சொர்க்கம் – 48
இவ்வளவு நேரமும் தன்னை வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தவன் திடீரென தன்னுடைய மடியில் படுத்ததும் அதிர்ந்துதான் போனாள் மாது.
அதிலும் இதுவரை அவள் கேள்வியே படாத பெயரைச் சொல்லி அந்தப் பெயருடன் அவன் தன்னை ஒப்பிட இவளுக்கு மொத்தமும் குழம்பிப் போனது.
யார் அந்த நீருமா என வாய்வரை வந்த வார்த்தையை தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவள் எந்தக் கேள்வியும் கேட்காது மருந்து போட்டு முடித்திருந்தாள்.
“மருந்து போட்டாச்சு எழுந்திரிங்க..”
“எனக்கு தூக்கம் வருதுடி..”
“தூங்குறதுக்குதான் இவ்வளவு பெரிய பெட் இருக்கே.. என் மடி எதுக்கு..?”
“அந்த பெட்ட விட உன்னோட மடி சூப்பரா இருக்கு…”
“நான் ஒன்னும் என்னோட மடிய விக்கல…” என்றவள் அவனுடைய தலையைப் பிடித்து தூங்க விடாமல் எழுப்பி விட்டாள்.
நல்ல மூடில் இருந்திருப்பான் போலும்.
அவள் எழுப்பி விட்டதும் எதுவும் கூறாமல் சிரித்தவாறு அவளைப் பார்த்தவன்,
“நாளைக்கு உங்க வீட்டுக்குப் போகலாம்…” என்றான்.
“அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிடல்லதானே இருக்காங்க.. இன்னைக்கு நீங்க பண்ண அலும்புல எங்க அப்பாவ கூட பாக்காம அப்படியே வந்துட்டேன்..” என்றாள் அவள்.
“ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல இருக்க வீட்டுலதானே உங்க அம்மா இருக்காங்க… அங்க போய் அவங்க கூட பேசலாம்..” என்றதும் இவளுக்கு வியப்பாக இருந்தது.
“அவங்க கிட்ட நீங்க என்ன பேசப் போறீங்க..?”
“நம்ம வாழ்க்கையைப் பத்தி பேசலாம்…” என்றதும் அவளுக்கு விழிகள் விரிந்தன.
“நம்ம வாழ்க்கையைப் பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு..? இன்னும் ஒரு மாசத்துல நான் எங்க வீட்டுக்குப் போயிடுவேன்…” என்றவளின் காந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,
“இனி வாழ்க்க முழுக்க நீ என் கூடதான் இருக்கப் போற…” என்றான்.
அவளோ அவன் கூற வருவது புரியாமல் அவனைப் பார்க்க,
அவளுடைய கன்னத்தைத் தன் கரத்தால் வருடியவன் தன் கரத்தை அப்படியே அவளுடைய மென்மையான கழுத்துக்கு நகர்த்தி அதன் மென்மையையும் உணரத் தொடங்க அவளுக்கோ உடற் கூசியது.
அதே கணம் அவளுடைய கழுத்தைப் பார்த்தவனின் விழிகள் கூர்மையாகிப் புருவங்கள் சுருங்கின.
“ஹேய் உன்னோட செயின் எங்க..?”
அவளோ படபடத்துப் போனாள்.
“செயின் எங்க தூரி…?”
“அது.. அது வந்து..”
“சொல்லு..” என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வெளி வந்தன.
“இல்ல நீங்க இன்னைக்கு பில் பே பண்ணாம வந்துட்டீங்க.. என்கிட்டயோ கெளதம்கிட்டயோ அவ்வளவு பணம் இல்ல.. அதனாலதான் இந்த செயின் கழட்டி கௌதம் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்…
அவன் அந்த செயினை அடகு வச்சு எப்படியாவது பணத்தைப் புரட்டி…” என அவள் மீதியைக் கூறி முடிப்பதற்கு முன்னரே அவளுடைய முகத்திற்கு நேரே தன்னுடைய கரத்தை உயர்த்தி அவளுடைய பேச்சை தடுத்து நிறுத்தியவன்,
தன்னுடைய ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட இவளுக்கோ உள்ளம் பதைபதைத்துப் போனது.
இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது..?
நெஞ்சமெல்லாம் படபடத்துப் போய் வெகு நேரம் அப்படியே நின்றவள் பெருமூச்சோடு அங்கிருந்த பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த நீரை எடுத்து மடமடவென அருந்தினாள்.
இவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஆபத்தில் சிக்கி இருப்பது போல் அல்லவா உணர்வைக் கொடுக்கின்றது.
எப்போது சிரிப்பான் எப்போது கோபப்படுவான் எப்போது திட்டுவான் எப்போது கொஞ்சுவான் என்றே அவளுக்குத் தெரியவில்லை.
செயினைக் கொடுத்தது பற்றிக் கூறியதும் எதுவும் கூறாது அவன் அமைதியாக சென்ற விதம் அவளை இன்னும் அச்சத்துக்குள் ஆழ்த்தியது.
சில மணி நேரத்தின் பின் வேலையாள் ஒருவன் வந்து அவளைக் கீழே வரும்படி சார் சொன்னதாகக் கூற சரி என தலையசைத்தவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
‘அப்போ இவ்வளவு நேரமும் அவன் இங்கதான் இருந்திருக்கானா..?’ என எண்ணியவாறு கீழே சென்றவள் ஹால் சோபாவில் கண் மூடிப் படுத்திருந்த விநாயக்கை குழப்பமாகப் பார்த்தாள்.
அவள் அவனருகே வந்து நின்றதும் “சிட் பேபி…” என்றான் அவன்.
“எதுக்கு வரச் சொன்னீங்க…?”
“இன்னும் 5 நிமிஷத்துல உனக்கு தெரிஞ்சிடும்..”
அவன் கூறியதைப் போல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கருப்பு நிற ஆடை போட்டிருந்த திடகாத்திரமான ஆண் மகன் ஒருவன் அவன் முன்பு வந்து நிற்க,
“நான் சொன்னத எடுத்துட்டு வந்துட்டியா..?” எனக் கேட்டான் விநாயக்.
“ஆமா சார் கொண்டு வந்துட்டேன்..” என்றவன் அவனுடைய கரத்தில் சிறிய பெட்டியைக் கொடுக்க அதை வாங்கிய விநாயக்கோ,
“ஓகே நீ கிளம்பு..” என்றான்.
அந்தச் சிறிய பெட்டியைக் கொடுத்தவன் வெளியே சென்று விட அந்தப் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த செயினை வெளியே எடுத்தவன் அவளைக் கண்களால் அழைக்க அதிர்ந்து போனாள் செந்தூரி.
இது எப்படி மீண்டும் இவனிடம் வந்தது..?
அவளுடைய கரத்தைப் பற்றி தன்னருகே அமர வைத்தவன் அவளுடைய கழுத்தில் அந்த வைரச் சங்கிலியை அணிவித்து விட்டான்.
அந்தச் சங்கிலியில் சற்றே அப்பியிருந்த உத்திரத்தைப் பார்த்தவளுக்கு உள்ளம் பதறிப் போனது.
“ஐயோ ர.. ரத்தம்.. எ.. எப்படி..? கௌதம என்ன பண்ணீங்க…? சொல்லுங்க அவன என்ன பண்ணீங்க..? இதுல ஏன் பிளட் இருக்கு..?” என அவள் பதற அவளுடைய அந்தப் பதற்றத்தை சிறிதும் விரும்பாமல் முகத்தை சுளித்தவன்
“ப்ச்.. நான் எதுவும் பண்ண சொல்லலை.. அந்தச் செயினை மட்டும்தான் எடுத்துட்டு வர சொன்னேன்..” என அலட்சியமாகக் கூறினான் விநாயக்.
இவளுக்கு எதுவோ தவறாகப் பட அக்கணமே கௌதமிடம் பேசி விட வேண்டும் எனத் தோன்றிய எண்ணத்தை தவிர்க்க முடியாது வேகமாக படி ஏற முயன்றவளை மீண்டும் நிறுத்தினான் அவன்.
“நாம அவுட்டிங் போலாமா பேபி..?”
அவனுடைய கேள்வியில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“இ… இல்ல நான் வரல..” என்றவளின் குரல் நடுங்கியது.
அவளுடைய மனம் முழுவதும் கௌதமிற்கு என்னானதோ ஏதானதோ என்ற கேள்விதான் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.
அவனிடம் கொடுத்து அடுத்த ஆறு மணி நேரத்தில் மீண்டும் அதே சங்கிலி அவளுடைய கழுத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதே.
மருத்துவமனையில் பணத்தைக் கட்டினானா இல்லையா..?
இந்த சங்கிலியில் எதற்காக உதிரம் படிந்து இருக்கிறது..?
இது கௌதமின் உதிரம்தானா..?
அவனை ஏதாவது செய்து விட்டானா இந்த விநாயக்..?
தலை வெடித்து விடும் போலானது அவளுக்கு.
கௌதமிடம் சென்று பேசலாம் என்றால் அவளை நகர விடாமல் பிடித்தல்லவா வைத்திருக்கிறான் இந்தப் படுபாவி.
“ஏய் உன்கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்.. எதுக்காக திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருக்க..?’ எனக் கேட்டான் அவன்.
“இ.. இந்தச் செயின்ல ரத்தம் எப்படி வந்தது..? நீங்க அவனை என்னவோ பண்ணிட்டீங்கல்ல..?” என கண்ணீரோடு கேட்டவளின் கன்னத்தை அழுத்தமாகப் பிடித்தவன்,
“அவனுக்காக நீ என்கிட்ட சண்டை போடுறதோ அவனுக்காக என் முன்னாடி நீ அழுறதோ எனக்கு சுத்தமா பிடிக்கல.. நமக்கு நடுவுல அவன் எதுக்கு வரணும்..?”
“விநாயக் ப்ளீஸ்.. கௌதம் பாவம்…”
“ப்ச் லீவ் இட் பேபி.. அந்த டாபிக் எடுக்காத..” என்றவன் இரவு உணவு உண்ணலாம் என அவளை அப்படியே கையோடு அழைத்துச் சென்றுவிட இவளுக்கு நொடிக்கு நொடி பதற்றம்தான் கூடிக்கொண்டே போனது.
அவனுடைய பேச்சுக்கள் எதுவுமே அவளுடைய காதுகளை எட்டவே இல்லை.
“சாப்பிடு பேபி..” வற்புறுத்தினான் அவன்.
ஒவ்வொரு கவளமாக பிசைந்து அவள் வாய்க்குள் வைத்த உணவு தொண்டையைத் தாண்டி வயிற்றுக்குள் இறங்காமல் சிரமமாக இருந்தது அவளுக்கு.
உற்ற நண்பனுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற எண்ணம் அவளை இடைவிடாது வாட்டிக் கொண்டே இருக்க எப்படி உணவு உள்ளே இறங்கும்..?
தண்ணீரைக் குடித்து கண்ணீரோடு எழுந்து கொண்டாள் அவள்.
“என்னாச்சு தூரி..?”
“போ.. போதும் இதுக்கு மேல என்ன கம்பல் பண்ணாதீங்க.. என்னால சாப்பிட முடியல..” என்றவள் அவன் எதுவும் கூறுவதற்கு முதல் கை கழுவி விட்டு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக ஓடினாள்.
படுக்கையில் இருந்த தன்னுடைய ஃபோனை எடுத்து கௌதமனுக்கு அழைத்தவள் அவன் அழைப்பை ஏற்பதற்காக காத்திருக்க அவளுக்கோ ஏமாற்றம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
ஒருமுறை இரண்டு முறை அல்ல கிட்டத்தட்ட ஆறு முறை அவள் அழைப்பு தொடுத்தும் அந்த அழைப்பை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
முழுதாக ரிங் போய் கட் ஆகியதும் இடிந்து போய்விட்டாள் அவள்.
அவனுக்கு என்னவாயிற்று என எப்படிக் கண்டுபிடிப்பது..?
அவன் எங்கே இருக்கிறான் எந்த ஊரில் வசிக்கிறான் என்பது கூட அவளுக்குத் தெரியாதே.
அவன் அழைப்பை ஏற்றால் மட்டும்தான் அவனைத் தேடிக் கூட அவளால் செல்ல முடியும்.
தலைவலி தாங்க முடியாது போக நேரத்தைப் பார்த்தவள் திகைத்துப் போனாள்.
கடிகாரமோ நேரம் இரவு 9 என்றது.
இவ்வளவு நேரமும் கௌதமனைப் பற்றி வேதனையில் ஆழ்ந்திருந்தவள் தற்போது தன்னைப் பற்றி கவலைப் படத் தொடங்கி விட்டாள்.
இவ்வளவு நாட்களும் நிம்மதியாக ஆடையுடன் அல்லவா உறங்கினாள்.
இன்று அவன் முன்பு மீண்டும் நிர்வாணமாக நிற்க வேண்டி வந்து விடுமோ..?
அந்த எண்ணமே அவளை மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.
அரை மணி நேரம் அவளை தவிக்க வைத்து விட்டு அதன் பின்னரே அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
கௌதமன் என்னவானான் என்ற கேள்வி வேறு அவளைக் குடைந்து கொண்டிருந்தது.
அவனோ எதுவும் நடக்காதது போல படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
“ட்ரெஸ்ஸ ரிமூவ் பண்ணிட்டு வரலாமே..” என அவன் ஆசையாகக் கூறியதும் அவளுக்கு உடல் வெறும் கூடாகியது போல இருந்தது.
மறுத்துப் பேசவோ மறுக்கவோ அவளுடைய உடலில் பலம் நிச்சயமாக இல்லை.
மீண்டும் மீண்டும் இந்த அவலம்தான் அவளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு நடக்கப் போகின்றதோ..?
வேதனையோடு தன்னுடைய மேலாடையில் கரத்தை வைத்தவள் கரங்கள் நடுங்க தன்னுடைய ஆடையை அகற்றத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த விநாயக்கின் உடல் வெகுவாக தடுமாறியது.
“பேபி…. ஸ்டாப்… வேணாம்..” சட்டென கூறினான் அவன்.
முன்பு அவள் பழிவாங்க அழைத்து வரப்பட்டவள் ஆனால் இப்போது அப்படி இல்லையே.
அவன் உயிருக்குயிராக நேசிக்கும் காதலி அல்லவா அவள்.
அவளுடைய ஆடைகளை அகற்றி வெற்று உடலை பார்க்கும் திடம் நிச்சயம் இப்போது அவனிடம் இல்லை.
இனி அவளோடு ஆடை இல்லாமல் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் அது தங்களுடைய திருமணத்திற்கு பிறகாகதான் இருக்க வேண்டும் என எண்ணியவன்,
“இனி நீ ட்ரெஸ் ரிமூவ் பண்ண வேணாம்… வந்து தூங்கு..” எனக் கூறினான்.
நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் அவள்.
உடலில் உள்ள அத்தனை சக்தியும் வடிந்துவிட்டாற் போல இருந்தது.
விலகிய ஆடையை இழுத்து விட்டவளுக்கு மனமும் சோர்ந்து போனது.
“உன்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம்..” என்றாள் அவள்.
💜💜💜
Super sindhu
Super epiii ❤️❤️