காரை அவன் செலுத்த ஆரம்பித்த பிறகு இருவர் இடத்திலும் மௌனம்.
அவன் தான் பேச ஆரம்பித்து இருந்தான்.
“உன்னை எல்லாம் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனதுக்கு நானே என்னை செருப்பால அடிச்சிக்கணும்”, என்று சொல்லிக்கொண்டே அவன் காரை ஒட்டிக்கொண்டு வரவும், அவனின் காலை பார்த்தாள்.
“என்ன டி கீழ பார்க்குற?”, என்று அவன் அவளை முறைக்க, “நீங்க ஷு தான் போட்டு இருக்கீங்க, நான் வேணா என் செருப்பை கழட்டி தரவா?”, என்றவள் அவனை பார்த்து பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.
“என்ன டி நக்கலா?”, என்று வண்டியை ஓட்டிக்கொண்டே அவன் பேச்சு கொடுக்க, “நான் எதுக்குங்க நக்கல் பண்ணனும்? நீங்க தானே செருப்பால உங்கள அடிச்சிக்கணும்னு சொன்னிங்க… அதான் சொன்னேன்.. உங்க பேச்சை நான் என்னைக்கு மீறி இருக்கேன்”, என்று அவளும் காரின் கண்ணாடியில் வெளியே பார்த்து கொண்டே பதில் கூறினாள்.
“டிஸ்ஸுனு கூட உனக்கு சொல்ல தெரியல, சென்னை வந்து பதிமூணு வருஷம் ஆகுதுல இது கூடவா தெரியாது… பேப்பர்னு சொல்ற… பட்டிக்காடு! கொஞ்சம் கூட இங்கிலீஷ் தெரியல”, என்று அவன் கத்தவும், “பேப்பரும் இங்கிலீஷ் தாங்க. தமிழ்ல காகிதம்ன்னு சொல்லுவாங்க இல்லனா தாள்னு சொல்லுவாங்க”, என்று அவள் பதில் அளித்தாள்.
“எனக்கே கிளாஸ் எடுக்குறியா?”, என்று அவன் அவளை முறைக்கவும், அப்பவும் அவள் அவன் பக்கம் திரும்பவில்லை.
“தமிழ் லிட்ரேச்சர் படிச்ச தற்கூறி தான நீ”, என்று அவன் சொல்லவும், பட்டென திரும்பி அவனை பார்த்தாள்.
செங்கனியின் கண்கள் செங்கனலாய் சிவந்தது.
“நான் பிஎ, பிஎட் தமிழ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன், அதுவும் யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்… அப்பறம் தமிழ் படிச்சிருந்தா தற்குறியா? உங்க பேரு கூட தான் தமிழினியன் அப்போ நீங்களும் தற்கூறி தான?”, என்று அவள் கேட்டு முடிக்கும் முதலே, காரை நிறுத்தியவன், அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அடித்து இருந்தான்.
அவளின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் வெளியே வர வில்லை.
“பதிமூணு வருஷத்துல முதல் முறையா கைய நீட்டி அடிச்சிருக்கீங்க… ரொம்ப நல்லது. உங்கள தற்கூறின்னு சொன்னதுக்கு கையால அடிச்சிட்டீங்க… நீங்க பார்ட்டில ஒருத்தி கூட கூத்தடிச்சீங்களே அதுக்கு நான் உங்கள எத கொண்டு அடிக்கர்துன்னு கொஞ்சம் சொல்லுங்க”, என்று அவள் அடிக்குரலில் சீறினாள்.
“என்ன டி லூசு மாறி பேசுற நான் எங்க கூத்தடிச்சேன்? அது வெறும் ஒரு டான்ஸ் அதுல என்ன இருக்கு? இதெல்லாம் சோசியலைஸ் ஆக ஒரு சான்ஸ்”, என்று அவன் சொல்ல, “ஓஹ் இதுக்கு பேரு தான் சமூகமயமாகுதல்லா? ஒருத்தர ஒருத்தர் உரசிகிட்டு ஆடுறது.. இதே மாறி நானும் இன்னொருத்தனோட கிட்ட நின்னு அவன் என் இடுப்பை புடுச்சி இருந்தா இப்படி தான் வேடிக்கை பார்த்துட்டு விளக்கு புடிச்சிருப்பீங்களா?”, என்று அவள் கத்த, அவன் அடுத்த அறையை அடிக்க கைகளை ஓங்கினான்.
ஒங்க மட்டும் தான் முடிந்தது. அவன் அரைவதற்கு முன் அவளின் கைகள் அவனின் கன்னத்தில் பதிந்து இருந்தன.
அவனே அதிர்ந்து விட்டான்.
“சும்மா சும்மா அடிக்கிற வேலை எல்லாம் வச்சிக்காதிங்க… முதல் தடவ நான் சுதாகரிக்கல… நீங்க என்ன கொடுத்தாலும் அதையே நானும் கொடுத்திருவேன்… அது அன்பா இருந்தாலும் சரி… அடியா இருந்தாலும் சரி”, என்று அவள் சொல்லவும், இன்னும் அவனால் அவள் அடித்ததை கிரகிக்க முடியவில்லை.
அப்போது அவளின் கைபேசி சிணுங்கவும், அதை எடுத்து பேசியவள், “வண்டி எடுங்க பசங்க தேடுறாங்க”, என்று அவன் சொல்லவும் தான் சுய நினைவு பெற்றான்.
“என்னையே அடிக்கிற அளவுக்கு வந்துட்ட நீ?”, என்று அவன் அவளின் அருகில் போக, அவளின் ஒற்றை கையால் தள்ளிவிட்டவள், “நீங்க அடிக்கும் போது நான் அமைதியா தான இருந்தேன்”, என்று அவள் கேட்க, அவனுக்கு அவமானமாக இருந்தது.
அதற்கு மேல் அவனுக்கு பேசவும் தோன்ற வில்லை. எங்கே இன்னொரு அடி விழும் என்கிற எண்ணம் வேறு!
அவனுக்கு அடிவாங்குவது எல்லாம் கூட பெரிதாக தோன்ற வில்லை. இன்னும் அவர்கள் பார்ட்டி நடக்கும் இடத்தை விட்டு கால் மணி நேரம் கூட வரவில்லை, ஆதலால் அவர்கள் அலுவலகத்தில் உள்ள யாரேனும் அவன் மனைவிடம் அடிவாங்குவதை பார்த்து விட்டால் என்ன ஆகும் என்கிற அச்சம் வேறு!
அவன் சம நிலை அடைந்து வண்டியை எடுத்து அவன் கிளப்ப, இருவரும் அதற்கு பின் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூட இல்லை.
நேராக வீட்டை அடைய, பொன்னம்மாள் தான் காத்துகொண்டு இருந்தார்,
பிள்ளைகள் இருவரும் தூங்கி விட்டதாக அவர் கூற, இருவரும் போகும் நேரம், “கனி நில்லு மா”, என்று அருகில் வந்தவர், இது என்ன உன் கன்னம் செவந்து இருக்கு, என்று அவர் கன்னத்தில் கையை வைக்க, கன்னம் சற்று வீங்கி இருந்தது.
அடித்தது இருவரும் தான் ஆனால் அவளின் மென் கரங்களுக்கும், அவனின் வன் கரங்களுக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா!
அவனின் வலிய கரங்களின் அச்சு அப்படியே பதிந்து இருந்தது.
அவனே அப்போது தான் கவனித்தான். அவனுக்கும் அப்போது தான் அவனின் செயலின் வீரியம் உரைத்தது.
“இனியன் அடிச்சானா?”, என்று அவர் நேரடியாகவே கேட்டு விட்டார். அவரின் அனுபவத்திற்கு இதை எல்லாம் கண்டு பிடிக்கவும் சொல்லி தர வேண்டுமா என்ன?
“இல்..”, என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “இல்லனு பொய் சொல்லாத…இல்லனா எப்படி இந்த தடம் உன் கன்னத்துல இருக்கும்?”, என்று அவர் பார்த்து கொண்டு கேட்டது என்னவோ தமிழினியனின் முகத்தை தான்.
அவனோ தலை கவிழ்ந்து கொண்டான். அவனால் தன் தாயின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை.
“நீ என் பா தல கவிழணும்? நான் தான் உன்ன மாறி ஒரு புள்ளைய பெத்துக்கு தொங்கணும்”, என்று அவர் சொல்லவும், “அத்தை” “அம்மா”, என்று இருவரும் ஒருசேர அழைக்க, “இல்லமா இவன் கொஞ்சம் கொஞ்சமா அரக்கனா மாறிக்கிட்டு வரான், நீ வேணும்னா இவன விவாகரத்து பண்ணிட்டு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ”, என்று அவர் சொல்லவும், அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவனுக்கோ கோவத்தின் உச்சம். “அம்மா லூசு மாறி பேசுறீங்க… இரண்டு பசங்க இருகாங்க எங்களுக்கு நினைவு இருக்கா? வயசுக்கு வர பொண்ணு இருக்கு இப்போ அவளுக்கு கல்யாணமா?”, என்று அவன் பற்களை கடித்து கொண்டு கேட்டான்.
“ஏன் டா அவளுக்கு வெறும் முப்பத்தி ஏழு வயசு தான் ஆகுது… நம்ப பக்கத்துக்கு வீடு பார்வதிக்கு நாற்பது வயசுல தான் குழந்தையே பொறந்தது”, என்று அவர் சொல்லவும், “நல்ல யோசனை அத்தை… நான் யோசிச்சு சொல்றேன்”, என்று அவள் சொல்லவும், அவனின் கண்கள் அவளின் புறம் திரும்பின.
அவள் அதையெல்லாம் சட்டை செய்ய வில்லை.
“அங்க என்ன டா என் மருமகளை முறைக்கிற? என்கிட்ட பேசு… அவளுக்கு என்ன குறைச்சல் பாரு எவளோ அழகா மகாலக்ஷ்மி மாறி இருக்கா”, என்று அவர் நெட்டி முடிக்க, “உங்க மகனுக்கு மகாலக்ஷ்மி வேண்டாமாம் அத்தை மாடர்ன் அழகி தான் வேணுமாம்”, என்று அவள் கூற, “யாரு அந்த உள்ளூர் கிழவி?”, என்று அவர் கேட்க, அவனுக்கு தான் எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.
“எல்லார் வீட்லயும் மாமியார் மருமகளை கொடுமை படுத்துவாங்க… இந்த வீட்ல மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்ன கொடுமை படுத்துறீங்க… நீ ரூம்க்கு வாடி”, என்று அவன் அறைக்குள் சென்று விட்டான்.
அவன் சென்றவுடன், அவளின் கையை பற்றி விட்டார் பொன்னம்மாள்.
அவளுக்கோ, “அத்தை”, என்றவள் வார்த்தை காணாமல் போனது.
“அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மா”, என்றவரை பார்த்து, “இதெல்லாம் பெரிய வார்த்தை அத்தை.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? என் அம்மாக்கு அப்பறோம் என்னை ரொம்ப பாசமா பார்த்துகுட்டது நீங்க தான்”, என்று அவள் சொல்லவும், அவரோ அவளின் தலையை வருடி விட்டார்.
“உன்னை மாறி ஒரு பொண்டாட்டி அமைய என் பையன் தான் கொடுத்து வச்சிருக்கணும் “, என்று சொல்லிக்கொண்டே மீண்டும் நெட்டி முடித்தார்.
“நான் போறேன் அத்தை… நீங்களும் சீக்கிரம் போய் படுங்க”, என்று சொல்லிவிட்டு அவள் செல்லும் போதே, “நாளைக்கு சனிக்கிழமை தானே கொஞ்சம் நேரம் கழிச்சே எந்திரி மா… இப்பவே பதினோரு மணி ஆகுது”, என்று சொன்னவரிடம் அவளும் சிறு தலையசைப்புடன் விடை பெற்றுவிட்டாள்.
இங்கு இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலே, அவர்களின் அறைகளுக்குள் நுழைந்தவன், அவனின் கோட்டை கழட்டி படுக்கையில் போட்டு அவனின் டையையும் சிறிது லூஸ் செய்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.
இப்பொது அவள் அடித்தது கூட வலிக்கவில்லை. அவனை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவனை மணந்து கொள்வேன் என்று அவள் சொன்னது தான் அவனின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
எப்படி எப்படி அவள் அப்படி சொல்வாள்? அவளுக்கு நான் அவ்வளவு எளிதில் தூக்கி போடும் ஒரு பொருளாகி விட்டேனா? அவளால் நான் இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா? என்கிற எண்ணங்கள் தான் அவனை படுத்தி எடுத்து கொண்டிருந்தன.
அவனோ காரில் ஏறியது முதல் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அசை போடா துவங்கினான்.
அவளை அடித்து இருக்க வேண்டாமோ என்று இப்போது தோன்றியது.
ஏதோ ஒரு வேகத்தில் அடித்து விட்டான் தான். ஆனால் இப்போது அவன் மனதே அவனை காரி துப்பியது.
“அவள் உன்னை விவாகரத்து செய்து விட்டு ஒருவனை மணந்து கொள்வாள் என்று கூட உன்னால் ஏற்று கொள்ள முடியவில்லையே! அவளின் கண்முன் நீ இன்னொருத்தியுடன் ஒட்டி உரசி ஆடி இருக்கிறாய்… அதுவும் அத்தனை பேரின் முன்னும்… அவளுக்கு எவ்வளவு வலித்து இருக்கும்?”, என்று அவனின் மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவனாலேயே பதில் சொல்ல முடியவில்லை.
தவறு செய்து விட்டோமோ என்று இப்போது தோன்றியது. அவனும் மறுத்தான் தான் ஆனால் மேக்னா தான் விடவில்லை. இருந்தாலும் தவிர்த்து இருக்கலாம் தானே என்று இப்போது மூளைக்கு உரைத்தது.
“அவனை அவளுக்கு பிடிக்காமல் இல்லையே! ஏதோ கோவத்தில் அறைந்து விட்டான் அவளும் மாறி அறைந்தால் தானே அதற்காக அவனை விட்டு செல்லும் அளவுக்கு அவளுக்கு அவனின் மீது வெறுப்பு வந்து விட்டதா?” என்று அவனுக்குள் அத்தனை கேள்விகள்.
மனைவி இல்லையேல் கணவன்மார்களின் நிலை திண்டாட்டம் தான்.
அவன் இவ்வாறு எல்லாம் யோசித்து கொண்டு இருக்க அவளும் அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்!
Super kani ilove u
Sema adi kani