“அதுதான் உன்கிட்ட வந்து பேசினாலே அந்த ட்ரெடிஷனல் கேர்ள் அவதான் நீ சொல்லித்தான் அந்தப் பொண்ணு என்கிட்ட வந்து மிஸ் பிஹேவ் பண்ணினான்னு எனக்கு நல்லாவே தெரியும்..”
“இல்… இல்லையே என் மேல சும்மா வீண்பழி போடாதீங்க..” என்று அவள் குரலை உயர்த்தி மறுத்துப் பேச,
“பொய் சொல்லாத நிவேதா மேடம்ட கார் எனக்கு நல்லாவே தெரியும் நான் வர்றதுக்கு முன்னுக்கு அந்த கார் பார்கிங்ல நின்னத பாத்துட்டு தான் உள்ள வந்தேன் நான் இங்க வாரதுக்கு முன்னே நீ வந்துட்டே இருந்தும் என்னை சந்திக்க நீ இன்னும் வரல்ல என்று நான் அப்பவே சந்தேகப்பட்டேன்
அதுக்கப்புறம் அந்த பொண்ணு வந்துட்டு போன போது தான் நான் பார்த்தேன் அந்த மரத்துல நீ மறைந்திருக்கிறத இப்படி எல்லாம் ஏன் பண்ணுற பிடிக்கலன்னா உங்க அம்மா கிட்ட நீ விஷயத்த சொல்லிடு தட்ஸ் இட்..” என்று அவன் ஒவ்வொன்றாகக் கூறக் கூற நிவேதாவிற்கு தான் செய்த திருட்டுத்தனம் பிடிப்பட்டு விட்டது என்று பெரிதும் அவமானமாகிப் போனது.
“உனக்கு பிடிக்கலைன்னா நீ அதை தாராளமா என்கிட்ட நேர்ல சொல்லி இருக்கலாம் ஏன் இப்படி மோசமா எல்லாம் நடந்துக்கிற இந்தக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லன்னு சொல்ற அப்படின்னா நீ ஏன் என்னை செக் பண்ணி பாக்கணும்னு
அவசியம் இல்லையே அம்மா எனக்கு புடிக்கல அவ்வளவுதான் விஷயம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நான் நல்லவனா கெட்டவனா என்று என்னை செக் பண்ணி பாக்குற நீ ரிஜெக்ட் பண்றவன செக் பண்ணி பார்க்கிறது
அவ்வளவு முக்கியம் இல்லையே உங்க அம்மா அப்பவே சொன்னாங்க என்னோட மகள் ரொம்ப நல்லவ ஆனா கொஞ்சம் குறும்புத்தனமும், அடாவடித்தனமும், பிடிவாதமும், கோபமும் இருக்கு மற்றும் படி பொண்ணு நல்ல பொண்ணு தான் என்று சொன்னாங்க ஆனா அவங்க சொன்னத பாத்தா நீ நடந்துக்கிறது இவ்வளவு கேவலமா கீழ்த்தனமா இருக்கே..” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கார்த்திகேயன் என்று கூற,
அவளால் அந்த வார்த்தைகளை காது கொண்டு கேட்கவே முடியவில்லை உடனே அவ்விடத்தை விட்டு புயல் வேகத்தில் வெளியேறினாள் நிவேதா.
ஏதோ முள்ளின் மேல் நிற்பது போல அவளுக்கு அவ்வளவு வலித்தது.
காருக்குள் வந்து ஏறிய நிவேதாவுக்கு அவ்வளவு கோபம்.
யார் இவன் எனக்கு கீழே வேலை செய்றவன் எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு சொல்லித் தாரானா..? ரீனா சொன்னாலேன்னு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு யோசிச்சா இல்ல இது சரிவராது..” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கும்போது ரீனா காரிற்குள் ஓடி வந்து ஏறியவள்,
“என்னடி மை டியர் ஹன்ட்ஸம் என்ன சொல்றாரு..”
“பிளடி இடியட்..” என்று அந்த பொம்மைத் துப்பாக்கியை எடுத்து ரீனாவின் முகத்தில் எறிந்தாள் நிவேதா.
“என்னடி கோபமா இருக்க இதைக் காட்டி மிரட்டினதும் கல்யாணம் வேணாம்னு பயந்து ஓடிட்டானா..?” என்று ரீனா மனதளவில் மிகவும் கவலையாக கேட்க,
“அவன் எங்கடி பயந்தான் நான் தான் பயந்து ஓடி வந்துட்டேன் அங்க நடந்ததை நீ பார்த்திருந்த நெஞ்சுக்குள்ள இருக்குற இதயம் வாய் வழியா வெளிய வந்திருக்கும்..” என்று கூறியவள் ஏதோ ஞாபகத்திற்கு வர,
“ஆஹ் அது சரி ரீனா உன்ன நம்பி ஒரு வேலை தந்தா நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க..?”
“ஏன்டி அப்படி சொல்ற நான் என்ன பண்ணினேன்..?”
“அந்தத் துப்பாக்கியை எடுத்து உன் தலையில வச்சு நீயே சுட்டு செத்துப் போ..”
“அடியே உன்னோட உயிர் தோழியை பார்த்து நீ இப்படியா சொல்லுவ..?”
“அது பொம்மை துப்பாக்கிடி அத காட்டி அவனை விரட்டி விடுவோம் என்று பார்த்தா நான் அதை எடுப்பதற்கு முன்னே எடுத்து இந்த நிவேதாவுக்கே மரண பயம் என்னன்னு கண் முன்னுக்கு காட்டிடான்டி இது பொம்மை துப்பாக்கியாம் நான் கன் வேண்டுறதுக்கு கொடுத்த பத்து லட்சம் எங்க..”
‘அய்யய்யோ பணத்தை கேக்குறாளே..! எப்படி சமாளிக்கிறது..? ரீனா உனக்குத் தெரியாத வித்தையா சும்மா அள்ளி விடு..’ என்று மனதிற்குள் எண்ணங்களை உலாவ விட நிவேதாவோ அவளின் பதிலுக்காக ரீனாவை முறைத்துக் கொண்டு காத்திருந்தாள்.
“அ…து வ…வந்து… நிவேதா நான் உண்மையான துப்பாக்கி வாங்கத்தான் பணம் கொடுத்தேன் அந்த ரவுடி நம்மள ஏமாத்திட்டான் போல ஆனா கேட்கவும் பயமா இருக்கு அவன் ரொம்பப் பொல்லாத முரடன்..” என்று பொய்களை அள்ளி வீசியவள்,
“அத விடு நிவேதா நீ என்ன முடிவெடுத்து இருக்க..?”
“அத பத்தி பேசவே எனக்கு விருப்பம் இல்ல தயவு செய்து காரை விட்டு இறங்கு நான் வீட்டுக்கு போகணும்..” என்று கூறவும் ரீனா காரை விட்டு உடனே இறங்கினாள்.
ரீனா காரை விட்டு இறங்கிய அடுத்த கணம் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு புயலாக பறந்தது.
அந்த அழகிய கிராமமே பச்சை நிற கம்பளத்தால் போர்க்கப்பட்ட ஒரு சிறிய உலகமாக இருந்தது. அங்க இருப்பவர்களுக்கு விவசாயம் தான் எல்லாம்.
அவர்கள் அதனைத் தெய்வமாக மதித்து செய்கின்றனர். அதுபோல அந்த கிராமத்தவர்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் மதிப்பே இருந்தது.
அந்த ஊரில் மிகவும் பணக்காரன் மற்றும் பஞ்சாயத்து தலைவன் எல்லாமே சிங்காரம் தான். அவன் கண்ணசைத்தால் அந்த ஊரில் உயிரைக் கொடுக்க கூட யாரும் தயங்க மாட்டார்கள்.
அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேச எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவனது கண் அசைவுக்காக காலடியில் காத்துக் கிடக்கும் பல பேர் காத்துக் கிடக்கின்றனர்.
ஏனெனில் அங்கே கிராமத்தில் இருக்கும் அரைவாசிக்கு மேலான நிலங்கள் எல்லாம் அவனுடைய சொத்துக்களே..!
அவனுடைய தந்தையின் காலத்தில் இந்த சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு தானமாகவும் குத்த வைக்கும் தந்தை கொடுத்திருக்க அதை பேணி பாதுகாக்கும் பொறுப்பு அவனது தந்தை இறந்த பிறகு அவனது கையில் வந்து சேர்ந்தது.
சிங்காரம் மிகவும் புத்திசாலி, மிகவும் கோபக்காரன், அதிகமாக கோபம் வந்தாலும் அன்பில் சிறந்தவன். அவனின் அன்பின் இரு வடிவங்களும் அவனது மகனும் மகளும் ஆகும்.
மகன் விக்ரம் மகள் மகிழ்மதி.
விக்ரம் மிகவும் பொறுப்பில்லாதவன் மூத்தவனாக இருந்தாலும் எதிலுமே அக்கறை இல்லை காசு செலவழிப்பதிலும் களியாட்டம் நிகழ்ச்சி பூத்து பார்ப்பதிலும் என்று தனது பொழுது ஓகே கம் சந்தோஷத்திற்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பவன்.
மகிழ்மதி பெயரைப் போன்று மிகவும் அழகானவள். மெல்லிய தேகமும், அழகிய வண்ண முகமும், அனைவரையும் கவரும் புன்னகையும், நிமிர்ந்த பார்வையும், தைரியமான குணமும் அவளது அழகுக்கு மேலும் மெருகூட்டியது.
மகிழ்மதிக்கு படிப்பதில் அதிக ஆர்வம். அதனால் அவள் வெளியூர் சென்று காலேஜில் படித்து வருகின்றாள். ஆனால் விக்ரமுக்கு படிப்பில் எந்தவித பிடித்தமும் இல்லை.
ஐந்து வயதிலேயே ஆசிரியரின் மண்டையை உடைத்து விட்டு வீட்டுக்கு வந்தவன் தான். அதற்குப் பின்பு பள்ளிக்கூட பக்கமே அவன் நெருங்கவே இல்லை.
தந்தையின் பணத்தை செலவழிப்பதிலும் சூதாடுவதிலும் பெண்களுக்கு பின் திரிவதற்கே அவனுக்கு நேரம் போதாது.
ஒவ்வொரு விடுமுறைக்கும் அவள் வருவது சிங்காரத்திற்கு பெரிய திருவிழா போலவே இருந்தது. அவளது வரவை கொண்டாட்டமாகவே அவர் கொண்டாடுவார் வீட்டில் வேலை செய்பவர் தொடக்கம் அனைவருக்கும் உணவு வழங்கி அந்த சந்தோஷத்தை அவர் அனைவருடனும் பகிர்ந்து கொள்வார்.
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மேற்படிப்பு படிக்க தொடங்கியதில் இருந்து அவளால் ஊர் பக்கம் வர முடியவில்லை.
அதில் சோர்ந்து போன சிங்காரம் தான். மூன்று வருடங்கள் கழித்து இன்று மகள் வருவதாக கூற உடனே ஊர் முழுக்க பந்தல், ஊர் மக்களுக்கு சமையல், பட்டாசு என தனது கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கி விட்டார்.
சிங்காரத்தின் அதீத அன்பை பார்த்து அங்கு கவலை கொள்ளாத பெண்களே இல்லை. இந்த பணக்கார வீட்டில் நாம் பிறந்திருக்கலாமே..!
இல்லையென்றால் இந்த வீட்டுக்கு ஒரு நாயாகவாவது இருந்திருக்கலாம் சிங்காரம் ஐயாவுக்கு நாயாக இருந்திருந்தால் கூட அந்த நாய்க்கு கூட எப்படிப்பட்ட வாழ்வு கருணையின் வடிவமான சிங்காரத்தை அனைவரும் அன்புடன் மரியாதை செலுத்தினர்.
காலை 10 மணி அளவில் வீட்டிற்கு வருவதாக கூறி இருந்த மகிழ்மதியைக் காணாது சிங்காரம் அந்த நடு வெயிலிலும் வெளி வாசலில் அங்கும் இங்கும் நடைபயன்று கொண்டிருந்தார்.
ஊர் மக்கள் அங்கு பட்டாசுடன் கூடியிருக்க அந்த நேரம் போலீஸ் ஜீப் ஒன்று மிகவும் வேகமாக சிங்காரத்தின் முன்னே வந்து நின்றது.
ஊரில் உள்ள அனைவருக்கும் சர்வமும் அடங்கிப் போனது. ஏனெனில் இதுவரை காலமும் ஊருக்குள் போலீஸ் நுழைந்ததாக சரித்திரமே இல்லை.
ஊரில் இருந்து எப்போது என்ன தவறு நடந்தாலும் அதை சிங்காரமே பஞ்சாயத்து மூலம் தீர்த்து வைப்பார்.
ஊர் எல்லையில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும் அவர்களுக்கு சிங்காரம் எந்த வேலையும் கொடுப்பதும் இல்லை. அவர்கள் அத்துமீறி ஊருக்குள் நுழைந்ததும் இல்லை.
சிங்காரத்திற்கு போலீஸ் என்றால் ஆகாது. அந்தப் போலீஸ் ஜீப்பை ரௌத்திரத்துடன் பார்த்த சிங்காரம்,
“யாருடா அந்த போலீஸ் ஜீப்ப ஊருக்குள்ள விட்டது..?” என்று வானம் முட்ட குரல் எடுத்து கர்ச்சித்தார்.
அந்த ஜீப்பிலிருந்து இறங்கிய நபரை பார்த்ததும் அடுத்த நிமிடம் அவரது கர்ச்சனை எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.
அது யாராக இருக்கும்..?
அந்த நபரைக் கண்டதும் ஏன் சிங்காரத்தின் கோபம் குறைந்து போனது..?
வாசகர்களே நீங்க அது யாருன்னு கெஸ் பண்ணுங்க பாப்போம்…?