“யாருமே இல்லாத வீட்டுக்குள்ள டேஷ் நுழையுற மாதிரி எதுக்கு பூட்ட உடைச்சிட்டு உள்ள வந்தீங்க..? கேட்க யாருமே இல்லைன்னு நினைச்சுட்டீங்களா..?” என கோபமான குரலில் கௌதம் கேட்க,
அவ்வளவுதான் அவனுடைய கைப்பிடிக்குள் நின்ற செந்தூரிக்கோ தேகம் முழுவதும் படபடத்து விட்டது.
சாதாரண நேரமாக இருந்திருந்தால் இவன் இப்படி பேசியதற்கு விநாயக் நிச்சயமாக அவனுடைய வாயை உடைத்து இருப்பான்.
ஆனால் அப்போது அவனிருந்த நிலையில் கௌதம் என்ற ஒருவன் பேசிய வார்த்தைகள் அவனுடைய காதுகளை எட்டவே இல்லை.
அவனுடைய மொத்த பார்வையும் தன் மனதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செந்தூரியின் மீது நிலைக்க,
“ஏன்டி..?” என ஈனமான குரலில் கேட்டான் அவன்.
இதுவரை அப்படி ஒரு குரலை அவனிடம் கேட்காத செந்தூரிக்கோ விழிகள் கலங்கின.
“பேபி..? என்னடி இது..?” உடைந்து வெளி வந்தன அவனுடைய வார்த்தைகள்.
அவனுடைய குரல் உடைந்த விதத்திலேயே அவனுடைய காதலை உறுதிப்படுத்திக் கொண்டான் கௌதமன்.
“யாரையுமே கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னியே.. என்னடி இது..? ஏன் இப்படி பண்ண..?” நம்ப முடியாது கேட்டான் அவன்.
பதில் கூற திடமற்று தன் தலையை தாழ்த்தி தரையில் பார்வையைப் பதித்தவாறு நின்றாள் செந்தூரி.
“ஏய் முட்டாள் உன்னத்தான் கேட்கிறேன்.. எதுக்குடி இப்படி பண்ண..? என்ன விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு..?”
இந்தக் கேள்வியில் கௌதமன் உடல் இறுகி அவனுக்கு பதில் கொடுக்க முன்னரே தன் வாயைத் திறந்தாள் செந்தூரி.
“நான் எதுக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்..?” எனத் தொண்டை அடைக்க கேட்டுவிட்டவளுக்கு குரல் நடுங்கியவாறுதான் வெளியே வந்தது.
“ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன் தூரி.. உயிருக்கு உயிரா லவ் பண்றேன்..”
‘அடி பொலி…’ என மனதிற்குள் எண்ணிக்கொண்ட கௌதமன் உற்சாகமாகினான்.
செந்தூரிக்கோ உலகமே தன்னுடைய அசைவை நிறுத்தினாற் போல இருந்தது.
செவிகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள் அவள்.
“ஐ லவ் யூ தூரி.. என்னோட ஈகோவை விட்டு சொல்றேன்.. ஐ லவ் யூ டாமிட்..” என்க,
என்ன சொல்கிறான் இவன்..?
நிஜமாகவே என்னைக் காதலிக்கிறானா..?
எது இருக்கக்கூடாது என அவள் இத்தனை நாட்கள் இறைவனைப் பிரார்த்தித்தாளோ அது நடந்தே விட்டதே.
அவளுடைய பிரார்த்தனை அனைத்தும் வீண்தானா..?
“ஏய் ஏதாவது சொல்லுடி…”
“பொ.. பொய் சொல்லாதீங்க.. உங்களுக்கு என் மேல இருக்கிறது பழிவெறி மட்டும்தான்.. அத்தனை பேரு முன்னாடி நான் உங்கள அசிங்கமா திட்டி அடிச்சிட்டேன்ல அந்தக் கோபத்தை தீத்துக்கத்தானே என்ன கூட்டிட்டுப் போனீங்க.. இப்போ திடீர்னு காதல்னு ஏன் நடிக்கிறீங்க..?” என அவள் கூற வேகமாக அவளை நெருங்கி வந்தவன்,
“ஆமான்டி உன்ன பழிவாங்கத்தான் கூட்டிட்டுப் போனேன்.. ஆனா ரெண்டு நாளைக்கு மேல உன் மேல கோபத்தை இழுத்துப் பிடிச்சு வைக்க முடியல.. நீ வந்ததுக்குப் பிறகு என்னோட வாழ்க்கைல இதுவரைக்கும் வேற எந்தப் பெண்ணையுமே நான் கிட்ட கூட நெருங்க விடலை..
உன்னை பழிவாங்க மட்டும் கூட்டிட்டு போயிருந்தா உனக்காக ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து பண்ணிருப்பேனா..? செட்லையும் சரி வீட்லையும் சரி உனக்கான மரியாதையை நான் தராம விட்டிருந்தேனா..?
ஆரம்பத்துல நான் தப்பு பண்ணினேன்தான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா நான் அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்டி.. உனக்காகத்தானே உன்னோட வீட்டுக்கு வந்தேன்.. நீ சொல்ற எல்லாத்தையும் செஞ்சேனே.. அதுல கூட என்னோட மனச உன்னால புரிஞ்சுக்க முடியலையா..?
நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கூட கேட்டேன்.. நீதானேடி கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன.. இப்போ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியே பாவி..”
அழத் தொடங்கி விட்டாள் செந்தூரி.
“இவன விட நான் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்..”
“அ.. அவனை இதுல இழுக்காதீங்க..” என்றவள் அவனைப் பார்த்து “சாரி..”என அழுகையோடு கூறினாள்.
“சாரியா..? எனக்கு எதுக்கு சாரி..? அதெல்லாம் வேணாம்.. இது எல்லாமே நாடகம்னு சொல்லு.. இந்தக் கல்யாணம் போலின்னு சொல்லு.. ஏதாவது ஃப்ராங்கன்னு சொல்லுடி.. இதைக் கழட்டி வெச்சிட்டு என்கூடவே வந்துரு…
சத்தியமா உன்ன கண்கலங்காம கடைசி வரைக்கும் பார்த்துப்பேன்.. தயவுசெய்து என்கிட்ட வந்துரு தூரி.. இதுவரைக்கும் காதல்னா என்னன்னு நான் உணர்ந்ததே இல்லை.. இப்போதான்டி அதை ரசிச்சு வாழவே ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள என்னோட காதல குழி தோண்டி புதைச்சிடாத தூரி.. நெஞ்செல்லாம் வலிக்குதுடி..
நான் இப்படி யார்கிட்டயும் கெஞ்சினதே கிடையாது.. முதல் முறையா உன்கிட்ட கேட்கிறேன்.. என்கூட வந்துரு ப்ளீஸ்..” என அவன் பேசப் பேச,
தூரிக்கோ இது அனைத்தும் நாடகம்தான் எனக் கத்த வேண்டும் போல இருந்தது.
அவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்தான் கௌதமன்.
“ஹலோ சார்.. நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா..? இது ஒன்னும் நாடகமோ பிராங்கோ போலிக் கல்யாணமோ கிடையாது.. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சு போச்சு… இப்போ வந்து அவளை காதலிக்கிறேன் தாலியை கொடுத்துட்டு வான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்..? கொஞ்சமாவது யோசிச்சுப் பேசுங்க.. இவ இப்போ என்னோட பொண்டாட்டி..” என கௌதமன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கூற கௌதமனின் கழுத்தை இறுகப் பற்றி நெறித்து விட்டான் விநாயக்.
“******த்தா கொன்னு புதைச்சிருவேன்.. யார்டா நீ..? யாரு நீ..? நான் அவகிட்ட பேசும் போது நீ இடைல வராத.. உனக்கும் எனக்கும் எந்தப் பேச்சும் கிடையாது. நான் அவகிட்ட தான் பேசுறேன்.. நீ மூடிட்டு இரு…” என்றவனின் கரம் இன்னும் அழுத்தமாக கௌதமனின் கழுத்தை நெரிக்க அவனுடைய கரத்தை விலக்கப் போராடினான். கௌதம்.
பயந்து போனாள் அவள்.
“ஐயோ என்ன பண்றீங்க..? தயவு செஞ்சு இப்படி முரட்டுத்தனமா நடந்துக்காதீங்க.. ப்ளீஸ்… அவன விடுங்க..” என அவனுடைய கரங்களை விலக்க அவளும் முயன்றாள்.
அதற்கு அவன் மனம் வைக்க வேண்டுமே.
பாவமே பார்க்காது ஒற்றைக் கரத்தால் கௌதமை அப்படியே நிலத்திலிருந்து அவன் மேலே தூக்கி விட அலறி விட்டாள் செந்தூரி.
“விநாயக் போதும்… முதல்ல அவனை விடுங்க.. எதுக்கு இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க..? அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் நானாவே இருக்க மாட்டேன்..” என அவள் கோபத்தில் கத்த அந்த வார்த்தைகளின் வேதத்தில் சட்டென அவனை விடுவித்தான் விநாயக்.
அவனுடைய பார்வை வலியோடு அவளை வருடியது.
“எனக்குப் பிடிக்கல தூரி.. நீ அவனுக்காக பேசுறது எனக்குப் பிடிக்கல.. உங்க ரெண்டு பேரையும் இப்படி பக்கத்து பக்கத்துல பார்க்கிறதே எனக்கு பிடிக்கல..”
“அவன்தான் சொல்றான்ல எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. தயவு செஞ்சு இந்த வீட்டை விட்டு வெளியே போங்க..” என்றதும் அவளுடைய கழுத்தில் இருந்த தாலியைத் தன் கரத்தால் பற்றி அவளைத் தன்னருகே இழுத்தவன்,
“இவனுக்காக என்ன உன்னோட வாழ்க்கைய விட்டு இந்த வீட்டை விட்டு துரத்துறேல்ல..? இவன கொன்னு இந்தத் தாலிய அறுத்து உன்ன என்னோட பொண்டாட்டியா மாத்துவேன்டி..” கர்ஜித்தான் அவன்.
தூக்கி வாரிப் போட்டது செந்தூரிக்கு.
“இன் யுவர் ட்ரீம்ஸ் மிஸ்டர் விநாயக்..” எனத் தன் நெற்றியை வருடியவாறு அழுத்தமாகக் கூறினான் கௌதம்.
அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடு இன்றி வழியத் தொடங்கியது.
கால்கள் நிற்கவே பலம் இல்லாதவை போல நடுங்கத் தொடங்கி விட்டன.
அவள் தடுமாறுவதைக் கண்டு பதறிப் போய் அவளைத் தாங்க முயன்றவனைத் தடுத்து விட்டு கௌதம் அவளைத் தன்னுடைய மார்போடு அணைத்துக் கொள்ள முற்றிலுமாக உடைந்து போனான் விநாயக்.
இவ்வளவு நேரமும் சிவந்திருந்த அவனுடைய விழிகள் கலங்க அதைப் பார்த்தவளின் அழுகை மேலும் கூடியது.
எதுவும் பேசாமல் அமைதியாக நின்று அவர்கள் இருவரையும் பார்த்தவன் மனதால் நொறுங்கிப் போயிருந்தான்.
“என்னோட காதல நீ கடைசி வரைக்கும் உணரவே இல்லைல..?” என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
எங்கே அவர்கள் இருவரின் முன்பு உடைந்து போய் கதறி விடுவோமோ என அச்சம் கொண்டவன் நிற்க முடியாது வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேற அவ்வளவு நேரமும் தன்னுடைய அழுகையை அடக்கி வைத்தவள் குமுறி விட்டாள்.
“இந்த நாடகம் எல்லாம் அப்போவே வேணாம்னு சொன்னேன் கேட்டியா..? அவர் ரொம்ப வருத்தப்படுறாரு.. என்னால யாரையும் இப்படிக் கஷ்டப்படுத்த முடியாது கௌதம்..”
“ஏய் பைத்தியமாடி நீ..? உன்ன அவன் எவ்வளவு கஷ்டப்படுத்தினான்னு மறந்துட்டியா..? கிட்டத்தட்ட உன்ன அடிமை மாதிரி அந்த வீட்ல வெச்சிருந்தான்.. என்ன சாகுற அளவுக்கு ஆளுங்களை வெச்சு அடிச்சுப் போட்டான்.. அதெல்லாம் மறந்துட்டியா..? அவன் மேல உனக்கு இரக்கம் சுரக்குதா..?”
முதல் முறையாக அவள் மீது கோபம் கொண்டான் கௌதமன்.
“தெ.. தெரியல டா என்னால தாங்க முடியல.. யாரோட மனசையும் நான் இதுவரைக்கும் தெரிஞ்சே உடச்சது இல்லை.. அவர் என்னவன் டார்ச்சர் பண்ணிருக்காருதான் இல்லன்னு சொல்லல.. ஆனா அதே அளவுக்கு எனக்கு நல்லதும் பண்ணி இருக்காரு.. அன்னைக்கு மட்டும் அவர் எங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணலேன்னா என்னவாகிருக்கும்னு என்னால சொல்லவே முடியாது கௌதம்..
எனக்காக சில விஷயங்களை பார்த்துப் பார்த்து பண்ணி இருக்காரு.. எனக்கு உதவியும் பண்ணி இருக்காரு.. கொடுமையும் பண்ணிருக்காரு.. என்னால முடியல.. பழி வாங்கினா சந்தோஷம்தானே கிடைக்கணும்..? எனக்கு மனசு எல்லாம் வலிக்குது.. தாங்க முடியலையே…
என் கண் முன்னாடியே அழுதுட்டுப் போறத பார்க்கும்போது ரொம்ப வலிக்குது.. நான் சுயநலவாதியா மாறிட்டேனோன்னு தோணுது..”
“அப்படிலாம் இல்லடி… சரி அழாத.. இது எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.. ஜஸ்ட் 2 டேஸ் மட்டும் பொறுத்துக்கோ.. அதுக்கப்புறம் உண்மைய சொல்லிடு..” என்றான் அவன்.
“முட்டாள் மாதிரி பேசாதடா.. எனக்கு அவர் வருத்தப்படுறத தாங்க முடியலதான் ஆனா உண்மைய சொல்லாம வச்சிருந்தா உன்ன ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு கௌதம்.. உன்னைக் கொன்னு தாலிய அறுத்து என்ன பொண்டாட்டியா மாத்துவேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு..
உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் எப்படி கௌதம் தாங்கிப்பேன்..? எனக்குன்னு இருக்கிற ஒரே ஒரு நல்ல ப்ரண்ட நீ மட்டும்தான்டா.. எனக்கு வேற யாருமே ப்ரண்டுன்னு கிடையாது.. என்னோட கஷ்டத்துல உன்ன மாதிரி யாருமே வந்து நின்னது கிடையாது.. எனக்காக யாரும் இப்படி அடி வாங்குனதும் கிடையாது.. உன்ன மாதிரி ஒருத்தன என்னால இழக்கவே முடியாது கௌதம்.. ப்ளீஸ் இந்தப் பழி வாங்குற ஐடியாவ எல்லாம் தூக்கிப் போட்டுடலாம்..
நிம்மதியா வாழலாம் கௌதம்.. நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சினை..? இப்பதான் உன்னோட காயமெல்லாம் ஆறிட்டு வருது.. ஏதாவது ஒரு பிரச்சனை வந்துட்டா நான் என்ன பண்றது..? உங்க பெரியம்மா வந்து உன்னாலதான் இவனுக்கு இப்படி ஆச்சுன்னு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்..? ப்ளீஸ் கௌதம் புரிஞ்சுக்கோ.. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துடலாம் ப்ளீஸ்..”
“அவன் என்ன கடவுளா..? பணம் இருந்தா கொலை பண்ணிடுவானா..? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவனால எதுவுமே பண்ண முடியாது.. நீ பயப்படாத.. நான்தான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டேன்ல..”
என்றவன் அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டு சற்று நேரம் அவளை சமாதானம் செய்தான்.
அவளுக்கென இருக்கும் உற்ற நண்பனான கௌதமும் இன்றோடு நிரந்தரமாக இல்லாமல் போகப் போவதை அறியாது அவனுடைய கரத்தில் முகத்தை புதைத்தவள் கண்ணீரை உகுக்கத் தொடங்கினாள்.
😎💜😎
ஹாய் கண்மணீஸ்
கொஞ்சம் பிஸி..
சோ ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் தான் பதிவிடுவேன்.
புதன் கிழமை முதல் எபி மழை வரும்..
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 87
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,091
2 thoughts on “56. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Super sis 💕
Super sis