“வெல்கம் டார்லிங்..” என எழுந்து நின்று அவனை அவள் ஆர்ப்பாட்டமாக வரவேற்க, சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவனுக்கு அந்தச் சூழல் ஏதோ ஒரு விதமான ஒவ்வாமையைக் கொடுத்தது.
சூழல் எப்படி இருந்தால் என்ன..? வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விடலாம் என எண்ணியவன் தன்னுடைய ஷர்ட்டின் பட்டன்களைக் கழற்றினான்.
“என் கூடவும் ஒரு செல்பி எடுத்து அதை உங்களோட பேஸ்புக்ல போட முடியுமா ப்ளீஸ்..?” என கொஞ்சலாகக் கேட்டாள் லைலா.
“எதுக்கு..?” புருவம் உயர்த்தினான் அவன்.
“செந்தூரி கூட நீங்க செல்பி எடுத்து வித் மை டார்லிங்னு போட்டீங்களே.. அதனால அவ ஒரே நாள்ல ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டா.. என் கூடவும் அப்படி ஒரே ஒரு போட்டோ எடுத்தீங்கன்னா நானும் கொஞ்சம் பாப்புலர் ஆகிடுவேன்..” என்றவளிடம் “நோ..” என ஒற்றை வார்த்தையில் மறுத்து விட்டான் அவன்.
“ஆனா அவ கூட மட்..”
“ப்ச்… நாட் இன்ட்ரஸ்ட்..”
சட்டென அவளுடைய முகம் சுருங்கிப் போனது.
இருந்தும் “இட்ஸ் ஓகே.. இன்னொரு நாள் எடுத்துக்கலாம்..” என சாதுவாகப் புன்னகைத்தவள் “சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணலாமா..?” எனக் கேட்டாள்.
“அவ்வளவு அவசரமா..?” என வெட்கப்பட்டுச் சிரித்தாள் அவள்.
அங்கிருந்த படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டவனின் கரம் அவனுடைய சிகையை வருடியது.
“இந்த இடத்துக்கு வர்றதுக்கு நான் எத்தனை மாசமா போராடினேன் தெரியுமா..?” என லைலா கூற அவளை அலட்சியமாகப் பார்த்தான் விநாயக்.
ஏதோ இமய மலையின் உச்சியைத் தொடப் போராடியதைப் போல அல்லவா படுகைக்கு வருவதற்காக போராடினேன் என்கிறாள்.
இவள் சற்று வாயை மூடினால் நன்றாக இருக்குமோ என எண்ணிக்கொண்டது அவனுடைய மனம்.
“டார்லிங்.. நான்..”
“உஷ்ஷ்…” என அவளுடைய பேச்சை நிறுத்தினான் அவன்.
“ஆரம்பிக்கலாம்..” என்ற நேரடியான அவனுடைய வார்த்தைகளில் தலையை வேகமாக அசைத்தவள் முதலில் தான் அணிந்திருந்த இறுக்கமான ஆடையின் பட்டன்களை ஒவ்வொன்றாக அவனைப் பார்த்தவாறே கழற்றத் தொடங்க,
அவனுக்கோ அக்கணம் சட்டென செந்தூரியின் நினைவு எழுந்தது.
அவள் தன் ஆடையை அகற்றும் ஒவ்வொரு நொடியும் வலியில் துடிப்பதை நேராகக் கண்டவனுக்கு லைலாவின் பார்வை சற்றே அதிருப்தியை கொடுத்தது.
அவளுடைய கூச்சம் ஏன் லைலாவிடம் இல்லாமல் போனது..?
லைலாவைப் பார்க்க வந்துவிட்டு அவளில் செந்தூரியைத் தேடி ஏமாந்து போனான் அவன்.
அந்த இறுக்கமான ஆடையை அகற்றி தரையில் போட்ட லைலாவோ தன்னுடைய உள்ளாடை மீது கையை வைக்க சட்டென எழுந்து கொண்டான் அவன்.
எதுவும் ரசிக்கவில்லை.
“என்னாச்சு டார்லிங்..?”
“ட்ரெஸ்ஸ போட்டுக்கோ..”
என அவன் இறுகிய குரலில் கூற வேகமாக அவனை நெருங்கி அவனுடைய கன்னத்தில் தன் கரத்தைப் பதித்தவள்,
“லவ் மேக் பண்ண ட்ரெஸ் எதுக்கு..?” என்றாள்.
சட்டென அவளுடைய கரத்தை தட்டி விட்டவன்,
“இப்போ மூடு இல்லை..” என்றான்.
அவனைப் பார்த்து ஙே என விழித்தாள் அவள்.
“ட்ரெஸ் ரிமூவ் பண்ணாம பண்ணலாம்..” என அவன் கூற அவளோ குழம்பிப் போனாள்.
ஏதோ புது விதமாக முயற்சி செய்யப் போகின்றானோ என எண்ணியவாறு அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் லைலா.
இறுகிய அணைப்பு..!
அவளுடைய கழுத்து வளைவைப் பார்த்தவனுக்கு செந்தூரியின் வெண்ணிற பூனை முடிகள் நிறைந்த சங்குக் கழுத்து நினைவுக்கு வந்து படுத்தி எடுத்தது.
“டாமிட்..” என முணுமுணுத்தவனுக்கு லைலாவுடன் ஒன்ற முடியாமற் போக,
அவளைத் தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவன்,
“இன்னொரு நாள் பாத்துக்கலாம்…” எனக் கூறிவிட்டு அக்கணமே அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ஏதோ தன் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத இடத்தில் நுழைந்தது போல அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டவனுக்கு என்னவாயிற்று தனக்கு என்ற கேள்வியே முதன்மையாக எழுந்தது.
சற்று நேரம் காரை ஸ்டார்ட் செய்யாது அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.
உடல் தேவையாக இருந்திருந்தால் இந்நேரம் லைலாவுடன் அவன் சல்லாபித்திருக்க முடியுமே.
ஒருவேளை அவளுடைய வளவளவென்ற பேச்சு அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டதோ..?
எதற்காக அவளை செந்தூரியுடன் ஒப்பிட்டோம் என்றும் அவனுக்குப் புரியவில்லை.
இவளைச் சந்திப்பதற்கு முதல் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்தது.
இவளை என்று சந்தித்தேனோ அன்றிலிருந்து என்னுடைய மகிழ்ச்சியும் சுதந்திரமும் விலகிச் சென்று விட்டதைப் போல அல்லவா இருக்கிறது.
காரை ஸ்டார்ட் செய்தவன் எப்போதும் செலுத்தும் நிதானம் இன்றி காரை சற்று வேகமாகவே செலுத்தினான்.
மழை விட்டு வெய்யில் வந்திருந்தது.
அதே நேரம் அவன் சென்ற வழியில் நகைக்கடை ஒன்றைப் பார்த்தவன் சட்டென தன்னுடைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த நகைக்கடையைப் பார்த்தான்.
தன்னுடைய அன்னையிடம் அவள் அணிந்திருந்த தோடுகளை கழற்றிக் கொடுத்தது நினைவில் வந்தது.
தன்னுடைய பர்சை எடுத்தவன் நேரே நகைக் கடைக்குள் நுழைந்தான்.
ஏதோ சிந்தனையில் அவன் முகத்திற்கு மாஸ்க் அணியாமல் தன்னந் தனியாக வந்துவிட சட்டென அவனைப் பார்த்த கூட்டமோ அவனிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக அந்த இடத்தில் குழுமி விட்டது.
அதற்குள் அந்தக் கடையின் செக்யூரிட்டி அவனிடம் குவிந்த மக்களை விலக்கி விட சற்று தள்ளி நின்று அவனுக்கு கைவசத்தவர்களிடம் தன் தலையை அசைத்து அவர்களை கடந்து சென்றவன் பிரீமியம் பிரிவுக்குள் நுழைந்திருந்தான்.
அங்கே சற்று பிரைவசி கிடைக்க,
“இயரிங்ஸ் டிஸைன் காட்டுங்க..” என்றவன் முன்பு பல்வேறு வகையான டிஸைன்களில் அழகிய தோடுகள் வைக்கப்பட்டன.
தங்கம் வைரம் என வரிசையாக அடுக்கப்பட்டிருந்த அந்த தோடுகளில் கற்களால் அமைக்கப்பட்ட பூ போன்ற அமைப்பில் வைரத்தால் இழையப்பட்ட தோடுகளைப் பார்த்தவனின் இதழ்களோ “வாவ்..” என முணுமுணுத்துக் கொண்டன.
அந்தத் தோடுகளுக்கு இணையாக வைரக்கல் பதித்து மெல்லிய சங்கிலி ஒன்றையும் வாங்கியவன் அதற்கான பில்லை செலுத்தி விட்டு மீண்டும் காரில் வந்து ஏறிக் கொண்டான்.
இந்தத் தோடு அவளுக்கு மிகவும் அழகாக இருக்கும் என எண்ணிக்கொண்டது அவனுடைய மனம்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து கரை பார்க் பண்ணும் இடத்தில் பார்க் பண்ணிவிட்டு இறங்கியவனுக்கு சென்ற வேகத்தில் திரும்பி வந்ததை எண்ணி ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
இன்று இரவு வரவே மாட்டேன் எனக் கூறிவிட்டு அல்லவா வந்தேன்..?
ஆனால் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வந்ததை நினைத்து தன்னைக் கேலியாகப் பார்ப்பாளோ..?
சட்டென தன் தலையை உலுக்கி விட்டவன் அவள் என்ன நினைத்தால் எனக்கு என்ன என்ற அலட்சிய பாவனைக்கு வந்து விட்டிருந்தான்.
அதே நேரம் முதல் முறையாக அந்த வீட்டில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள் செந்தூரி.
இன்று முழுவதும் அவன் இல்லாத இந்த வீடு அவளுக்கு நிச்சயம் சொர்க்கம் தான்.
நிம்மதியாக உறங்கலாம் என எண்ணியிருந்தவள் மழை அடித்து ஓய்ந்ததன் பின்பு பல்கனியில் நின்று தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் அவளுடைய செவியை எட்டியது.
யாரது..?
வேலையாள் யாரும் வந்திருக்கக் கூடுமோ என எண்ணியவாறு பல்கனியிலிருந்து வெளியே தன்னுடைய தலையை மட்டும் எட்டிப் பார்த்தவள் அங்கே இறுகிய முகத்துடன் வந்து கொண்டிருந்த விநாயக்கைக் கண்டதும் அதிர்ந்து போனாள்.
‘ஐயோ நாளைக்கு காலைலதானே வருவேன்னு சொன்னான்.. இப்போவே எதுக்கு வந்தான்..?’ எனப் பதறியது அவளுடைய மனம்.
எதையாவது மறந்து விட்டுச் சென்று விட்டானோ என எண்ணியவள் சட்டென அதனை எடுத்துக் கொடுத்து அவனை அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவனிடம் வந்தாள்.
“எதையாவது மறந்து வெச்சிட்டுப் போயிட்டீங்களா..? நான் வேணும்னா எடுத்துத் தரவா..?” என அக்கறையாக அவள் கேட்க,
அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன் “நோ..” எனக் கூறிவிட்டு உடை மாற்றுவதற்கு சென்றுவிட இவளுக்கு நிம்மதி தொலைந்தது.
சோர்ந்து போனவளாய் மீண்டும் பல்கனியில் வந்து நின்று விட்டாள் அவள்.
சற்று முன்னர் இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து போயிருந்தது.
ஒரு பெண்ணைத் தேடி அவ்வளவு வேகமாகச் சென்றவன் எதற்காக உடனே திரும்பி வந்திருக்கக்கூடும் என சிந்தித்துச் சோர்ந்து போனவள் அப்படியே நின்றாள்.
சற்று நேரத்தில் அவனே அவள் அருகில் வந்து விட அவளுடைய விழிகளோ விரிந்தன.
“என்ன பண்ற..?”
“சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்..”
“ஓஹ்… இத போட்டுக்கோ..” என்றவன் சிறிய பாக்ஸை அவளிடம் நீட்ட,
“இது என்னது..?” எனக் கேள்வி கேட்டாள் அவள்.
“பாக்ஸை திறந்து பாரு..” என்றான் அவன்.
என்னவாக இருக்கக்கூடும் எனச் சிந்தித்தவாறு அந்த சிவப்பு நிற சிறிய பெட்டியைத் திறந்து பார்த்தவள் உள்ளே மிக அழகாக வெள்ளிக் கற்கள் பதிக்கப்பட்ட தோடும் சங்கிலியும் இருப்பதைக் கண்டு தன் விழிகளை ஆச்சரியத்தில் விரித்தாள்.
“வாட் வைரமா..?” என அதிர்ந்து கேட்டவள் அடுத்த கணமே அவனிடம் அதனைக் கொடுத்து விட்டாள்.
“இத எதுக்கு என்கிட்ட கொடுத்தீங்க..? பத்திரமா லாக்கர்ல பூட்டி வைங்க..” என்றவளின் அறியாமை அவனுக்கு அதிகமாய் பிடித்தது.
“ஏன் பிடிக்கலையா..?”
“ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் அவள்.
“அப்போ போட்டுக்கோ..”
அவன் அதை தனக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறான் எனத் தெரிந்ததும் வேண்டாம் என ஒரே வார்த்தையில் மறுத்துக் கூறினாள் செந்தூரி.
அவளுடைய பதிலில் அவனுக்கு சீற்றம் முகிழ்த்தது.
“இப்போ எதுக்கு வேணாம்னு சொல்லி சீன் போட்டுக்கிட்டு இருக்க..?”
“நான் ஒன்னும் சீன் போடல.. எனக்கு எதுக்காக இந்த நகை எல்லாம் வாங்கிக் கொடுக்குறீங்க..? கண்ட கண்டவங்ககிட்ட இருந்தெல்லாம் நான் எதையும் வாங்கிக்க மாட்டேன்.”
“நான் உனக்கு கண்டவனா..?”
“ஆமா நீங்க எனக்கு யாரோதானே..” பட்டெனக் கூறினாள் அவள்.
“பரவால்ல போட்டுக்கோ..”
“உங்ககிட்ட இருந்து பணமோ நகையோ நான் கடைசி வரைக்கும் வாங்கிக்கவே மாட்டேன்.. தயவு செஞ்சு இதை எடுத்துட்டுப் போங்க..” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“இத எடுத்துக்கிட்டீன்னா இன்னும் ரெண்டு நாளைக்கு உன்னோட ட்ரெஸ்ஸ ரிமூவ் பண்ண சொல்ல மாட்டேன்.. உனக்கு பிடிச்சது போல நீ நிம்மதியா தூங்கலாம்..” என அவன் கூறியதும் சில நொடிகள் தயங்கினாள் அவள்.
ஆனால் சற்று நேரத்தில் இயலாமையோடு அந்த நகைப் பெட்டியை வாங்கிக் கொண்டாள் செந்தூரி.
இவன் முன்பு ஆடையை அகற்றிவிட்டு நிர்வாணமாக நிற்பதை விட இந்த நகையைப் போட்டுக் கொள்ளலாம் என்றே எண்ணியது அவளுடைய மனம்.
அவள் நகையை வாங்கியதும் அவனுடைய உதடுகளிலோ வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.
“கம்… நானே போட்டு விடுறேன்..” என்றவன் அந்த மெல்லிய சங்கிலியை எடுத்து அவளுடைய கழுத்தில் அணிவிக்க முயல படபடப்போடு பின்னால் நகர்ந்தாள் செந்தூரி.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 71
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,064
2 thoughts on “36. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Adapavi payaley
Super sis rendu epiyavathu poduga sis 💞💞💞💞🥰🥰🥰