செந்தூரியின் தந்தையை கவனித்துக் கொள்ள ஆண் உதவியாளர் ஒருவனை நியமித்திருந்தான் விநாயக்.
“நான் அப்பாவை பாத்துக்குறேன்.. ஆளுங்க எல்லாம் தேவையே இல்லை..” என அவள் எவ்வளவோ மறுத்தும் அதை அவன் கிஞ்சித்தும் கேட்கவில்லை.
மருத்துவமனைக்கு அருகிலேயே வாடகை வீடு ஒன்றைப் பார்த்து அதில் அவளுடைய அன்னையை தங்க வைத்து ஒரே நாளில் அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டிருந்தான் அவன்.
“இப்போ எதுக்கு இந்த வீடு..?”
“டெய்லி அவ்வளவு தூரம் உங்க அம்மா ஆட்டோ புடிச்சு இங்க வந்து பார்த்து மறுபடியும் போறத விட பக்கத்துல இருந்தாங்கன்னா உங்க அப்பாவ பாத்துக்குறதுக்கு ஈஸியா இருக்கும்ல..”
“இல்ல நான் வந்து பாத்துக்குவேன்..”
“ஒரு மாசத்துக்கு அப்புறமா நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. ஆனா இந்த ஒரு மாசமும் உனக்கு என்ன பாத்துக்கிறது மட்டும்தான் வேலை.. அதை மறந்துடாத..” என்றான் அவன்.
திகைத்து விட்டாள் அவள்.
“கவலைப்படாத.. இங்க இருக்க என்னோட ஆளுங்க உன்னை விட ரொம்ப நல்லாவே உங்க அப்பாவை பார்த்துப்பாங்க.. உங்க அம்மாவையும்தான்..” எனக் கூற அவளுக்கு சங்கடமாக இருந்தது.
“இதெல்லாம் எதுக்காக நீங்க பண்றீங்க..?”
“உனக்காக பண்ணினேன்..” என்றான் அவன்.
“அதுதான் எனக்காக ஏன் பண்ணீங்க..?”
“சீரியஸ்லி ஐ டோன்ட் நோ பட் பண்ணனும்னு தோணுச்சு பண்ணினேன்..” என்றவன் நேரத்தைப் பார்க்க அது இரவு ஏழு எனக் காட்டியது.
“ஓகே நாம கிளம்பலாமா..?”
“ம்ம்..”
“வேற ஏதாவது பண்ணனுமா..?”
“ஐயோ இதுவே போதும்..”
“ஓகே லெட்ஸ் கோ..” என்றவன் முன்னால் நடக்கத் தொடங்கிவிட,
ஒற்றைத் தலையசைப்பை அவளுக்கு பதிலாகக் கொடுத்துவிட்டு அவன் அங்கிருந்து விறுவிறுவென நடந்து அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறிச் சென்றுவிட அவன் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் பெருமூச்சோடு தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.
உறங்கிக் கொண்டிருந்தார் அவர்.
எழுப்ப மனம் வரவில்லை.
தன்னை இத்தனை காலமாக பார்த்துக் கொண்டவர் இப்போது படுக்கையில் குழந்தை போல அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.
இனி அவருக்கு சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உதயமாக பாசத்தோடு அவருடைய நெற்றியில் பட்டும் படாமலும் அன்பு முத்தத்தைக் கொடுத்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் அவள்.
அவளை நெருங்கி வந்தவர் “நீ சொன்னதெல்லாம் நிஜம்தானா..?” எனக் கேட்டார்.
“எதைம்மா கேக்கறீங்க..?” சோர்வோடு கேட்டாள் அவள்.
“இல்ல அவன் இதுவரைக்கும் உன்னை எதுவுமே பண்ணலையா..?”
அந்தக் கேள்வியில் அவளுக்கு உடல் கூசிப் போனது.
“இ.. இல்லம்மா எதுவுமே பண்ணல.” என்றவள் தன்னுடைய ஆடைகளை அகற்ற வைத்ததை மட்டும் கூறி விடுவோமா என எண்ணியவள் கப்பென தன் வாயை மூடிக் கொண்டாள்.
வேண்டாம் அதற்கும் அன்னை ஏதாவது ஏடா கூடமாக கூறிவிட்டார் என்றால் அவளுடைய மனம்தான் காயப்பட்டு விடும்.
எதற்கு இந்த வீண் வேதனை..?
எதையும் கூறாது முழுதாக மறைத்து விட்டாள் அவள்.
“பரவாயில்லையே நான் நினைச்ச மாதிரி இவன் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் கிடையாது.. ஒரு அவசரம்னு சொன்னதும் ஓடி வந்து இவ்வளவு உதவி பண்றானே..” என பாராட்டாக அவளுடைய அன்னை கூற அவளுக்கும் அதே எண்ணம் தான்.
‘உண்மையைக் கூற வேண்டும் என்றால் என் மீது இருக்கும் கோபத்தில்தான் தன்னை அவனோடு வைத்து இருக்கின்றான் ஆனால் இது எல்லாவற்றையும் எனக்காக அவன் ஏன் செய்ய வேண்டும்..?
எப்படி இருந்தாலும் இன்று அவன் செய்தது மிகப்பெரிய உதவி’ என எண்ணிக்கொண்டவள் தன்னுடைய அன்னையிடம் விடைபெற்று மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்.
காரில் காத்துக்கொண்டிருந்தான் அவன்.
இதெல்லாம் அவனுக்கு மிகவும் புதிது.
இதுவரை அவனுக்காகத்தான் பலர் காத்திருந்து இருக்கின்றனர். முதல் முறையாக அவன் ஒருத்திக்காக கடந்த பத்து நிமிடமாக காத்திருக்கின்றான்.
தன்னுடைய நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் விலைமதிப்பானது எனக் கூறுபவன் இப்போதெல்லாம் அவளுக்காக நேரத்தை தண்ணீராய் செலவழிக்கின்றான்.
உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் மீது கொட்டி விடுவதற்கெல்லாம் என்னதான் காரணமாக இருக்கக்கூடும்.
அவனுக்குப் புரியவில்லை.
அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவள் காரின் அருகே வந்து விட இயல்பாக்கிக் கொண்டான் தன்முகத்தை.
அவளோ பின்பக்க கார்க்கதவை திறக்க முயற்சி செய்ய முன் பக்க கார்க் கதவை திறந்து விட்டவன் “கம் இன்..” என அழைக்க,
மறுக்காது அவனுக்கு அருகே இருந்த சீட்டில் அமர்ந்தளுக்கு அவனிடம் எப்படி நன்றி கூறுவது என்று தயக்கமாக இருந்தது.
நன்றி கூறினால் அவன் கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பித் தர மாட்டேன் என நினைத்து விடுவானோ..?
நன்றியை கூறாமல் எப்படியாவது உழைத்து அவன் தனக்காக செலவழித்த பணத்தை கொடுத்து விடுவோமா..?
ஆனால் இப்போது எப்படி அமைதியாக இருப்பது..?
இவ்வளவு உதவி செய்திருப்பவனுக்கு சிறு நன்றி கூட கூறவில்லை என்றாகி விடுமே.
அவளுக்கு குழப்பமாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்த பின்பு கூட அவளுடைய குழப்பம் தீராது போக இறுதி முடிவாக அவனிடம் நன்றி கூறி விடலாம் என எண்ணியவள் அவன் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்து விட பெருமூச்சோடு அவன் பின்னே சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததும் தன்னுடைய குரலை செறுமி அவனுடைய கவனத்தை அவள் ஈர்க்க முயற்சிக்க,
அந்தோ பரிதாபம் அவனோ மருத்துவமனைக்கு சென்றதனால் உடனடியாக குளியல் அறைக்குள் ஒரு குளியலை போடுவதற்காக சென்றுவிட இவளுக்கு ஏமாற்றமாக இருந்தது
அவன் வெளியே வரும் வரைக்கும் காத்திருக்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் இடுப்பில் துவாலைடன் அவள் வெளியே வந்தவுடன் இவளுக்கோ அவனைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.
அப்படி இருக்கும்போது எப்படிப் பேசுவது..?
அவன் ஆடை மாற்றட்டும் அதற்குள் தானும் சென்று குளித்துவிட்டு வரலாம் என்ற முடிவோடு தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவளுக்கு மனம் லேசாக இருந்தது.
தந்தை இனி சீக்கிரமாக குணமாகி விடுவார் என வைத்தியர் சொன்ன வார்த்தைகள் அவளை மீண்டும் உயிர்ப்பித்தன.
மனதில் நிம்மதி பரவ குளித்து முடித்தவள் சற்று நேரம் உள்ளயே நின்றாள்.
பின் அவள் கொண்டு வந்த ஆடைகளை மாற்றி விட்டு அவள் வெளியே வரும் போது நேரமோ இரவு ஒன்பதாகியிருந்தது.
அறைக்குள் அவனைக் காணாது போக இவளுக்கோ சலிப்பாக இருந்தது.
இவன் கிட்ட ஒரு தேங்க்ஸ் சொல்றதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறதே என எண்ணியவாறு கீழே செல்ல அவளுக்காக அங்கே சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தான் அவன்.
அவனுக்கு உணவு பரிமாறி விட்டு தனக்கும் உணவைப் பரிமாறியவள் வழக்கம்போல அவனுக்கு ஊட்டி விட வேண்டுமா எனத் தயங்க,
“நீயும் பசியா இருப்ப.. நானே சாப்பிடுறேன்.. நீ சாப்பிடு..” என்றான் அவன்.
அடுத்த நொடியே மளமளவென தன்னுடைய உணவுத் தட்டில் இருந்த உணவை காலி செய்யத் தொடங்கினாள் அவள்.
சாப்பிட்டு முடித்ததும் தண்ணீரை அருந்திவிட்டு மேஜை மீது வெட்டி வைத்திருந்த பழத் துண்டை எடுத்துக் கடித்தவாறு அவன் படிகளில் ஏறத் தொடங்க,
அவன் பின்னாலேயே சென்றவளை பாதிப் படிகளில் நின்றவாறே சட்டென திரும்பிப் பார்த்தான் அவன்.
“என்னாச்சு..? குட்டி போட்ட பூனை மாதிரி இன்னைக்கு என் பின்னாடியே சுத்துற..? ஏதாவது சொல்லணுமா..?” என அவனே கேட்டு விட,
ஆம் என தலையசைத்தாள் அவள்.
“ஓகே என்னன்னு சொல்லு..”
“உங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லணும்..”
“ஓஹ்… எதுக்கு தேங்க்ஸ்..?”
“இன்னைக்கு எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணீங்க.. உங்க உதவிக்கெல்லாம் நான் என்ன கைமாறு பண்ணப் போறேன்னு சத்தியமா எனக்கே தெரியல..” என அவள் தங்கியவாறு கூற,
“நீ நினைச்சா கைமாறு பண்ணலாம்..” என்றான் அவன்.
“புரியல..”
படிகளின் வளைவில் நின்றவளை நெருங்கி வர படிகளோடு ஒட்டி இருந்த சுவற்றில் பல்லி போல ஒட்டிக் கொண்டாள் அவள்.
அவளின் இரு பக்கமும் தன்னுடைய கரத்தை ஊன்றி அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு ஏதாவது கைமாறு பண்ணனும்னு நினைச்சேன்னா கிவ் மீ எ கிஸ்..” என கிசுகிசுப்பான குரலில் அவன் கூற அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதிர்ந்து பெரிதாக விரிந்த அவளுடைய விழிகளைப் புன்னகையோடு பார்த்தவன்,
“நான் உன்ன கம்பெல் பண்ணல.. நீயாதான் வந்து கேட்ட.. நான் பண்ண உதவிக்கு நீ எதுவும் பண்ணலைன்னாலும் நான் ஒன்னும் சொல்லப் போறது இல்ல.. அப்படி ஏதாவது பண்ணனும்னு நினைச்சேன்னா கிவ் மீ எ கிஸ் ஒன்லி.. அது மட்டும் போதும்..” எனக் கூறி விட்டு அவளை விட்டு நகர்ந்தவன் இமை சிமிட்டிச் சிரித்து விட்டு படிகளில் ஏறி அவனுடைய அறைக்குள் நுழைந்து விட இவளுக்குத்தான் நெஞ்சமெல்லாம் படபடத்துப் போனது.
இது என்ன புதுவிதமான கைமாறாக இருக்கிறது..?
உதவிக்கு பதிலாக முத்தம் கொடுக்க வேண்டுமா..?
நன்றி கூற வந்தால் நன்றிக்கு பதிலாக முத்தத்தை கொடு எனக் கூறிவிட்டு சென்றுவிட்டானே..
வாயை வைத்துக்கொண்டு சும்மாவே இருந்திருக்கலாம்.
வெகு நேரம் அந்த மாடிப்படியின் வளைவுகளிலேயே நின்றவள் சற்று நேரத்தில் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பது என எண்ணியவாறு அவனுடைய அறைக்குள் நுழைந்தாள்.
இன்று இரவு அவள் ஆடையை அகற்றத் தேவையில்லை என்பதை உணர்ந்தவளுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது.
அவன் உள்ளே நுழைந்ததும் அவளுக்காகவே காத்திருந்தவன் “ட்ரெஸ் ரிமூவ் பண்ணலாமா..?” எனத் தாபக் குரலில் கேட்க பதறிப்போனவள்,
“நீங்கதானே சொன்னீங்க.. இன்னும் ரெண்டு நாளைக்கு ட்ரெஸ் ரிமூவ் பண்ணத் தேவலைன்னு.. இப்ப பேச்சு மாறுறீங்க..” என படபடத்தாள் அவள்.
“ஆமால்ல மறந்துட்டேன்.. சரி ஓகே நீ தூங்கு..” என்றவன் அனல் மூச்சோடு படுக்கையில் படுத்து விட மெல்ல நடந்து வந்து அவனுக்கு மறுபக்கத்தில் படுத்தவளுக்கு அவன் கேட்ட முத்தத்தை கொடுத்து நன்றிக் கடனை அடைத்து விடுவோமா எனத் தோன்றத் தொடங்கியது.
‘சீச்சீ வேண்டாம்..’ என அவள் விழிகளை மூட அந்த இரவு நேரத்தில் அழைத்தது அவளுடைய அலைபேசி.
எடுத்துப் பார்த்தவள் அன்னை என்றதும் அவனைப் பார்க்க பேசு என்றான் அவன்.
“சொல்லுங்கம்மா அப்பா நல்லா இருக்காங்க தானே..?”
“ஆமாம்மா அவர் நல்லா இருக்காரு.. இங்க எல்லாத்தையுமே ஹாஸ்பிடல்ல இருக்கவங்க பாத்துக்கிறாங்க… ரொம்ப ஈசியா இருக்கு.. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல பழையபடி உங்க அப்பா நடக்க ஆரம்பிச்சிடுவார் போல..” என அவ்வளவு மகிழ்ச்சியாக வந்த மேகலாவின் வார்த்தைகளில் அவளுடைய முகமும் மலர்ந்தது.
Super sis 💞
Arumai sis 💞💞💞💖💖💖💖