4) செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(3)

சங்கீதா பறபறப்பாக முன் வாசலில் நின்று தனது சேலையின் நுனியை திருகி கொண்டிருந்தாள்.

 

அவர்கள் போட்ட திட்டத்தின்படி முதலில் பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.  பிறகு இன்பரசன் அவரது காரில் வந்தார்.

 

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி பேசாமல் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

காரை நிறுத்தி விட்டு நடந்த போது முன்பாகவே நின்றிருந்த பாஸ்கரனின் முகத்தைப் பார்த்து இன்பரசன் சுழித்துக்கொண்ட நகர்ந்தார்.

 

என்ன இது என்பது போல ஸ்ரீஜாவும் அன்பரசி விழித்தார்கள்.

 

பாஸ்கரனும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அன்பினியின் அருகில் வந்து அவளை தூக்கி கொண்டு கிளம்ப எத்தனித்தார்.

 

அண்ணா …பாப்பவ கூட்டிட்டு எங்க கிளம்புறிங்க…

 

தவிப்பாக கேட்டாள் அன்பரசி.

 

உங்க வீட்டு காரர் பேசுன பேச்சுக்கு இனிமே என்னால இந்த வீட்டில இருக்க முடியாதும்மா.  வாயிருக்குன்னா என்ன வேணா பேசுவாறா‌.‌ நாங்க போறம்மா…

 

படபட பட்டாசாய் பொறிந்தவன் அவர்கள் அறையில் நுழைந்து துணிகளை சூட்கேசில் அடுக்க துவங்கினார்.

 

அண்ணே இருங்க …இப்ப என்ன பிரச்சினை ஏன் இப்படி ஒரு முடிவு…

 

உங்க வீட்டு காரர கேளுங்க அன்பரசிமா…

 

சரி கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க…நான் அவரு கிட்ட என்னனு பேசிட்டு வந்துறேன்.  அவசரப்படாதிங்க அண்ணா…

 

சொல்லிவிட்டு கணவரின் அறையை தேடி ஓடியவளை கண்டு சிரித்தான் பாஸ்கரன்.

 

சங்கீதாவும் சூப்பர் என்று சிக்னல் கொடுத்தாள்.

 

ஏங்க…ஏங்க…அண்ணா துணிமணியலாம் கட்டிக்கிட்டு வெளியே போறாராம்.  என்னங்க ஆச்சு….

 

போகட்டும் சும்மா இரு அரசி நீ…

 

என்ன ஆச்சுன்னு சொல்லுங்க முதல்ல…அவரு எதுக்கு வீட்ட விட்டு போறன்னு அடம் பிடிக்குறாரு….

 

அன்பரசியின் கேள்விக்கு மனதில் பதில் கொண்டிருந்தான் இன்பரசனும்.  எல்லாம் உனக்காக தான்னு எப்படி நான் சொல்லுவேன் மங்கூஸ் பொண்டாட்டி.

 

அது ரெஷார்ட்ல கொஞ்சம் பிராப்ளம்.  அதான் என்னனு மத்தவங்க முன்னாடி கொஞ்சம் சத்தம் போட்டன்.  அதுக்கு போய் அவன் இனிமே எனக்கு இந்த ரெஷார்ட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லைனு அவன் பாட்டுக்கு கேப் புக் பண்ணி வந்திட்டே இருக்கான்.

 

நானும் போன் ரிப்பீட் மூட்ல பண்ற நாட் ரெஸ்பான்ஸ்.  அப்புறம் நானே போய் பேச டிரை பண்ணாலும் பேச மாட்றன்னு வந்து உட்கார்ந்து இருக்க அரசிம்மா.

 

மனப்பாடம் செய்த அனைத்தையும் சிறு பிழை திருத்தம் ஏதுமின்றி ஒப்பித்து முடித்தவனுக்கு மூச்சு முட்டியது.

 

முகம் முழுவதும் கோபத்தோடு தனது இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி கொண்டு ஏங்க ரெஷார்ட் பிரச்சினைய மத்தவங்க முன்னாடி பேசுவீங்களா.  அண்ணாக்கு அது எவ்வளவு பெரிய அவமானமா போயிருக்கும்.  ஏதாவது பிரச்சினைனா இரண்டு பேரும் கலந்து பேசி அங்கேயே முடிச்சிட்டு வர வேண்டியது தானே வீட்டு வரைக்கும் கொண்டு வந்து அவர் வீட்ட விட்டு போற வரைக்கும் கொண்டு வந்து இருக்கீங்க.

 

நீங்க என்னதான் சொன்னாலும் உங்க மேல தாங்க தப்பு அண்ணா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவரை இங்கையே இருக்க வைக்கிறீங்க இது தான் நான் சொல்றது.

 

சொல்லி முடித்தவளை உறுத்து கவனித்தான் இன்பரசன்.

 

உங்க அண்ணன் என்ன பிரச்சனை பண்ணானு கூட  நீ கேட்கல.  ஆனா உங்க அண்ணனுக்கு தான் சப்போர்ட்.

 

எஸ்… அண்ணா என்ன தப்பு பண்ணி இருந்தாலும் இந்த வீட்ட விட்டு போற அளவுக்கு அவர ஒரு மனநிலைக்கு கொண்டு வந்த நீங்க தான் என்ன பொறுத்த வரைக்கும் ஒரு குற்றவாளி.

 

அப்படின்னா அதுல மொத குற்றவாளி நீ தான் அரசி.

 

அதிர்ந்து போய் நின்றாள் அன்பரசி.

 

நானா…

 

ஆமா.  ஸ்ரீஜாக்கு இந்த வீட்ல இருக்க ஒவ்வொரு நொடியும் கல்லு மேல நிக்கிற மாதிரி இருக்காம்.  அன்னைக்கு பாப்பா ரோட்ல இருந்து தூக்கினதுக்கு அப்புறம் ஶ்ரீஜா கிட்ட பேசவே இல்லையாமே.  அவளும்  வேணும்னு அந்த தப்ப பண்ணலனு நினைக்கிறேன் அன்பரசி.

 

உங்க அண்ணனுக்காக நியாயவாதியா யோசிக்கிற உன்னோட மனசு ஏன் ஸ்ரீஜாவுக்கு நியாயவதியா நிக்க மாட்டேங்கது.

ஸ்ரீஜாவும் அதை ஒன்னும் தெரிஞ்சு பண்ணல.

 

ஏங்க அன்பினி குழந்தைங்க.  குழந்தைய அவ நடுரோட்டில் விட்டுட்டா…

 

அப்டியா அப்போ ஸ்ரீஜா வேணும்னே தானே பண்ணி இருக்கான்னு நீ நினைக்கிற….

 

விடா காரணமாக அவன் எதிர்பார்க்கும் பதிலை நோக்கி அன்பரசியிடம் வினாவை எழுப்பினார் இன்பரசன்.

 

இல்லைங்க நான் அப்படி சொல்ல வரல…

 

நீ அப்படி சொல்ல வரலைன்னா ஸ்ரீஜா இத தெரிஞ்சே பண்ணலன்னு தான அர்த்தம்.

 

ஆம் என்பது போல் தலையசைத்தவளிடம்,

 

பாஸ்கரன் வீட்டை விட்டு போறேன்னு சொன்ன அப்பா நீ எப்படி துடித்தாயோ அதே மாதிரி தான் இப்ப ஸ்ரீஜாவும் நான் வீட்டை விட்டு போறேன்னு பாஸ்கரன் கிட்ட சொல்றாளாம்.  நானும் பாஸ்கரனும் சும்மாதான் ஒரு நாடகம் போட்டம்.  பட் இப்ப நீ போய் பேசலனா ஸ்ரீஜா கண்டிப்பா இதை பண்ணுவா.  இந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்குன்னு பாஸ்கரன் கிட்ட சொல்லி புலம்பி இருக்காள்.

 

நீ உன்னோட அண்ணனுக்காக வரைஞ்சுகிட்டு வந்தினா நானும் என்னோட தங்கச்சிக்காக வரிஞ்சுட்டு வருவேன் அன்பரசி. தயவு செஞ்சு நீ போய் அவ கிட்ட பேசு.

 

திட்டத்தின் முடிவாக பாஸ்கரன் இன்பரசனும் சேர்ந்து செய்தவை வெற்றி என்ற வெள்ளைக்கொடியை காட்டிவிட்டது.

 

அன்பரசி அப்போது தான் தனது தவறை புரிந்து கொண்டாள்.  பாவம் அவளும் பெற்றவள் தானே!… அப்போதுதான் அவளது மூளைக்கு இந்தச் செய்தியும் நினைவுக்கு வந்தது.

 

தான் எப்படி துடித்திருப்பேன் அதே போலத்தான் அவளும் துடித்திருப்பாள்.

 

இப்போது அவள் வீட்டை விட்டு வெளியேற கூட தயாராக இருப்பது யாரால் எல்லாம் என்னால் மட்டுமே.  அப்படியெனில் இன்பரசன் சொன்னதில் பிழை ஏதும் இல்லையே.

 

வேகமாக ஸ்ரீஜா அருகில் சென்று அவளது கையைப் பிடித்து என்னை மன்னித்துவிடு ஸ்ரீஜா நான் ஏதோ கோவத்துல உன்கிட்ட பேசாம விடாக்காரியா இருந்துட்டேன்.

 

அதுக்காக நீ வீட்டை விட்டு எல்லாம் போறேன்னு சொல்லி இருக்க.  அப்புறம் நான் உன்கிட்ட கோபிச்சுக்குவ பாத்துக்கோ.

 

இருவரும் கட்டி அணைத்து தங்களின் ஆசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டன.

 

ஒரு வாரத்திற்கு மேலாக இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தது ஸ்ரீஜாவே வந்து பேசினாலும் அன்பரசி நகர்ந்து சென்றது இவைகள் அனைத்திற்கும் அந்த கட்டி அணைத்தல் ஒரு முற்றை வைத்தது.

 

ஓடிச்சென்று சங்கீதாவும் இவர்களோடு இணைந்து கொண்டாள்.

 

சரி சரி எல்லாம் ஓவரா பாச போராட்டத்த காட்டாதிங்க…ரெடியாகுங்க நம்ம பீச்க்கு போயிட்டு வந்துடலாம்.

 

பீச்சா சூப்பர்… அன்பரசி துள்ளி குதித்தாள்.

 

திருமணத்திற்கு முன் இன்பரசனோடு சேர்ந்து பீச்சில் நடைபோட்டதோடு சரி.  இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே ஆசை இன்பரசனுடன் நடக்கலாம் என்று துள்ளி குதித்தாள்.

 

ஸ்ரீஜாவும் பாஸ்கரும் தங்களது அறையில் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

என்னங்க எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதற்காக இப்படி எல்லாமா நீங்க பிளான் பண்றீங்க…

 

என்னோட ஸ்ரீ குட்டி மூஞ்சி வாடி போயிருந்தா நான் எப்படி தாங்கறது.

 

நீ என்னை நம்பி வந்தவடி.  உன் முகத்துல ஒரு சின்ன சுணுக்கள் விழுந்தா கூட அது என்னோட நெஞ்சில் விழுகிற காயம் மாதிரி.  உன்னோட முகம் வாடி போனா என்னால தாங்க முடியாறது இல்ல.

 

அதான் உன் புருஷன்  அண்ணா கிட்டயும் சங்கீதா கிட்டயும் சொல்லி ஒரு குட்டி பிளான் போட்டு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைத்தோம் என்று அனைத்தையும் விவரமாக சொல்லிக் கொண்டே தயாரானார்கள்.

 

சங்கீதாவும் இவர்களோடு தயாராகி ஏழு பேரும் காரில் பயணித்தார்கள் பீச்சை நோக்கி இரு குட்டீசையும் சேர்த்து தான்.

 

திருசூர் ஸ்னேகதீரம்  பீச்சிற்கு அவர்கள் ஒரு மணி நேர பயணத்தில் வந்திருந்தார்கள்.

 

அங்கிருந்த தென்னை மரம் தோப்புக்களும் விற்கப்பட்டு கொண்டிருந்த ஆரஞ்சு பழச்சாறுகளும் இதோ இவர்கள் எல்லோரிடமும் வியாபாரமாகி கொண்டிருந்தது.

 

எனக்கு லெமன் ஜூஸ்… எனக்கு ஆரஞ்சு போதும் அன்பரசியும் ஸ்ரீஜாவும் ஆர்டர் செய்து விட்டார்கள்.

 

எங்களுக்கும் இன்னொரு செட் அதிலே கொடுத்துடுங்க.  சங்கீதாவிற்கும் ஆரஞ்சு ஜூஸே ஆர்டர்  செய்யப்பட்டது அவளது விருப்பப்படி.

 

அங்கே ஊஞ்சலில் ஆடி மகிழ்வதற்காக அன்பரசியும் ஸ்ரீஜாவும் ஓடி சென்று விட்டார்கள்.  ஜூசை வாங்கியபடி இன்பரசனும் பாஸ்கரனும் அவர்களை தொடர சங்கீதாவோ இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டாள்.

 

ப்ளேஸ் ரொம்ப சூப்பரா இருக்குங்க… நம்ம முன்ன வந்தத விட இப்ப நிறைய  பண்ணி வச்சிருக்காங்க.  இதோ இந்த வாட்டர் பால்ஸ் அண்ட் பேபி விளையாடுற டாம் அண்ட் ஜெரிஸ்லாம் நம்ம முன்ன வந்த அப்ப இல்லவே இல்லை.

 

பழைய நினைவின் அலைகளை அன்பரசி மீண்டும் புரட்டிக் கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு ஆமாம் சொல்லி விட்டு ஊஞ்சலாடி விட்டு அங்கிருந்த ஆற்றிலும் குளித்து விளையாடிவிட்டு உணவு பதார்த்தங்கள் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து கதை பேச தொடங்கினார்கள்.

 

ஹப்பா இன்னைக்கு டே ரொம்ப ஃபுல் ஃபில்லா முடிஞ்சிருச்சு… தேங்க்யூ ஹபி என்று இன்பரசனை கட்டிக் கொண்டாள் அன்பரசி.

 

சூப்பரா இருக்குல பாஸ்கர்.   ரொம்ப நாளுக்கு அப்புறம் சின்னப் புள்ளத்தனமா நம்ம இருக்கிறோம் இல்ல.  கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம சேர்வோமா என்ற பயம்.   கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம சேர்ந்து எப்படி இந்த உலகத்தை வழி நடத்த போறோன்ற பயம்.   இப்போ பாப்பா…

 

இதுக்கு இடையில கிடைச்ச இந்த உறவால மட்டும் தான் நமக்கு நிம்மதி கிடைச்சிருக்கு இல்ல. அன்பரசிக்காவும் இன்பரசண்ணாவும்  தங்கமான மனுசங்க.  எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு.

 

ஸ்ரீஜாவும் பாஸ்கரனும் ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

சங்கீதாவின் பாடுதான் அங்கே அலாதியானது.  பின்னர் இரு சிட்டுக்களையும் தாங்க வேண்டும் அல்லவா.

 

ஆதிரன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பான். அன்பினி அமர்ந்த இடத்தை விட்டு நகர மாட்டாள்.

 

எங்காவது ஓடி விட்டால் அவனை அன்பினி இருக்கும் இடத்தை நோக்கியே தூக்கி  வர வேண்டும்.

 

வந்ததும் வந்தாங்க ஒரு நாள் ட்ரிப் நம்மள இப்படி சாகடிக்கிறாங்களேப்பா…

 

நொந்தே போய்விட்டாள்…

ஐந்து மணி நேரமாக இருவரிடமும் போராடி சலிக்கிறாளே.

 

நாங்க ஆதிரனுக்கும் அன்பினிக்கும் ஒரு ஸ்கூல் பார்த்திருக்கோம் அரசி.  இப்ப இருந்தே குழந்தைங்கள சிபிஎஸ்ல சேர்த்து படிக்க வச்சா தான் அவங்க நம்மளோட ஏஜுக்கு ரொம்ப வெல்செட்டில்டா வருவாங்க. நாங்க பாத்து இருக்க ஸ்கூல்ல நல்ல எஜுகேஷன் முக்கியத்துவம் கொடுக்குறாங்க.  ஸ்போட்ஸ்க்கு அங்க முக்கியத்துவம் தராங்க. பிளஸ் பாயிண்ட்டா  அங்க கோயட் தான்.  ரெண்டு பேரையும் ஒரே கிளாஸ்ல ஒரே டைம்ல சேர்த்தோம்னா ரெண்டு பேரும் ஒரே மாதிரி வளர ஆரம்பிச்சுடுவாங்க.

 

நமக்கும் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும் என்று இன்பரசன் சொல்லி முடித்தார்.

 

நல்லதுங்க நான் கூட அன்பினிக்கு வேற பிளேஸ் பார்க்கலாம்னு சொல்லிடு விடுவிங்களோன்னு  பயந்துட்டே இருந்தேன்.  பாப்பாவுக்கு எதாவது பிரச்சனை வந்தா கூட ஆதிரன் கவனிச்சுப்பான்.  நம்மளும் கவலை இல்லாம ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சந்தோஷமா இருக்கலாம்.

 

அன்பரசிக்கு தனது மகனின் ருத்ர தாண்டவம் சுத்தமாக விளங்கவில்லை.  சிறு குழந்தை விளையாட்டுத் தனமாக உள்ளான் என்று மட்டும் யூகித்தவர் அன்பினியை அவனுக்கு சுத்தமாக பிடிக்காததையும் அவளுக்கென்று அவன் எதையும் செய்ய மாட்டான் என்பதையும் எப்படி அறிவாள்.

 

இதோ பள்ளி வகுப்புகள் அவளுக்கு பாடத்தைச் சொல்லிக் கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த தருணமே அது.

 

தாகி (டாடி) பாய்…தாதா(டாட்டா)… மூன்றே வருடத்தை முழுங்கி விடுத்திருந்த ஆதிரனுக்கு பள்ளி வகுப்பு காலங்கள் தொடங்கின.

 

அன்பினியின் அப்பாவித்தனம் ஆதிரனுக்கு அடங்கிப் போய்விடுமா…இல்லை ஆதியும் அன்பினியை


புரிந்து கொள்ள முயற்சியாக அமையுமா…

 

இதோ அவற்றினை நிரூபித்து காட்டி விட  பள்ளிக் காலங்கள் தொடங்கிவிட்டன.

 

செந்தனலா?…மழையா?

 

கௌசல்யா வேல்முருகன் 💝

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

1 thought on “4) செந்தனலாய் பொழிந்த பனிமழை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!