43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.5
(137)

சொர்க்கம் -‌ 43

அவளுடைய திகைத்த பார்வையில் அவள் புறம் திரும்பிப் படுத்தவன் என்ன என்பது போல புருவங்களை உயர்த்திக் கேட்க எதுவும் இல்லை என வேகமாக தலையசைத்தாள் அவள்.

அவனோ விழிகளை மூடிப் படுத்து விட இவளுக்குத்தான் நன்றியில் நெஞ்சம் விம்மிக் கொண்டே இருந்தது.

நன்றிக் கடனைத் தன் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறோமோ என எண்ணியவள் அவன் கேட்டதைக் கொடுத்து நிம்மதியான உறக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு இறுதியாக வந்து விட்டிருந்தாள்.

“விநாயக்..”

“சொல்லு பேப்..”

“நான் அத பண்.. பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்..”

“எத..?”

“அ.. அதுதான்..”

“எதுதான்..?’

“ப்ச் தேங்க்ஸ்கு பதிலாக கேட்டீங்களே..” என அவள் தயங்கித் தயங்கிக் கூற சட்டென அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“அப்போ நிஜமாவே எனக்கு கிஸ் பண்ண ரெடி ஆயிட்டியா..?” என வியப்பாகக் கேட்டான்.

“ம்ம்..”

“வாவ்… சரி கொடு..” என்றவனுக்கு இதயம் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.

எதுக்காக அவனுடைய மனம் இவ்வளவு ஆர்வமாக அவளுடைய முத்தத்தை எதிர்பார்க்கின்றது என்பது அவனுக்கே புரியாத புதிர்தான்.

“எ… எனக்கு பயமா இருக்கு..”

“இட்ஸ் ஓகே எதுவும் ஆகாது..”

“எனக்கு இ.. இதுல எல்லாம் முன் அனுபவம் இ.. இல்லை.”

“நான் கத்துக் கொடுக்கிறேன் பேப்..”

“ப்ளீஸ் நீங்க கண்ணை மூடிக்கோங்க..”

“சரிடி..” என்றவன் விழிகளை மூடிக்கொள்ள அவனுடைய கரத்தைப் பிடித்தவளுக்கோ கரங்கள் கடகடவென நடுங்கத் தொடங்கிவிட்டன.

அவள் தன்னுடைய கரத்தைப் பற்றியதும் விழிகளைத் திறந்தவன் “ஏய் எதுக்கு கையப் பிடிக்கிற..? கைலயா கிஸ் பண்ணப் போற..?” எனக் கேட்டான் அவன்.

“ம்ம்…” என்றாள் தலையை தாழ்த்தியவாறு.

“நோ.. கொடுக்குறதா இருந்தா ஒன்னு கன்னத்துல இல்லன்னா லிப்ஸ்ல கொடு..” எனக் கட்டளையிட்டான் அவன்.

அதிர்ந்து போனாள் அவள்.

“எனக்கு அங்க எல்லாம் கிஸ் பண்ணி பழக்கம் இல்லை ப்ளீஸ்..” அழுதுவிடுபவள் போல அவள் கூற,

“பரவால்லடி நான் கத்து கொடுக்கிறேன்..”

“ஐயோ அதெல்லாம் வேணாம்..”

“ஓகே கிஸ் மீ..”

“ம்ம்…”

“சரி சொல்லு எங்க கிஸ் பண்ணப் போற..?”

அவளோ வேறு வழி இன்றி அவனுடைய கன்னத்தை பார்த்தவள் “உங்க கன்னத்துல..” என மெல்லிய குரலில் கூற,

“ஓகே…” என்றவன் மீண்டும் விழிகளை மூடி அவளுடைய முத்தத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

காத்திருக்கும் நொடிப் பொழுதுகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை என அக்கணம்தான் அவனுக்குப் புரிந்தது.

நடுக்கத்தோடு அவன் அருகே தன்னுடைய இதழ்களைக் குவித்தவாறு சென்றவள் எவ்வளவோ முயன்றும் முடியாது பயத்தோடு விலகி விட்டாள்.

“சாரி சாரி.. என்னால முடியல… என்னால இதப் பண்ணவே முடியாது.. சாரி…” என அவள் பதற,

“இட்ஸ் ஓகே.. ரிலாக்ஸ்.. நீ பண்ணலன்னா என்ன..? அந்த கிஸ்ஸ நான் உனக்குக் கொடுத்துடுறேன்..” என்றான்.

அவனுடைய அந்தப் பதிலை எதிர்பாராதவளுக்கு தேகம் மீண்டும் நடுங்கத் தொடங்கிவிடும் போல இருந்தது.

அவனோ தனக்கு அருகே படுத்திருந்த அவளின் மீது மெல்ல படர,

“ஐயோ என்ன பண்றீங்க..?” படபடத்தாள் அவள்.

“கிஸ் பண்ணப் போறேன்…”

“ஹாங்…?!”

“ஐ மீன் உன்னோட நன்றிக் கடனை தீர்க்கப் போறேன்..”

“ஆ.. ஆனா அது..”

“உஷ்…. அமைதியா இரு பேப்..”

“நான் வேணும்னா எந்திரிக்கவா ப்ளீஸ்..?”

“இல்ல இப்படியே படுத்துக்கோ..” என்றவன் அவளுடைய பால்வண்ண முகத்தை இரசித்துப் பார்த்தான்.

“ப.. பயமா இருக்கு..”

“ஒரே ஒரு கிஸ்தானே.. கிஸ் பண்ணினா குழந்தையா பொறக்கப் போகுது..? ஜஸ்ட் அ கிஸ்…”

“ஆனா நீங்க விருப்பம் இல்லாத பொண்ணத் தொட மாட்டேன்னு சொன்னீங்க…?”

“இப்போ உன்கிட்ட கேட்டதுக்கு அப்புறமாதானே கிஸ் பண்ணப் வரேன்..

இத பாரு நான் ஒன்னும் உன்கிட்ட கிஸ் கேட்கல.. நீதான் என்கிட்ட நன்றிக் கடன் பட முடியல.. ஏதாவது கைமாறு பண்ணனும்னு கேட்ட… நீ என்ன பண்ணனும்னு நான் சொல்லிட்டேன்..

அதுக்கும் முடியாதுன்னு நீதான் சொன்ன.. போனா போகுதுன்னு உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான் அந்த முத்தத்த நானே எடுத்துக்கலாம்னு வந்தேன்..” சுற்றி வளைத்து சமாளித்தான் அவன்.

ஆழ மூச்சை உள்ள இழுத்து வெளியே விட்டவள் தன்னுடைய விழிகளை மூடிக் கொண்டாள்

“ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கோங்க…” எனக் கூறியவள் ஒற்றைப்பக்க கன்னத்தை அவனுக்குக் காட்டியவாறு விழி மூடிப் படுத்துக் கிடக்க,

அவள் கொடுத்த சம்மதம் அவனை உயிர் வரை தீண்டியது.

அவளே முத்தமிடுவதற்கு அனுமதி கொடுத்து விட்டாள் அல்லவா..?

அவள் மீது மொத்தமாக அவனுடைய உடல் படும் வகையில் படர்ந்தவன் பக்கவாட்டாக திரும்பி இருந்த அவளுடைய முகத்திற்கு ஏற்ப சரிந்து அவளுடைய அழகிய இதழ்களை ஆழமாகக் கவ்விக் கொண்டான்.

அழகிய கன்னங்களை விட தேனூறிய இதழ்கள்தான் அவனுக்கு அப்போது தேவைப்பட்டன.

அவள் மீது அவன் மொத்தமாக படர்ந்ததுமே பதறி எழ முயன்றவளுக்கு அவன் தன் இதழ்களைக் கவ்விக் கொண்டதும் பேரதிர்ச்சியாக இருந்தது.

அவள் அதிர்ந்து விழி விரித்து அவனைப் பார்க்க அவனோ தன்னை மறந்து அவளுடைய இதழ்களில் கவி எழுத ஆரம்பித்து விட்டிருந்தான்.

இப்படி ஒரு வாய்ப்பு இனி அவனுக்கு கிடைக்குமோ என்னவோ..?

கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாது அவளுடைய உதடுகளில் அவன் சோம பானம் அருந்த,

அவனைத் தள்ளி விட வேண்டும் என உயர்ந்த அவளுடைய கரங்களோ அந்தரத்தில் நின்றுவிட்டன.

அந்த இரு கரங்களையும் பற்றி படுக்கையோடு அழுத்தியவனின் முத்த வேட்கை அதிகமாகியது.

மூச்சு முட்டும் அளவிற்கு அவளுடைய இதழ்களை சுவைத்து விட்டு அவளுடைய கழுத்து வளைவில் அவன் முகத்தைப் புதைத்துக் கொள்ள விழிகளை மூடிப் படுத்திருந்தவளுக்கு இதயம் தொண்டைக்குள் வந்து துடித்துக் கொண்டிருந்தது.

முகம் குங்குமமாய் சிவந்து போனது.

கழுத்து வளைவில் சரிந்த படுத்து விட்டவனை எழுப்ப வழி தெரியாது திணறிப் போனவளுக்கு இதழ்கள் கூட நடுங்கின.

கழுத்தெல்லாம் குறுகுறுத்தது.

“வி.. விநாயக்..”

“ம்ம்….?”

என்றவனோ அவளுடைய கழுத்து வளைவையும் விட்டு வைக்காது முத்தத்தை பதித்து விட்டு அப்படியே கீழே இறங்கி அவளுடைய மார்பில் முகத்தைப் புதைக்க,

உள்ளே சென்ற மூச்சோ அவளுக்கு அப்படியே நின்று கொண்டது.

அப்படியே படுக்கையோடு ஒன்றிக் கொண்டவள் அவனை விலக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவனைத் தள்ளிவிட முயற்சித்த கணம் அவனுடைய கரங்களோ அவளுடைய இடுப்பை வருடி இரு பக்கங்களும் சென்று இறுக்கி அணைத்துக் கொண்டன.

அழுத்தமாக அவளுடைய மார்பில் அவன் முகம் புதைக்க, ஆழிப் பேரலைக்குள் சிக்கிக் கொண்டதைப் போல தவித்துப் போனாள் பேதை.

திணறிப் படபடத்துத் தடுமாறியவள் தன்னுடைய மொத்த பலத்தையும் திரட்டி அவனைத் தள்ளிவிட முயற்சிப்பதற்குள் அவளுடைய மார்பிலும் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு விலகிப் படுத்தான் அவன்.

அவனுக்கோ போதை ஏறியது போல இருந்தது.

இவளோ மிகச் சிரமப்பட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அவனை கோபமாகத் திட்டிவிடலாம் எனத் திரும்ப படுக்கையிலிருந்து வேகமாக எழுந்தவன்,

“ஏய் சத்தியமா என்னால முடியலடி.. ஓ காட்… தெரியாம உன்னைக் கிஸ் பண்ணித் தொலைச்சுட்டேன்… என்னவோ பண்ணுது தூரி..” என்றவன் அடுத்த கணமே கார் சாவியை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறிவிட,

அவள் தான் அதிர்ந்து போனாள்.

அவனைத் திட்டுவோம் என அவள் வாயைத் திறக்க,

அவள் செய்ய வேண்டியதை அவன் அல்லவா செய்துவிட்டு சென்றிருக்கிறான்.

“நான்தான் உன்னத் திட்டி இருக்கணும்டா.” என எண்ணியவளுக்கு உடல் முழுவதும் குறுகுறுத்தது.

அவன் இறுக்கமாக அணைத்த விதத்தில் இடுப்பின் இருபக்கமும் வலிக்க செங்கொழுந்தாகிப் போனவளுக்கு என்ன இது என்றே புரியவில்லை.

அப்படியே கவிழ்ந்து படுத்து தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டவள் மனதுக்குள் புலம்பத் தொடங்கினாள்.

விநாயக்கின் நிலை அவளை விட மோசமாக இருந்தது.

ஏதோ பேய் துரத்துவதைப் போல வீட்டை விட்டு வெளியே வந்தவன் தன்னுடைய காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டான்.

வேகமாக மூச்சு வாங்கியது.

உடல் முழுதும் அவள் வேண்டுமென அடம் பிடித்தது.

இதுவரை இல்லாத ஆசையும் தேடலும் அவளுடைய இதழ்களைத் தீண்டிய நொடி எப்படி உண்டானது என்பது புரியாது குழம்பிப் போனான் அவன்.

இன்னும் சற்று நேரம் அவளுடன் இருந்திருந்தால் கூட ஒரு பெண்ணை அவளுடைய விருப்பமின்றி தொடவே கூடாது என இத்தனை வருடங்களாக அவன் கடைப்பிடித்து வந்திருந்த தர்மம் எல்லாம் ஒரே நாளில் காணாமல் போயிருக்கும்.

அவளைத் தொட்டு உணர்ந்த கரங்களும் சுவைத்த இதழ்களும் அவள்தான் வேண்டும் அவள் மட்டும்தான் வேண்டும் என அடம் பிடிப்பதை உணர்ந்தவன் இன்று இரவு வீட்டில் தங்குவதே ஆபத்து என்ற முடிவுக்கு வந்தவனாய் காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

அவன் பேரில் இன்னும் எத்தனையோ வீடுகள் அதே ஊரிலேயே இருக்கின்றனதான்.

சென்று படுத்தால் உறக்கம் வருமா என்பதே அவனுடைய முதல் கேள்வி.

காரை எங்கும் நிறுத்தாமல் நீண்ட தூரம் அப்படியே செலுத்திக் கொண்டிருந்தவன் வெகு நேரத்தின் பின்னரே மீண்டும் காரை தன்னுடைய வீட்டிற்குத் திருப்பினான்.

நேரத்தைப் பார்க்கும் போது நள்ளிரவைத் தாண்டி இருந்தது.

இது என்ன அவஸ்தை..?

உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் சூடேறி வெடித்து விடும் போல இருந்தது அவனுக்கு.

காரிலிருந்து இறங்கி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் செல்லாமல் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அப்படியே படுத்துக் கொண்டான்.

தூக்கம் வரவில்லை.

விழிகளை மூடியதும் படுக்கையில் தனக்கு கீழே மலர்ந்த பூவாய் விழி மூடிக் கிடந்த மங்கையவளின் வனப்பு மட்டுமே தெரிய தவியாய் தவித்தான் அவன்.

வேறு யாரேனும் பெண்களைத் தேடிச் சென்று விடலாமா..?

ஆனால் அதை அவனுடைய மனம் ரசிக்குமா என்பதே இப்போது கேள்விக் குறிதான்.

அன்று லைலாவை விரட்டியது போல விரட்ட வேண்டி வந்துவிட்டால் என்ன செய்வது..?

இது என்ன இந்த உடல் புதிதாக செந்தூரி மட்டும்தான் வேண்டும் என அடம் பிடிக்கின்றது..?

அப்படி மற்ற பெண்களிடம் இல்லாத எது அவளிடம் இருக்கிறது…?

உடல் மட்டுமா அவளைக் கேட்கின்றது அவனுடைய மனம் கூட அவளைத் தானே யாசிக்கின்றது.

நல்ல வேளை இன்று அவள் தன்னுடைய ஆடையை அகற்ற வில்லை.

ஒருவேளை அப்படி ஒரு நிலையில் அவள் இருந்திருந்தால் தன்னால் நிச்சயம் அவளை விட்டு விலகி இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு நாளைய இரவை எண்ணி இப்போதே பயம் பிடித்துக் கொண்டது.

அவள் நேற்றுக் கேட்ட போதே வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டுமோ என தாமதமாக வருந்தினான் அவன்.

அவன் நினைத்தால் நாளை கூட அவளை அனுப்பிவிடலாம்தான் ஆனால் நினைப்பானா என்பதுதான் கேள்வி.

 

💜💜💜

ஸ்டார் ரேட்டிங் போட்டு வைங்க அடுத்த எபிசோட் ஆன் தி வே 🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 137

No votes so far! Be the first to rate this post.

1 thought on “43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!