சொர்க்கம் - 37
தன்னுடைய கழுத்தில் நகையை அணிவிக்க வந்த விநாயக்கை விட்டு பின்னே நகர்ந்தவள் “அதெல்லாம் வேணாம்.. என்கிட்ட கொடுங்க.. நானே போட்டுக்கிறேன்..” என அவசரமாகக் கூறினாள்.
அது எப்படி அவள் கூறலாம்..?
அவனுடைய மனமோ நான்தான் போட்டு விடுவேன் என அடம் பிடிக்க அவனே ஒரு கணம் அதிர்ந்துதான் போனான்.
இதெல்லாம் சரியில்லையே.
“சரி ஓகே ஜுவல்ஸ்ஸ போட்டுட்டு வா.. நாளைக்கு நடிக்க வேண்டிய சீனை பிராக்டிஸ் பண்ணலாம்..” என்றதும் அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“இதோ பாருங்க நாளைக்கு ஒரே டேக்லயே நான் ஒழுங்கா பண்ணிடுவேன்.. உங்களைத் திரும்பத் திரும்ப நடிக்க வைக்க மாட்டேன்..” என்றாள் அவள்.
“அத எப்படி நீ இவ்வளவு ஸ்டெடியா சொல்ற..? ரிகசல் பண்ணி பார்த்தாதான் நீ பண்ணுவியா இல்லையான்னு தெரியும்..” என மீண்டும் அழைத்தான் அவன்.
“நீங்க இப்போ எதுக்காக திரும்பத் திரும்ப ப்ராக்டிஸ் பண்ண வரச் சொல்லி என்ன கம்பல் பண்றீங்க..?” என நேரடியாகவே கேட்டு விட்டாள் அவள்.
அவளைத் தொட்டு அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்தான் அடிக்கடி கேட்கின்றான் என்பது அவனுக்கே புரியாத புதிராக இருக்கும்போது அவளிடம் எப்படி பதில் கூற முடியும்..?
அவள் கேட்ட கேள்வியில் சில நொடிகள் அமைதியாக நின்றவன், “உன்னோட கழுத்துல என்னவோ இருக்கு..” என்றான்.
“என்னது..?” என்றவாறு தன்னுடைய முடியை விலக்கி அவள் தன்னுடைய கழுத்து வளைவை விரல்களால் வருடிப் பார்த்து “ஒன்னும் இல்லையே..” எனக் கூற,
அவனோ சற்றே அவளை நெருங்கியவன் அவளுடைய கழுத்தோரம் தன்னுடைய பெருவிரலால் அழுத்தமாக வருடி விட்டு “ஏதோ பூச்சி மாதிரி இருந்தது இப்போ இல்ல..” எனக் கூற “ம்ம் சரி..” என்றாள் அவள்.
“கண்டிப்பா இதெல்லாம் போட்டுக்கணுமா..?” அவன் வாங்கிக் கொடுத்ததை விருப்பமின்றி பார்த்தாள் அவள்.
“உன்னால போட முடியலன்னா சொல்லு.. நானே போட்டு விடுறேன்..”
“ஐயோ வேணாம்.. நானே போட்டுக்கிறேன்..” என்றவள் அந்த தோடுகளை போட்டுவிட்டு,
“தோடு மட்டும் போதுமே..” என்றாள்.
அவனோ அவளை அழுத்தமாகப் பார்க்க,
“கிராதகா..” என அவனை மனதிற்குள் திட்டி விட்டு அந்த அழகிய செயினை தன்னுடைய கழுத்தில் அணிவிக்க முயன்றவளுக்கு சற்றே சிரமமாக இருந்தது.
“என்கிட்ட கொடு..” என்றவன் அவள் கொடுப்பதற்கு முன்னரே அவளுடைய கரத்தில் இருந்த அந்த சிறிய செயினை வாங்கி அவளுடைய கழுத்தில் வைத்தவன் அவளுக்கு பின்பக்கமாக வந்து நின்றான்.
“இவ்வளவு நீளமா முடிய வெச்சிருந்தா நான் எப்படி போட்டு விடுறது..?”
“ஹாங்.. இதுக்காக நான் என்ன மொட்டையா அடிக்க முடியும்..? வெயிட் பண்ணுங்க..” என்றவள் பின்னால் படர்ந்து இருந்த தன்னுடைய கூந்தலை அள்ளி எடுத்து முன்பக்கமாக மார்பில் படர விட,
ஆடை மறைக்காத அவளுடைய மேல் முதுகையும் பூனை முடிகள் படர்ந்த அவளுடைய பின் வெண்ணிறக் கழுத்தையும் பார்த்தவனுக்கு போதை மருந்து உட்கொள்ளாமலேயே போதை ஏறியது.
தன்னை மறந்து அவளுடைய பின் கழுத்தை விரல்களால் வருடியவன் அந்த சங்கலியை அவளுக்கு மிக மிக மெதுவாகவே அணிவித்து விட்டான்.
அதற்குள் அவனுடைய விரல்கள் தாராளமாக அவளுடைய பின் கழுத்தை தொட்டு தடவி வருடி விட்டிருந்தன.
அவளுக்கோ அவளுடைய பின் கழுத்து பூனை முடிகள் யாவும் அவனுடைய தொடுகையில் கூசி சிலிர்த்து எழுந்து நிற்க,
அதைப் பார்த்தவனுக்கு அவற்றுடன் சீண்டி விளையாட வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததுதான் விந்தை.
வேகமாக விலக முயன்றவளை முன்பக்க வயிற்றில் கரம் பதித்து தன்னுடைய முன்னுடலோடு அவளை அணைத்துக் கொண்டவன் “எதுக்காக உன்னோட இந்தக் குட்டி குட்டி முடிலாம் இப்படி சிலுத்துக்கிட்டு நிக்குது..?” என அவளிடமே கேள்வி கேட்க அவளுக்கு அவனை வெட்டலாமா குத்தலாமா என்றிருந்தது.
“அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க..? முதல்ல என்ன விடுங்க..” என அவனுடைய பிடியிலிருந்து அவள் திமிர முயற்சிக்க,
இன்னும் அழுத்தமாக அவளைத் தன்னோடு அழுத்திப் பிடித்துக் கொண்டவன் வேண்டும் என்றே தன்னுடைய மற்றைய கரத்தால் அவளுடைய கழுத்தை வருட மீண்டும் அந்த சிறு சிறு முடிகள் சிலிர்த்து நின்றன.
“வாவ் இட்ஸ் ஆவ்ஸம் பேபி..”
அவளுக்கோ அவஸ்தை ஆக இருந்தது.
இவன் இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே.
தன்னைத் தொடுவதைக் கூட தவிர்த்து விடுபவன் இன்று எதற்கு இப்படி எல்லாம் செய்கின்றான் என பதறியது அவளுடைய மனம்.
மீண்டும் மீண்டும் அவளைப் பிடித்து வைத்து அவளுடைய கழுத்து வளைவில் அவன் விளையாடிக் கொண்டிருக்க அவளுக்கோ கோபமே வந்துவிட்டது.
அவனைத் தள்ளி விடலாம் என்ற முயற்சியில் அவள் முன்னேற முயன்ற கணம் அவளுடைய பின் கழுத்தில் அழுத்தமாக தன்னுடைய இதழ்களை புதைத்து விட்டிருந்தான் விநாயக் மஹாதேவ்.
அவளோ உறைந்து போனாள்.
அவனுடைய பிடிக்குள் இருந்த அவளுடல் நடுங்கத் தொடங்கி விட்டிருந்தது.
தான் என்ன செய்கின்றோம் என்பதை புரிந்துதான் செய்கின்றானா..?
சில நொடிகள் விக்கித்துப் போய் நின்றவளுக்கு எதுவுமே புரியவில்லை.
அவள் திகைத்து நின்ற நொடிகளில் அவன் அடுத்த முத்தத்தையும் அவளுடைய பின் கழுத்தில் இன்னும் அழுத்தமாக பதித்து விட உடைந்து போனது அவளுடைய மனம்.
பொல பொலவென கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கி விட உயிரற்ற பிணம் போல அசையாமல் நின்றாள் அந்தக் காரிகை.
இவனும் தன்னை தவறாகப் பயன்படுத்தப் போகின்றான் என்ற எண்ணம் அவளை அதீதமாய் பதற வைத்தது.
அவனோ அவளுடைய தித்திக்கும் பின் கழுத்தை முத்தத்தால் நனைத்து விட்டு தீராத வேட்கையுடன் அவளுடைய முகத்தை திருப்பி தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டவன் அப்போதுதான் அவளுடைய கண்ணீரைக் கண்டான்.
பொங்கிய அவனுடைய உணர்வுகள் சட்டென வடிந்தன.
அவளுடைய கன்னங்களை தாங்கிப் பிடித்த தன் கரத்தை விலக்கிக் கொண்டவன் அவளை விட்டு தள்ளி நிற்க அவ்வளவுதான் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் அவள்.
“ஹேய்… ஹேய் என்னடி..? இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழற..”
“த.. தப்பு பண்றீங்க..” என்றவளின் மருண்ட பார்வை அவனை வசீகரித்தது.
“பட் தப்பான எண்ணத்துல பண்ணல..” என்றான் அவன்.
“நீங்க பண்ணதே தப்புதான்.” என கண்களைத் துடைத்தவாறு அவள் கூற,
ஒரு முத்தத்திற்கு இப்படி அழுதால் என்னதான் செய்வது.?
எதற்காக திடீரென இவள் மீது ஆசை முளைக்கின்றது..?
அங்கே வந்து தன் மீது ஒட்டி நின்ற லைலாவை வேண்டாம் என விலக்கித் தள்ளிவிட்டு தன்னை விட்டு விலகி விலகிச் செல்லும் இவளை நெருங்குவதற்கு காரணம் தான் என்ன..?
இவள் என்ன அவ்வளவு அழகா..?
நிஜமாகவே அவள் பேரழகிதான் என ஒத்துக்கொண்டது அவனுடைய மனம்.
ஆனால் இவளை விடவும் பேரழகிகளை அவன் சந்தித்து இருக்கின்றானே.
அப்போதெல்லாம் அவனுடைய மனம் யாரைப் பார்த்தும் தடம் தடுமாறியது அல்லவே.
அவனை விரும்பி வரும் பெண்களைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அவன் அந்தப் பார்வையில் கூட பார்த்ததில்லை.
ஆனால் முதல் முறையாக தன்னை விட்டு விலகிச் செல்லும் தன்னை வெறுக்கும் தன்னை மதிக்காத ஒருத்தியின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வருவதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
ஒருவேளை எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்று சொல்வார்களே அதுபோல தன்னை தவிர்க்கும் பெண் மீது எனக்கு ஈர்ப்பு வந்து விட்டதோ.?
அவளோ டிஷ்யூ ஒன்றை எடுத்து கண்ணீரைத் துடைத்தவாறு சோபாவில் அமர்ந்து தேம்பிக் கொண்டிருக்க,
‘இவ இப்போதைக்கு அழுது முடிக்க மாட்டா போல இருக்கே..’ என எரிச்சலோடு எண்ணிக் கொண்டான் அவன்.
அவனுக்கோ அவளை விட்டு விலகி இருப்பதுதான் நல்லதென்று தோன்றியது.
ஆனால் அவள் அருகே வந்தாலே அணைத்து வைத்திருக்க வேண்டும் போல அவனுடைய உடல் கிளர்ந்து தவிக்க புதுவிதமாகத்தான் இருந்தது அவனுக்கு.
தன்னுடைய சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் அவன்.
‘அவ கழுத்துல அப்படி என்னதான் இருக்கு..? ஒரு வேளை பொண்ணுங்க கழுத்துதான் நம்ம வீக்னஸ்ஸா இருக்குமோ..?
ஆனா லைலாவோட கழுத்தை பிடிக்கலையே..’
என்றவன் அழுகையில் துடித்துக் கொண்டிருந்த அவளுடைய இதழ்களைப் பார்த்ததும் ஸ்தம்பித்துப் போனான்.
அவனுடைய மனம் வெட்கமே இன்றி அவளுடைய சிவந்த இதழ்களையும் ரசித்து வைக்க,
“டாமிட்..” என முணுமுணுத்துக் கொண்டன அவனுடைய உதடுகள்.
இதற்கு மேலும் தன்னுடைய உணர்வுகளை தடுமாறச் செய்யும் இவளை அருகில் வைத்திருப்பது தன்னுடைய பலவீனத்திற்கு அடித்தளமாக போய்விடுமோ என எண்ணியவன் இவளை சீக்கிரமாகவே இங்கிருந்து அனுப்பிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
ஆம் அவன் நினைத்ததை இதுவரைக்கும் சாதித்து விட்டான் தானே.
தன்னை அனைவரின் முன்பும் அடித்து அசிங்கப்படுத்திய பெண்ணை தன்னுடைய கைப் பாவை போல மாற்றி அவளுக்கான தண்டனையையும் கொடுத்து விட்டானே.
இனியும் எதற்கு அவளை இங்கேயே வைத்திருக்க வேண்டும்..?
இவளால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லையே.
இவளைப் பழிவாங்குகிறேன் என ஆரம்பித்து நடிக்க மாட்டேன் என கூறிய படத்தில் மீண்டும் நடித்ததும் இவளுக்காக பத்து லட்சம் பணத்தை கொடுத்ததும்தான் மிச்சம்.
அதுமட்டுமா இப்போது எம்பது லட்சத்துக்கு வைர நகைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறேனே..
இது எல்லாவற்றையும் பார்க்கும்போது அவனுக்கு பழி வாங்குவதைப் போலவே இருக்கவில்லை.
ஏதோ அவளை அழைத்து வந்து விருந்தினரை உபசரிப்பது போல அல்லவா இருக்கின்றது.
இதை இப்படியே நீடிக்க விடுவது தவறு.
இவளுக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.
இவளுக்கு விருப்பம் இருந்தால் ஒருநாள் இரவை இவளுடன் கழித்துவிட்டு தன்னுடைய உடல் தேவையை தீர்த்துக் கொள்ளலாம்தான்.
ஆனால் அவள் அதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டாள் என்பதை இத்தனை நாட்களில் அறிந்து கொண்டான் அவன்.
கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் அவள் அதற்கு சம்மதம் ஒருபோதும் கூற மாட்டாள்.
இவளால் தனக்கு எந்தத் தேவையும் பூர்த்தியாகப் போவதில்லை இந்த பழிவாங்கு படலத்தை சீக்கிரமே முடித்துவிட்டு இவளை இங்கிருந்து அனுப்பிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவள் முன்னே வந்து நின்றான்.
அழுதழுது அவளுக்கு முகம் வீங்கிச் சிவந்து போனது.
அவன் அருகே வந்ததும் பதைபதைத்துப் போனவளாய் தன் நெஞ்சில் கை வைத்த படி அதிர்ந்து அவனைப் பார்க்க,
“நான் ஒன்னும் ரேப் பண்ண வரல.. முதல்ல என்ன பார்த்து இப்படி பயப்படுறத நிறுத்து.. எரிச்சலா இருக்கு..” என அதட்டினான் அவன்.
அவளோ மூச்சை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட்டவள் சற்றும் குறையாத பதற்றத்தோடு அவனைப் பார்த்தபடி நிற்க,
“இன்னைலருந்து சரியா ஒரு மாசத்துல நீ உங்க வீட்டுக்குப் போகலாம்..
என்னால இனி எந்தப் பிரச்சனையும் உனக்கு வராது..” என அவன் கூறியதும் அவ்வளவு நேரமும் பதற்றத்தில் நின்றவளது விழிகள் உதடுகள் என அனைத்தும் மலர்ந்தன.
🔥💜🔥
60 star ⭐ ratings வந்ததும் அடுத்த எபிசோட் போடுறேன் தங்கம்ஸ்
டீலா..?
Super sis 💞