40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.5
(117)

சொர்க்கம் – 40

ஏதோ ஒரு கோபத்தில் அடக்க முடியாத ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்து விட்டான் விநாயக்.

அடித்ததன் பின்னர்தான் அவனுக்குத் தான் என்ன செய்து விட்டோம் என்பதே புரிந்ததது.

இத்தனை நாள் அவள் மீது கோபம் இருந்தபோது கூட ஒரு போதும் அவன் அவளைக் கை நீட்டி அடித்ததே இல்லை அல்லவா.?

அவன் அடித்த வேகத்தில் தடுமாறி கீழே விழப் போனவள் அருகே இருந்த சோபாவை பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவளாக தலையை தாழ்த்தியவாறு நிற்க அவனுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.

“தூ.. தூரி..?” மெல்ல அழைத்தான் அவன்.

ஒற்றைக் கன்னத்தில் தன் கரத்தைப் பதித்தவாறு விழிகளில் கண்ணீர் வழிய இதழ்கள் துடிக்க சில கணங்கள் அப்படியே நின்றவள் எதுவும் பேசாது அங்கிருந்த குளியல் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக்கொள்ள ஆழமாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டான் அவன்.

‘ஷிட்…’

கையை நீட்டும் உரிமையை அவனுக்குக் யார் கொடுத்தது..?

அப்படி என்ன கோபம்..?

அவள் யாருடன் எப்படிப் பேசினாலும் அவனுக்கு என்ன..?

எதற்காக அவளை அடிக்க வேண்டும்.. என மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே கேள்வி கேட்டுச் சோர்ந்து போனான் அவன்.

அவள் கௌதமனை இறுக அணைத்து அழுத விதத்தை இப்போதும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவள் எப்படி அவனை நெருங்கலாம்..?

எப்படி அவனை அணைக்கலாம்..?

அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் அவனுக்கு உடலும் உள்ளமும் பற்றி எரிவது போல இருந்தது.

அன்று அவள் தன்னை அடித்த போது கூட திருப்பி அடிக்காமல் இருந்தவனுக்கு இன்று அவள் இன்னொருத்தனை அணைத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

குளியலறைக்குள் சென்றவள் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகும் வெளியே வராது போக குளியலறைக் கதவின் அருகே சென்றவன் கதவைத் தட்டி அவளை அழைத்தான்.

“தூரி வெளியே வா…”

அவளிடம் இருந்து அவனுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

“ப்ச்.. வெளியே வாடி..” என்றான் அவன்.

அப்போதும் எந்த பதிலும் அவளிடம் இருந்து கிடைக்காது போக,

“இப்போ நீ வரலைன்னா நான் இந்தக் கதவை உடைச்சுட்டு உள்ளே வருவேன்..” என்றான் அவன்.

அவன் கூறிய சில நொடிகளில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்தும் பாராது தாண்டிச் செல்ல முயல,

அவளுடைய கரத்தைப் பிடித்து அவளை நிறுத்தியவன் அவளுடைய முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.

அவளுடைய வெண்ணிற முகத்தில் ஒரு பக்கக் கன்னம் செந்தாமரை போல சிவந்து வீங்கிப் போய் இருந்தது.

அவன் அடித்த வேதத்தில் அவனுடைய ஐந்து விரல்களின் அடையாளமும் அவளுடைய கன்னத்தில் அச்சாய் பதிந்திருக்க தன்னையே நொந்து கொண்டான் அவன்.

“ஹேய்..”

“……”

“சாரி…..” முதல்முறையாக அவனுடைய வாயிலிருந்து சாரி என்ற வார்த்தை வெளி வந்தது.

அவளோ அப்போதும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட உதிர்க்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் அவளுடைய அமைதியைத் தாங்க முடியாது அவளை இழுத்துத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் விநாயக்.

“சாரி பேபி..‌ நான் அடிச்சிருக்கக் கூடாது.”

அவளோ உடைந்து போனாள்.

அவனுடைய கைகளுக்குள் இருக்க முடியாது கோபமாக அவனைத் தள்ளி விட முயன்றாள்.

அவளால் அவனுடைய இரும்புப் பிடியை விலக்க முடியாது போக இன்னும் அழுகைதான் கூடிப் போனது.

“நான் உங்களுக்கு தெரியாம பண்ண தப்புக்கு என்ன இப்படி அடிமை மாதிரி நடத்துறீங்களே.. எனக்கு எந்த உரிமையும் இல்லையா..? நான் யார் கூடவும் பேசக் கூடாதா..? என்னோட பேரக் கெடுத்தீங்க.. என்னோட மானத்தை அழிச்சீங்க.. இப்போ அடிக்கவும் ஆரம்பிச்சிட்டீங்கல்ல..?” என்றவள் விம்மி விம்மி அழத் தொடங்க அவளை இன்னும் தன் உடலோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவன்.

“இனி இப்படி நடக்காது தூரி.. டோன்ட் க்ரை..” கரகரப்பாக ஒலித்தது அவனுடைய குரல்.

வீங்கிப் போய் இருந்த அவளுடைய கன்னத்தில் அழுத்தமாக தன்னுடைய முத்தத்தைப் பதித்தான் அவன்.

அதிர்ந்து போனாள் அவள்.

அவன் அடித்ததை விட முத்தமிட்டதுதான் அவளுக்கு அதிகமாய் வலித்தது.

“சாரிடி நான் வேணும்னே பண்ணல.. என்ன மீறி அடிச்சுட்டேன்..” என்றவன் உடைந்து போய் அழுது கொண்டு இருந்தவளை இழுத்துச் சென்று தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டான்.

அவளோ மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தாள்.

அக்கணம் அவனை விலக்க வேண்டும் என்றோ அவனை விட்டுத் தள்ளிச் செல்ல வேண்டும் என்றோ அவளுடைய புத்திக்குப் புரியவில்லை.

தனக்கு ஏன் இந்த இழி நிலை என்ற எண்ணம்தான் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“ஹேய் போதும் அழாத..” என அவன் அதட்ட அதிர்ந்து அவனிடமிருந்து விலகி அவனுடைய முகத்தை பார்த்தவளுக்கு அப்போதுதான் அவனுடைய மடியில் அமர்ந்திருக்கிறோம் என்பது புரிந்தது.

பதறி எழ‌ முயன்றவளின் கன்னங்களைப் பிடித்து தன்னுடைய முகத்தைப் பார்க்கச் செய்தவன்,

“கொஞ்ச நாளா நான் நானாவே இல்ல.. நீ என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ற.. நீ சிரிச்சாலும் எனக்கு பிடிக்கல.. நீ அழுதாலும் எனக்குப் பிடிக்கல.. நீ என்னைத் தவிர வேற யார் கூட பேசினாலும் எனக்குப் பிடிக்கல.. உன்ன அடிச்சதுக்கு சாரி..” என்றவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவள் தான் எத்தனை அழகு.

அவளுடைய கருவண்டு விழிகள் அதிர்ச்சியில் முழுதாக திறந்திருக்க அவளுடைய ஆப்பிள் கன்னங்களோ கண்ணீரை ஏந்தி ஜொலித்தன.

இவை அனைத்தும் அவனைக் கிறங்கடிக்க அவற்றை விட அவளுடைய சிவந்த செவிதழ்களோ அழுகையில் துடித்து அவனை இன்னும் அதிகமாய் ஈர்த்தது.

“பேபி… உன்னோட விஷயத்துல ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்.. என்ன என்னால கட்டுப்படுத்திக்கவே முடியல..” என்றவன் அப்படியே குனிந்து அவளுடைய இதழ்களை நெருங்கி விட அவளுக்கோ இதயம் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

சட்டென கண்ணீர் நின்று போனது.

படபடப்போடு விழி விரித்து தன்னை நெருங்குபவனை அவள் பார்த்திருக்க அவளுடைய இதழோடு உராயும் வகையில் தன்னுடைய இதழைக் கொண்டு வந்து நிறுத்தியவன்,

“இப்போ நான் பண்ணப் போறதுக்கும் சாரிடி..” என்றான்.

அடுத்த நொடி அவளுடைய மென்மையான உதடுகளில் தன்னுடைய தடித்த அதரங்களைப் பொருத்திக் கொண்டான் அவன்.

ஆழமான அழுத்தமான இதழ் முத்தம் அது.

பதறியவளின் மொத்த உடலையும் அவனுடைய கரங்கள் தன்னுடலோடு வளைத்து இறுக்கிக் கொண்டன.

அவளுடைய கன்னங்களைத் தாங்கி இருந்த ஒற்றைக் கரமோ வீங்கி இருந்த கன்னத்தை வருடிக் கொண்டே இருக்க,

அவனோ அவளுடைய இதழ்களில் சுரக்கும் தேனை சுவைக்கத் தொடங்கியிருந்தான்.

விலக முயன்று முடியாது நடுக்கத்தோடு விழிகளை அவள் மூடிக்கொள்ள அவனுக்கோ அது இன்னும் வசதியாகிப் போனது.

அவளுடைய நீண்ட கூந்தல் காட்டுக்குள் தன்னுடைய கரத்தை நுழைத்துக் கொண்டவன் அவளுடைய மெல்லிய இதழ்களை விட்டுப் பிரியும் எண்ணம் சிறிதும் இன்றி முத்த யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்க அவளுக்கு உடல் நடுங்கி மொத்தமாக தொய்ந்து அவன் மீது சரிந்தது.

மலர் மாலையாக தன் மீது விழுந்தவளை தாங்கிக் கொண்டவன் அப்போதும் அவளுடைய இதழ்களை விடுவிக்கவே இல்லை.

இருவருக்கும் மூச்சுக்காற்று தேவைப்பட்டது.

மூச்சு எடுக்க சிரமமாகவும் இருந்தது.

ஆனால் அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.

எங்கே அவளுடைய சிவந்த இதழ்களைப் பிரிந்தால் அக்கணமே இறந்து விடுவோமோ என்பதைப் போலத்தான் அவற்றை சுவைக்கலானான் அவன்.

அவளுக்கோ உடல் வெடவெத்துப் போனது.

ஒரு கட்டத்தில் அவளுடைய இதழ்களை விடுவித்து விலகியவனுக்கு தேகம் கொதித்தது.

தன்னுடைய மடியில் அமர்ந்து இருந்தவளை எழுப்பி நிறுத்தியவன் தன்னுடைய சிகையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

அவளோ நிற்க முடியாது தலை சுற்றுவது போலத் தடுமாறி சரிய சட்டென அவளைப் படித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவனின் பார்வை தடுமாற்றத்தோடு தன்னால் இன்னும் சிவந்து போன அவளுடைய இதழ்களில் நிலைத்தது.

“கொ.. கொஞ்ச நேரம் தூங்கி ரிலாக்ஸா இரு.. எதப் பத்தியும் யோசிக்காத..” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட இவளுக்கோ உடல் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

காய்ச்சல் வந்தது போல உடல் முழுவதும் கொதிக்க வேக வேகமாக மூச்சை உள்ள இழுத்து வெளியே விட்டவள் அப்படியே அந்த சோபாவில் சரிந்து விழிகளை மூடிக் கொண்டாள்.

முத்தமிட்டு விட்டானா…?

சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை.

‘கடவுளே நடந்தத நினைக்கக் கூடாது… நினைக்கவே கூடாது..’ எனப் பதறியது அவளுடைய மனம்.

என்னதான் நினைக்கக் கூடாது என எண்ணினாலும் அவனுடைய உதடுகள் கொடுத்த அழுத்தம் தற்போதும் தன் இதழ்களில் இருப்பது போல இருக்க தன்னுடைய உதடுகளை பரபரவென்று தேய்த்து துடைத்துக் கொண்டாள் மாது.

அவனுடைய ஆழ்ந்த முத்தத்தில் இதழ்கள் வீங்கி விட்டன போலும்.

எதையும் சிந்திக்க முடியவில்லை.

இங்கிருந்து தப்பிச் சென்று விடலாமா..?

சென்றாலும் தேடி வந்து மீண்டும் இங்கே அழைத்து வந்து விடுவானே..?

இவ்வளவு நாட்கள் அவன் தன் மீது கோபத்தோடு இருந்தபோது கூட இப்படி எல்லாம் நடந்து கொள்ளவில்லையே.

திடீரென ஏன் இந்த மாற்றம்..?

தன்னை இறுக அணைப்பதும் தன் கழுத்து வளைவை அடிக்கடி தொட முயல்வதும் இதோ முத்தமிடுவது என அனைத்தும் புதிதாக அல்லவா இருக்கிறது.

ஒருவேளை என்னையும் மற்ற பெண்களைப் போல தவறாக பயன்படுத்தப் போகின்றானோ..?

அந்த நினைவே அவளை நடுங்கச் செய்தது.

குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை அள்ளித் தன்னுடைய முகத்தில் அடித்துக் கழுவியவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவன் அறைக்குள் இல்லாதது சற்று நிம்மதியைக் கொடுத்தது.

இன்னும் 30 நாட்கள் எப்போது தான் முடியுமோ..?

அவளுடைய சிந்தனையை குழப்பும் வகையில் அலைபேசி சிணுங்க அதனை எடுத்துப் பார்த்தவள் தன்னுடைய அன்னையிடமிருந்து தான் அழைப்பு வருகின்றது என்பதைக் கண்டதும் வேகமாக அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

ஹலோ என அவள் கூறுவதற்கு முதலே அவளுடைய அன்னையின் கதறல் இவளுடைய செவிகளில் பாய்ந்து இவளை உறைய வைத்தது.

“எ.. என்னாச்சும்மா..? எதுக்கு இப்படி அழுகுற..? தயவு செஞ்சு என்னன்னு சொல்லு..” எனப் பதறினாள் அவள்.

“உங்க அ.. அப்பாக்கு உடம்புக்கு முடியலடி.. நான் பேசுறது எதுவுமே அவருக்கு புரியுது இல்ல.. எனக்கு பயமா இருக்கு செந்தூரி.. இப்போ என்ன பண்றது..? தண்ணி கூட குடுத்து பார்த்துட்டேன் அதையும் குடிக்கிறார் இல்ல..”

“ஐயோ வேணாம்மா இப்போ எதுவும் கொடுக்காத.. அவரால விழுங்க முடியுதா இல்லையான்னு கூட தெரியாதே.. பக்கத்துல ஆட்டோ ஏதும் பிடிச்சு உன்னால அவர ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக முடியுமா..?”

“பயமா இருக்குடி.. அவர தனியா விட்டுட்டு நான் எப்படி ஆட்டோ தேடிப் போவேன்..? உதவிக்கு கூட பக்கத்துல யாருமே இல்லையே..” என அவர் அழத் தொடங்கி விட,

“சரி நான் இப்பவே அங்க வரேன்.. நீ பயப்படாத.. அப்பா பக்கத்திலேயே இரு..” என அழுதவாறு கூறியவள் அடுத்த கணம் எதைப் பற்றியும் சிந்திக்காது வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தவள் அங்கிருந்து வாயிற் கதவை நோக்கி ஓடவே தொடங்கிவிட,

எதிரே வந்த விநாயக்கைப் பார்க்காது அவன் மார்பில் மோதி அவனைப் பிடித்தே தன்னை சமப்படுத்தி கொண்டவள் மீண்டும் ஓடத் தொடங்க அவளுடைய கரத்தைப் பிடித்து தன்னருகே நிறுத்தியவன்,

“ஏய்.. என்ன ஆச்சு..?” எனக் கேட்டான்.

“அ.. அப்பாஆஆ ஹெ.. ஹெல்ப்..” எனத் தடுமாறி திணறியவளின் கன்னத்தைப் பற்றி தன்னை பார்க்கச் செய்தவன்,

“கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்.. பட் என்ன பண்ணனும்னு தெளிவா சொல்லு..” என்றான் அவன்.

💜🔥💜

Star ⭐ ratings போட்டு வைங்க..

அடுத்த எபிசோட் போடுறேன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 117

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!