3) செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(3)

மூன்று  மாதத்தில் ஶ்ரீயின் உடல் நலமும் ஓரளவு தேர்ந்து இருந்தாள்.  பாஸ்கரனும் அவளுக்கு துணையாக இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார்.  மேலும் ஶ்ரீக்கு கற்ப பை வீக்கமாக உள்ளதால் அவற்றை அகற்றி மேலும் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

அன்பரசியின் அதட்டலால் பாஸ்கரனும் ஶ்ரீயும் மூன்று மாதமாக அன்பரசியின் வீட்டிலே இருந்து கொண்டனர்.  சங்கீதாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளுவதிலே பொழுது வேகமாக கழிந்தது.

மருத்துவர் சொன்ன அறிவுரைகளை கடைபிடிப்பது தான் அங்குள்ள அனைவருக்கும் பெரிய ரோதனை.  இன்குபேட்டரில்  வைத்த அந்த பெண் குழந்தையை அதிகம் அழ வைத்து விட கூடாது.  அப்படி அழ வைத்தால் அந்த குழந்தைக்கு மூச்சு இழப்பு ஏற்படும். சோ குழந்தைய கவனமா பார்த்துக் கொள்ளவும் என்ற எச்சரிக்கையோடு அனுப்பி வைத்தார்கள்.

இதன் விளைவாக இரு குடும்பத்தாரும் ஒருசேர இருந்தார்கள்.

ங்க….

முதன் முறையாக ஆதிரன் உதிர்த்த வார்த்தைகள்…

அம்மா இங்க பாருங்க நம்ம குட்டி தம்பி பேசிறாரு….
சங்கீதா சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து துள்ளினாள்.

உறங்கி கொண்டிருந்த ஶ்ரீயும் இவர்கள் ஆர்ப்பரிப்பால் எழுந்து கொண்டு அவளும் சிலாகித்தாள்.

அவன் ங்க சொன்ன அதே நாளில் பெண் குழந்தையும் தவழ்ந்து தத்தளிக்க அந்த நாளினை இனிப்பு செய்து கோவிலுக்கு சென்று வழிபட்டு கொண்டாடினார்கள் ஐவரும்.

கண் பட்டது போல அங்கு வந்த தீபா ஸ்ரீஜாவிடம் எதையாவது பேசி அவளை காயப்படுத்துவதில் மும்முரம் காட்டினாள்.

என்னம்மா நான் அன்னைக்கு சொன்னப்ப உன் ப்ரண்ட்க்கு சொல்லி குடுத்து பேச வச்ச… இப்ப அங்கையே போய் டேரா போட்ட போல…அதான்னா அன்பரசியோட சொத்து மதிப்பு பார்த்தும் நீ சும்மாவா விடுவையா. அடிச்சது ஜாக்பாட்னு ஆட்டைய போட தான் பாப்ப… இது கூட அன்பரசி அக்காவுக்கு புரியவும் மாட்டங்கது.  புரியவும் நீ விட மாட்ட தான..

பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் முடிந்த கையோட குலதெய்வ கோவிலுக்கு வழிபட வந்த தீபாவிற்கு கடவுளே கொடுத்த வாய்ப்பை தவறவிடுவாளா என்ன?..

கச்சிதமாக வார்த்தையால் வதம் செய்ய தொடங்கி இதோ அவற்றில் வாழை இலை போட்டு ருசியும் கண்டு விட்டாள்.

உண்மை ஒரு நாள் தெரிய வரும் டி நாடகக்காரி.  அப்ப உன்னோட நடிப்புலா நடுரோட்டுக்கு தான் வரும்…அப்ப உன்ன கவனிச்சிக்கிறேன் என்றவள் அவளுடைய கணவர் பசுபதி வண்டியோடு ஹாரன் அடிக்கவும் அந்த கோவிலில் இருந்து அகன்றாள்.

தீபா பேசிய ஒரு ஒரு வார்த்தையும் ஶ்ரீஜாவின் ஆழ்மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தியது.  கலங்கிய தனது கண்களை துடைத்துக் கொண்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கி கொண்டிருந்த அன்பரசியின் அருகில் சென்று அமைதியாக நின்று கொண்டு யோசனையில் சிக்கினாள்.

இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் தான் ஶ்ரீமா.  பாப்பாவுக்கு சாமி மடியில வச்சு பேரு வச்சிடலாமா?…

அன்பரசி அவளுக்கு தோண்றியவற்றை பேசிக்கொண்டு இருந்தாள்.  ஆனால் ஶ்ரீயிடம் இருந்து அவள் எதிர் பார்த்த எந்த பதிலும் வரவில்லை.

பிரசாதம் வழங்கி முடித்துவிட்டு நிமிர்ந்து அவளை பார்த்து உலுக்கினாள்.

அதன் பின் தான் ஶ்ரீ ஹான் என்னக்கா…எதோ சொல்லிட்டு இருந்தீங்க…என்று கேட்பவளை வியப்பாக பார்த்தாள் அன்பரசி.

தீபா கோவிலுக்கு வந்திருந்ததையும் அவள் ஶ்ரீயிடம் விரல் நீடித்து பேசியதையும் கவனிக்காமல் இல்லை அன்பரசி.

அன்பரசனும் பாஸ்கரனும் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருக்க இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டிருந்தார்கள்.

என்ன ஆச்சு ஶ்ரீ.  தீபா எதாவது சொன்னாலா… எடுத்தவுடனே அவள் என்ன செய்திருப்பால் என சரியாக ஊகித்தவள் அவளுக்கு அழைக்க மொபைலை எடுத்து நேரம் தடுத்துவிட்டாள் ஶ்ரீ.

இல்லக்கா அவங்க ஒன்னும் தப்பா சொல்லல.  குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்கனு நல்லது தான் சொல்லிட்டு போனாங்க என்று அவளும் மலுப்பினாள்.

அப்ப அவ எதுக்கு விரல் நீட்டி நீட்டி பேசிட்டு இருந்தா….

அது..வந்து…ஹான் அது அவங்க அக்காவான உங்களையும் ஒழுங்கா கவனிச்சிக்க சொன்னாங்க.  அதான் அப்படி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று அங்கே நடந்த அனைத்தையும் மாற்றி  பொய்யாக ஒன்றை ஜோடித்து கூறினாள்.

அவ அப்படி சொல்ல வாய்ப்பு இல்ல.  பட் நான் உன்ன நம்புற ஶ்ரீ.

அதற்கு மேல் இருவரும் அதை பற்றி பேசிக்கவும் இல்லை.

இன்பரசன் மற்றும் அன்பரசியின் குலதெய்வ வழிபாட்டு தளமான பத்ரகாளியம்மன் பாதத்தில் ஶ்ரீஜா மற்றும் பாஸ்கரனின் குழந்தையை வைத்து “அன்பினி ” என்று பெயர் சூட்டினார்கள்.

அன்பினி என்ற பெயர் மிகவும் அழகாக உள்ளதென ஐயரும் குழந்தையை ஒப்படைத்து விட ஐவரும் காரில் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஶ்ரீயின் முகம் சற்று வாடுதலாக இருப்பதை கவனித்த பாஸ்கரனும் அவள் குழந்தையை அன்பரசியிடம் பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு முன் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலையில் அமர்ந்து தீவிர யோசனையோடு இருப்பதை கண்டதும் அவளருகே சென்று அமர்ந்தான்.

என்ன ஶ்ரீமா ரொம்ப டல்லா இருக்க…

உடல் அழுப்புங்க…

என்னையும் நீ ஏமாத்த முடியாது…
அவளது முகத்தை தனது புறம் திருப்பியவர்

உன்னோட உடம்பு அழுப்பானத தாண்டி உன் மனசும் முகமும் இப்ப ரொம்ப அழுப்பாகி இருக்குப்போல.  அதுக்கு காரணம் என்னம்மா?..சொல்லு…

அன்பான கணவரின் ஒவ்வொரு கண்டு பிடிப்பும் அவளை‌ வியக்க வைத்தது.  அதிலும் அவனது கேள்வியின் நோக்கம் என்ன என்பதையும் அறிந்தவள் மறக்காமல் தீபா பேசிய அனைத்தையும் சொல்லி விட்டாள்.

ஶ்ரீஜாவின் ஆழ்மனதில் உள்ள அனைத்தும் வெளிவந்து விட பாஸ்கரனும் யோசனையோடு அமர்ந்திருக்க,

ஆதிரனோடு படுக்க வைத்திருந்த அன்பினியின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தான்.  பாவம் இவனுடைய இழுத்த வேகம் அவளுக்கு வலியை கொடுத்து விட்டது போல பீறிட்டு கத்தி அழுதாள்.

டேய் கை எடுடா…கைய எடுடா…என்று அவனின் பிஞ்சு கையில் ஒரு தட்டும் தட்டினாள் அன்பரசி.

யார் சொல்லும் சொல்லையும் அவன் கேட்காமல் அன்பினியை இழுத்த இழுப்பில் அவள் கத்திய சத்தமோ வெளி புல்தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் கேட்டபோது  இருவரும் அடித்து பிடித்து ஓடினார்கள்.

டேய் ஆதி கை எடுடா என்று அந்த குழந்தையை கோவத்தில் அடித்து விட்டாள் அன்பரசியும்.

ஓடிவந்த போது ஶ்ரீஜாவிற்கு முதலில் கிடைத்த காட்சி ஆதிரனை அடித்ததுதான்.

என்னக்கா பையன இப்படி அடிச்சிட்டிங்க..என்று அவனை தூக்கி கொஞ்சினாள் ஶ்ரீ.

அன்பினியை அன்பரசி எடுத்து அவளை தலையை வருடி ஊதிக் கொண்டே பதில் பேசினாள்.

பின்ன‌ என்னோட புட்டும்மாவ அவன் முடிய பிடிச்சு ஆட்டிட்டான்.  அப்ப நான் அவன அடிக்கத்தான் செய்வன் என்று அன்பினியை குளுக்கி அவளை சமாதானம் செய்தாள்.

இருவருக்கும் மாற்று வகையில் குழந்தையின் மீது பாசம் மாறிக்கொண்டே வளர்ந்தது.

ஆதிரனின் வயது வேகமாக மூன்று வருடத்தை தாண்டியது. அவனது சேட்டைக்கு எல்லையற்று போய்விட்டது.

எப்போதும் அன்பினியை அவன் பிடித்து கடித்து வைப்பது , அவளை அடிப்பது, உதைப்பது மட்டுமல்லாமல் அவளின் மீது ஏறியமரந்து ஹேய் ஹேய் நகது(நகரு)…என்று அவள் மீதே யானை ஓட்டுவான்.

இதனால் அன்பரசியின் கையால் பலத்த அடியையும் ஶ்ரீஜாவிடம் முத்த மழையோடு சமாதானமும் அடைவான்.

ஏனோ ஆதிரனுக்கு அன்பினியை அருகில் வைத்திருந்தால் அவ்வளவு கோபமும் தலைக்கேறி அவளையே பாதிக்கிறது.

தினந்தோறும் அவனிடம் சிக்கி கொள்ளும் அன்பினியை காப்பாற்றி வைத்து கொள்வதே சங்கீதா மற்றும் அன்பரசியின் அன்றாட வழக்கமானது.

இதற்கிடையில் பாஸ்கரன் மற்றும் இன்பரசனின் ஒற்றுமையின் பலனால் இதோ இரண்டாம் ரெஷார்ட்டும்  நாளை ஓப்பன் செய்ய காத்திருந்தன.

அரசி மற்று ஶ்ரீ என்ற பொண்ணான பெயரோடு கூடிய அந்த ரெஷார்ட்டின் கூடுதல் பலனாக குழந்தைகள் விளையாடுவதற்கு தகுந்த அனைத்தும் அங்கு செய்யப்பட்டிருந்தன.

பத்து மாத குழந்தை முதல் வளரும் அனைத்து குழந்தைகளுக்கும் அங்கே தனித்தனியாக கவனித்து கொள்பவர்கள் மற்றும் பாதுகாவலர் இருவர் என மொத்தம் அங்கே பதினைந்து நபர்கள் வேலையமர்த்தினார்கள் அன்பரசனும் பாஸ்கரனும்.

கட் பண்ணுங்க இரண்டு பேரும்…

குழந்தையை கையில் வைத்து கொண்டே அன்பரசியிடமும் ஶ்ரீஜாவிடமும் ரிப்பனை கட் செய்யுமாறு ஊக்குவித்தார்.

அவளும் கட் செய்து முதல் கூப்பனை அறிவித்தாள்.

அது ஏழு நாள் பேக்கேஜ் வெறும் நான்காயிரம்‌ மட்டுமே என்பது அது.
சுற்றுலா தலங்களாக அவற்றுள் குறிப்பிட்டு இருந்தவையும் அருமையானது.

வைதி பால்ஸ், வால்பாரி,  பொட்டானிக்கல் கார்டன் , ப்ளாக் தெண்டர், நேரு லேடிஸ் பார்க், மருதமலை கோயில், வெள்ளிங்கிரி கோயில், மங்கி பால்ஸ் சிறுவாணி மற்றும் வாட்டர் பால்ஸ் அத்தோடு ஆதியோகி சிவா கோயிலும் அவற்றுள் அடங்கும்.

இவற்றை தொலைகாட்சி மற்றும் யூடிப்பில் விளம்பரபடுத்திய இருபதே நிமிடத்தில் டான் டான்னு அனைத்தும் புக் ஆகின.

இன்பரசரின் கையோடு இருந்த ஆதிரன் துள்ளிக்குதித்து பாஸ்கரிடம் சென்றான்.  அவரது கையில் இருந்த அன்பினியின் முகத்தை உற்றென பார்த்து வைத்தவன் அவள் மீதே சிறுநீர் கழித்து ங்கீ… ஆஹா.. ஊஊஊ…என்று கேளி செய்தான்.

அடடே எங்க தங்கம் எங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்காரு போல… என ஶ்ரீ அவனை அள்ளி எடுத்து அவன் சிறுநீர் கழித்ததற்கு முத்தமிட்டு தன்னோடு வைத்து கொண்டாள்.

அடியே என் பிள்ளையோட புது துணியவே அவன் நினச்சிட்டான்.  இது உனக்கு தீர்த்தமா…இது அன்பரசி

இப்போதெல்லாம் இருவருக்கும் இதே வேலை தான்.  சங்கீதா தான் பாவம் விழித்து போய்விடுவாள்.

அவளுக்கு உடையை மாற்றிவிட்டு ஶ்ரீயிடம் கொடுத்து விட்டு இரு நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துவிடுறேன் என்று அவளும் அப்போது நகர்ந்தாள்.

ஶ்ரீஜா ஆதிரனை கையில் தூக்கி வைத்தபடி அன்பினியையும் தூக்கி கொண்டு சிறிது நேரம் இருந்தாள்.  அதன்பின் ஆதியை இறக்க முயல அவன் விடாக்காரனாக இறங்கவே இல்லை.  வேறு வழியே இன்றி அன்பினியை இறக்கி விட்டாள்.

ஆதி ங்ஆ…ங்ஆ…என்று தாயை தேடுவது உணர்ந்த ஶ்ரீயின் சிந்தனை சற்று மலங்கி போயிட்டு என்றும் சொல்லலாம். அவளோ அன்பரசியை தேடி சென்றாள்.

அன்பினி முட்டியிட்டு தத்தி தத்தி நகர்ந்து வால்பாரி பாதையில் வழி தட ரோட்டின் முதலாவதாக வைத்திருந்த ரெஷாட்டை தாண்டி ரோட்டிற்கு வந்துவிட்டாள் யாரும் கவனிக்காமல் இருந்த சமயத்தில்.

லாரி ஒன்று ஏறு பாதையில் இருந்து இறங்கு பாதை வழியாகவும் வந்து கொண்டிருந்த சமயம் அது.  அன்பரசி வந்ததும் பிள்ளை எங்கு என்று கேட்கவும் தான் ஶ்ரீக்கு பதட்டமே ஏற்பட்டது.  இறக்கிவிட்டு இடத்தில் ஓடிவந்து பார்த்தால் அவளோ பாதையின் இடையே இருந்தாள்.

என்னடி பிள்ளைய இப்படி நடு ரோட்டில் விட்டு இருக்க அறிவு இருக்கா உனக்கு என்று திட்டி விட்டு ஓடி சென்று குழந்தையை கையில் எடுப்பதற்கும் லாரி தீவிர பிரேக் போட்டு கடினப்பட்டு நிறுத்தியதற்கும் சரியாக போய்விட்டது.

என்னம்மா நினப்பு உங்களுக்கு.  குழந்தைய நடுரோட்டுல விட்டு அப்படி என்ன வெட்டி நாயம் உங்களுக்கு…

செங்கற்கள் எடுத்து கொண்டு வந்திருந்த லாரியை அவன் நிறுத்துவதற்குள் சிரமப்பட்ட நொடி அவனை அப்படியெல்லாம் பேச செய்து விட்டது.  தலையில் அடித்து விட்டு முதல்ல குழந்தைய கவனிங்க…என்று லாரியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்டினான்.

அன்பரசிக்கு கண்கள் கலங்கி அதன் துளிகள் அவளின் மூக்கை தாண்டி வாயிலே சென்று விழுந்தது. பயத்தில் உயிரே போய்விடும் போல அவளுக்கு.

கை கால் நடுக்கத்தோடே ரோட்டில் இருந்து ரெஷார்ட்டிற்கு வந்தவள் ஶ்ரீயை திட்டி தீர்த்து விட்டாள்.  பாவம் அவளுமே பயந்து போய் தான் இருந்தாள்.  ஆனால் அன்பினியின் மீது அளவுகடந்து அன்பு வைத்திருந்த அன்பரசியினால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

முதன்முறையாக ஶ்ரீயோடு கோபித்து கொண்ட அன்பரசி அவளோடு ஒரு வாரமாய் பேசாமல் ஒதுக்கினாள்.  ஶ்ரீயும் நான் வேண்டுமென செய்யவில்லை என்று எத்தனை முறை புரிய வைத்தாலும் அவளால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

மீண்டும் மீண்டும் அவளுக்கு லாரியின் முன்பு‌ தவழ்ந்து கொண்டிருந்த அன்பினியின் உருவம் வரும் போதெல்லாம் நோ என்று கத்தியே விடுவாள் அன்பரசி.

ஶ்ரீயோடு பேசுவதையும் அவள் தவிர்த்த போது நெருப்பில் விழுந்த புழுவாய் அவள் வீட்டில் இருக்கும் ஒரு ஒரு நொடியையும் எச்சில் முழுங்கியும் தயக்கத்தோடும் இருந்தாள் ஶ்ரீஜா.

இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய இன்பரசனும் பாஸ்கரோடும் சேர்ந்து சங்கீதாவும் திட்டம் ஒன்றை தீட்டி வைத்து விட்டு அவர்களின் வருகைக்கு காத்து கொண்டிருந்தாள்.

           செந்தனலா?…மழையா?…

கௌசல்யா வேல்முருகன் 💝.×

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!