30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(64)

சொர்க்கம் – 30

அவள் நடிக்க வேண்டிய காட்சியை சக்கரவர்த்தி கூறி முடித்ததும் இவளுக்கும் முகத்தில் ஈயாட வில்லை.

“என்ன சார் சொல்றீங்க..? இப்படி எல்லாம் நடிக்கணுமா..?”

“என்னமா ஏதோ ரொமான்டிக் சீன் சொன்ன மாதிரி ரொம்பத் தயங்குற..? ஜஸ்ட் நீ ஸ்லிப் ஆகி விழுற மாதிரி நடிச்சா போதும்.. மீதிய நம்ம விநாயக் பார்த்துப்பாரு..” என சக்கரவர்த்தி கூற அவளுக்கோ அடக்கடவுளே என்றிருந்தது.

ஆற்றோரமாக இவள் நடந்து செல்லும் போது அங்கே படிந்திருந்த பாசியில் இவளுடைய கால்கள் வழுக்கி விட எதிர்பாராத விதமாக அந்த வழியே வரும் நாயகன் மீது இவள் மோதி விழுவதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.

அவளைக் கீழே விழ விடாமல் இடையில் கை கொடுத்து தூக்கி தன் மார்போடு சாய்த்து நாயகன் அவளுடைய முகத்தை முதலில் சீற்றமாக பார்ப்பதும் பின்பு அவளுடைய அழகில் அந்தக் கோபக்கண்களில் கோபம் மறைந்து மையல் கூடுவதைப் போல அவன் நடிக்க வேண்டும்.

அவளோ அந்த காட்சிக்கு ஏற்றவாறு முகத்தில் சற்று பயத்தை தேக்கி சிறு நன்றி உணர்வோடு அவனைப் பார்ப்பதோடு அந்தக் காட்சி முடிவடைகின்றது.

இது அனைத்தையும் சக்கரவர்த்தி சாதாரணமாக கூறிவிட்டார். ஆனால் அவளுக்குத்தான் மூச்சே நின்று விடும் போல இருந்தது.

அவன் அருகே வந்தாலே இவளுக்கு அனைத்தும் படபடத்து போய்விடும் அல்லவா.

“நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு நல்லா ப்ராக்டீஸ் பண்ணிக்கோம்மா.. ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் வேணும்னா இங்கே இருந்து கூட நீ பிராக்டீஸ் பண்ணிக்கலாம்.. நாளைக்கு உன்னோட டயலாக்ஸ் பெருசா எதுவுமே கிடையாது… இந்த சீன்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு வார்த்தை பேசுற மாதிரி மட்டும்தான் வரும்..” என்றவர் அவளிடம் புன்னகைத்து விட்டு அங்கே இருந்த நகர்ந்து கொண்டார்.

இந்தப் பெண் இலகுவான காட்சியை கூறியதற்கே இப்படி பயந்து விழிக்கின்றாளே.. நாளை என்னவெல்லாம் ஆகப் போகின்றதோ என்ற பயம் அக்கணமே அவருடைய அடிமனதை கவ்விக் கொண்டது.

இருந்தும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டார் சக்கரவர்த்தி.

அடுத்தடுத்த வேலை என அந்த செட்டே பரபரப்பாக காட்சியளித்த நேரம் “பேபி கம்…” என அனைவரின் முன்பும் செந்தூரியை அழைத்தான் விநாயக்.

இப்போது இந்த பேபி என்ற அழைப்பு அவசியம்தானா என எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

அங்கே நின்ற அனைவரின் பார்வையும் அவள் மீது விழுந்ததும் அவளுக்கோ ஒரு மாதிரி ஆகிப்போனது.

எதுவும் கூற முடியாது அவனருகே சென்றாள் அவள்.

அவள் அருகே வந்ததும் அவனோ நிதானமாக “சீன்ஸ் எல்லாம் என்னன்னு கேட்டுட்டியா..?” எனக் கேட்டவாறு அவளைத் தோளோடு அணைத்துக்கொள்ள அவளுக்கோ உடல் பதறத் தொடங்கியது.

அவளுடைய பதற்றத்தை விழிகளால் இரசித்தவாறே “இட்ஸ் ஓகே… நான் உனக்கு அந்த சீன்ஸ் எல்லாம் நடிக்க ஹெல்ப் பண்றேன்.. நாம ரெண்டு பேரும் நம்ம வீட்லயே தனியா பிராக்டிஸ் பண்ணிக்கலாம்..” என்றவன் அவளைத் தோளோடு அணைத்துவாறு அங்கிருந்த கேரவனுக்குள் அழைத்துச் செல்ல அங்கே நின்ற அத்தனை பேரின் விழிகளும் தெறித்து விடும் போல விரிந்தன.

கௌதமின் விழிகளோ சிவந்து போயின.

அங்கே என்ன நடக்கின்றது எனப் புரியாது குழம்பிப் போய் நின்றிருந்தான் அவன்.

விநாயக்கோ அத்தனை பேரின் முன்பும் அவளுடைய தோளை வருடியவாறு அவளைக் கேரவனுக்குள் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றவன் அந்த கேரவனின் கதவை மூடிவிட்டு அவளை சிரிப்போடு பார்க்க அவனை வெறித்துப் பார்த்தாள் செந்தூரி.

“நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா..? இப்படி எல்லார் முன்னாடியும் கிட்டத்தட்ட என்னை ஹக் பண்ணி உள்ள கூட்டிட்டு வர்றீங்களே.. வெளிய நிக்கிற அத்தனை பேரும் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க..? கண்டிப்பா தப்பாதான் நினைப்பாங்க.. தயவு செஞ்சு இனி இப்படி நடந்துக்காதீங்க ப்ளீஸ்..” என படபடவென பொரிந்தவள் அடுத்த கணமே அந்தக் கேரவனை விட்டு வெளியேற முயன்ற கணம் அவளுடைய ஒற்றைக் கரத்தை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான் அவன்.

“அவங்க இப்படி எல்லாம் நினைக்கணும்னுதான் நான் இதெல்லாம் பண்றேன்னு உனக்கு இன்னுமா புரியல..?” என ஒவ்வொரு வார்த்தையையும் அவன் நிதானமாக வெளிப்படுத்த இவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றானா..?

இதுதான் அவனுடைய திட்டமா..? கலங்கிப் போனாள் அவள்.

“இ.. இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பாப்பாங்க..” என இதழ்கள் நடுங்கக் கூறினாள் அவள்.

“ஐ டோன்ட் கேர்..” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய கூந்தலை சற்றே களைத்து விடத் தொடங்க இறுகிப் போனவளாய் நின்றாள் அவள்.

அவனுடைய ஒற்றை விரலோ அவளுடைய சிவந்த கீழ் உதட்டைப் பிடித்து அழுத்த இவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் சுரக்கத் தொடங்கியது.

அவனுடைய கரத்தை கோபமாக தட்டி விட்டாள் அவள்.

“ஹேம் இப்படி என் கைய தட்டிவிட்டா நிஜமாவே கிஸ் பண்ணிடுவேன்.. நிஜமா கிஸ் பண்ணட்டுமா..? இல்ல கிஸ் பண்ண மாதிரி தெரியறதுக்காக லிப்ஸ்ஸ மட்டும் அழுத்திட்டு விடட்டுமா..? இந்த ரெண்டு ஆப்ஷன்லயும் எது ஓகேன்னு நீதான் முடிவு பண்ணனும்..” என அவன் கூறியதும் உறைந்து போய்விட்டாள் அவள்.

எவ்வளவு பச்சையாக பேசுகின்றான்.

எப்படியாவது அவளுடைய உதட்டை இன்னும் சிவக்க வைத்து வீங்கச் செய்து விட்டால் முத்தம் கொடுத்ததால் தான் இப்படி வீங்கி இருக்கிறது என அனைவரும் எண்ணுவார்கள் என்றே இப்படி எல்லாம் செய்கின்றானா..?

அவளுக்கு மேலும் கண்ணீர் பெருகியது.

அவனுடைய கரத்தை தட்டி விட்டால் நிஜமாகவே அவன் முத்தமிட்டு விடக் கூடுமோ எனப் பயந்தவள் விழிகளை மூடி அப்படியே நிற்க, அவனோ அவளுடைய கீழ் உதட்டை தன்னுடைய பெருவிரலால் அழுத்தி வருடினான்.

அந்த உதடுகளில் இருந்த ரேகைகளை எண்ணுவது போல இருந்தது அவனுடைய செயல்.

இவளுக்கு உடல் முழுவதும் கூசியது.

இறுகிப் போய் நின்றாள்.

அவனோ ஒருவாறாக தன்னுடைய ஆராய்ச்சியை முடித்தவன் அவளுடைய இதழ்களில் கிள்ளி வைக்க வலியில் துடித்தவாறு அவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு அவன் மீது எல்லையற்ற வெறுப்பு குடி கொண்டது.

அவளைப் பார்த்து இமை சிமிட்டிச் சிரித்தவன் அவளை அழைத்து வந்து அங்கே இருந்த கண்ணாடியின் முன்பு நிறுத்தினான்.

“இப்படியே உன்னை யார் பார்த்தாலும் நமக்குள்ள ஏதோ கசமுசா நடந்துருச்சுன்னுதான் நினைப்பாங்க.. அம் ஐ ரைட்..?” என்றவாறு அவன் அவளுடைய விம்பத்தைப் பார்க்க அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.

அவளுடைய கரங்களோ வேக வேகமாக கலைந்த தன்னுடைய தலையை சரி செய்யத் தொடங்கின.

“நோ நோ.. இதெல்லாம் நீ வெளியே போய்தான் பண்ணனும்.. இங்கேயே எல்லாத்தையும் சரி பண்ணிட்டு போயிட்டா அதுல என்ன கிக் கிடைக்கப் போகுது..?” என்றான் அந்த மனசாட்சியே இல்லாத விநாயக்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிக்க போற விநாயக்..”

“நோ ப்ராப்ளம் அனுபவிச்சிட்டே போறேன்.”

“லிப்ஸ்ல இருக்க இந்த வீக்கம் மட்டும் போதுமா இல்ல உன்னோட கழுத்துல சின்னதா ரெண்டு பல் அடையாளத்தையும் கொடுக்கட்டுமா..?” என அவன் கேட்டதும் நெஞ்சில் கை வைத்தவாறு பதறி பின்னால் நகர்ந்தவள் தடுமாறி தரையில் சாய சட்டென அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் அவன்.

“ஏய் பார்த்து டி..”

“இப்படி உன் கூட இருக்கிறதுக்கு செத்துப் போறதே எவ்வளவு மேல் தெரியுமா. ஆனா இப்படி எல்லாம் கீழே விழுந்தா உயிர் போகாதே. சீக்கிரமா உன்கிட்ட இருந்து நான் போகணும்.. இல்லனா இந்த உலகத்தை விட்டு போயிறணும்.. இந்த நரக வாழ்க்கை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. ஐ ஹேட் யூ..” என்றவள் தன்னுடைய இடையில் அழுத்தமாகப் பற்றி இருந்த அவனுடைய கரத்தை தட்டி விட்டு வேகமாக அந்தக் கேரவனை விட்டு வெளியே செல்ல முயன்றாள்.

மீண்டும் அவளை இறுகப் பிடித்துக் கொண்டான் அவன்.

“வெயிட் வெயிட்.. நீ கண்ணீரோடு போனா நான் உன்னை வற்புறுத்தி கிஸ் பண்ண மாதிரி மத்தவங்க நினைச்சுப்பாங்க… சோ ஒரு சொட்டுக் கண்ணீர் கூட உன்னோட கண்ணுல இருக்கக்கூடாது.. எல்லாத்தையும் தொடச்சிட்டு போ..” என அவன் உத்தரவிட்டதும் தன்னுடைய புறங்கையால் விழி நீரைத் துடைக்க முயன்றவளின் கரத்தைப் பற்றிக் கொண்டவன் ஒரு டிஷ்யூவை எடுத்து அவனே அவளுக்கு கண்ணீரைத் துடைத்து விட மீண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இறுகிப்போய் நின்றாள் அவள்.

“சூப்பர் இப்போ வெட்கப்பட்ட மாதிரியே வெளியே போ..” என அவன் கூற எட்டி அவனுடைய கன்னத்தில் அறைந்தால் என்ன என்ற எண்ணம்தான் அவளுக்குள் தோன்றியது.

அடுத்த கணமே அவளுடைய மனம் ஒரு முறை அறைந்ததற்குத்தானே இத்தனை வேதனை. மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம் என அலறியது.

இவன் பணம் படைத்த அரக்கன்.

எல்லோரையும் தன்னுடைய கரங்களுக்குள் வைத்து பொம்மலாட்டம் ஆடுபவன்.

இவனிடம் இப்போது பணிந்து போவதுதான் நல்லது என உணர்ந்து கொண்டவள் வேகமாக கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

ஒட்டுமொத்தமாக அனைவரின் பார்வையும் அவளைத்தான் மொய்த்தது.

வேக வேகமாக களைந்த தன்னுடைய கூந்தலை கரங்களால் சீர்படுத்தியவாறே வெளியே வந்தவளுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது.

அசிங்கமாக இருந்தது.

யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

அத்தனை பேரும் என்ன நினைத்திருப்பார்கள் தன்னைப் பற்றி..?

நிச்சயமாக தவறாகத்தானே நினைத்திருப்பார்கள்..?

ஆம் முடி கலைந்து உதடு வீங்கிச் சிவந்து இப்படியே ஒரு பெண் ஒரு ஆணுடன் இருந்துவிட்டு வெளியே வந்தால் அவர்கள் வேறு என்னதான் நினைக்கக்கூடும்.?

இத்தனை வருடங்களாக கட்டிக் காத்து வைத்த அவளுடைய கற்பு மானமெல்லாம் இதோ கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது.

தற்கொலை செய்து விடலாமா..?

இப்போதுதான் அன்னை திருந்தி விட்டாரே. தன்னுடைய தந்தையை அவர் நன்றாக பார்த்துக் கொள்வார் இனி நான் எதற்கு அவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டும்..?

இப்படி வேதனையை அனுபவிப்பதை விட இறந்து விட்டால் மிக மிக நிம்மதியாக இருக்குமே.

சகிக்க முடியாத வேதனையோடு தலையை தாழ்த்தியவாறே வெளியே வந்தவள் அப்போதுதான் கௌதமைப் பற்றி நினைத்தாள்.

அவ்வளவு நேரமும் தரையை நோக்கி தாழ்ந்திருந்த அவளின் தலை சடாரென கௌதம் நின்றிருந்த பக்கம் வேகமாக நிமிர்ந்தது.

அவனுடைய அதிர்ச்சியான பார்வை தன்னைத் துளைப்பது போல இருக்க, அந்த ஒற்றைப் பார்வையில் மொத்தமாக உடைந்து போனாள் பெண்ணவள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!