இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம் எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான் உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு.
ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன்.
அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான்.
சரி ஆதி. நீ என்ன கடிச்சது தப்புனு நீ புரிஞ்சிகிட்டைனா சரி தான். உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல. லெட்ஸ் ப்ரண்ஸ் என்று கையை தோழமைக்காக நீட்டினாள்.
இத பாரு…யூ ஆர் நாட் மை ப்ரண்ட். யூ ஆர் மை ஒன் அண்ட் ஒன் எனிமி..இது என் அம்மாவுக்காக மட்டும் தான்… மத்தபடி நீயும் நானும் ப்ரண்ஸ் நோ சான்ஸ்…
ஐந்தாம் வகுப்பின் முடிவிலும் கூட அவள் மீது அவனுக்கு கோபம் குறையவில்லை.
ஆதி… என் மேல ஏன் இவ்வளவு கோபம் உனக்கு…
அவனுடைய நட்பை எதிர்பார்த்து காத்து காத்து தோற்று போனவளின் பறிதவிப்புகள் இவை அனைத்தும்.
ஏய் டோன்ட் டெல் ஆதி… என்ன பொறுத்த வரை நீ தேர்ட் பெர்சன்…நீ என்ன நேம் சொல்லி கூப்பிட கூடாது… என்ன பொறுத்தவரை எனக்கு குளோஸ் ஆனவங்க மட்டுமே அப்படி கூப்பிடனும்…
அந்த குளோஸ் லிஸ்ட்ல நான் இல்லையா ஆதி..
கண்டிப்பா கிடையாது…உன்னலாம் நான் ப்ரண்ட் லிஸ்ட்லையே வைக்க நான் தயங்குற…குளோஸ்னு வேற நீ ஆகனுமா?…
ம்ம்…எனக்கு ரொம்ப நாள் ஆச ஆதி…
ஆசபாச வைக்கிற அளவுக்கு நீங்க ஒன்னும் எனக்கு புடிச்சவங்க கிடையாது அன்பினி. நீ என்னோட வீட்டில காசே கொடுக்காம தங்குற வாடகை வீட்டு காரங்க தான்…. ஶ்ரீஜாம்மா எனக்கு உயிர்….பாஸ்கரன் அப்பா கூட எனக்கு கொஞ்சம் இஷ்டம்…பட் யூ நாட் மை ப்ரண்ட்…பிகாஸ் ஐ ஹேட் யூ அன்பினி…ஐ ஹேட் யூ…
என்ன இப்படி நீ வெறுக்க காரணம் தான் என்ன ஆதி?…
பிகாஸ் யூ ஆர் ஏ அன் நாலேஜ் விமன். தட்ஸ் த ரீசன்…உன்ன மாதிரி அறிவு கொஞ்சம் கூட இல்லாத மத்தவங்க வீட்டில வாழுற புழு பூச்சியெல்லாம் எனக்கா பிடிக்காது. …சோ உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது…
ஆதி…
அவள் அழைக்க அழைக்க வீட்டின் முன் உள்ள வட்டவடிவ புல்தரையில் பேசிக்கொண்டு இருந்தவன் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
என்ன மட்டும் ஏன் ஆதி இப்படி வெறுக்கிறான்…பட் எனக்கு அவன்னா ரொம்ப இஷ்டம்…
நிலாவை பார்த்து சொல்லிவிட்டு தனது கன்னத்தில் ஓடிக்கொண்டிருந்த கண்ணீரை துடைத்து கொண்டவள் வீட்டினுள் நுழைந்தாள்.
அன்பரசியோடு ஷோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஆதிரனிடம் நெருங்கினாள்.
ஆதி…
அழைத்தவளை நிமிர்ந்து நோக்கினான்..கூடவே அன்பரசி மற்றும் ஸ்ரீஜாவும் அவளை நோக்கினார்கள்.
உன்னோட சாரிய(sorry) நான் அக்செப்ட் பண்ணிக்கிறன்… நீ என்னோட பேவரட்..நீளாம் என்கிட்ட சாரி கேட்கனும்னு அவசியம் இல்லை. ஓக்கேவா…அன்பரசிமா நான் அவன் மன்னிப்ப ஏத்துக்கிட்டன்…
நீங்க அவன் கூட எப்பவும் போல ஜாலியா பேசிட்டு இருங்க…
சொன்னதோடு தனக்கென கொடுத்திருந்த அறையினுள் நுழைந்து கொண்டவள் பெயிண்ட் பிரஷ் ஒன்றை எடுத்து மண்டேலா ஆர்ட்டை வரைந்தாள்.
ஷோபாவில் அமர்ந்திருந்த ஆதிரனுக்கு அவள் மீது கோபம் இன்னும் அதிகமானது. ஏன் வெளியவே சொன்னா என்னவாம். என் அம்மாகிட்ட நல்ல பேரு வாங்குறதுக்காகவே இவ நாடகம் போடுறா…ஹீரோயின் மாறி நல்லா நடிக்கிறா…பட் ஷி ஸ் கரட் சீரியல் கில்லர்….
முணுமுணுத்து விட்டு தனது அறைக்குள் நுழைந்தவன் தனது தலகாணியை குத்தி கிழித்தான்.
மறுநாள் சனி விடியற்காலையில் அன்பரசியின் அழைப்பினால் அந்த வீடே கதிகலங்கி போனது.
ஹலோ…என்ன அப்படியா…தா உடனே வரோம் நாங்க எல்லாம்…
அழைத்தது தீபா தான்..
அன்பரசியின் தந்தை உயிரிழந்து விட்டதாக தீபா சொல்ல ஓடி சென்றார்கள்.
அன்பரசிக்கு அழுகை அழுகையாய் வந்து கொண்டே பயணம் தொடர்ந்தது. ஶ்ரீஜா அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். இன்பரசன் மற்றும் பாஸ்கரன் பெருத்த மௌனத்துடன் கடினமான மனதோடு பயணித்தார்கள்.
ஆதிரனுக்கும் அன்பினிக்கும் உறக்கம் தாங்காமல் உறங்கி விட்டார்கள் இருவருமாக காரிலே!…
மூன்று மணிநேர பயணத்தின் பிற்பாடு தனது சொந்த ஊரானா கள்ளக்குறிச்சியை வந்தடைந்தார்கள் நால்வரும்.
காதல் திருமணத்தை பிடிக்காததால் வீட்டை தேடி வராதவர்கள் பன்னிரண்டு வருடம் கழித்து மீண்டும் சொந்த ஊரில் அடியெடுத்து வைத்தார்கள்.
அன்பரசிக்கா….அழுதபடி வந்த தீபாவிற்கு இப்போதும் பொறாமை அதிகமானது.
அன்பரசியோடு வந்திருந்த ஶ்ரீஜாவை கண்டதும் ” எங்க போனாலும் ஒட்டிக்கிட்டு வந்துடுதுங்க… பணத்தாச பிசாசுங்க…
அங்கே ஏற்பட்டிருந்த மாபெரும் இழப்பில் தவித்து போயிருந்த நால்வரும் அர்த்தமாக பார்த்த தீபாவினை கவனிக்கவில்லை.
ஶ்ரீஜாவின் அருகே போய் நின்ற “அக்காவ இங்க கூட தனியா விட மாட்டாயா…நீங்க போடுற நாடகம் லாம் ஏன்தான் எங்க அக்காவுக்கு இன்னும் புரிய மாட்டங்குதுன்னு தெரியலை…அவளை கத்தி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி காயப்படுத்துவதில் நிம்மதி அவளுக்கு.
அத்தோடு அவள் நகர்ந்து கொண்டு அன்பரசியோடு ஒட்டி உறவாடி கொண்டிருந்தாள்.
ஶ்ரீஜா தனித்து விடப்பட்டதோடு மற்றவர்களிடமும் அதே வசைப்பாடலை வாங்கி கட்டிக் கொண்டு இருந்தாள்..
ஒரு வாரமாக அங்கிருந்தவர்கள் கிளம்பும் போது ஆதிரனிடம் வெகு நேரமாக தீபா உரையாடிய பின் அனுப்பி வைத்தாள்.
அன்பரசி விடைபெற்ற தோடு அங்கே அமைதி நிலவியது.
தீபாவின் சூட்சமம் ஆதிரன் என்ற துளிர்விடும் செடியில் படற தொடங்கியது.
பயண களைப்பில் போன உடனே அனைவரும் துயில் கொண்டனர் ஆதிரனை தாண்டி.
அன்பினியும் வெளி சோஃபாவில் உறங்கி கொண்டிருந்த போது அவளின் மீது கொஞ்சம் சூடாக இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடி மறைந்து கொண்டான்.
ஐய்யோ சுடுதே…அலறியடித்து எழுந்தவள் ஆதிரனின் தோள் சமையலறையில் மறைந்திருப்பதை பார்த்ததும் கப்சிப்பென அமைதியாகி விட்டாள்.
ஆதிரனின் அன்புக்கு உரித்தானவளாக மாற வேண்டும் என முடிவு எடுத்தவள் அவனது தவறை பெரியவர்கள் வரை கொண்டு செல்வதை நிறுத்தி கொண்டாள்.
தேர்வின் மதிப்பெண்கள் போல அவளின் இந்த முடிவு அவளுக்கே வினையாகியும் போனது எண்ணற்ற சமயங்களில்.
உயர் நிலை பள்ளியில் அவளது ரேங்கார்டை திருடி அவளது குறைந்த மதிப்பெண்ணால் வீட்டில் திட்டு வாங்க வைத்தவை, அவள் மிதிவண்டி ஓட்டி கீழே விழுந்து சரிந்து போன காயங்களை போட்டுக் கொடுத்தது, மீன் தொட்டியை அவள் கல் விட்டெறிந்து உடைந்தது என் அனைத்தையும் மாட்டி விட்டு ஶ்ரீஜாவிடம் போட்டுக் கொடுத்து அடி வாங்க வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தான்.
அத்தோடு உயர் நிலைப்பள்ளியில் தொடர்ந்த அவர்களின் நேச வினைகள் மேல்நிலை பள்ளியிலும் நீடித்தது.
பதினொன்றாம் வகுப்பின் முப்பத்து நான்காவது ஆண்டு விழாவின் பொறுப்பு ஆதிரனை சார்ந்திருந்தது.
பள்ளி பருவத்தில் அவளது முகத்தில் கரியை பூசுவதற்காக மட்டும் விழுந்து விழுந்து படித்து எல்லா வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்று வீட்டில் மற்றவர்கள் தன்னை பாராட்டும் அளவு வைத்து கொள்வான்.
இவர்கள் அடிதடியை தவிர மற்றவற்றில் பள்ளியிலும் சமத்து என்று பெயர் வாங்கி கொண்டான் என்பது அதிசயம்.
அதிலும் எந்தெந்த வகுப்பாசிரியரிடம் சரமாரியாக அடி மற்றும் திட்டுக்களை வாங்கினானோ அவர்கள் அனைவருக்கும் ஃபேமஸ் ஆனான்.
இருந்தும் அன்பினி என்ற ஒருத்தி இடம் மட்டும் வேண்டாவெறுப்பாக பேசி அவளை காயப்படுத்தி குளிர் காய்வதில் அவனுக்கு என்றும் திருப்தி கிடைக்கும்.
இதோ இப்போதும் கூட அவளை மாட்டிவிட தான் தவியாய் தவிக்கிறான்.
கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற பாடலுக்கு அவள் பள்ளியில் நடனமாடுவதாக பெயர் கொடுத்திருந்தாள்.
அதை எப்படி கெடுப்பது என்று யோசித்தவனுக்கு ஶ்ரீஜாவிடம் மாட்டி விட்டாள் போதுமென அழைத்து விட்டு அவரது வருகைக்கு வழி மீது விழி வைத்து காத்திருந்தான்.
அவளும் வந்து விட அன்பினியை அழைத்து வந்தான் அம்மா வந்திருக்காங்க என்று…
அவளும் என்னவென ஓடிவந்து பார்க்க, டேன்ஸ் ஆடுறையாமே…யார கேட்டு நீ ஆடுற…கோபமாக ஶ்ரீஜா பேசினாள்.
பெண்பிள்ளை பொறுப்பாக இருக்க வேண்டும் என தினம் இருமுறை அவளுக்கு அறிவுரை வகுப்பு எடுப்பவள் அவளது விருப்பத்திற்கு எப்படி துணை போவாள்.
அம்மா நான் இன்னைக்கு வந்து சொல்லிருப்பன்… இப்ப யார் சொன்னா ஆதியா?..என அவனை முறைத்தவளிடம் அவன் சொல்லலைடி என்று அவனை காப்பாற்றி விட்டவள் வகுப்பாசிரியரிடம் சென்று அவளது பெயரை நடன போட்டியில் இருந்து விளக்கி விடுமாறு சொல்லிவிட்டு அவளை அழைத்து சென்றாள்.
ஆதியின் அருகே வந்த அன்பினி ஆதி பீள்ஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு… என்னோட பிரெண்ட்ஸ் எல்லாமே இந்த டான்ஸ் போட்டியில ஆடுகிறாங்கள்ள.. எங்க அம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் புரிய வையேன். நீ சொன்னா கண்டிப்பா எங்க அம்மா செய்வாங்க…
சூனியம் வைத்தவன் கையாலே எடுக்க வைப்பதா!…
சரி சரி இரு அன்பினி நான் அம்மாட்ட பேசிட்டு வரேன்…
ஸ்ரீஜாவிடம் வந்தவன் அவள் வேண்டியவற்றை மட்டும் கேட்காமல் மற்றவற்றை பேசி பேசி சிரித்து சிலாகித்துக் கொண்டிருந்தான்.
பள்ளி வகுப்பு ஆசிரியரும் ஆதிரனை பற்றி பெருமையாக பேசி அவனை தோல் தட்டிக் கொடுத்தார்கள்.
ஆதி ரொம்ப குட் தான்… பட் அன்புனின்னு வரும்போதுதான் ரொம்ப பேட் பயனா மாறிடுறான்…
குட் காம்ப்ளிமென்ட் போலவே பேக் காம்ப்ளிமண்டையும் ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொண்டான்.
ஆவலாக காத்து கொண்டு இருந்தவளுக்கு நோ சக்ஸஸ் என்ற குறியை காட்டி விட்டு தனது சந்தோஷத்தை பற்றி பேசினான்.
ஶ்ரீமா இந்த இயர் ஆண்டிவிழாவில நான் டான்ஸ் ஆட போறேன் நீங்க கண்டிப்பா வந்து பாத்துட்டு தான் போகணும்.
கண்டிப்பா வரேன் டா தங்கம் உன்னோட டான்ஸ் பார்க்க நான் வராம வேற யாரு வருவா…
பெண் பிள்ளைக்கு ஒரு பழக்கம் ஆண பிள்ளைக்கு ஒரு பழக்கம் என்று வகுத்து கொண்டால் ஸ்ரீஜா.
அன்பினி முகத்தை வாடியவாறு வைத்துக் கொண்டாள்.
ஸ்ரீஜாமாவை வழி அனுப்பி விட்டு அன்பினியிடம் நெருங்கியவன் அவளது சோக சுருண்ட முகத்தை கண்டு உள்ளுக்குள் குலுங்கி குதூகலித்து கொண்டான்.
ஆனால் வெளியே மட்டும் சாரி அன்பு நானும் ஶ்ரீமா கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். பொண்ணுங்களாம் டான்ஸ் ஆடவே கூடாதாம். அப்படி ஒரு கோட்பாடு இருக்கிறப்ப என்னோட பொண்ணை எப்படி டா ஆட விடுவேன் அப்படின்னு என் கிட்டயே சண்டைக்கு வந்துட்டாங்க…
அங்கே நடந்த அனைத்தையும் முழுதாக உள்டாவாக மாற்றி கூறினான்.
மீண்டும் அவளது முகம் சோகத்தில் சுருங்கி விட்டது. அதைக் கண்டு மனதார சிரித்தவன் சரி நான் போய் ப்ளான்ஸ் எல்லாம் பார்க்கிறேன் என்று டாட்டா காட்டிவிட்டு நகர்ந்தான்.
பாவம் இவளது சோகம் முகத்திற்கு முழு காரணமான அவனிடமே அதற்கு வழிவகை செய்ய சொல்லி கேட்கிறாளே இந்த அன்பினி.
ஐந்தாம் வகுப்பிற்கு பின்பு ஆதிரனும் அன்பனியிடம் நட்பு பழகுவது போல பழகி அவளை பழிவாங்கிக் கொண்டிருந்தான். அன்பினிக்கு அவனது இந்த குணம் சுத்தமாக தெரியாது. அவளை கடித்ததனால் அவனுக்கு இலகு குணம் தன் மீது வந்துள்ளது என்று தவறாக யோசித்துக் கொண்டவள் அதன் பின் அவனை முழுவதுமாக நம்ப ஆரம்பித்து படு குழியில் விழுந்து கொண்டிருந்தாள்.
செந்தனலா?…மழையா?…
கௌசல்யா வேல்முருகன் 💝