4. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(16)

வரம் – 04

திவாகருக்கோ நெஞ்சம் நடுங்கியது
இதுவரைக்கும் ஷர்வா கூறிய எந்த செயலையும் அவன் செய்து முடிக்காது விட்டதே இல்லை.

அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்று விடுவான் இவன்.

ஆனால் இன்றோ ஷர்வா கூறிய செயலை ஒழுங்காக செய்து முடிக்காதது போலவே அவனுக்கு உள்ளம் உறுத்தத் தொடங்கியது.

என்னதான் பணத்தைக் கொடுத்தால் அவள் வரப் போவதில்லை எனக்கூறி இருந்தாலும் இவன் முழுதாக அதை நம்பி வெறுமனே சும்மா இருந்திருக்காது வேறு ஏதாவது ஏற்பாடும் செய்து வைத்திருக்க வேண்டும் என தாமதமாக எண்ணி தன்னையே நொந்து கொண்டவன் ஷர்வாவின் ஆபீஸ் அறைக்குள் நுழையவே அச்சம் கொண்டான்.

விருது வழங்கும் விழாவில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் நிச்சயமாக ஷர்வாவை மிருகமாக மாற்றி விட்டிருக்கும் என்பது அவனுக்குத் திண்ணம்.

இதற்கு மேலும் உள்ளே செல்லாமல் நேரம் தாமதித்தால் அதற்கும் தண்டனை கிடைக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் கதவை மெல்லத் தட்டி விட்டு அவனுடைய அனுமதிக்காக காத்திருக்க,

“கம் இன்…” என்ற இறுகிய குரல் அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது.
ஏதோ வெடிக்கப் போகும் எரிமலைக்குள் நுழைவதைப் போல தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தவன் கரத்தில் ஒரு பந்தை வைத்து உருட்டிக் கொண்டிருந்த ஷர்வாவைக் கண்டு திகைத்துத்தான் போனான்.

தான் உள்ளே நுழைந்ததும் சினத்தில் தன்னிடம் பொரிந்து தள்ளுவான் இல்லையெனில் ஆத்திரத்தில் பொருட்களை உடைப்பான் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு சென்றவன் அவன் அமைதியாக பந்தோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துதான் போனான்.

இத்தனை நாட்களாக மிகுந்த கோபம் கொண்ட ஷர்வாவைத்தானே அவன் பார்த்து வருகிறான்.

இந்த நிதானம் அவனுக்கு புதிதாக இருக்க புயலுக்கு முன் வரும் அமைதியோ என்ற எண்ணம் அவனுக்குள் எழுத்தான் செய்தது.
அக்கணம் அவனுடைய மனசாட்சியோ ‘அட லூசுப் பயலே புயலுக்குப் பின்வரும் அமைதின்னு தானே சொல்லுவாங்க..?’ என அவனுக்கு எடுத்துக் கூற மனசாட்சியைப் பார்த்து,
‘நீ வாயை மூடு… புயலுக்கு முன்பும் அமைதியாகத்தான் இருக்கும்…’ எனக் கூறி அடக்கியவன்,

தான் வந்த பின்பு கூட தன்னைப் பார்க்காது பந்தோடு விளையாடிக் கொண்டிருந்த ஷர்வாவை “பாஸ்…” என மெல்ல அழைத்தான்.

“வாட்..?”

“எ… என் மேல கோவமா இருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன் பாஸ்…” என்றான் அவன்.

“ரப்பிஷ்… கோபப்படுறதை விட இப்போ ரசிச்சு ரசிச்சு விளையாடுற மூட்லதான் நான் இருக்கேன்… தானாவே ஒருத்தி வந்து என்னோட வழியில சிக்கிகிட்டா… சோ இனியாவது என்னோட வாழ்க்கை என்டர்டைன்மென்டா போகும்னு நினைக்கிறேன்…” என்றவனை அதிர்ந்து பார்த்தான் திவாகர்.

“ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை சார்… அதுவும் நம்மகிட்ட 50 லட்சத்தை வாங்கிட்டு எப்படித்தான் பங்க்ஷனுக்கு வந்தாங்களோ..? இப்ப கூட ரொம்ப ஷாக்கா இருக்கு..”

“அவ பக்கா பிஸ்னஸ் மைண்ட்.. அவ கிட்ட நேர்மையை எதிர்பார்த்தது நம்மளோட தப்புதான்… இந்த விஷயத்தை உன்கிட்ட கொடுக்காம நானே ஹேண்டில் பண்ணி இருக்கணும்..‌ இட்ஸ் ஓகே… இவ்வளவு நாளும் இவ எங்க இருந்தா..? திடீர்னு எங்கே இருந்து வந்து குதிச்சான்னே தெரியல… பட் இதுவும் நல்லாதான் இருக்கு… அவளைப் பத்தி ஃபுல் டீடைல்ஸ்ஸும் எனக்கு வந்தாகணும்… அதுவும் இன்னைக்குள்ள வந்தாகணும்..” என்றவன் தன் கரத்தில் இருந்த பந்தை தன் ஒற்றை விரலில் நிற்க வைத்து சுழற்றியவாறே திவாகரைப் பார்த்தவன்,

“நம்ம ஸ்பைல ஒருத்தன அவள பாலோ பண்ணச் சொல்லு… அவளோட எல்லா ஆக்டிவிட்டீஸ்ஸும் எனக்குத் தெரிஞ்சாகணும்… இனி அவ மூச்சு விட்டாக் கூட எனக்குத் தெரியணும்…” என்றான்.

‘இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இவர் என்ன பண்ணப் போறாருன்னு தெரியலையே…?’ என மனதிற்குள் எண்ணியவாறு குழப்பமாக ஷர்வாவைப் பார்த்தான் திவாகர்.

அடுத்த கணம் ஷர்வாவின் கரத்தில் இருந்த பந்தோ சுவற்றை நோக்கி வேகமாக சென்று சுவற்றோடு பலமாக மோதி மீண்டும் அவனுடைய கரத்திற்கு வந்தது.

“அவள கொஞ்சம் கொஞ்சமா இந்த பந்த வச்சு பந்தாடுற மாதிரியே அவளையும் பந்தாடணும்… நான் கொடுக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் அவர் திணறணும்… என்கிட்ட எதுக்கு மோதினோம்னு அவ கதறணும்… கதற வைப்பான் இந்த ஷர்வாதிகரன்…” என்றவன் பந்தை தரையில் அடித்த வண்ணம் அந்த அறையை சுற்றிவர இப்போது மோகஸ்திராவை நினைத்து பாவமாக இருந்தது திவாகருக்கு.

சாந்த குணம் கொண்ட அவனுக்கோ சட்டென மனம் உருகிப் போய்விடும்.
அப்படிப்பட்டவனுக்கு தன்னுடைய குணத்திற்கு எதிர்மறையான ஷர்வாவின் செயல்களில் அடிக்கடி இதயம் நின்று துடிப்பது வழமையாகிப் போனது.

வழக்கம்போல திகைத்து நின்றவனை எரிச்சலோடு பார்த்த ஷர்வாவோ தன் கரத்தில் இருந்த பந்தை தூக்கி வேகமாக அவனுடைய தலையை நோக்கி எறிய சட்டென குனிந்து அந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவன் “பாஆஆஆஆஸ்….” என அலறினான்.
விட்டால் அழுது விடுவேன் என்பதைப் போல மாறிப்போனது அவனுடைய தோற்றம்.

“நான் உன்கிட்ட சொன்ன வேலைய பாக்காம வாயை பிளந்துகிட்டு என்ன யோசிச்சிகிட்டு இருக்க..? மோரான் கெட் அவுட்….” என அவன் சீற்றத்தில் கத்த அடுத்த நொடியே அந்த அறையை விட்டு வெளியே வேகமாக வந்தவனுக்கு இன்னும் இதயத்துடிப்பு சீராகிய பாடு இல்லை.

‘இந்த மனுஷன் கிட்ட வேலை செய்யும் போதே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயிருவேன் போல இருக்கு… ஆண்டவா நீதான் என்னைக் காப்பாத்தணும்…” என அவசர வேண்டுதலை இறைவனிடம் வைத்து விட்டு மோகஸ்திராவை பற்றி ஆராயத் தொடங்கினான் அவன்.

*******
அந்த விழாவில் இருந்து நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தவளுக்கு தலை வெகுவாக வலித்தது.

அவளை இந்த அளவுக்கு இதுவரை யாருமே உதாசீனம் செய்தது இல்லை.
ஷர்வாதிகாரனின் செயல்கள் அவளை அதிகம் பாதித்திருக்க அந்த எரிச்சலோடு காரை தன்னுடைய அலுவலகத்தின் முன்பு நிறுத்தினாள் மோகஸ்திரா.

காரைத் திறந்ததும் அவளை நோக்கி வந்து சிலர் மலர் கொத்தை நீட்ட ஆத்திரத்தில் அவற்றை வாங்கி தூக்கி எரிந்தவள் “எல்லாரும் இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…? எனக்கு வந்து பொக்கே கொடுங்கன்னு நான் கேட்டேனா…? இதெல்லாம் தேவையில்லாத மண்ணாங்கட்டி வேலை…

உங்களுக்கு இங்கே என்ன வேலை இருக்கோ அத மட்டும் பண்ணுங்க… எவளும் எனக்கு பொக்கே கொடுக்க தேவையில்லை… முதல்ல போய் வேலைய பாருங்க… இல்லன்னா அத்தனை பேரையும் வேலையை விட்டு துரத்திடுவேன்… கெட் லாஸ்ட்… இடியட்ஸ்…” என்ற அதட்டலோடு அவள் உள்ளே நடந்து விட அவளை வரவேற்பதற்காக வந்து நின்ற அவளுடைய அலுவலக ஊழியர்களின் முகமோ சுருங்கிப் போனது.

“ஹி ஹி அவங்களப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே… லீவ் இட் காய்ஸ்…” என அவர்களை சமாதானப்படுத்தினான் குரு.
“நாங்க அங்களுக்கு விஷ் பண்ண தானே வந்தோம்… அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்…? இதெல்லாம் ரொம்ப டூ மச்… இவங்க கிட்ட வேலை செஞ்சா மரியாத கூட கொடுக்க மாட்டாங்களா..?” என ஆற்றாமை தாங்காது அங்கே பணிபுரியும் பெண்ணொருத்தி கேட்க,

“அவங்க எங்க விருது வாங்கினாங்க…? விருதுதான் உடைஞ்சு சுக்கு நூறா நொறுங்கிப் போச்சே… அவங்க அந்த டென்ஷன்ல வந்துருக்காங்க… அவங்க கிட்ட போய் பூங்கொத்த கொடுத்தா வாங்குவாங்களா…? அடப் போங்கம்மா… போய் வேலைய பாருங்க…” என சலிப்போடு கூறியவாறு வேகமாக மோஹஸ்திரா சென்ற திசையை நோக்கி ஓடினான் குரு.

அவளுடைய அறைக் கதவைத் தட்டி விட்டு குரு உள்ளே நுழையவும் அவளுடைய அலைபேசி தரையில் விழுந்து உடைந்து நொறுங்கவும் சரியாக இருந்தது.

என்ன நடக்கின்றது இங்கே என அவன் அதிர்ந்து பார்க்க, அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு கோபத்தில் உடைத்துக் கொண்டிருந்தாள் மோகஸ்திரா.

‘போச்சு போன முறை ஏதோ கோபப்பட்டு அவங்க உடைச்சதுக்கெல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 10 லட்சம் செலவாச்சு… இன்னைக்கும் பெரிய செலவு வச்சுருவாங்க போல இருக்கு..’ என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய மடிக்கணினியும் அவன் முன்பு வந்து விழ பெரு மூச்சோடு விலகி நின்றான் அவன்.

உடைக்காதீர்கள் என்றால் அவனுடைய தலைதான் உடையும். எதற்கு வம்பு அவர்களுடைய பணம் அவர்கள் வீணாக்குகிறார்கள். தனக்கு என்ன என்பதைப் போல புத்தர் நிலைக்கு சென்று அமைதியாக நின்றான் குரு.
“டாம்…. என்னோட வாழ்க்கைல நான் இப்படி ஒரு அவமானத்தை சந்திச்சதே இல்ல குரு… அவன சும்மாவே விடக்கூடாது… எவ்வளவு தைரியம் இருந்தா நான் நடக்கும் போது என்னோட கால இடறி விடுவான்… ராஸ்கல்… அவனுக்கு இந்த மோஹஸ்திரா யாருன்னு காட்டியே ஆகணும்.. என்ன விழ வச்ச அவனோட கால துண்டாக்கினாதான் என்னோட மனசு ஆறும்…” கோபத்தில் படபடத்தாள் அவள்.

“மேடம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… இப்போ எதுவும் பண்ணாதீங்க… இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு முக்கியமான கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கு.. கிட்டத்தட்ட எட்டு நாடுகள்ல இருந்து நம்ம கூட பிஸ்னஸ் வச்சுக்கறதுக்காக வர்றாங்க… இந்த நேரத்துல எந்த பிரச்சனையும் வேணாம்… நாம அமைதியா போறதுதான் நல்லது…
நாம அவங்ககிட்ட ஐம்பது லட்சம் பணம் வாங்கி இருக்கோம்… இதை அவங்க பிரஸ்கிட்ட சொல்லிட்டாங்கன்னா நம்மளோட பேருதான் கெட்டுப் போகும்.. கொஞ்சம் பொறுமையா இருங்க மேடம் ப்ளீஸ்… நானே எல்லாத்தையும் பாத்துக்குறேன்…” எனத் தயங்கியவாறே நிலமையை எடுத்து விளக்கினான் குரு.
மீட்டிங் என்றதும்தான் நிதானத்திற்கு வந்தாள் அவள்.

பின்னே அவள் கடந்த இரண்டு வருடங்களாக இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருக்கிறாள்.

கிட்டத்தட்ட எட்டு நாடுகள் ஒன்றிணையும் மிகப்பெரிய பிஸ்னஸ் திட்டம் அல்லவா இது.
அவளுடைய கம்பெனியின் கிளைகள் எட்டு நாடுகளில் அறிமுகமாக இருப்பதோடு கோடிக்கணக்கான லாபத்தை கொட்டிக் கொடுக்கும் இந்த மீட்டிங்கை கோபத்திற்காக விட்டுக் கொடுக்க அவள் தயாராக இல்லை.

“எஸ் யு ஆர் ரைட்.. நமக்கு இப்போ இந்த மீட்டிங்தான் முக்கியம்… ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த சிஇஓ வராங்கன்னு எனக்கு இன்னைக்குள்ள இன்பார்ம் பண்ணு… எல்லாரோட டீடைல்சும் எனக்கு வந்தாகணும்.. எந்தப் பிரச்சினையும் இல்லாம இது நடந்து முடிஞ்சுதுன்னா இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்தியால என்ன மிஞ்ச யாருமே இருக்க மாட்டாங்க… நான் மட்டும்தான் நம்பர் ஒன்னா இருப்பேன்..” என கர்வத்தோடு கூறியவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு எரிச்சலோடு குருவைப் பார்த்து முறைத்தாள்.

“இடியட்.. யார் இது..? சும்மா சும்மா என்னோட ரூம் கதவைத் தட்டக் கூடாதுன்னு தெரியாதா..? யாரா இருந்தாலும் இப்பவே வேலையை விட்டு அனுப்பிடு..” என அவள் கோபத்தில் கத்த இந்த நேரத்தில் யாருடா அது என சலித்தவாறு கதவைத் திறந்தவன் வெளியே நின்ற ஆண் மகனைக் கண்டதும் அதிர்ந்து,

“உள்ளே வாங்க சார்…” என பவ்யமாக அழைத்தான்.

அறை வாசலில் வந்து நின்ற ஆண்மகனைக் கண்டதும் இவ்வளவு நேரமும் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்த மோஹஸ்திராவின் முகமோ அமைதியை தத்தெடுத்து சாந்தமாக மாறி புன்னகையைக் கூட சிந்தியது.

அவளுடைய புன் சிரிப்பை ரசித்தவாறே,
“ஹாய் பேபி…” என உள்ளே நுழைந்தான் மோகஸ்திராவின் வருங்காலக் கணவன் அரவிந்தன்.

 

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!