5) செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(2)

சிசிவி ப்ளே ஸ்கூல் அண்ட் சி.பி.எஸ்.சியில் ஆதிரன் அவனது விளையாட்டு சாமான்களோடு உறங்கி கொண்டிருந்தான்.

 

அன்பினி அவனை பார்த்த வகையில் அமர்ந்து அவனை குண்டு விழிகள் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் அவனது விளையாட்டு சாமான்களின் அருகாமையில் அவளும் தூங்கி விட்டாள்.

 

குழந்தைகளின் பருவத்தில் மாற்றுப்படுத்தாமல் அவர்களை கவனித்து கொள்வது தான் பிளே ஸ்கூல்.

 

இருவரையும் அங்கே சேர்த்து விட்டு தங்களது வருங்கால திட்டத்தில் இறங்கினார்கள் அன்பரசியும் ஸ்ரீஜாவும்.

இருவரும் சேர்ந்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்ததன் முக்கிய நோக்கமே ரெஸார்ட்டில் உள்ள அமைப்புகளை மாற்றி அவற்றை மேலும் பெரிது படுத்துவது.

 

இவ்விருவருக்கும் தெரியாமல் பாஸ்கரனும் இன்பரசனும் இவர்களுக்கு இருவருக்கும் சேர்த்து ஒரு ஸ்கூட்டியை வாங்கி சர்ப்ரைஸ் செய்ய காத்திருந்திருந்து பரிசளித்து சந்தோஷப்பட்டார்கள்.

 

அதே நேரம் சி சி வி பள்ளியில் தூங்கி முடித்து எழுந்த ஆதிரன் அன்பினி தனது விளையாட்டு சாமான்களுடன் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவளது தலையில் நங்கென்று கொட்டி விட்டான்.

 

ஐயோ….

 

அடித்த அடியில் தலையை தடவிக் கொண்டு கத்தியதோடு எழுந்தவளை ஓடி வந்து தூக்கினார் ஒரு கவனிப்பாளர்.

 

ஆதிரனை  ஒருவர் தூக்கி கொண்டனர்.

 

அவன் அவளை முறைத்துக் கொண்டே இருந்தான்.  என்னோட பொருளை எப்படி அவ யூஸ் பண்ணலாம்.  உள்ளுக்குள்ளே புலுங்கி கொண்டிருந்த அவனது மனதிற்கு விடை ஏது.

 

அன்பினியும் இவனைப் பார்த்து முகத்தை சுளுக்கிக் கொண்டு கவனிப்பாளரோடு விளையாட துவங்கி விட்டாள்.

 

பள்ளி நேரம் முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களிடமும் இவற்றை சொல்ல அவர்கள் அவற்றை  வெறும் விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்.

 

ஆதி… அன்பினி பாப்பா ரொம்ப நல்ல பொண்ணுடா ….அவ கிட்ட சமத்தா நடந்துக்கோ.. இப்படி எல்லாம் சேட்டை பண்ண கூடாது.

 

மூன்று வயது முழுங்கிய குழந்தைக்கா அது தெரியப்போகிறது.

 

அன்பரசியின் திட்டுக்கள் அனைத்தும் செல்லா காசாகி கொண்டிருந்தன.

 

தினம் ஆதரனின் சேட்டைகளை கவனிப்பாளர்கள் சொன்னாலும் ஸ்ரீஜாவினால் கேட்க இயலாது.  காரணம் அவளுக்கு அன்பினியை தாண்டி ஆதிரன் மீது அதிக அன்பு.

 

அன்பரசிக்கோ ஆதிரனையும் திட்ட இயலாது. அன்பினியிடமும் புரிய வைக்க இயலாது.

 

சும்மா ஒரு அதட்டலை மட்டும் போட்டுவிட்டு இருவரையும் கவனித்துக் கொள்வாள்.

 

இவர்களின் விளையாட்டை எண்ணியிருக்கையிலே  அவர்களின் செயல்கள் காலப்போக்கில் மாபெரும் பிரச்சனைகளாக உருவெடுத்தன.

 

இருவரும் நெடு நெடுவென வளர்ந்து இப்போது ஒன்பதாம் வகுப்பில் மாணவ மாணவியருக்கு வகுப்பு லீடராக இருந்தார்கள்.

 

பெண்களுக்கு அன்பினியும் ஆண்களுக்கு ஆதிரனும் லீடராக இருந்தான்.

 

ஆதிரனின் லீடர்ஷிப்பில் முக்கிய அறிவிப்பு பெண்கள் யாரும் ஆண்களிடம் பேசக்கூடாது என்று!..

 

இவன் பெரிய போலீஸ் மேன் போடா… ஏதாவது டவுட் யாருக்காவது இருந்ததுனா நீங்க யார்கிட்ட வேணா கேட்டுக்கலாம்.

 

அன்பினி தனது லீடர்ஷிப்பை சமனாக நடத்தினாள்.  எந்த வித முன் கோபமோ அல்லது முற்போக்குத்தனமோ இல்லாமல் பொதுப்படையாக பேசினாள்.

 

ஏய் இங்க பாரு பாய்ஸ்க்கு நான் தான் லீடர் …நீ கேர்ள்ஸ்க்கு மட்டும் தான்… சோ உன்னோட லெவல் என்னன்னு தெரிஞ்சிட்டு நடந்துக்கோ.இல்ல நான் ரெண்டு பேரையும் பேச சொல்லுவேன் அப்படின்னு நீ சொன்னைனா நான் இத  டீச்சர் வரைக்கும் இந்த கம்ப்ளைன்ட்ட கொண்டு போவேன்.

 

அன்பினிக்கு ஆதிரனின் மீது அளவு கடந்த கோபம் வந்தது.  சிறு வயதிலிருந்தே தன்னை சீண்டிப் பார்க்கும் குணம் கொண்டவன் மீது அவளுக்கு எப்படி அன்பு பிறக்கும்.

அப்படியே ஏதாவது ஒரு வகையில் பிறந்திருந்தால் இவன் செய்யும் ஒவ்வொரு செயலாலும் அவை செத்தே போயிருக்கும்.

 

இங்க  கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் அப்படிங்குறது வெறும் பாலினம் மட்டும் தான்.  இங்க நல்லா படிக்கிறவங்க கேர்ள்ஸ்ளையும் அதிகமா இருக்காங்க பாய்ஸ்லையும் அதிகமா இருக்காங்க.

சோ யார் யாருக்கு  யாரோட கம்ப்யூடப்பிலா இருக்குமோ அவங்க அவங்களோட படிச்சுக்கட்டுமே….

 

அந்த வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் ரேங்கை பெற்று இருந்தவர்கள் ஆண் குழந்தைகள்.  ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களிடம் சென்று கேட்பதில் என்ன தவறு என்பதை தான் இப்போது அன்பினி ஆதிரனுக்கு உணர்த்த முயற்சித்தாள்.

 

ஏய் முட்டக்கண்ணி நான் சொல்றத மட்டும் கேளு.  சும்மா ஓவரா சீன் போடாத சரியா.  போன போகுதுன்னு லீடர்ஷிப் கொடுத்தா நீ என்னமோ தையத் தக்க தையத்தக்கான்னு குதிக்கிற.  இங்க மெயின் லீடர் நான் மட்டும் தான்.  நீ என்னோட சப் லீடர்  மட்டும் .   நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் தான் நீ கேட்கிறே அண்ட் செய்யுற.

 

அன்பினியிடம் நான் தோற்றுப் போவதா.  குழந்தை பருவத்திலேயே அவனுக்குள் இருந்த அன்பினி மீதான வெறுப்பு இதோ இப்போது நெடுநடுவென வளர்ந்த போதும் நீங்காமல்  அவளது சொல்லுக்கு கூட மதிப்பளிக்காத அளவிற்கு துளிர் விட்டு சென்று கொண்டிருக்கிறது..

 

அன்பினியும் நான் டீச்சர் கிட்டயே பேசுகிறேன் என்று வகுப்பாசிரியர் இருக்கும் அறையை நோக்கி நகர்ந்தாள்.

 

இவன் சொல்லியதை தாண்டியும் அவள் செய்ததால் அங்கே சில சிறு வண்டுகள் சிரித்து ஆதிரனின் கோபத்தை மேலும் தூண்டின.

 

இவர்கள் அனைவரும்  ஆதரனின் நண்பர்கள் கூட்டம் தான். இருந்தும் அவனது பேச்சுக்கே அங்கு இடம் இல்லை என்பதும் சிரித்து அவனை வெறுப்பேற்றுகிறார்கள்.

 

அவள் பின்னாலையே சென்ற அதிரனும்

 

ஹே நில்லு குண்டு கன்னி…

 

நான் உனக்கு குண்டு கன்னியா…

 

அப்பாவியாக கேட்டால் அன்பினி..

 

ஆமா ஏதோ கோழி முட்டை பொறுக்கிறப்ப அதை நீ எடுத்து முழுங்கிட்ட மாதிரி இத்தச்சோடு வெச்சிருந்தா நான் அப்படித்தான் கூப்பிடுவேன்…

 

அன்பினி மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்று உயரம் குறைந்தவள்.  அவளது கண்களோ ஒரு கோழி உருண்டையை முழுங்கினால் வெளியே தெறித்து விடும் அளவு அவை இருந்தன.

 

மற்றவர்களுக்கு அவற்றைப் பார்க்கும்போது ரசனை அளிக்கிறதோ என்னவோ இந்த குண்டு கண்களை பார்க்கும் போது அதில் ஆதிரனுக்கு எரிச்சல் தான் வருகிறது.

 

இப்போது அவள் வேறு கோபத்தை ஏற்படுத்தி விட அவளை நாசுக்காக காயப்படுத்த தொடங்கினான்.

 

கண்ண பாரு தின்னு தின்னு நல்லா வீங்கி போன பண்ணு மாதிரி..

 

அஆதி யூ கிராஸ் தி லிமிட்…

 

என்ன கிராஸ் த லிமிட்… லீடர்ஷிப்ப தாண்டி நீ பேசும்போது நானும் அப்படித்தான் பேசுவேன்.

 

நான் இப்பவே போய் நம்ம டீச்சர் கிட்ட உன்ன பத்தி கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.  லீடரே ஒழுங்கா‌ இல்லைனா ஸ்டூடன்ட் எப்படி ஒழுங்கா இருப்பாங்க.

 

ஓ நீங்க ஆதிய குறை சொல்ற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டீங்களா?.. நக்கலோடு அவளது ஸ்கூல் யூனிபார்ம் ஐ பிடித்து இழுத்தான்.

 

ஆதி டோன்ட் டச் … டோன்ட் டச் மை டிரஸ்…

 

அவளது யூனிஃபார்மை பிடித்து இழுத்தவன் அவளது வலது கையை கடிக்க தொடங்கினான்.

 

ஐயோஓஓஓஓஓ….அம்மா வலிக்குது காப்பாத்துங்க யாராவது….

 

வீரென்று அன்பினி கத்த பக்கத்து அறையில் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் ஓடி வந்து ஆதிரினை தடுத்து நிறுத்தினாள் நந்தினி.

 

ஆதி என்ன பண்ற நீ…

அன்பினி என்ன ஆச்சு…

 

ஆதி மற்றும் அன்பினி வகுப்பாசிரியர் தான் தற்போது பக்கத்து வகுப்பில் அன்றைய பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

உடனடியாக பெற்றோருக்கு அழைத்து அவர்களை உடனே பள்ளிக்கு வருமாறு சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவள் இருவரையும் முட்டியிட்டு அமருமாறு சொல்லிவிட்டாள்.

 

அன்பினியை அழைத்து என்ன நடந்துச்சு சொல்லு அன்பு என்று நந்தினி கேட்டாள்.

 

தினம் ஏதாவது பிரச்சனை அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் பிரச்சனை மிஞ்சிப் போனால் மாதத்தில் பதினைந்து முறை பிரச்சனை எல்லாம் செய்து விட்டான் ஆதிரன் அன்பினியிடம்.

 

இதனால் அந்தப் பள்ளியிலேயே ஆதிரன் மற்றும் அன்பினி என்றால் அனைத்து வகுப்பு ஆசிரியருக்கும் நன்றாக தெரியும்.

 

இதில் பாவப்பட்டவர்கள் யார் எனில் இவ்விருவரையும் பெற்ற நால்வர்கள் தான்.

 

பேச்சு வராத வயதில் ஆதிரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் இருந்தால் அன்பினி.  இப்போது ஓரளவுக்கு பேச்சு வந்ததன் விளைவாக அவன் பேசும் எந்த சொல்லுக்கும் எதிர்ச் சொல் அவளிடம் உண்டு.

 

இதன் விளைவாக வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் பெற்றோர் பள்ளிக்கு வந்து வகுப்பாசிரியரிடம் சரமாரியாக திட்டுக்களை வாங்கி கொண்டு செல்வார்கள்.

 

வேகமாக ஸ்கூட்டியில் பறந்து வந்த அன்பரசி மற்றும் ஸ்ரீஜா வகுப்பு ஆசிரியர் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள்.

 

ஆதிரனை கண்ட முதலில் அன்பரசி “டேய் எங்க அம்ம அஞ்சு, ஆறு பிள்ளை பெத்து கூட நல்லபடியா வழத்திட்டாங்கடா…உன்ன ஒருத்தன பெத்து என்னால நிம்மதியா வளர்க்க முடியவில்லை”.. என நொடிந்து கொண்டு நடந்தாள்.

 

அன்பினியின் கையோ பனியார சைசில் வீங்கி இருந்தது.

 

அவளுடைய சட்டையை மேற்புறமாக தூக்கவும் இயலாத அளவுக்கு முட்டிவிட்டது அவன் கடித்த கடி.

 

அம்மா ரொம்ப வலிக்குதும்மா….

 

அழுது கொண்டே ஓடிச் சென்று ஸ்ரீஜாவை கட்டி கொண்டாள்.

 

அன்பரசிக்கு அன்பினியை பார்க்கும் வரை அவ்வளவு கோபம் வரவில்லை.  அவளது வீங்கிய கையை கண்டதும் கண்மூடித்தனமாக கோபம் வந்து பள்ளிக் கூடத்திலேயே ஆதிரனை அடித்து கிழித்து விட்டாள். ஸ்ரீஜா எவ்வளவு தடுத்து பார்த்தும் காயங்கள் எனும் அளவிற்கு அவனுக்கு அடி விழுந்து விட்டது.

 

ஏன்டா டேய் இனிமே பிள்ளைய நீ கடிப்பே… இனிமேல் பிள்ளையை கடிப்பது மட்டுமில்ல அவன் மேல கைய வச்ச மவனே உன்னை பிச்சுப்புடுவேன் பிச்சு…

 

ஒரு தாயாக அவனை அடித்தும் பார்த்து விட்டால் திட்டியும் பார்த்துவிட்டாள் . இருந்தும் அவனுக்கு ஏனோ அன்பினியின் மீது தீராத கோபம் வந்து கொண்டே இருந்தது.

 

இதில் கூடுதல் பலனாக அவ்வப்போது வந்து செல்லும் தீபாவின் அறிவுரைகளையும் அவன் ஏற்றுக் கொள்கிறானே!..

 

முன்பொறு  சமயத்தில் அப்படித்தான் தனது குழந்தையை காட்டி செல்வதற்காக வந்திருந்த தீபா, சிறுவனான ஆதரனிடம் செய்துவிட்டு சென்றுவிட்டாள்.

 

இங்க பாரு ஆதி அன்பரசி ரொம்ப பாசமா இருக்கிறது அன்பினி மேல தான்.  அன்பரசிக்கு உன்னை விட அன்பினிய தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  நீ வேணா அன்பினிய ஏதாவது பண்ணிப்பாரு  அன்பரசி தான் முதல்ல கோவப்படுவா.  உன்ன அடிப்பாள்.  ஆனால் அன்பினிய ஒரு கேள்வி கூட கேட்க மாட்டா.  ஏன்னா அன்பரசிக்கு அந்த யாரோ வீட்டு பிள்ளை தான் ரொம்ப முக்கியம் அவளுக்கு.  நீ அவ பெத்த பிள்ளை.  ஆனா உன்ன கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டேங்குறாளே.  இதெல்லாம் எனக்கு புரியுது உங்க அம்மாவுக்கு தான் புரிய மாட்டங்குது என்ன பண்றது.

 

சிறுவயதிலேயே ஆதரினுக்கு ஸ்ரீஜாவின் மீதும் அன்பினியின் மீதும் அளவு கடந்த கோபம் வருவதற்கான விதையை இட்டுச் சென்றவள் தீபா.

 

ஸ்ரீஜா ஆதிரனை அன்பாக கவனித்துக் கொள்வதாலும் அவனுக்குத் தேவையான செலவுகளை அவ்வப்போது அவள் செய்வதால் அவள் மீது அவனுக்கு கோபம் எல்லாம் இல்லை.

 

ஆனால் அன்பினி அப்படி இல்லை.  அவன் தவறு செய்தால் இது தவறு என்று சொல்லிக் காட்டி விடுவாள்.  கூடவே பெற்றோரிடமும்  கொடுத்து விடுவாள். பள்ளிகளில் வகுப்பு ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்.

 

இதனாலே ஆதிரனுக்கு அன்பினி மீது அன்பு என்ற ஒன்று இல்லாமலே போனது.

 

வகுப்பாசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீஜாவிற்கும் அன்பரசிக்கும் செல்லுகையிலே  கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

 

அப்ப தீபா அத்தை சொன்னது ரொம்ப கரெக்டா போச்சு.

 

அன்பினிய நான் கடிச்சன்னதும் அம்மா என்னை எப்படி அடிச்சாங்க. ஆனா இப்ப அவளை மட்டும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்க…என்ன வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்கள்ள….

 

தீபாவின் எண்ணம் என்ன என்பதை அறியாமல் தீபாவினை முழுவதுமாக நம்ப ஆரம்பித்திருந்தான் ஆதிரன்.

 

டிடி இஞ்செக்சன் போட்ட மருத்துவர்கள் மூன்று வாரத்திற்கு அவளால் கையை அசைக்க முடியாது என்று சொல்லி அனுப்பினார்கள்.  மேலும் வீசிங் ஏதாவது அவ்வப்போது வருகிறதா என்றும் கேட்டுவிட்டு அனுப்பினார்கள்.

 

அன்புக்கா நாங்க வேணா வீடு மாத்திக்கவா… அதான் ஆதி தம்பிக்கு அன்பினிய சுத்தமா பிடிக்காம போயிடுச்சே…

 

ஸ்ரீஜாவின் மன குழப்பத்தை அன்பரசி இடம் கேட்டு அறிந்து கொள்ள முயற்சித்தாள்.

 

என்ன ஶ்ரீமா பேசுற..அவன் சின்ன பையன் இப்போதைக்கு தெரியாம பண்ணிட்டான் வளர வளர அவனுக்கு புரிஞ்சுடும்டா…

 

இங்க பாருங்க என்ன விட்டு நீ இனிமே எங்கயுமே போகக்கூடாது…. நீ இல்லைனா நான் இல்லவே இல்லை இனிமே எப்பவுமே….  நீ என்ன விட்டு போறதா இருந்தா அந்த இடத்துல நான் உயிரில்லாத ஜடமா மட்டும் தான் இருப்பேன் …அதையும் தாண்டி நீ என்னை விட்டு போறேன்னு வச்சுக்கோ நான் செத்து கூட போக தயாரா இருக்கேன்.

 

அன்பரசியும்  ஸ்ரீஜாவும் நெருக்கத்திலும் சரி, உழைப்பிலும் சரி,  உறவிலும் சரி பெரிய அளவில் தங்களுக்குள் அன்பை வளர்த்து இப்போது உண்மையான சகோதரிகளாக மாறிவிட்டார்கள்.

 

இவர்களை அவ்வப்போது காணும் தீபாவிற்கு எழும் குடைச்சலின் காரணத்தினால் ஆதிரனிடமிருந்து ஆரம்பித்தாள்.

 

ஆதிரனை வைத்தாவது இவர்களை எப்படியாவது பிரித்தே தீர வேண்டும்.

 

என்னோட அக்காக்கு நான் தான் ஃபேவரட்டா இருக்கணும்.  அவங்க கூட வாழ்நாள் முழுக்க நான் பிரயாணிக்கணும்.  அவங்களோட சொத்துக்கு நானும் சொந்தக்காரியாகணும்.  அவங்களோட ரெஷார்ட்ல நானும் பார்ட்னர் ஆகணும். இதோ இந்த சங்கீதாவை நான் வேலை வாங்கணும்… அவளோட திமிருக்கும் நான் முடிவு கட்டணும்… பாஸ்கரணையும் ஸ்ரீஜாவையும் இந்த வீட்டை விட்டு துரத்தியே ஆகணும்…

 

இத்தனை ஆக வேண்டும் என்பதனால் முளையும் பருவத்திலேயே ஆதிரனுக்கு  ஸ்ரீஜாவின் மீதும் அன்பினியின் மீதும் தவறான விதையை விதைத்தாள் தீபா.

 

செந்தனலா?…மழையா?..

 

கௌசல்யா வேல்முருகன் 💝.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!