தன் முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைக் கையில் எடுத்துப் பார்த்தவனுக்கு அனைத்திலும் ஏதோ ஒரு குறை இருப்பதைப் போலவே தோன்றியது.
யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்லி ஒதுக்கி வைத்தவன் முத்துவை முறைத்துப் பார்த்தான்.
“இவங்க யாரும் ஏன் அபர்ணாவா மாதிரி அழகா இல்ல..? அவள மாதிரி யாருக்குமே நீளமான கூந்தல் இல்லையே..!”
“சார் இந்த பொண்ணோட கூந்தல் நீளமாதான் இருக்கு இவங்க ஓகேவா..?”
“முடி மட்டும் இருந்தா போதுமா மூக்கு நல்லாவே இல்ல..”
“நல்லாத் தானே இருக்கு சார்..” என்றான் அவன்.
“வாட்.. உனக்கு நல்லா இருந்தா நீ கல்யாணம் பண்ணிக்கோ இடியட்..” என அவனைத் திட்டினான் குருஷேத்திரன்.
“சாரி சார்..” எனத் தன் வாயை இறுக மூடிக்கொண்டான் முத்து.
“சார் மத்த பொண்ணுங்க போட்டோவ பாருங்க..” என இன்னும் சில புகைப்படங்களை அவன் எடுத்துக் கொடுக்க அனைத்தையும் பார்த்து கிட்டத்தட்ட விசிறி எறிவதைப் போல மேசையின் மீது அனைத்தையும் போட்டவன்,
“எதுவுமே எனக்குப் பிடிக்கல..” என முடித்திருந்தான்.
“சார் நீங்க எப்படி எதிர்பார்க்கிறீங்கன்னு சொல்லுங்க அது மாதிரியே தேடிப் பார்க்கிறேன்..” என மூச்சு வாங்கக் கூறினான் முத்து.
எப்படிப்பட்ட பெண் வேண்டும் எனக் கேட்டதும் சட்டென அவனுடைய மனதில் அபர்ணாவின் முகமே தோன்றியது.
“அபர்ணாவ மாதிரி நீளமான முடி இருக்கணும், குண்டு கன்னமா இருக்கணும், புருவங்கள் ரொம்ப அடர்த்தியா அபர்ணாக்கு இருக்கிற மாதிரியே இருக்கணும், குட்டி ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ் மாதிரி..” எனக் கூறிக் கொண்டே வந்தவன் சட்டென தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
“டாமிட்..” எனத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் ஒரு விதமான எரிச்சல் உணர்வு தோன்றியது.
முத்துவோ தன் மனதிற்குள் ‘இதுக்கு அபர்ணா தான் வேணும்னு நேராவே சொல்லி இருக்கலாமே..’ என நினைத்துக் கொண்டான்.
“லிசன் முத்து அழகான பொண்ணு வேணும்தான்.. பட் அவளை விட இன்னொரு அழகியை உன்னால கண்டுபிடிக்க முடியும்னு எனக்குத் தோணல..” என்றவன் தன் முன்னே சிதறிக் கிடந்த புகைப்படத்தில் சிலவற்றை தெரிந்து எடுத்தவன்,
“இவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கி எடு எல்லாம் ஓகேயா இருந்ததுன்னா இதுல ஏதாவது ஒன்னு நீயே பிக்ஸ் பண்ணிடு..” என வேண்டா வெறுப்பாகக் கூறிவிட்டு எழுந்து சென்று விட முத்துவுக்கோ மிகப்பெரும் திகைப்பாக இருந்தது.
“அட நம்ம சாரா இது..? எந்தப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லைன்னு என்ன தேர்ந்தெடுக்க சொல்லிட்டு போயிருக்காரு..” எனத் திகைத்துப் போனவன் அவன் கொடுத்த புகைப்படத்தில் இருந்த பெண்களின் தொடர்பு இலக்கத்தை எடுத்து ஒவ்வொருவரிடமும் பேசி அவர்களுடைய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினான்.
முத்துவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த குருஷேத்திரனின் மனமோ அவனையே கடிந்து கொண்டது.
“அபர்ணா.. அபர்ணா.. அபர்ணா.. ஷிட் எதுக்காக அவளையே நினைச்சுக்கிட்டு இருக்க..? அவளோட அத்தியாயம் உன்னோட வாழ்க்கைல முடிஞ்சு போயிடுச்சு டாமிட்..” எனக் கண்ணாடியில் தன்னைப் பார்த்து தனக்கே திட்டிக் கொண்டவன் தன்னுடைய தலையை அழுந்தப் பற்றிக் கொண்டான்.
அந்தக் கண்ணாடி மேஜையில் இருந்த அவளுடைய அலைபேசியைக் கண்டதும் அவனுடைய புருவங்கள் உயர்ந்தன.
அவன் வாங்கிக் கொடுத்த அலைபேசி தொடக்கம் நகைகள், ஆடைகள் என எதையுமே அவள் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்ந்து வியந்தவன் “ரோசக்காரிதான்..” என முணுமுணுத்தான்.
அந்த அறையில் இருந்த அவர்களுடைய திருமண புகைப்படத்தின் மீது அவனுடைய பார்வை பதிய தேவதை போல அழகாய் இருந்தவளைத் தன்னை மறந்து ரசித்தன அவனுடைய கூர்விழிகள்.
திருமணம் நடந்த அன்று அவள் கேட்ட எதற்கும் இவன் பதில் கூறாமல் இருந்ததும் அவள் தனக்குக் காது கேட்காது என எண்ணி தன்னைப் பற்றி அவளுடைய அன்னையிடம் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் நினைவில் வர அவனை மீறி புன்னகைத்தன அவனுடைய உதடுகள்.
“சேட்டைக்காரி..” என மீண்டும் அவளைப் பற்றி முனகி விட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு அவள் வேண்டும் போல இருந்தது.
தன்னுடைய கரங்களுக்குள் பாந்தமாக அடங்கிப் போகும் அந்த அழகிய மலரை இறுக்கமாக அணைத்து அவளுடைய வெண் சங்குக் கழுத்தில் முகம் புதைத்து தேன் சிந்தும் தடித்த உதடுகளில் முத்தமிட்டு அவளைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற தாபம் அவனுக்குள் தோன்ற அதிர்ந்து போனான் குருஷேத்திரன்.
“ஓஹ் காட் நோ.. என்ன இது..? நான் இப்போ ஏன் இப்படி எல்லாம் திங்க் பண்றேன்.. அவ இங்க இருக்கும்போது அவளை நெருங்கினது எல்லாமே என்னோட குழந்தைக்காக மட்டும் தானே.. அவளால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னோட உடம்பும் மனசும் எதுக்கு அவளைத் தேடுது.. ஒருவேளை காமத்துக்கு அடிக்ட் ஆயிட்டேனா..? ஒவ்வொரு நாள் இரவும் அவ கூடவே ஒண்ணா இருந்து பழகிட்டதுனால மறுபடியும் அவ வேணும்னு என்னோட உடம்பு ஆசைப்படுதோ..?
ஷிட் போயும் போயும் அஞ்சு நிமிஷ சுகத்துக்கு ஆசைப்பட்டு என்னோட கனவை நான் இழக்க தயாரா இல்லை. இந்த உடம்பு சுகத்தை விட என்னோட கௌரவம் தான் எனக்கு முக்கியம்.. இந்த சமூகத்துல நான் எந்த குறையோடையும் வாழ விரும்பல..
எப்படியும் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணத்தானே போறேன் அவகூட ஒன்னா இருந்து குழந்தை பெத்துக்கதான் போறேன்.. ஆசைகளை ஒதுக்கி வச்சிட்டு என்னோட குறிக்கோள்ல மட்டும்தான் நான் கவனம் செலுத்தணும்..” என எண்ணியவன் விழிகளை மூடி உறங்க முயற்சி செய்தான்.
மாலை நேரம் தாண்டி இரவுப் பொழுது நெருங்கி விட அபர்ணா இல்லாத படுக்கை அவனை அவஸ்தை கொள்ளச் செய்தது.
எப்போதும் அவள் அணைத்து தூங்கும் சிறிய தலையணையை எடுத்து தான் அணைத்துக் கொண்டான்.
அவளுடைய வாசனை தேடி தோற்றுப் போனது அவனுடைய நாசி.
தன்னை மீறி தன்னை மறந்து அவள் படுத்திருக்கும் பக்கம் நான்கு ஐந்து முறை தன்னுடைய கரங்களால் துலாவி அவளைத் தேடியவன் ஏமாந்து போய் வெறுப்போடு சடாரென படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.
தலை வலித்தது.
இப்போது அவள் வேண்டும் போல உடல் அவதிப்பட்டது.
இழுத்து அணைத்து முத்தமிடும் போது தேனை அதீதமாய் சுரந்து தரும் அவளுடைய செம்பவள இதழ்கள் இக்கணமே வேண்டும் என அவனுடைய உதடுகள் அடம்பிடிக்க வேகமாக எழுந்து சென்று ஃப்ரிட்ஜைத் திறந்தவன் அதற்குள் இருந்த மதுபானப் போத்தலை எடுத்து தன்னுடைய வாயில் கடகடவென சரிக்கத் தொடங்கினான்.
தொண்டையை எரித்துக் கொண்டு உள்ளே இறங்கிய சிவப்பு நிற மதுபானமோ அவனுடைய வேட்கையை அடக்குவதைத் தவிர்த்து இன்னும் அதிகரித்து விட்டது.
“அபிஇஇஇஇஇஇ..” என அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் நிம்மதியாகத் தூங்க முடியாது அந்த அறையில் நடை பயிலத் தொடங்கினான்.
நான் இவ்வளவு பலவீனமானவனா..?
நிஜமாவே செக்***க்கு அடிமை ஆயிட்டேனா..?”
“ஓ காட்…” என தன் தலையை பிடித்துக் கொண்டவன் நேரத்தை பார்த்தான்.
அதுவோ இரவு 10 எனக் காட்ட சலிப்போடு தன்னுடைய அலைபேசியை எடுத்தவன் முத்துவுக்கு அழைத்தான்.
அவன் எடுத்த இரண்டாவது ரிங்கிலேயே முத்து அழைப்பை எடுத்து “ஹலோ..” என்க,
“நான் கொடுத்த போட்டோஸ்ல இருக்க பொண்ணுங்கள பத்தி விசாரிச்சியா..?”
“ஆமா சார் எல்லாமே விசாரிச்சிட்டேன்.. கீர்த்தனாங்குற பொண்ணோட மெடிக்கல் ரிப்போர்ட் கூட பாத்துட்டேன் அவங்க உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க..” என முத்து கூற,
“அந்தப் பொண்ணோட போட்டோ, மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாத்தையும் எனக்கு இப்போவே வாட்ஸ் அப் பண்ணு.. நான் அந்த பொண்ண நேர்ல சந்திக்கணும்..” எனக் கூறிவிட்டு அழைப்பைத துண்டித்தவன்,
‘எல்லாமே சரியா இருந்துச்சுன்னா ரெண்டு நாளைக்குள்ள கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட வேண்டியதுதான்..” எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டு பால்கனி நோக்கி சென்றவனுக்கு தலைவலி கூடியது.
அவள் எங்கே சென்றிருப்பாள்..?
அவளுடைய வீட்டிற்கு சென்றிருப்பாள் போல..
நாளைக்கு காலேஜ் செல்வாளா..?
நிச்சயமாக என்னப் பற்றி அவளுடைய வீட்டில் புகார் சொல்லியிருக்கக்கூடும்..
ஆனால் இன்னும் ஏன் ஒருவரும் என்னை அழைத்து திட்டவோ பேசவோ இல்லை..
ஒருவேளை என்னோடு மோதியோ என்னைத் திட்டியோ எதையுமே சாதித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து அவனுடைய குடும்பம் மௌனமாகிவிட்டதோ..?
அவளுக்கு என்ன தேவை என்றாலும் என்னை கேட்கச் சொல்லி இருக்கிறேன்.. அவள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் தயாராக இருந்தும் அதை எதுவும் வேணாம் என தூக்கி எறிந்து விட்டு அவள் சென்றால் நான் என்னதான் செய்வது..?
இருந்தாலும் அவள் இவ்வளவு நல்லவளாக இருக்கக் கூடாது..’ என எண்ணியது அவனுடைய மனம்.
கொஞ்சமாவது இந்த உலகில் சுயநலமாக இருந்தால்தானே நிம்மதியாக வாழ முடியும்.
தன் கரத்தில் இருந்த போத்தலை வைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் வந்து படுத்ததும் தன்னருகே அவள் படுத்து இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணியது அவனுடைய வெட்கம் கெட்ட மனம்.
மீண்டும் தூங்க முடியாது எரிச்சலோடு அமர்ந்தவன் தலையணையை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு அதில் படுத்து தன் விழிகளை மூடிக்கொண்டான்.
‘படுக்கையில் படுத்தால் தானே அவள் அருகே படுத்திருப்பதைப் போலத் தோன்றும்..
அவளை இழுத்து இறுகணைக்க வேண்டும் போலத் தோன்றும்.. எதற்கு வம்பு இதிலேயே படுத்து விடுவோம்..’ என எண்ணியவன் அவளை நினைக்கக் கூடாது என எண்ணி வெற்றிகரமாக தோற்று அவளைப் பற்றி நினைத்தவாறு தூங்கியும் போனான்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அவனோடு ஒன்றாக வாழ்ந்தவளை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியுமா என்ன..?
பணத்தால் அனைத்தையும் ஆட்டி படைத்து விடலாம்தான் அதற்காக தன்னுடைய மனதைக் கூடவா ஆட்டிப் படைக்க முடியும்..?
அனைத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு தானே..!
அதை அவன் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.
💜🔥💜
லைக் கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ் 💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 133
No votes so far! Be the first to rate this post.
Post Views:2,231
3 thoughts on “38. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”
Dhanuja
2 epi potathuku thanks story interesting kondu porega super sis 💞
2 epi potathuku thanks story interesting kondu porega super sis 💞
Thank you so much thangam 🥰🫂💜😍
Wowwwww lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️