36. சிந்தையுள் சிதையும் தேனே..!

5
(8)

தேன் 36

மகிழ்மதியின் வாய் வழி வந்த வார்த்தைகளை கேட்டவுடன் சிங்காரம் சில நொடிகள் அவளது கண்களைத் தவிர்த்து விட்டு, சற்றே தள்ளிப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த குழப்பம், உள்ளுக்குள் கொதிக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தியது.

“சரி… அவள எங்க நீ முதல் சந்திச்ச..?  உன் அப்பா, அம்மாவை எப்படி அடையாளம் கண்ட..? நான் எல்லா விஷயத்துலயும் ரொம்ப கவனமா இருந்தனே எங்க பிழைச்சுச்சு..?” என்று சிங்காரம் என்னோட மனக் குழப்பத்தை தீர்த்து வைத்தே ஆகணும் என்ற கட்டாயத்தின் பேரில் உறுதியான குரலில் கேட்டான்.

“வாவ்  நீங்க உண்மையாவே வெரி டேலண்ட்டட் பர்சன் அவசரப்படாதீங்க அந்த தருணம் எனக்கு இப்பவும் வாழ்க்கையில மறக்க முடியாத பல அதிர்ச்சிகள் நிறைந்த ஒரு சம்பவம்ன்னு தான் சொல்லணும் இப்போ நினைச்சாலும் எனக்கு புல்லரிக்குது ஓகே அத விடுங்க

ஊரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வரும்போது, ஒரு பெரிய லாரி வந்து என் ஜீப்பில் மோதி நொறுக்கியது அப்போ என்னோட உயிர் அங்கேயே முடிஞ்சுட்டுச்சு என்று தான் நினைச்சேன் ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்தது நானும் தலையில் பெரிய அடியுடன் அப்படியே மயங்கிட்டேன்

அந்த லாரிக்காரன் நான் மூச்சு பேச்சு இல்லாம கிடக்க நான் செத்துட்டேன் என்று நினைச்சான் அதோட ஜீப் சில நொடிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பிச்சது எப்படியும் இவ பிழைக்க சான்சே இல்லன்னு அந்த லாரி திரும்பி போயிட்டான்

அந்தக் கொடூரமான தீயின் வெப்பம் என்னோட உடலைத் தீண்டும் போது எனக்கு திரும்ப உணர்ச்சி வந்தது அப்போதான் நான் காரிலிருந்து வெளியே வந்தேன் இதெல்லாம் திட்டமிட்ட சதியின்னு எனக்கு நல்லா தெரியும்..” என்றபடி விக்ரமை முறைத்துப் பார்த்தாள் மகிழ்மதி.

விக்ரமோ அவளது பார்வையை உதாசீனம் செய்தபடி ஒரு ஏளன புன்னகையை பதிலாகக் கொடுத்தான்.

அவனது செயலைப் பார்த்து எரிச்சலுற்ற மகிழ்மதி மேலும் தொடர்ந்தாள்.

“அதற்குப் பின்பு… என் கண்களுக்கு முன்னால் இருந்த காட்சி என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது லாரி வந்து மோதியதில் என்னோட ஜீப் எதிரில் வந்த காருடன் மோதி அந்த காரும் சேர்ந்து பள்ளத்தில் விழுந்து கிடந்தது

அதுமட்டுமில்லாமல் அந்தக் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.உடனே அதன் அருகில் தட்டு தடுமாறி யாரும் உள்ளனரா என்று எட்டிப் பார்க்க,

பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண் கிட்டத்தட்ட தீக்கிரையானாள் அதை என் இரண்டு கண்களால் பார்த்ததும் தலையே வெடித்து விடும் போல் இருந்தது அப்போதுதான் ஏதோ ஒரு முனகல் சத்தம் கேட்க முன்னே டிரைவர் சீட்டில் என்னைக் கண்ணாடியில் பாக்குறது போல இருந்துச்சு அப்படியே அங்க அசைவுகள் ஒரு வித்தியாசமும் இல்லாமல் என்ன போல ஒரு பொண்ணா? எப்படி சாத்தியம் என்று என்னோட மூளை அப்படியே எல்லா விஷயத்தையும் யோசிக்க மறந்துட்டு அந்த பெண்ணை பார்த்தவுடனே என்னால் நம்பவே முடியவில்லை ஒவ்வொரு நிழலும் என்னைப் போலவே இருந்தது அது சாத்தியமே இல்லையென என் மூளை கத்திக் கொண்டிருந்தாலும்… என் மனசு அதையே உணர்ந்தது

உடனே அவளைத் தூக்கிக்கொண்டு ஓடி, வழியில் சென்ற வாகனங்களை நிறுத்தி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்அங்குதான் எல்லாமே ஆரம்பமானது… அந்தப் பெண்ணை தட்டி எழுப்பி நீ யாரென கேட்க ட்ரை பண்ணினேன் ஆனால் அந்தப் பெண் நினைவிழந்திருந்தாள்

அவளை மருத்துவமனையில் சேர்த்து பிறகு அறையின் வாசலில் இருந்து பல கோணங்களில் யோசித்தேன் தலை யாரோ இரும்பால் அடித்தது போல் வலித்தது அப்போது நான் என்னை அறியாமல் மயங்கி விழுந்தேன்

நானும் அதே ஹாஸ்பிட்டலிலேயே அட்மிட் ஆனேன் சில நாட்கள் நினைவிழந்தபடி இருந்தேன் விழித்தபோது, என் அருகே காயத்ரி அம்மாவும், கருணாகரன் அப்பாவும் இருந்தார்கள் அவர்களின் அன்பும், அக்கறையும் என்னை கலங்க வைத்தது ஆனால் எனக்கு எதுவுமே தெளிவாக புரியவில்லை இருந்தும் அனைத்தையும் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தேன்

பின்னர் அவர்கள் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு சுவரில் மாட்டியிருந்த ஒவ்வொரு போட்டோவையும் பார்த்த பிறகு எனக்கு  நிவேதாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் வலுவாக மனதில் தோன்றியது.

அந்த நொடியில் தான் என் வாழ்க்கை ஒரு பெரிய மர்மத்தின் நடுவில் சிக்கிக்  கொண்டிருக்கின்றது என்று தோன்றியது.

நான் போலீஸ்காரி சான்றுகள் இல்லாமல் எதையும் நம்ப மாட்டேன் அதனால்தான் தேட ஆரம்பித்தேன் அவள் பிறந்த இடம், பிறந்த நேரம், பிறந்த தேதி எல்லாத்தையும் தேடி ஒப்பிட்டுப் பார்த்தேன்

ஆனால் சிங்காரம்… நீங்க எல்லாத்தையும் மாற்றி இருந்தீங்க ஒன்னுல மாட்டிக்கிட்டீங்க அதுதான் என்னோட பிறந்த நேரம்

அதே திகதி மற்றும் நேரத்தில்தான் நிவேதா பிறந்திருப்பதை நான் கண்டுபிடித்தேன் அதுவே எனக்கு பெரிய ஆதாரமாகக் கிடைத்தது.

அதன்பின் அந்த ஹாஸ்பிடல்ல அந்த நேரம் யார் யார் வேலை பார்த்தார்கள் என்று ஆய்வு செய்தேன் மூன்று பேர் தான் இருந்தார்கள் அதில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் ஒரே ஒருத்தி தான் உயிரோட இருந்தாள் நான் அவளைத் தேடிச் சென்றேன்

ஆனால்… அந்த அம்மா உயிரிழக்கும் தருவாயில் இருந்தார் சுவாசம் திணறிக்கொண்டிருந்தும், எனக்காக காத்திருந்தார் போல நான் அருகில் சென்றதும், யார் என்று கூறிய பின்பு கண்ணீர் கலந்த குரலில்,

‘நீங்க தான் அந்தக் குழந்தை… நான் பணத்துக்காக செய்த பாவம் உன்னை கடத்திச் சென்றதுதான் என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய குற்றம் மன்னிச்சிடுங்க…’ என்று அழுதார்.

அப்படியே என் கையைப் பிடித்து, பாவமன்னிப்பு கேட்டவுடன் உயிரை விட்டார் அந்த நொடியில்தான் எல்லா முடிச்சுகளும் சற்றே அவிழ்ந்தது போல ஆனது நான் யாரென்று புரிய ஆரம்பித்தது…” மகிழ்மதியின் கண்கள் நனைய, குரல் சுருங்கியது.

அந்த சம்பவத்தை கூறி முடித்த மகிழ்மதி தலை குனிந்தபடி அவளது அழகிய கன்னங்களை கண்ணீரால் நனைத்தாள்.

அறை முழுவதும் சில நொடிகள் முழு அமைதியில் மூழ்கியது. மகிழ்மதியின் கண்களில் நீர் தடம் வற்ற, குரல் நடுங்கியபடியே, மனதைப் பிளக்கும் வலியுடன் அவள் கேள்வி சிங்காரத்தைப் பார்த்து கேட்டாள்.

“உங்களுக்கு இப்போ எல்லா சந்தேகமும் தீர்ந்திருக்கும் ஓகே இப்ப எனக்கான டைம் நீங்க உண்மைய சொல்லுவீங்கன்னு நம்புறேன் நீங்க எதுக்காக இப்படி செஞ்சீங்க..? ஏன்? ஒரு பாசமுள்ள தாயின் கைகளிலிருந்து சின்ன கை குழந்தையை பிரிச்சு எடுக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?இப்படி செய்ய உங்களுக்கு கொஞ்சமாவது உடம்பு கூசலையா? உங்க மனசு ஒரு முறை கூட நடுங்கலையா?” என்றவளது வார்த்தைகள் காற்றை கிழித்துச் செல்வது போலச் சிங்காரத்தின் செவிகளில் மோதின.

அவள் கண்களில் இருந்த நீர், கேள்வியோடு சேர்ந்து அவரை கட்டாயப்படுத்தியது. இனி அமைதியாக இருக்க முடியாது என்பது போல சிங்காரம் பேச ஆரம்பித்தார்.

“எல்லாம் பணம் தான்! உன் தாத்தா ரங்கநாதபூபதி அவர்தான் எல்லாத்துக்கும் முதல் காரணம் உங்க அம்மா வேற ஜாதிக்காரனை லவ் பண்ணிட்டு அவனோடயே ஊரை விட்டு ஓடிப் போயிட்டா அவளுக்குத் தெரியும் அப்பா இந்த கல்யாணத்தை ஏத்துக்க மாட்டேர் என்று ஏற்றுக்கொள்ளலன்னாலும் பரவால்ல அவளை உயிரோடு புதைச்சிடுவாரு

அப்பாவுக்கு எப்பவுமே கௌரவம் தான் முக்கியம் ஊர் மக்களுக்கு பாராபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து தான தர்மம் செய்தாலும், ஜாதி விஷயத்தில அவர் எப்போதும் கடுமையானவர்

ஊருக்கெல்லாம் அவர் நல்லவராகத் தான் தெரிந்தார் ஆனா வீட்டுக்குள்ள அவரை போதும் சீரும் புலி தான் காயத்ரியைப் பற்றிய விஷயத்தில் அவன் உயிரோட இருந்த வரைக்கும் கோபம் அடங்கவே இல்லை ஆனாலும் இறக்கும் தருணத்தில அவர் எனக்கு தெரியாம ஒரு விஷயம் பண்ணினாரு பாரு அப்போ எனக்குள்ள இருந்த அந்த மிருகம் வெளி வந்துச்சு..”

அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் அடுத்து சிங்காரம் கூற இருக்கும் விடயத்தை ஆவலுடன் செவிகளை கூர்மையாகத் தீட்டி வைத்து கேட்கத் தொடங்கினார்.

மகிழ்மதியோ, “அப்படி என்ன செஞ்சார்..?” என்று கோபமாகக் கேட்டாள்.

“சொத்துகெல்லாம் காயத்ரியோட மூத்த வாரிசுதான் சொந்தம் அதுவும் 25 வயதுக்கு பின்பு தான் அதை யாரும் மாற்றலாம் என்று உயில் எழுதிட்டார் என்கிட்ட இத பத்தி எதுவுமே கேட்கல அதோட மகிழ்மதிக்கு எழுதி வச்ச சொத்துக்கள் அதிக லாபம் வருவது ஆனா லாபமே இல்லாத தோட்டம் துறவுகள என் மகன் பேருக்கும் எழுதி வைத்தார்

எனக்கு அவர் மேல் கொலை பண்ற அளவுக்கு கோவம் வந்துச்சு அவர்கிட்டயே போய் நேரா கேட்டேன்

“என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க சாகுற நேரம் மகள் மேல பாசம் பொத்துக்கிட்டு வந்துட்டோ..” என்று பேச அவரும்,

“உனக்கும் சொத்துல பங்கு எழுதி வச்சிருக்கேன் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை..” என்று உறுதியாக கூறிவிட்டார்.

எனக்கு இதுக்கு மேல என்ன பண்றதுன்னு தெரியல வந்த கோபத்திற்கு பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவரோட முகத்துல வச்சு அமுக்கி அப்படியே கொன்னுட்டேன்..” என்று சிங்காரம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், கருணையின்றி கல்லாய் விழுந்தது.

மகிழ்மதி என் கண்களில் நின்ற கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.

“என்ன சொல்றீங்க? உங்க அப்பாவை நீங்களே எப்படி..? நீங்க எல்லாம் மனுச பிறப்பா ச்சே..” என்று கண்ணீருடன் பேசினாள் மகிழ்மதி.

சிங்காரம் சிரித்தபடி

“அவனை உயிரோட விட்டிருந்தா, என்னோட வாழ்நாள் முழுக்க அந்த சொத்துக்காக நான் பிச்சைக்காரன் மாதிரி வாலாட்டிக்கிட்டு திரிஞ்சிருக்கணும் அதுதான் முடிவு கட்டிட்டேன்..!

அதுக்கப்புறம் தான் காயத்ரிய கண்காணிக்க ஆள் செட் பண்ணினேன் ஆனாலும் அவர் என்னை ரொம்ப காக்கா வச்சிட்டா அவளுக்கு பிள்ளை கிடைக்க அஞ்சு வருஷம் ஆச்சு

அஞ்சு வருஷமா ஒருத்தன் காயத்திரிக்கு பின்னாலேயே அவளுக்கு தெரியாம பின் தொடர்ந்து அஞ்சு வருஷத்துக்கு பிறகு அவ போற ஆஸ்பத்திரியில தான் என்னோட சின்ன வயசு சினேகிதன் விக்ரம் அப்பதான் டாக்டருக்கு படிச்சு ட்ரைனிங் செய்து கொண்டிருந்தான்

காயத்ரிய அவன் தான் முழுசா கவனிச்சான் எப்போ குழந்தை கிடைக்கும்னு எல்லா டீடெயில்ஸும் அவன் மூலமா நான் தெரிஞ்சுகிட்டேன்

அதுக்கப்புறம் குழந்தை பிறக்க காத்திருந்து அன்னைக்கே உன்ன தூக்கிட்டு வந்தேன் தூக்கிட்டு வந்து என்னோட குழந்தையா வளர்த்து வந்து சொத்து எல்லாம் எழுதி வாங்கிட்டு உன்னையும் கொன்னுரலாம்னு இருந்தேன்..”

“செய்திருக்கலாம் தானே அது ஏன் செய்யாம விட்டீங்க..” என்று ஆக்ரோசமாக கத்தினாள் மகிழ்மதி.

“எனக்கென்ன உன்னை சோறு போட்டு வளர்க்கணும்னு ஆசையா அந்த ஊர்ல பெரிய ஒரு சிக்கல் இருந்துச்சு 25 வயசுக்கு பிறகுதான் அந்த சொத்த வேறொருவருக்கு மாற்ற முடியும் என்று அந்த உயில்ல எழுதி இருந்துச்சு 25 வயசு வரும் வரைக்கும் ஆட்ட பழிக்கு கொடுக்கிறதுக்கு வளர்க்கிற மாதிரி உன்னை நான் அழகா, அன்பா வளர்த்து வந்தேன்

எப்போ உன்னை வீட்டுக்கு கொண்டு வந்தனோ அப்பவே என் பொஞ்சாதி லீலா என்னோட சண்டை பிடிக்க தொடங்கிட்டா நீ யாரோ ஒரு வப்பாட்டிக்கு பிறந்த பிள்ளையோ என்று சந்தேகப்பட்டு என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணினா

நான் இல்ல இது காயத்ரிக்கு பிறந்தது என்று சொல்லி என்னோட திட்டத்தை சொன்னேன் என்னோட திட்டத்த கேட்டதும் இதெல்லாம் நமக்கு வேணாங்க இது ரொம்ப பாவம் என்று திரும்பவும் என்னோடு சண்டை பிடிச்சா போய் சேருடி என்று மாடில இருந்து தள்ளிவிட்டு அவளையும் கொன்னுட்டேன்..” என்று அவன் சொல்லி சிரிக்கம கிழ்மதியின் கண்ணீர் நெருப்பு போல வழிந்தது.

“அட கொடூரக் கொலைகாரப்பாவி! உன்ன என்ன சொல்லி பேசுறதுன்னே தெரியல உன்னைப் போன்றவன் பிறந்ததே ஒரு சாபம்தான்!” என்று கட்டப்பட்டு இருக்கும் கதுரையில் இருந்தே சீறினாள்.

அவள் குரல் அதிர்ந்தபடி அறையில் முழங்கியது. அதே சமயம் அருகில் நின்ற விக்ரம் முன்வந்து,

“ஏன்பா இப்படி செய்தீங்க… இது உண்மை இல்ல தானே? சொல்லுங்க நீங்கதான் என் அ..அம்..அம்மாவை… கொன்னீங்களா? எதற்காக? ஏன் இப்படிச் செய்தீங்க?!” என்ற விக்ரத்தின் முகம் கண்ணீரால் நனைந்தது. குரல் பிளந்தது.

சிங்காரம் பார்வையை நேராக விக்ரம் மீது கொண்டு வந்தான். அவனது முகத்தில் ஒரு வித சலிப்பு தெரிந்தது.

“ஆமாடா! உங்க அம்மாவை நான் தான் சாகடித்தேன் காரணம் சொத்துதான்! அவளோட பாசம், அவளோட உயிர் எனக்கு எதுவும் காசுக்கு முன்னுக்கு மதிப்பில்லாதது தான் நான் நினைச்சத செய்து முடிப்பவன் அதுக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்கள கொள்ளுவேன்..” என்ற சிங்காரத்தின் வார்த்தைகளின் கடுமை, காற்றையே சிதறடித்தது.

மகிழ்மதி ரௌத்திரம் பொங்கும் பார்வையுடன்,

“சொத்து, பணம் இவைகளை விட மனித உயிர், பாசம் எல்லாம் உனக்கு பெரிசில்ல? உன்னைப் பெத்த அப்பாவையும் கொன்னுட்ட, உன்ன நம்பி வந்தவளையும் கொன்னுட்ட அது வேற சாதனை படைச்ச மாதிரி பெருமையா சொல்றே! உனக்கு உடம்புல ரத்தம் தான் ஓடுதா? உன் மனசுக்கு கொஞ்சம் கூட உறுத்தலே இல்லையா..?” என்றவளது கூச்சலால் அறை முழுதும் அதிர்ந்தது.

விக்ரம் தலையை பிடித்துக் கொண்டு அழுதான். அந்தக் கணத்தில், சிங்காரத்தின் கொடூரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அங்கிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!