்டு என்னை யார்னு கேட்ட முதல் ஆளு நீதான் ப்யூட்டி.” என வியந்தான் அவன்.
“என் பேரு ஒன்னும் ப்யூட்டி கிடையாது. நான் தெரியாதவங்ககிட்ட பேசுறது இல்ல.” என்றவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.
பிஸ்னஸ் தொடர்பாக பலர் அங்கு வந்து போனதில் தன்ஷிகாவோ லோகஜித்தை பார்க்கவே இல்லை.
“கூல் ப்யூட்டி. ஐ ஆம் லோகஜித். எல்.ஜி மல்டி கிரியேஷன்ஸ் கம்பனியோட எம்டி.” என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் அவன்.
“ஓ…. சாரி சார். அது நீங்கதான்னு எனக்கு தெரியாது. நான் கோவாக்கு புதுசு சார். ஐ ஆம் தன்ஷிகா.” என புன்னகைத்தாள் அவள்.
“ஓ…. நைஸ் நேம்.. ரொம்ப வித்தியாசமான பேரு.” என்றவன் தன்னுடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“திஸ் இஸ் மை விசிட்டிங் கார்ட். உங்களுக்கு எங்க கம்பனில இன்ட்ரஸ்ட் இருந்தா என்னை வந்து மீட் பண்ணுங்க.” என்றான் லோகஜித்.
அவள் நிச்சயம் தன்னிடம் வந்து விடுவாள் என நம்பியவனை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள் “சாரி சார் நான் விதார்த் சாரோட கம்பனில ஆல்ரெடி ஜாயின் பண்ணிட்டேன். ஓகே சார் ஐ ஹேவ் டு கோ. பை சார்.” என்றவள் அவனை திரும்பிப் பார்க்காது நடக்கத் தொடங்கினாள்.
அவளுடைய மறுப்பில் மலர்ந்திருந்த அவனுடைய முகமோ இறுகிப் போனது. நடந்து சென்று கொண்டிருந்தவளின் உடல் வளைவுகளை இரசித்தவன், “நீயே என்னைத் தேடி வருவ. வர வைப்பேன்.” என இகழ்ச்சியாக புன்னகைத்துக் கொண்டான்.
“உனக்கு செக் மேட் வெச்சு பத்து நிமிஷமாகுது ப்யூட்டி.” என்றவன் தன் காரில் ஏறி காற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டான்.
சிறுத்தைக்கும் சிங்கத்துக்கும் இடையே வந்து சிக்கிக் கொண்ட சிறு முயலின் நிலை இனி என்னவோ….?
“யோவ் ரைட்டர் நிறுத்து… நிறுத்து… அவனுங்களை மட்டும் கெத்தா சிங்கம் சிறுத்தைன்னு சொல்லிட்டு என்னை மட்டும் முயல் குட்டின்னு சொல்ற.? ஒழுங்கு மரியாதையா என்னையும் பெண் சிங்கம்னு சொல்லு.” என மிரட்டினாள் நம் நாயகி.
‘ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.’ சரிங்க சிறுத்தைக்கும் சிங்கத்துக்கும் இடையே வந்து சிக்கிக் கொண்ட பெண் சிங்கத்தின் நிலை இனி என்னவோ….?