கனி உள்ளே நுழைந்ததும், இனியன் அவளை தான் பார்த்தான். ஆனால் அவள் தான் அவனை சட்டை செய்யாது, அவள் உடை மாற்ற நைட்டியை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவனுக்கு காதில் இருந்து புகை வராத குறை தான். அவனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள் அல்லவா!
இப்போது அவனுக்கும் புரிந்தது, பிடித்தவரின் ஒதுக்கம் எவ்வளவு கொடியது என்று!
உடையை மாற்றி கொண்டு வந்தவள், அவனின் மற்றைய பக்கத்தில் சென்று படுக்க போக, “கனி” என்று அவள் அழைக்க, அவளும் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“பேசணும்”, என்று அவன் சொல்ல, “பேசுங்க”, என்று சொல்லிவிட்டு அவள் உறங்க முற்பட, “உங்கிட்ட பேசணும்”, என்று அவன் சொன்னவுடன், “எதுக்கு நாடு ராத்திரி மூன்றாம் உலக போரை உருவாக்கவா?”, என்று அவள் கேட்கவும், “ப்ளீஸ் டி”, என்று அவளின் கையை பற்றி கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
இப்படி எல்லாம் அவன் கெஞ்சி பல வருடங்கள் ஆகிவிட்டன.
“இப்போ எதுக்கு இப்படி சோப்பு போடறீங்க? இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லையே நாளைக்கு தான?”, என்று அவள் முகத்தை திருப்ப, அவளின் தாடையை பற்றி அவளை பார்க்க வைத்தான்.
அவனின் கை பட்டவுடன், அவனின் கை விரல்களின் தடங்கள் அங்கு இருக்க, அவளும் முகத்தை வலியில் சுருக்கினாள்.
“வலிக்குதா?”, என்று அவனும் கண்களை சுருக்கி கேட்க, “இல்ல இனிக்குது… சாப்பிட்டு பாக்குறீங்களா?”, என்று அவளும் வாய் பேச, “நான் சாப்பிடாததா?”, என்று அவனின் கண்கள் செல்லும் திசை பார்த்தவள், பட்டென அவனின் கைகளில் அடி ஒன்று போட்டாள்.
“நீங்க அரை கிழவன் கூட இல்ல, அதுக்கும் மேல தாண்டிட்டீங்க… போய் படுங்க… நான் காலைல சமைக்கனோம்”, என்று சொல்லி அவள் போர்வையை போர்த்த, அவன் அதை பறித்து விட்டான்.
“இப்போ எதுக்கு ராத்திரி போய் இப்படி வம்பு பண்ணிட்டு இருக்கீங்க?”, என்று அவள் அடிக்குரலில் சீற, “சாரி”, என்று சொன்னவனை பார்த்து, “எதுக்கு சாரி கேக்குறீங்க நான் தான் சாரி கேட்கணும்… உங்க படிப்புக்கும் அறிவுக்கும் நீங்க அந்த மேகனா மாறி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கனும்… இந்த செங்கனி உங்களுக்கு ஏத்தவ கிடையாது”, என்று சொன்னவள் அவளின் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.
“கனி”, என்று அவன் அவள் கன்னங்களை பற்ற முயல, “வேண்டாம் தொடாதிங்க… இதே கையாள தான அந்த பொம்பள இடுப்பை பிடிச்சி ஆடுனீங்க? அதே கையாள என்னை தொடுவீங்களா? எனக்கு அசிங்கமா இருக்கு… நீங்கலாம் பண்றதுக்கு பேரு நாகரிகம் இல்ல, காலாச்சார சீர்கேடு”, என்று அவள் அவனை பொரித்து விட்டாள்.
“காலாச்சார சீர்கேடேல்லாம் இல்ல டி … வேணும்னா மேல் நாட்டு கலாச்சாரம்னு சொல்லிக்கலாம்”, என்று அவன் மீண்டும் வாதாட, “மேல் நாட்டு காலாச்சாரத்துல தான் விவாகரத்து பண்ணிட்டு இன்னோரு கல்யாணம் பண்ணிக்கலாமே…அப்போ நானும் இன்…”, என்றவள் வார்த்தைகளை விழுங்கி இருந்தது அவனின் உதடுகள்.
அவளோ அவனை தள்ளிவிட்டு, “இப்படி முத்தம் கொடுக்குற வேலை எல்லாம் வச்சிக்காதிங்க”, என்று ஒற்றை விரலை நீட்டி சொல்லவும், அவளின் ஒற்றை விரலை பிடித்து கீழே நகர்த்தி, “ஏன் கொடுக்க கூடாது? என் பொண்டாட்டி நான் கொடுப்பேன்”, என்றவனை பார்த்து அக்னி பிழம்பாய் கொடுத்தது அவளின் விழிகள்.
“உங்க பொண்டாட்டி எப்படி உங்களுக்கு மட்டும் இருக்கணும்னு நினைக்கிறீங்களா அதே மாறி என் புருஷனும் என்னைக்குனு இருக்கணும்னு நான் நினைக்கிறன். இதுல என்ன தப்பு இருக்கு?”, என்று அவள் கேட்டவுடன், “தப்பே இல்ல தெய்வமே, தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிரு”, என்று அவன் கும்பிட்டே விட்டான்.
“எனக்கு தூக்கம் வருது”, என்று சொல்லிவிட்டு அவள் படுத்து விடவும், அவனுக்கு தான் தூக்கம் துளைத்து போனது.
திருமணம் ஆனா புதிதில் இது போல பிரச்சனை வரும் போதெல்லாம் எப்படியோ அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து விடுவான் தான். ஆனால் இப்போது எவ்வளவு கெஞ்சினாலும் அவளை சமாதனம் செய்ய முடியாதது போன்ற உணர்வு.
இத்தனை வருடங்களில் என்ன மாறியது என்று அவனுக்கு தெரிந்தால் தானே அவனால் சரி செய்ய முடியும்.
ஏதோ யோசனையில் அவன் சுழன்று கொண்டு இருக்க, அப்படியே அவனின் கண்களை நித்ரா தேவி தழுவி கொண்டாள்.
அடுத்த நாள் காலை விடியவும், அவன் அலுவலகம் கிளம்ப, “இன்னைக்கு லீவு தான?”, என்றவளிடம், “ஒரு மீட்டிங் இருக்கு மதியம் வந்துருவேன்”, என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டு விட்டான்.
அவன் சென்றதும், இரு பிள்ளைகளும் அவளிடம் வந்தனர்.
“அம்மா எங்க பள்ளிக்கூடத்துல ஒரு போட்டி நடக்க போகுது”, என்று அச்யுத் சொல்லவும், “என்ன போட்டி டா?”, என்று கனி வினவ, “பத்து முதல் பதினைந்து வரிகளில் கவிதை இல்ல ஏதோ ஒரு பேச்சு பேசணும்… அதுவும் அவங்க என்ன தலைப்புனு அங்க தான் சொல்லுவாங்க.. பத்து நிமிஷத்துல நம்ப எழுதி பேசணும்”, என்று கயல் விளக்கமாக கூறினாள்.
“சரி இதுக்கு நான் என்ன பண்ணனும்?”, என்று அவள் இரு மணிசெல்வங்களை பார்க்க, “ஏதாச்சு எங்களை ஊக்குவிக்குற மாறி பேசுங்க”, என்ற அச்யுத்தை பார்த்து சிரித்தாள்.
“இங்க பாருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத பேசுங்க… உங்க மேல நம்பிக்கை வச்சி எழுதுங்க.. நீங்க பாக்குறதையே எழுதுங்க.. உங்கள் புரிதல் எவ்வளவுன்னு தெரிஞ்சிக்க தான் இந்த போட்டி எல்லாம்.. உங்களோட திறமையை வெளிப்படுத்த தான் இந்த போட்டிகள் எல்லாம்… எல்லாரும் எல்லாத்துலயும் சிறந்து விளங்கனும்னு அவசியம் இல்ல… உங்க பங்கேற்பு தான் முக்கியம்… சரியா?”, என்று அவள் இருவரின் தாடையையும் பிடித்து கொஞ்சி விட்டு முத்தம் கொடுத்தாள்.
“அம்மா நீங்களே ஒரு சிறந்த பேச்சாளர் மா”, என்று சொன்ன மகனிடம், “ரொம்ப ஐஸ் வெக்காத டா”, என்று சொல்லி அவனின் தலையை கொதி விட்டாள்.
“அம்மா போட்டியை பார்க்க நீங்களும் வரலாம்… வரீங்களா? எங்க இரண்டு பேருக்கும் ரொம்ப மனபலமா இருக்கும்”, என்று மகள் சொல்லவும் மறுப்பாளா அவள்?
“கண்டிப்பா வரேன்… திங்கள் தான?”, என்று கேட்டவளுக்கு, “அம்மா நாளைக்கு மா”, என்று மகன் சொல்லவும், “நாளைக்கு கூடவா போட்டி எல்லாம் வைக்குறாங்க?”, என்று அவள் கேட்கவும், “அம்மா இந்த போட்டியில நிறைய பள்ளிக்கூடத்துல இருந்து வருவாங்க மா… சென்னை முழுக்க இருக்க மொத்த பள்ளி மாணவர்களும் வருவாங்க”, என்று சொல்லினர் பிள்ளைகள்.
“எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்க”, என்று பொன்னம்மாள் கூற, “கிரன்னி”, என்று அச்யுத் அழைக்க, “டேய் எதுக்கு டா கிரைண்டர் மிக்ஸீன்னு உங்க அப்பன் சொல்ற மாதிரி கூப்பிட்ற? அப்பத்தானு கூப்பிடு இல்லனா வாய ஒடச்சிருவேன்”, என்று அவரும் பேரனிடம் சண்டைக்கு நின்றார்.
“இதெல்லாம் எங்க கிட்ட பேசுங்க…உங்க மகன் கிட்ட பேசமாற்றிங்க?”, என்று கயல் முகத்தை சுழிக்க, “உன் அப்பன் கிட்டலாம் மனுஷன் பேசுவானா?”, என்று அவர் கேட்க, “அதனாலா தான் உங்கள பேச சொல்றோம்”, என்று ஒருசேர கூறிவிட்டு பறந்து விட்டனர் வாண்டுகள்.
“பாரேன் இதுங்கள”, என்று பொன்னம்மாளும் கனியும் சிரித்து கொண்டனர்.
இங்கோ அலுவலத்துக்கு வந்த இனியன் அவனின் மீட்டிங்கை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் சமயம் அங்கு வாந்தாள் மேகனா.
“சொல்லுங்க மேகனா”, என்று இனியன் அவளை பார்த்து புன்னகைக்க, “இனியன் உங்க வைப் கொஞ்சம் கூட உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க”, என்று அவள் கூற, அவனின் புருவங்கள் சுருங்கி, “வாட் டூ யு மீன்?”, என்றவனின் குரல் கடுமையாக மாறியது.
“அவங்க படிக்காத மாக்கானா இருக்காங்க… நேரடியாவே சொல்றேன் இனியன் எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. நீங்க அவங்கள டிவோர்ஸ் பனிருங்க… உங்களுக்கும் அவங்கள பிடிக்கலைனு நினைக்கிறன்… அப்பறோம் என்ன புடிச்ச நம்ப இரண்டு பேறும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லனா லிவ் இன் கூட ஓகே தான்”, என்று அவள் நெருங்கி அவனின் மேல் கை வைக்கும் முன், இடியென இறங்கியது இனியனின் கரங்கள்.
“சாவடிச்சிருவேன் யாரு கிட்ட வந்து யாரை பத்தி பேசுற? என்ன இப்போ பார்க்க டிப் டோப்பா இருக்கேனு பாக்கறியா? அந்த காலத்துல என்னை பத்தி கேட்டு பாரு… என் பொண்டாட்டிய பத்தி பேச உனக்கு என்ன டி தகுதி இருக்கு… அவ சாமி மாறி எனக்கு… நீ சாக்கடை… சாக்கடையை கடந்து தான் போக முடியும்.. சாமிய தான் கும்பிட முடியும்…அடுத்த தடவை என்கிட்ட வந்த.. இந்த வாட்டி கையால அடிச்சேன்.. அடுத்த தடவை செருப்பு தான்”, என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.
நேரடியாக வீட்டிற்கு வந்தவனின் மனம் தலாவே இல்லை. “ச்சீ அவ நேத்து சொன்னது சரி தான்.. அவ கூட போய் ஆடி இருக்கேன்.. ஆம்பள பொறிக்கியா இருக்கா”, என்று நினைத்து கொண்டு போய் குளித்து விட்டு வந்தவன், அப்படியே உறங்கி இருந்தான்.
கயல் வந்து எழுப்பவும் எழுந்தவன், “அப்பா அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க”, என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.
இனியனும் முகம் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.
சாப்பாட்டை பிள்ளைகளுக்கு பரிமாறிவிட்டு, இனியனிற்கும் பரிமாறி கொண்டு இருந்தாள் கனி.
“இன்னைக்கு ஸ்வீட் இருக்கா?”, என்று அவன் கேட்கவும், சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இது அவர்களுக்குள் இருக்கும் அவர்களின் ரகசிய மொழி தான்.
“அப்பா இன்னைக்கு அம்மா எந்த ஸ்வீட்டும் செய்யல”, என்று பதில் சொன்னது என்னவோ அவர்களின் ஒன்பது வயது மகன் அச்யுத் தான்.
“அது ஏன் பா எப்பவோம் எல்லா சனிக்கிழமை நைட் மட்டும் ஸ்வீட் இருக்கானு கேக்குறீங்க?”, என்று யோசனையுடன் கேட்டாள் கயல்.
கனியிற்கோ சிரிப்பு வந்து விட்டது. அவள் சிரிக்கவும், அவளை பார்த்து அவன் முறைக்க, அதெல்லாம் அவள் சட்டை செய்ய வில்லை.
“இது இன்னைக்கு நேத்து இல்ல கல்யாணம் ஆகி பதிமூணு வருஷமா இத தான் கேட்குறான், கல்யாணம் ஆன புதுசுல நிறைய வாட்டி கேட்டுட்டு இருந்தான். நான் கூட உங்க அப்பனுக்கு சுகர் வந்துருமோனு நினைச்சேன்”, என்று சொல்லிக்கொண்டே வெற்றிலையை வாயில் போட்டார் பொன்னம்மாள்.
இனியனுக்கு தான் சங்கடமாக போய் விட்டது.
“ஆனா அப்பா தான் அதிகமா ஸ்வீட் சாப்பிட மாட்டாரே, அது என்ன சனிக்கிழமை ஆனா மட்டும் ஸ்வீட் கேட்குறார்”, என்று மீண்டும் அச்யுத் அங்கேயே வந்து நிற்க, “இதோட கேட்க மாட்டேன். சாப்பிடு டா”, என்று எரிச்சலாக சொன்னான் இனியன்.
அவளோ மீண்டும் சமையல் கட்டிற்குள் நுழைந்தவள், சிரித்து கொண்டே தோசை வார்க்க ஆரம்பித்தாள்.
Super sis 💞
Super da