தாராவின் விழிகளில் கண்ணீரைக் கண்டதும் அவனால் அவள் கேட்டதைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத்தானே ஆசையாக கேட்கின்றாள் என தவித்த தன்னுடைய மனதை சமாதானப்படுத்திக் கொண்டவன் தன்னுடைய அன்னைக்கு அச்சத்துடனேயே அழைப்பை ஏற்படுத்தினான்.
சில நொடிகளிலேயே அழைப்பை ஏற்ற தன் அன்னையிடம்,
“ம்மா.. இ… இன்னைக்கு நான் வீட்டுக்கு வர முடியாதும்மா…” என அவன் கூற,
“ஏன் என்ன ஆச்சு…? எதுக்காக வீட்டுக்கு வர முடியாது..?” என சற்றே அதட்டும் குரலில் கேள்விகளைத் தொடுத்தார் தேவி.
“இ… இல்லம்மா பிரபு பைக்ல வரும்போது அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு… அவன் கூட ஹாஸ்பிடல் வந்திருக்கேன்.. இன்னைக்கு நான்தான் அவனைப் பாத்துக்கணும்… அதனால இன்னைக்கு நான் வீட்டுக்கு வரலம்மா…” என அவன் கூற அவரோ பதறிப் போனார்.
“ஐயோ கண்ணா… உனக்கு எதுவும் ஆகலையே..?” என அவர் நடுங்கும் குரலில் கேட்க,
“இ… இல்லம்மா எனக்கு ஒன்னும் ஆகல.. நான் அவன் கூட போகல… அவனுக்குத்தான் லைட்டா அடிபட்டுருச்சு… பெருசா ஒன்னும் இல்ல.. நீங்க பயப்படாதீங்க..” என அவன் கூறிய பின்னர்தான் சற்றே அமைதி அடைந்தார் தேவி.
“ஏதாவது உதவி வேணுமாப்பா..? நான் வேணும்னா கிளம்பி வரவா.. எந்த ஹாஸ்பிடல்னு சொல்லு…” என அவனுடைய அன்னை கேட்டதும் அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
சில நொடிகள் திணறியவன் “இல்லம்மா நானே பாத்துக்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..?” என தன்னுடைய அன்னையை ஒருவாறாக சமாளித்து முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு குற்ற உணர்ச்சியில் மனம் சோர்வடைந்தது.
மானசீகமாக தன்னுடைய நண்பன் பிரபுவிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டவன் இப்போது சந்தோஷமா என்பதைப் போல தாராவைப் பார்த்தான்.
அவளோ அடுத்த நொடியே அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
“ஹப்பாடா இத்தன மாசத்துல இப்போதான் நீ எனக்காக நான் சொன்னதை பண்ணி இருக்க… ஐ லவ் யூ ஷேத்ரா.”
அவளுடைய அணைப்பு அவனுக்கும் இதமாகத்தான் இருந்தது.
“உன்னோட விஷயத்துல மட்டும்தான் நான் எங்க அம்மாவ ஏமாத்திக்கிட்டே இருக்கேன்… நாளைக்கு என்ன நடந்தாலும் நிச்சயமா நம்ம காதலப் பத்தி அம்மாகிட்ட சொல்லிடுவேன்..” என்றான் அவன்.
“தாராளமா சொல்லு… நானும் எங்க டாடிகிட்ட பேசுறேன்..” என்றவர் இருவருக்கும் ஆர்டர் செய்த ஸ்பெஷலான உணவுகளைப் பரிமாற அவளுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு இனிக்கத்தான் செய்தது.
அவள் பரிமாறிய உணவை இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு உண்டு முடித்தனர்.
இரவு நெருங்கியதும் தனிமையில் அவள் அவனுடைய மார்பில் சாய்ந்தபோது அவனுக்கோ மனம் வெகுவாக தடுமாறியது.
சற்றே அவளை விலகி அமரச் செய்தவன் பெருமூச்சோடு அவளைப் பார்க்க,
“ஓய் எதுக்காக இந்தப் பெருமூச்சு..? நான்தான் உன் பக்கத்திலேயே இருக்கேனே..” என்றவள் மீண்டும் அவனை நெருங்கி வந்து அவனுடைய கரங்களைப் பற்றிக்கொள்ள அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் குரு.
“ஹேய்… பர்த்டே செலிபிரேட் பண்ணலாம்னு சொல்லியாச்சு பட் அதுக்காக எந்த அரேஞ்மென்ட்டும் பண்ணலையே.. நீ வெயிட் பண்ணு நான் போய் கேக் வாங்கிட்டு வந்துடுறேன்..” என வெளியே கிளம்பத் தயாராகியவனைப் பிடித்து இழுத்து நிறுத்தியவள்,
அவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
“என்ன தாரு உன்னோட பர்த்டேக்கு நீயே எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டியா..?” எனக் கேட்டவாறே அந்த அறைக்குள் நுழைந்தவன் அங்கே வெட்டுவதற்கு கேக்கோ எந்தவிதமான அலங்காரமோ இல்லாது இருப்பதைக் கண்டு அவளைக் கேள்வியாகப் பார்க்க அவளோ அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் என்னடி…?”
“இன்னைக்கு உன் கூடதான் தூங்குவேன்… இங்க உன் மார்புலதான் தூங்குவேன்… எதுக்காக நமக்குள்ள இத்தனைக் கட்டுப்பாடு…? நீ ஏன் என்னை விட்டு விலகி விலகிப் போற..? கமான் குரு… டேக் மீ…” என்றவள் அவனை அணைத்து அவனுடைய தடித்த அதரங்களில் தன்னுடைய மென்மையான இதழ்களைப் பதிக்க அவனுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
சட்டென தீச்சுட்டாற் போல அவளைத் தள்ளி நிறுத்தியவன்,
“நீ என்ன காரியம் பண்ற..? இதெல்லாம் தப்பு… உங்க அப்பாக்கோ என்னோட அம்மாவுக்கோ இது தெரிய வந்தா நம்மளப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க..?” என அவன் தடுமாறியவாறு கூற தன் தலையில் அடித்துக் கொண்டாள் தாரா.
“லூசாடா நீ..? இதெல்லாம் யாராவது உங்க அம்மாகிட்டையோ என்னோட அப்பாகிட்டையோ பேசுவாங்களா..? நான் எங்க அப்பாகிட்ட சொல்ல மாட்டேன்… நீயும் உங்க அம்மாகிட்ட சொல்ல மாட்ட… அப்புறம் என்ன பயம்..? நம்ம ரெண்டு பேருக்குள்ள நடக்கப் போறது வேற யாருக்குத் தெரியப் போகுது..?” என அவனை சமாதானம் செய்தாள் அவள்.
“ஆனா என்னோட மனசாட்சிக்குத் தெரியுமே..” என மீண்டும் மறுத்தான் அவன்.
‘மண்ணாங்கட்டி மனசாட்சி..’ என தனக்குள் முனகியவளுக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது.
அந்த ஆத்திரத்தோடு சேர்ந்து அழுகையும் வந்தது.
ஏமாந்து போய்விட்டோமோ என அவளுடைய மனம் தவிக்கத் தொடங்கியது.
அவளுடைய வயதிற்கு அவள் பழகும் தோழிகள் யாவரும் தங்களுடைய காதலனோடு வாழ்க்கையை அவ்வளவு ரசித்து என்ஜாய் பண்ணி வாழ்ந்து கொண்டிருக்க இவள் மட்டும் ஏதோ சாமியார் வாழ்க்கையைப் போல அல்லவா இவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவசரப்பட்டு இவனைக் காதலித்து விட்டோமோ என மீண்டும் அவளுடைய மனம் தவிப்போடு சிந்தித்தது.
ஆணழகனாக இருக்கிறான் கோடீஸ்வரனாக இருக்கின்றான் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லை என்றுதான் அவனை விரும்பிக் காதலித்தாள் ஆனால் அதீத நல்லவனாக இருப்பதும் அவஸ்தைதான் என்பது அக்கணம்தான் அவளுக்குப் புரிந்தது.
“ஏய் தாரும்மா… நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா..? எதுக்காக அழுற..? ப்ளீஸ் அழாத தாரா… எனக்கு கஷ்டமா இருக்கு…” என அவன் அடிபட்ட குரலில் கூற,
“எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு ஷேத்ரா.. உன்கிட்ட நான் நிறைய விஷயங்கள எதிர்பார்க்கிறேன்… ஆனா எதுவுமே எனக்கு இதுவரைக்கும் கிடைக்கவே இல்லையே… நிஜமாவே உனக்கு என் மேல ஆசையே இல்லையா..? உன்ன மாதிரி எந்த ஆம்பளைங்களும் இவ்வளவு டிஸ்டன்ஸ் விட்டு லவ்வர் கூட பழக மாட்டாங்க… நீ மட்டும் ஏன் இப்படி இருக்க..?” என அவள் வேதனையோடு கூற துடித்துப் போனவன்,
அவளுக்கோ பொறுமை பறந்தது. வேகமாக அவனுடைய கரத்தை தட்டி விட்டவள்,
“கல்யாணத்துக்கு அப்புறமாவும் வந்து நீ இப்படித்தான் சொல்லுவ போல…” என சீற நொந்து போனான் குருஷேத்திரன்.
அவளுக்கோ அழுகை நில்லாது பெருகிக் கொண்டே போக தவிப்போடு மெல்ல அவளை நெருங்கி அணைத்து சமாதானப்படுத்த முயன்றவனை அழுகையோடு இறுகணைத்துக் கொண்டவள் அவனுடைய மார்பில் தன் முகத்தை அழுத்தமாகப் புதைத்தாள்.
“உன்னோட ஆசைகள என்னால புரிஞ்சுக்க முடியுது… எனக்கு மட்டும் ஆசையே இல்லையா என்ன..? நீன்னா எனக்கு கொள்ளைப் பிரியம்டி.. ஆனா எல்லாத்துக்கும் ஒரு நெறிமுறை இருக்கும்மா..” எனக் கூறிக் கொண்டிருந்தவனின் உதடுகளைத் தன் உதடுகளால் ஆக்கிரமித்துக் கொண்டாள் அவள்
அவனோ முதலில் திகைத்தவன் பின்பு தள்ளிவிட்டால் மீண்டும் அழுவாளோ என நினைத்து தானும் அந்த முத்தத்தைத் தொடர அடுத்தடுத்து நிகழ்ந்த அவளுடைய ஒத்துழைப்பில் அந்த நீண்ட நெடிய முத்தம் அவர்களுடைய நெருக்கத்திற்கு பாலமாக அமைந்து போனது.
அவளுடைய அதீத நெருக்கத்தில் தன்னை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை மெல்ல அழைத்து படுக்கையில் அமரச் செய்தவள் அவன் மீது சரிந்து தன்னுடைய முத்தத்தைத் தொடர அவனையும் தொற்றிக் கொண்டது மோககத்தீ.
அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய கட்டுப்பாடுகள் யாவும் அவளுடைய காதலில் காணாமல் போய்விட அவளுடைய ஆடைகள் யாவும் களைந்து அவனுடைய ஆடைகளையும் அவள் விலக்கத் தொடங்கிய கணம் அதிர்ந்து இருவரின் நிலையையும் கண்டு பதறி விலகினான் குரு.
“தாருஉஉஉ போதும்…” என அவன் பாதியிலேயே விலகிய கணம் அவளுக்கோ அவமானத்தில் முகம் சிவந்தது.
படுக்கையில் இருந்த போர்வையை வேகமாக எடுத்து தன் உடலை மூடிக்கொண்டவள்,
“வெளியே போ…” என அழுதவாறே கத்தி விட,
அவளை சங்கடப்படுத்தி விட்டோம் என நினைத்து விழிகள் கலங்கிப் போனான் அவன்.
“நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா..”
“நான்தான் சொல்றேன்ல தயவுசெஞ்சு வெளியே போ… நீ என்ன பொண்டாட்டியா நினைச்சிருந்தா இப்படி எந்த நிலைமைல என்னத் தள்ளி விடுவியா…? உன்னைப் பொறுத்த வரைக்கும் உனக்கு உங்க அம்மா மட்டும்தான் முக்கியம்.. அவங்க சொல்றது மட்டும்தான் வேதவாக்கு… என்ன பத்தியோ என்னோட உணர்வுகளைப் பத்தியோ என்னோட காதலப் பத்தியோ உனக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை..
நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் தெரியுமா..? அதே மாதிரி நீயும் என்னை காதலிச்சிருப்பேன்னு நினைச்சேன்.. ஆனா இப்போ எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு.. இப்படி ஒரு நெருக்கமான சூழ்நிலைல எந்த ஆம்பளையாவது தன்னோட காதலியத் தள்ளி விடுவானா..?
போதும்டா உன்கிட்ட வந்ததுக்கு என்ன நானே செருப்பாலயே அடிச்சிக்கிறேன்… தயவு செஞ்சு நீ இங்க இருந்து போயிரு..” என அவள் அழுகையில் உடல் குலுங்கியவாறு கூற அவ்வளவுதான் உடைந்து போனான் அவன்.
எத்தனை வீரியமான வார்த்தைகளைக் கூறிவிட்டாள்..?
அவள் மீது உயிரையே வைத்திருக்கும் தன்னைப் பார்த்து காதலே இல்லை என்றல்லவா சொல்லிவிட்டாள்.
மனம் தாங்காமல் அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விட வேகமாக அவளை நெருங்கியவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
“இல்ல வேணாம் போ….” என அலறினாள் தாரா.
எங்கே தன்னை நிரந்தரமாக ஒதுக்கி விடுவாளோ என்ற அச்சத்தில் இன்னும் தன்னுடைய அணைப்பை இறுக்கிக் கொண்டவன் அவள் கேட்டதை செயல்படுத்தும் நோக்கோடு விருப்பமே இன்றி மீண்டும் அவளைப் படுக்கையில் சரித்து இருவருடைய ஆடைகளையும் கழற்றத் தொடங்க அதன் பின்னர்தான் சமாதானம் ஆகினாள் அவள்.
என்னதான் அவளோடு அவளுடைய ஆசைக்கேற்ப ஒன்று கூட முயன்றாலும் கூட மிகவும் சிரமப்பட்டு வளர்த்த தன்னுடைய அன்னைக்கு துரோகம் செய்கின்றோமோ என்ற எண்ணமும் அவரை ஏமாற்றிவிட்டு திருமணத்திற்கு முதலே தாராவுடன் படுக்கையில் இருக்கின்றோம் என்ற எண்ணமும் அவனுடைய மூளையைக் குடைந்து கொண்டே இருக்க அவனால் அவளோடு அவ்வளவு சீக்கிரத்தில் கூட முடியவில்லை.
எவ்வளவோ முயன்றும் வலுக்கட்டாயமாக தன் மனதை அவள் மீது திருப்பியும் கூட அவளோடு அவனால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது போக முதலில் என்னவோ ஏதோ என எண்ணியிருந்தவள் அதன் பின்னர் அதிர்ச்சியோடு அவனை விட்டு விலகி இருந்தாள்.
அவனுடைய இயலாமையைக் கண்டு கொண்டவளுக்கோ மனதுக்குள் பெரும் அதிர்ச்சி வியாபித்தது.
எத்தனையோ முறை முயன்றும் அனைத்தும் தோல்வியில் முடிந்ததும் கசப்போடு எழுந்து அமர்ந்து கொண்டவள்,
“உன்னால பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இன்வால்வாக முடியாதா..?” என அவள் நேரடியாகக் கேட்டுவிட அவனுக்கே அந்த சந்தேகம் எழுந்து விட்டிருந்தது.
“தெ…. தெரியலையே..” என பரிதவிப்போடு கூறினான் அவன்.
“வாட் தெரியலையா..? நீ நார்மலா இல்ல ஷேத்ரா.. இப்படின்னா எப்படி நம்மளால சந்தோஷமா வாழ முடியும்..?”
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லடி… கொஞ்சம் பதட்டமா பயமா இருக்கு… டென்ஷனா இருக்கிறதாலதான் இப்படின்னு நினைக்கிறேன்..” என தவிப்போடு கூற நேரமோ இரவு 10 எனக் காட்டியது.
“நீ என்ன ரொம்ப டிசப்பாய்ண்ட் பண்ணிட்ட.. நான் கிளம்புறேன்..” என்றவள் அவன் கூற வருவதைக் கேட்காது தன்னுடைய ஆடைகளை வேகமாக அணிந்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற கணம் பதறிப் போய் அவளைத் தடுத்து நிறுத்தியவன்,
“என் கூட கோபமா தாரா..? இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்காத… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் டி இனி இப்படி நடக்காது..”
“ஸ்டாப் இட்.. முதல்ல உன்கிட்ட என்ன குறை இருக்குன்னு கண்டுபிடி.. சில ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க பார்த்தாலே ***** ஆனா உனக்கு நான் அவ்வளவு நெருக்கமா இருந்தும் எந்த மாற்றமும் வரவே இல்லை… அப்போ உன்லதான் குறை இருக்கு.. முதல்ல அது என்னன்னு கண்டுபிடி..” என்றவள் அவனுடைய கரத்தை உதறிவிட்டு சென்றுவிட அழவே தொடங்கி விட்டான் அவன்.
அவளுடைய கோபம் ஒரு பக்கம் தன்னுடைய இயலாமை ஒரு பக்கம் என இரண்டும் சேர்ந்து அவனைப் புரட்டிப்போட துடித்துப் போனான் குருஷேத்திரன்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
Adei nee than a ithu
Thara 🤬🤬🤬🤬🤬