6. இதய வானில் உதய நிலவே!

4.8
(6)

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍

 

நிலவு 06

 

“அங்கிள் எனக்கு தண்ணியில தூரமா போக ஆசையா இருக்கு. கூட்டிட்டு போவீங்களா?” ஆசையுடன் தன் முகத்தைத் தலை உயர்த்திப் பார்த்த ஷாலுவிடம், “ஓகே கியூட்டி!” என்று குனிந்து அவளை முதுகில் ஏற்றிக் கொண்டான்.

 

சின்ன மலர் மொட்டு அவன் கழுத்தில் கையிட்டு இறுக்கிக் கொள்ள, டெனிமை முட்டிவரை ஏற்றி விட்டு நீரில் இடுப்பு முட்டும் அளவுக்கு சென்று நின்றான் உதய்.

 

“வாவ்…!! நான் இன்னைக்குத் தான் இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கேன். எனக்கு சந்தோஷமா இருக்கு வர்ஷு. டான்ஸ் ஆடணும் போல இருக்கு” என்று மகிழ்வு மின்னக் கூறினாள் ஷாலு.

 

“உன்னால இங்கே டான்ஸ் ஆட முடியாதுல்ல. சோ நீ சத்தமா கத்து. உன் மனசு சந்தோஷப்படுற அளவுக்கு சத்தம் போடு. நீ நினைக்கிறதை சந்தோஷமா சொல்லு”

 

“இன்னைக்கு ஷாலு ரொம்ப ஹேப்பி. சோ ஹேப்பி! அத்து ஐ லவ் யூ. ஐ லவ் யூ வர்ஷு. வர்ஷுவால கியூட்டி ஹேப்பி” தன்னால் இயன்றளவு கத்தினாள் சிறுமி.

 

தன் உயிரானவளின் முகத்தில் பெருகும் சந்தோஷத்தைக் காணக் காணத் திகட்டவில்லை அதியாவுக்கு.

 

அவளது கண்கள் கூட சட்டென கலங்கித் தான் போகலாயின. இத்தனைக்கும் காரணமான வர்ஷனை நன்றியுடன் பார்த்தாள். அதி எழுந்து நீரில் காலை நனைக்க,

 

“அத்து! உனக்கு தண்ணீனா ரொம்ப பிடிக்கும்ல. என்னை தனியா கூட்டிட்டு தூரமா போக பயமா இருக்குன்னு சொல்லுவ. இப்போ தான் வர்ஷு இருக்காருல்ல. வா அத்து விளையாடலாம்” என்று அழைத்தாள் ஷாலு.

 

அதிக்கு வர்ஷு இருக்கும் இடம் செல்ல ஆவல் பிறந்தது. “நோ வராதீங்க இதயா” அவசரமாக மறுப்பைத் தெரிவித்தான் உதய்.

 

“ஏன்? நான் வருவேன். எனக்கு வர ஆசையா இருக்கு” என்று முன்னேறியவளைக் கண்டு “சொன்னா கேளுங்க ப்ளீஸ் ப்ளீஸ் வர வேண்டாம்” பதற்றமாய் சொன்னான்.

 

“நீ வேண்டாம் வேண்டாம்னு சொல்லும் போது தான் எனக்கு அதை செய்யத் தோணுது”

 

“எப்போவும் வேணான்னு சொல்லல. இன்னைக்கு வேண்டாம். அதிம்மா புரிஞ்சுக்கோங்க” கெஞ்சலுடன் அவன்.

 

“ஏன்னு சொல்லு. இல்லேனா வருவேன்” மல்லுக்கு நின்றாள் அந்த பிடிவாதக்காரி.

 

“கடவுளே!” என்று தலையை அழுந்தக் கோதியவன் தனது ஜாக்கெட்டைக் கழற்றி நீட்டி “உங்களுக்கு வர ஆசையா இருந்தா இதை போட்டுட்டு வாங்க. ஏன்னா நீங்க போட்டு இருக்கிறது வைட் டிரஸ்! தண்ணில நனைந்தா சங்கடமா இருக்கும். எத்தனையோ ஆம்பளைங்க இருக்காங்க, நானும் கூட!” என்று மெல்லிய குரலில் கூறியவனை இப்பொழுதும் அதிசயமாகப் பார்த்தாள் காரிகை.

 

இதை எப்படி மறந்தாள்? அவள் அணிந்திருக்கும் வெள்ளை சுடியுடன் நனைந்தால் அவனது உடை ஒட்டி அங்க எழில்களை அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்கும். அவளே நினைக்காத விடையத்தை இவன் நினைத்து கண்ணியம் காத்திருக்கின்றான்.

 

“நான் போய் உட்கார்ந்து கொள்றேன். ரெண்டு பேரும் இன்னும் நனைஞ்சிட்டு வாங்க” என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

 

“உங்க ஆசை எனக்கு புரியுதுங்க. ஆனால் அதை நிறைவேத்துற சிட்டுவேஷன் இது இல்லை. ஒரு நாள் உங்களை கண்டிப்பாக கூட்டி வந்து போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு நனைய விடுவேன். இட்ஸ் ப்ராமிஸ்” என்று புன்னகையுடன் சொன்னான் காளை.

 

ஷாலு ஐஸ் கிரீம் வாங்கிக் கேட்க “ஓகே செல்லம்! நான் வாங்கிட்டு வரேன்” என்று எழுந்த உதய்யிற்கு அலைபேசியில் அழைப்பு வர எடுத்து பேசி விட்டு வைத்தவனோ “நான் அர்ஜெண்டா கிளம்பனும். இதால க்யூட்டிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க” என்று அவள் கையில் பணத்தை கொடுத்தான்.

 

“அங்கிள்!” என ஷாலு அழைக்க, “சாரி டா. வர்ஷு சீக்கிரமா போயாகணும்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்து விட்டுச் சென்றான்.

 

“வர்ஷூஊஊ”  என்று அழ ஆரம்பித்தாள் சிறுமி.

 

“பாப்பா அழாதே! அவனுக்கு ஏதோ வேலையாம்” அவளைச் சமாதானம் செய்ய முயன்றாள் அதியா.

 

“எனக்கு வர்ஷு வேணும். வர்ஷு வர்ஷு” என்று ஏங்கி ஏங்கி அழுதாள் ஷாலு.

 

‘அப்படி என்ன அவசரம் அவனுக்கு?’ என்று அவன் மீது கோபம் கோபமாக வந்தது.

 

“வா வீட்டுக்கு போகலாம்” என அழைக்க, “ஐஸ்கிரீம் வேணும். வர்ஷு வாங்கித் தரணும்” என்று விம்மினாள்.

 

ஒருவாக அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று தூங்க வைத்தாள். அடுத்த இரு நாட்களாக அவன் வரவில்லை. அவனைக் காணாமல் ஷாலு அழுதவண்ணமே இருந்தாள். தூக்கத்திலும் கூட வர்ஷு என்று கத்தினாள். விழித்தாலும் ‘இன்னைக்கு அங்கிள் வருவாரா’ என்று தான் முதலில் கேட்பாள்.

 

அவளின் நிலையைக் காணும் போது வர்ஷுவின் மேல் கோபம் பொங்கியது. “வரட்டுமே அவன்! அவனுக்கு ஓவரா தான் உன் கூட பழக இடம் கொடுத்துட்டேன்” என உள்ளம் கொதிப்பாள் அதிய நிலா.

 

ஷாலினி பாலர் பாடசாலையில் ஏதோ விளையாட்டு நிகழ்ச்சி இருக்க அது முடிந்து வீடு திரும்பும் போது அந்தி சாய்ந்திருந்தது. தூறலாகப் பெய்த மழை இப்பொழுது வலுக்க ஆரம்பிக்க ஷாலுவுக்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததால் அதிகம் நனைவது நல்லதல்ல என்று நினைத்து அங்கிருந்த பிளாட்டில் அண்ணன் மகளோடு நனையாதவாறு ஒதுங்கிக் கொண்டாள்.

 

“கால் வலிக்குது அத்து!” என முகம் சுருக்கினாள் சின்னவள்.

 

“நான் வேணா உன்னைத் தூக்கிக்கவா பாப்பு” என்று கேட்டாள் நிலா.

 

“உன்னால முடியாது கை வலிக்கும். வர்ஷு அங்கிள் சூப்பர் மேன் மாதிரி. அவர் என்னை சூப்பரா தூக்கி வச்சுப்பார்” இப்பொழுதும் அவனைப் பற்றியே பேச,

 

“இப்போ எதுக்கு வர்ஷு வர்ஷுனு அவன் பெயரை இழுக்குற? அவன் தான் உன்னை மறந்துட்டான் இல்ல. நீ எதுக்குடா அதை பிடிச்சு தொங்கிட்டு இருக்கே?” அவளது தலை வருடிய அதக ஷாலினி கண்களில் தோன்றிய ஒளி வட்டத்தில் விலுக்கென நிமிர்ந்து பார்க்க, கைகளை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் விட்டு வந்து கொண்டிருந்தான் உதய வர்ஷன்.

 

“ஓ மை கியூட்டி” என்று கையை விரிக்க ஓடி வந்து அவன் கைகளில் தஞ்சம் புகுந்தது பிஞ்சு.

 

“ஏன் என்னைப் பார்க்க இரண்டு நாளா வரல? ஷாலு உங்களை தேடித்தேடி அழுதா. இவ்வளவு கண்ணீர் வந்தது” கைகளைப் பெரிதாக விரித்து காட்டியது பிஞ்சு.

 

“சாரிடா தங்கம். இப்போ உங்களை காண வரவாம்னு இருக்கும் போது தான் மழை வந்துச்சு :என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

 

“பொய் சொல்லுறது உனக்கு கை வந்த கலையாச்சே. இப்போ எங்களை கண்டதும் இவள பாக்க வரப்போனதா ரீல் விடுறியா? உன் நடிப்பை இனியும் நான் நம்ப தயாரா இல்லை” கோபத்தில் மூக்கு நுனி சிவக்க கத்தினாள் அவனது பெண்டா பேபி.

 

“இதயா! வாட் ஹாப்பன்ட்?” அவளது கோபத்தில் திகைத்தான் காளை.

 

“ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? என் பெயர் அதியநிலா! இதயானு கூப்பிடாத. உன்னால ஷாலு எவ்வளவு கஷ்டப்பட்டானு தெரியுமா? அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு! ஹ்ம் கரெக்டா தான் சொல்லி இருக்காங்க. ஷாலுவை உன் கூட லிமிட்டை மீறி பழக வச்சுட்டேன். அதனால தான் நீ வரலனதும் சரியா சாப்பிடாம தூங்காம உன் பெயரையே சொல்லிக்கிட்டு இருந்தா. அப்படி என்ன அவசரத்தில் அன்னைக்கு ஓடின?” காட்டமாக வினவினாள் அவள்.

 

“கோபப்படாதீங்க தியா! லெட் மீ எக்ஸ்ப்ளெயின்”

 

“ஒரு மண்ணும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. தயவு செஞ்சு போயிடு”

 

“நான் போக வரல. உங்களையும் கூட்டிட்டு போகத்தான் வந்தேன். வாங்க வீட்டுக்கு உள்ளே போகலாம் “என அழைத்தான் உதயா.

 

“தெரியாதவங்க வீட்டுக்குள்ள போக மேனர்ஸ் இல்ல? உன்னோட வீடு மாதிரி உரிமையா கூப்பிடுறே”

 

“நீங்க கொஞ்சம் அறிவாளியாத் தான் இருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரி இது என் வீடு தான்” என்று புன்முறுவல் கோட்டினான்.

 

“அப்போ உள்ளே கூட்டிட்டு போங்க வர்ஷு” என துள்ளினாள் ஷாலு.

 

“ஓகே கியூட்டி! உன் அத்துவையும் அழைச்சிட்டு போகலாம். வாங்க இதயா”

 

“இது உன் வீடுன்னு தெரிஞ்சிருந்தா நின்னு இருக்கவே மாட்டேன். என்னைக் கூப்பிடாத நான் வரவும் மாட்டேன்” பட்டென மறுத்தாள் அவள்.

 

“இவ்வளவு பிடிவாதம் கூடாதுங்க. யாரோ ஒருத்தங்க வீடா நினைச்சு வந்து உட்காருங்க” பாசம் நிறைந்து வழிந்தது அவன் குரலில்.

 

“தயவு செஞ்சு என்னை டிஸ்டர்ப் பண்ணாத”

 

“இங்கே நின்னுட்டு இருக்கிறதுக்கு பதிலா வரலாமே” என்று அவன் சொன்னதும், “உனக்கு நான் இங்கே இருக்கிறது தான் ப்ராப்ளமா? நான் வெளியே இருக்கிறேன்” என்று கூறி வெளியே செல்ல மழைத்துளிகள் அவள் உடலை முத்தமிடலாயின.

 

“என்ன பண்றீங்க அதி? இந்த மழையில நனைய வேண்டாம்” என்று பதறினான்.

 

அவளோ “ஷாலுக்கு சுகமில்லை அதனால அவளை வேணா கூட்டிட்டு உள்ள போ. நான் இப்படித்தான் இருப்பேன்” திடமாக சொல்ல அவனும் ஷாலுவை உள்ளே அழைத்து சென்று அவளுக்கு பிஸ்கட் கொடுத்து விட்டு தன்னவளிடம் வந்தான்.

 

இன்னும் கொட்டும் மழையில் நின்று இருக்க “உள்ளே வரலனாலும் பரவாயில்லை. ஆனால் நனையாதீங்க. எனக்கு சளி இருக்கு. இப்போ மழையில நனைஞ்சா ஹாஸ்பிடல்ல தான் நிற்க வேணும். நீங்க வரலனா நானும் நனைவேன். அப்பறம் எனக்கு ஃபீவர் வந்தா அதுக்கு நீங்க தான் பொறுப்பு” என்று மழையில் நனைய ஆயத்தமானான் அவன்.

 

“இல்…இல்ல வேண்டாம். நான் நனையல” என நனையாமல் நின்று கொண்டாள் அதி.

 

“அப்படியே உள்ளே வாங்க. உங்க கூட பேசவே மாட்டேன். உங்களை டிஸ்டர்ப் பண்ணவும் மாட்டேன்” என்று கெஞ்சினான்.

 

அவள் மனம் அவனது அன்பில் இளகியது. இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள மனம் இல்லாமல் “ஷாலு என்னைத் தேடுவா! அதனால வரேன்” என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்தாள் அதி.

 

“ஷாலு டார்லிங்! என்னடா போரடிக்குதா?” என்று ஷாலுவிடம் கேட்டான் உதய்.

 

“ஆமா வர்ஷு. டிவில ஏதாச்சும் கார்ட்டூன்ஸ் போட்டு தாங்க” என அவனைக் கொஞ்சினாள் அவள்.

 

“ஒஓ! இந்த டைம்ல கார்டூன்ஸ் போகாதுடா. கொஞ்சம் இரு வரேன்” என அறைக்குள் நுழைந்தவன் கையில் நிறைய சிடிகளை அள்ளிக் கொண்டு வந்தான்.

 

அதி எட்டிப் பார்த்தாள். அனைத்தும் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்.

 

“உங்க கூட இன்னும் யாராவது குட்டிப் பாப்பா இருக்காங்களா? அவங்களுக்கு பார்க்கற கார்டூன்ஸா இது?” ஷாலு கேள்வி தொடுக்க, “அப்படி யாரும் இல்லை” என்றவனை அதியும் அதே கேள்வியுடன் பார்த்திருந்தாள்.

 

ஷாலுவின் காதருகே குனிந்து “அதெல்லாம் நான் பார்த்தது க்யூட்டி! அத்து கிட்ட சொல்லாத” என்றான் ரகசியமாக.

 

அவளோ கலகலத்துச் சிரிக்க அதிக்கு கேட்டு விட, “மாயக்காரர் மட்டுமில்ல. இவன் குட்டிப் பாப்பாவும் கூட” என மனதினுள் சிரித்தாள் அதியா.

 

தன்னை நினைத்து அவளுக்கே அதிசயமாக இருந்தது. அவன் மேல் மலையளவு சுமந்து வந்த கோபம் பஞ்சாகப் பறந்து போயிருந்தது.

 

டாம் அண்ட் ஜெர்ரி போட்டு ஷாலுவுடன் அமர்ந்து அவளோடு சிரித்து சிரித்து பார்ப்பவனை கன்னத்தில் கை வைத்துப் பார்த்தாள்.

 

கிச்சன் சென்று காபி போட்டு வந்து ஷாலுவுக்கு கொடுத்து விட்டு அவளிடம் நீட்டினான் உதய். தன் முகத்தை நோக்கியவளிடம் “எடுங்க” என்பதாக கண்ணைக் காட்ட முரண்டு பிடிக்காமல் எடுத்துக் குடித்தாள்.

 

எவ்வளவு அருமையாக இருந்தது காஃபி. “ஸ்வீட் காபி” என்று சுவைத்த ஷாலினி “நீங்க பெண்டா கூட கோபமா?” எனக் கேட்டாள்.

 

“இல்லடா க்யூட்டி! நான் அவங்க கிட்ட கோபப்படுவேனா? அவங்க தான் என் கூட கோபமா இருக்காங்க. நான் வரலைனதும் நீ அழுதியாம். அதனால அத்து கோபமா இருக்காங்க. இனிமேல் என்னைத் தேடி அழ மாட்டேன்னு அத்து கிட்ட சொல்லுங்க. அப்போ பேசுவாங்க” என்று சோகமாக கூறினான் அவன்.

 

“அச்சோ நான் அழ மாட்டேன். ஆனால் நீங்க எப்போவும் என்னைத் தேடி வந்து பேசணும் சரியா?” அவன் கன்னங்களைத் தன் பிஞ்சு விரல்களால் பிடித்துக் கேட்டாள் ஷாலு.

 

“டபுள் ஓகே” என்று தலையாட்டினான் வர்ஷா.

 

“அத்து! நான் அழுததற்கு சாரி. அங்கிள் கூட பேசு” என்று அதியிடம் ஷாலு கேட்க “ம்ம்” என தலையாட்டினாள் அதியநிலா.

 

அவளைப் பார்த்து “உன் கோபத்தில் கூட நெஞ்சம் உருகுகிறேன் பெண்ணே! அது கூட எனக்கானதே என்பதில்” அவளை சிரிப்போடு ஏறிட்டான் வேங்கை.

 

“எங்கே இன்னைக்கு கவிதை பிறக்கலேன்னு நினைச்சேன். சொல்லிட்ட” என்று பொய்யாக மறைத்தாலும் அவன் தன்னோடு பேசியது இன்பத்தைக் கொடுத்தது பாவைக்கு.

 

“இப்படி முறைச்சா ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க முறைப்பு தான் உங்களுக்கு தனி அழகே. ஐ லைக் இட்!” கண் சிமிட்டிய ஆணழகனை அவன் கூறியதற்காகவே பெரிதாக முறைத்தாள்.

 

மழை விட்டதும் ஷாலுவுடன் வீடு திரும்பியவள் தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான் வர்ஷன்.

 

காலையில் எழுந்தவளுக்கு கைகள் நடுங்க, தன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். நேற்று மழையில் நனைந்தது ஒத்துக்கவில்லை போல! அனலாகக் கொதித்தது உடம்பு.

 

“ஸ்ஸ்…!!” என்று தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு எழும்புவதே சிரமமாக இருந்தது. ஒருவாறு எழுந்து ஷாலுவைத் தேட அவளோ ஹாலில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தவள் “குட் மார்னிங் அத்து குட்டி” என புன்னகைத்தாள். அவளே எழுந்து தனியாக கழுவி உடை மாற்றியிருந்தாள்.

 

“சாரி பாப்பு. லேட்டாயிடுச்சு” என்று அதியா கூற, “இட்ஸ் ஓகே! நான் இப்போ பெரிய பொண்ணுல்ல. என்னால எழுந்து டிரஸ் போட முடியும். உன்னையும் பார்த்துக்க முடியும். இன்னைக்கு பெண்டா என் பொண்ணு! நான் அம்மா.” பெரியவள் போல் பேசிய ஷாலு இதைத் தானாக பேசவில்லை, உதய் சொல்லியே பேசுகிறாள் என்பது புரிந்தது.

 

“எழுந்ததும் உன் உடம்பு கொதிச்சா நான் எழுந்து நல்ல பிள்ளையா ரெடியாகி இந்த டேப்லெட்டை உனக்கு கொடுக்கணும்னு வர்ஷு சொன்னாரு” என்று மாத்திரையை நீட்டினாள் ஷாலு.

 

“எனக்கு ஃபீவர் வரும்னு அவன் நினைத்திருக்கிறான். மாத்திரை கொடுக்க அவன் என்ன பெரிய டாக்டரா? அப்பாடக்கர்” அதை மேசையில் வைத்தாள்.

 

உடம்பு சூடு வர வர அதிகமாக சுமதிக்கு அழைத்து ஷாலுவை அவரோடு அனுப்பப் பார்க்க, “நான் பக்கத்து ஊருக்கு போயிருக்கேன் அதி. நீ ஷாலுவைத் தனியாக விடாமல் அவளையும் கூட்டிகிட்டு டாக்டர்கிட்ட போய் பாரு. இல்லன்னா ஷாலு கிட்ட இருந்தா அவளுக்கும் பரவ சான்ஸ் இருக்கு” என்று அக்கறையுடன் கூறினார் சுமதி.

 

ஷாலு அவளோடு இருந்தால் அவளுக்கும் பரவும் என்பதால் அவளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த டாக்டரிடம் சென்றாள். “இந்த டாக்டர் இன்னைக்கு நைட் ஷிப்ட்! இப்போ வர மாட்டார்” என்று கூறிய செக்யூரிட்டி  ஒரு அட்ரஸ்சைக் கொடுத்து அங்கு சென்று வேறொரு டாக்டரை சந்திக்க சொன்னார்.

 

ஆட்டோவில் அந்த இடத்திற்கு சென்று ஷாலுவை வெளியே இருந்த பெண்ணிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

 

“டாக்டர்…!!” என்று அவள் நலிந்த குரலில் அழைக்க, “எஸ்! டேக் தி சீட்” என்று சொல்லியவாறு திரும்பியவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள் அதிய நிலா.

 

சுழல் நாற்காலியில் அமர்ந்து டாக்டர் கார்ட் போட்டு, கையில் ஸ்டேத்தஸ் கோப்புடன் அவளைப் புன்முறுவலுடன் பார்த்தான் டாக்டர் உதய வர்ஷன்…!!

 

நிலவு தோன்றும்….!!🌛

 

✒️ ஷம்லா பஸ்லி🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!