விநாயக் திட்டியது அவளுக்குள் கோபத்தை உண்டு பண்ணியது.
அனைத்திற்கும் இவனுக்கு கோபம் மட்டும் வந்துவிடும்.
உதிரம் வழிந்து கொண்டிருந்த அவனுடைய கரத்தைப் பிடித்தவளின் நெஞ்சம் பிசைந்தது.
அதீத உதிரப் போக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லவா..?
அவள் வாய் திறந்தாலே அவன் கோபத்தில் வெடிக்கும் போது அவளால் எப்படி அவனுடன் பேச முடியும்..?
காரை செலுத்திக் கொண்டிருந்த அவனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே குறைவடைந்து விட பதறிப் போனாள் அவள்.
“எ.. என்னாச்சு..? நீங்க ஓகேதானே..?” என அவள் கேட்க எந்தப் பதிலும் கூறாது காரை ஓரமாக நிறுத்தியவன் ஸ்டேரிங்கில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொள்ள இவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“விநாயக் என்ன ஆச்சு..? ட்ரைவ் பண்ண முடியலையா..? ஏதாவது பேசுங்க ப்ளீஸ்..” என அவனை அசைத்தவள் அவனிடம் எந்த அசைவும் இல்லாது போனதை உணர்ந்ததும் விக்கித்துப் போனாள்.
மயங்கி விட்டானா..?
இதயம் வெடித்து விடும் போல வேகமாகத் துடித்தது.
இப்போது என்ன செய்வது..? அவளுக்கு கார் எல்லாம் செலுத்தத் தெரியாதே.
யாரை உதவிக்கு அழைப்பது..?
கொஞ்ச நேரம் தாமதித்தால் கூட அவனுக்கு ஆபத்தல்லவா.?
விழிகள் கலங்கி விட்டன.
சட்டென சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு காரில் இருந்து இறங்கியவள் அந்த வழியே வரும் யாரையேனும் நிறுத்தி உதவி கேட்கலாமா என வீதியில் நிற்கத் தொடங்கி விட்டாள்.
அந்த அதிவேக சாலையில் பயணிக்கும் எந்த வாகனங்களும் அவசர கதியில் தங்களுடைய பயணத்தை நிறுத்தாது சென்று கொண்டே இருக்க அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என எண்ணியவள் காருக்குள் இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்து கௌதமனுக்கு அழைப்பெடுத்தாள்.
அவளுக்கென இருக்கும் ஒரே ஒரு உறவு கௌதம் மட்டும் தானே.?
அவள் கேட்டால் அவன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தவள் அவனுக்கு அழைப்பு எடுக்க அடுத்த சில நொடிகளிலேயே அவளுடைய அழைப்பை ஏற்றவன்,
“சொல்லு செந்தூரி.. நீ ஓகே தானே..?” எனக் கேட்டான்.
“கௌதம் ஹெல்ப் பண்ணு.. அவருக்கு ரொம்ப முடியல.. மயங்கிட்டாரு.. எனக்கு எ… என்ன பண்றதுன்னே தெரியல.. ஹாஸ்பிடல் போகணும்.. நீ கொஞ்சம் வர முடியுமா.. எனக்கு கார் ட்ரைவ் பண்ணத் தெரியாது..” என அவள் கூற,
“இப்ப நீ எங்க இருக்கேன்னு சொல்லு.. நான் சீக்கிரமா வரேன்.. டென்ஷன் ஆகாத.. பாத்துக்கலாம்..” என்றவன் அவள் இடத்தைக் கூறியதும் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
இவளோ விநாயக்கின் பக்கம் வந்தவள் “ப்ளீஸ் எழுந்திரிங்க… கண்ணத் திறந்து பாருங்க… எனக்கு பயமா இருக்கு…” எனப் புலம்பினாள்.
அவளுடைய புலம்பலை எல்லாம் அவன் எங்கே கேட்டான்..?
அவன்தான் மயக்கம் எனும் புது உலகுக்குள் நுழைந்து ஐந்து நிமிடங்கள் முழுதாக முடிந்து விட்டனவே.
அவளுடைய எந்த வார்த்தைகளும் அவனுடைய செவிகளை எட்டவே இல்லை.
சில நிமிடங்களிலேயே தன்னுடைய ஸ்கூட்டியில் செந்தூரி கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான் கௌதம்.
வீதியின் ஓரத்தில் நின்று அழுது கொண்டிருப்பவளைப் பார்த்ததும் அவனுக்கு மனம் வேதனைப்பட்டது.
“ஏன்டி இவனுக்காக அழுற..? இவன்தானே உன்ன அவ்வளவு டார்ச்சர் பண்றான்.. என்னவோ பண்ணட்டும்னு விட்டுட்டுப் போக வேண்டியது தானே..? இப்படி ரோட்ல நின்னு இவனுக்காக அழுதுகிட்டு இருக்கியே…” என மனம் பொறுக்காமல் கௌதம் கேட்டு விட,
“ஒருத்தர் அடிப்பட்டு மயக்கத்துல இருக்கும்போது எப்படி கௌதம் உன்னால் இப்படி பேச முடியுது..? அப்போ நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு.. நம்மள காப்பாத்தி தானே அவருக்கு அடிபட்டிச்சு.. ப்ளீஸ் ஏதாவது பண்ணு.. எனக்கு பயமா இருக்கு..” என்றவளை கசந்த சிரிப்புடன் பார்த்தவன் காரைத் திறந்து விநாயக்கை அருகே இருந்த இருக்கையில் இழுத்து அமர வைத்துவிட்டு செந்தூரியைப் பின் இருக்கையில் ஏறச் சொன்னான்.
அதன் பின் அவனும் காரில் ஏறியவன் காரை மருத்துவமனை நோக்கிச் செலுத்தத் தொடங்க இவளுக்கு பதற்றம் இன்னும் கூடித்தான் போனது.
அவசர அவசரமாக அவளுடைய மனம் இறைவனிடம் விநாயக்கிற்காக பிரார்த்தனையும் செய்து கொண்டது.
எதற்காக இவ்வளவு துடிக்கின்றோம் என்ற கேள்வி அவளுக்குள் எழத்தான் செய்தது.
தன்னுடைய தந்தையை காப்பாற்றிய நன்றிக்கடனா..?
இல்லை இன்று தன்னுடைய உயிரைக் காப்பாற்றினானே அந்த நன்றிக் கடனா..?
இல்லை ஆழ்மனம் அவனை நேசிக்கின்றதா..?
அவளுக்குப் புரியவில்லை.
ஆனால் நொடிக்கு நொடி மயங்கிக் கிடக்கும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
எவ்வளவு கம்பீரமாக இருப்பவன் அனைத்தையும் தன்னுடைய விழிகளால் அடக்கி ஆள்பவன் இப்போது சுயநினைவே இன்றி உதிரம் வழியக் கிடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் பிசைந்தது.
அவளை அறியாமலேயே அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிய அந்தக் கண்ணீரைக் கண்ட கௌதமனுக்கோ தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தகுதியற்ற ஒருவனுக்காக அவள் கண்ணீர் வடிப்பதா..?
“ப்ச்.. அழாத செந்தூரி… எனக்கு கோபமா வருது..”
“நீயும் என் மேல கோபப்பட்டா நான் என்னடா செய்வேன்..?” என பாவப்பட்ட குரலில் கேட்டாள் அவள்.
உருகிப் போனான் அவன்.
“எதுவும் ஆகாது.. பயப்படாத.. ஓவர் ப்ளீடிங் மட்டும்தான்.. ஹாஸ்பிடல் கொண்டு போனா ஓகே ஆயிடும்..” என்றவன் 20 நிமிடங்களில் மருத்துவமனையின் முன்பு காரை நிறுத்தினான்.
அவளுடைய தந்தையை வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் அதே மருத்துவமனை.
“செந்தூரி பக்கத்துல இந்த ஹாஸ்பிடல்தான் இருக்கு.. ஆனா இங்க அட்மிஷன் பில்லே எக்கச்சக்கமா வரும்.. என்ன பண்ணலாம்..?” எனக் கேட்டான் அவன்.
“இங்கேயே போலாம் கௌதம்.. அவர் இங்கேதான் வருவேன்னு சொல்லி இருக்காரு.. அவர் எழுந்ததும் அவரே பில் பே பண்ணிடுவாரு..” என்றாள் அவள்.
அடுத்த சில நிமிடங்களில் விநாயக்கை மருத்துவமனையினுள் அழைத்துச் சென்றிருந்தான் கௌதம்.
முதலில் யார் என்ன என விசாரித்துக் கொண்ட மருத்துவமனையின் ஊழியர்களோ ஸ்ட்ரெச்சரில் மயங்கிக் கிடந்த விநாயக்கைக் கண்டதும் அத்தனை கேள்விகளையும் நிறுத்திவிட்டு உடனடியாக சிகிச்சையை வழங்கத் தொடங்கினர்.
அந்த மருத்துவமனையின் விஐபி பேஷன்ட் ஆயிற்றே அவன்.
லக்சரி அறையொன்றில் அவனுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட படபடத்த மனதோடு வெளியே கெளதமுடன் நின்றிருந்தாள் செந்தூரி.
வைத்தியரோ “பயப்பிடுறதுக்கு எதுவும் இல்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு…” எனக் கூறி விட்டுச் சென்றுவிட இவ்வளவு நேரமும் அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கம் அப்போதுதான் அவளுக்கு முற்றிலுமாக நீங்கியது.
“நான்தான் சொன்னேன்ல.. பயப்படாத..” என்றான் கௌதம்.
“தேங்க்ஸ் டா..”
“அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு காலைல ஹீரோ சார் என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா..?”
“என்ன சொன்னாரு கௌதம்..?”
“உன்கிட்ட இருந்து நான் தள்ளியே இருக்கணுமாம்.. நான் உன் கூட பழகுறது அவருக்கு பிடிக்கலை போல..”
“ஓஹ்.. நான் யார் கூட பழகினா அவருக்கு என்ன..?” என்றாள் அவள்.
“நோ ஐடியா..” என்றான் அவன்.
அரை மணி நேரத்தில் தாதி ஒருவர் வந்து அவன் கண்விழித்து விட்டான் என்பதைக் கூறியதும் வேகமாக எழுந்து கொண்டாள் செந்தூரி.
“நான் போய் பாத்துட்டு வந்துடுறேன்..”
“சரி போ..”
அவளோ அவன் படுத்திருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய அவனோ படுக்கையில் இருந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“ஐயோ என்ன பண்றீங்க..? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க ப்ளீஸ்.. நிறைய ப்ளீடிங் போய் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க..”
பதறினாள் அவள்.
அவளைப் பார்த்தவன் அமைதி அடைந்தான்.
“நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கும் போதே மயங்கிட்டேனா..?” என அவன் கேட்க,
ஆம் என்றாள் அவள்.
அக்கணம் அவனுடைய நெஞ்சம் நெகிழ்ந்து போனது.
தன்னை அப்படியே விட்டுச் செல்லாமல் மருத்துவமனையில் தன்னந்தனியாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறாளே மிகவும் கஷ்டப்பட்டாளோ என வருந்தியவன் தன் அருகே நின்றவளின் கரத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டான்.
“சாரி டி.. நீ ஹாஸ்பிடலுக்கு போகலாம்னு சொன்னதுமே வந்திருக்கணும்.. கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன்.. அதனாலதான் உன்னத் திட்டிட்டேன்.. ரொம்ப கஷ்டப்பட்டியா.?” எனக் கேட்டவாறு அவளுடைய கரத்தைப் பற்றி அதில் அவன் தன்னுடைய உதடுகளைப் புதைக்க பதறி தன்னுடைய கரத்தை உருவிக் கொண்டாள் அவள்.
“இ..இல்ல அது.. நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. என்ன காப்பாத்த போய் தானே உங்க கையில அடிபட்டிருச்சு.. நீங்க எதுக்கு நடுவுல வந்தீங்க.. உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..?”
“தெரியல பேபி.. அந்த நிமிஷம் எனக்கு என்ன ஆனாலும் உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தோணுச்சு..” என அவளுடைய விழிகளைப் பார்த்து அக்கணம் அவன் உணர்ந்ததைக் கூற இவளுடைய விழிகளோ விரிந்தன.
பேச்சு வராமல் திணறிப் போய் நின்றாள் அவள்.
“சரி தேங்க்ஸ் சொல்லு..” என்றான் அவன்.
“ஹாங் எ.. என்ன.?”
“நீதானே எனக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு சொன்ன.. அதான் சொல்லுன்னு சொன்னேன்..”
“ம்ம்.. தேங்க்யூ சோ மச்..”
“ப்ச் இப்படியா தேங்க்ஸ் சொல்ல உனக்கு சொல்லிக் கொடுத்தேன்..?” என அவன் இமை சிமிட்டிக் கேட்டதும் இவளுக்கு அக்கணம் நொடியில் முகம் முழுவதும் சிவந்து போனது.
தடுமாறி தன்னுடைய தலையை தாழ்த்திக் கொண்டவளுக்கு முகச் சிவப்பை மறைக்கவே முடியாது போக அவளுடைய வெட்கச் சிவப்பை கண்டவனின் நெஞ்சம் முழுவதும் தித்தித்தது.
“பேபி..” மெல்ல அவளுடைய கரத்தை மீண்டும் பற்றி தன்னுடைய மார்பில் பதித்துக் கொண்டான் அவன்.
“வெட்கப்படுறியா பேபி..?”
“………..”
அவனுடைய மற்றைய கரம் உயர்ந்து அவளுடைய சிவந்த கன்னத்தை மென்மையாக வருட விழிகளை மூடிக்கொண்டவளுக்கு இதயம் உள்ளே துள்ளிக் குதித்து நடனம் ஆடத் தொடங்கிவிட்டது.
அவளுடைய கன்னத்தை அவனுடைய வன் விரல்கள் வருடி சிவந்த தேனூறிய இதழ்களையும் அழுத்தி வருட எங்கே கால்கள் மடங்கி கீழே விழுந்து விடுவோமோ என பயந்து போனாள் அவள்.
அவனுடைய கரத்தைப் பற்றித் தடுத்துவிட்டு மெல்ல விலகி நின்றவள்,
“உங்களுக்கு பசிக்கலையா..?” எனக் கேட்டாள்.
“பசியா..?” சிரித்தான் அவன்.
“இந்த நிமிஷம் எனக்கு வலி பசி கோபம் டென்ஷன் கவலை இது எதுவுமே இல்ல..
என்னோட மனசு முழுக்க இப்போ ஒரே ஒரு நினைப்பு மட்டும்தான் ஓடிட்டு இருக்கு..” என்றவனின் பார்வை அவளை அழுத்தமாக வருட தன்னுடைய கீழ் உதட்டை மடித்து கடித்துக் கொண்டாள் அவள்.
“ஹேய் நோ நோ பேபி..” என்றவன் அவளுடைய பற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த அவளுடைய கீழ் உதட்டை விடுவித்து விட்டவன் “இதெல்லாம் நான் தான் பண்ணுவேன்..” என்றதும் அவ்வளவுதான் அவளுக்கு உடல் நடுங்கவே ஆரம்பித்து விட்டது.
இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகின்றான் என எண்ணியவள் மீண்டும் தலையை தாழ்த்திக் கொள்ள அவனுக்கோ அவளை அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
“பேபி இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது.. வா கிளம்பலாம்..” என்றவன் எழுந்து நின்று விட பதறிப் போனாள் அவள்.
“இல்ல எனக்கு ட்ரைவ் பண்ணத் தெரியாதே.. கௌதம்தான் ஹெல்ப் பண்ணினான்..” என்றதும் இவ்வளவு நேரமும் மலர்ந்திருந்த அவனுடைய முகமோ நொடியில் சீற்றத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.
காய்ச்சல் நல்ல ஆகிவிட்டதா