“தப்பு பண்ணிட்டேன் ஷேத்ரா.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்… உன்னோட காதல புரிஞ்சுக்காம அப்போ ஒதுக்கி தள்ளினத்துக்குத்தான் இப்போ வரைக்கும் நான் கவலைப்பட்டுக்கிட்டே இருக்கேன்… நான் பண்ணது தப்புன்னு சத்தியமா புரிஞ்சுகிட்டேன்டா…
மறுபடியும் அந்தத் தப்ப இனி பண்ணவே மாட்டேன்… நீ என்கிட்டயே வந்துரு குரு… என்னால நீ இல்லாம வாழ முடியல… இந்த வாழ்க்கை எனக்கு வேணாம்…” எனத் தாரா கூற,
அபர்ணாவின் கரங்களிலோ நடுக்கம் பரவத் தொடங்கியது.
“எனக்கு செ***** வேணாம்.. உன்னோட அன்பு மட்டும் போதும்… நீ என்ன தாரு தாருன்னு கொஞ்சுறது போதும்… உன்னோட அக்கறை போதும்… வேற எதுவுமே எனக்கு வேணாம் குரு… ப்ளீஸ் மறுபடியும் என்கிட்ட வந்துடுடா… உன்ன வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க எனக்குப் பிடிக்கல.. அதனாலதான் அந்த ரிப்போர்ட்டை மாத்தி பொய் சொல்ல சொன்னேன்… ஐ ஸ்டில் லவ் யூ ஷேத்ரா…” என்றவள் வேலையாட்கள் நிற்பதைக் கூடப் பொருட்படுத்தாது குருவை நெருங்கி வந்து அவனுடைய கரங்களைப் பற்றிக் கொள்ள,
நெஞ்சில் சுருக் சுருக்கென வலித்தது அபர்ணாவுக்கு.
தடுமாறி நின்றவள் எதுவும் கூறாது திரும்பி நடக்கத் தொடங்க அடுத்த நொடியே அவளுடைய கரத்தைப் பற்றித் தன் அருகே இழுத்தவன் அவளைத் தன் கையணைப்புக்குள் நிறுத்திக் கொண்டான்.
“ஹா.. ஹா… லவ்வா…? எக்ஸ்கியூஸ் மீ… அதுக்குப் பேரு லவ் இல்ல லஸ்ட்… என்கிட்ட திருப்தி கிடைக்காதுன்னுதானே மேடம் என்னை வேணாம்னு சொல்லிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..? இப்போ மறுபடியும் நான்தான் வேணும்னு வந்து நிக்கிறீங்க..? என்ன ஆச்சு.? ஒருவேளை நீ பொண்ணே இல்லன்னு உன்னோட புருஷனுக்கும் உண்மை தெரிஞ்சிடிச்சோ..? வாட்எவர் உன்னோட வாழ்க்கையை பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்ல…
இதோ இருக்காளே இவதான் என்னோட பொண்டாட்டி… இவளோட கால் தூசிக்கு கூட நீ வர மாட்ட தாரா.. காதல்னா என்னன்னு எனக்கு புரிய வச்சவ இவ…” என்றவன் ஒரு கணம் தன்னுடைய விழிகளை மூடித் திறந்தான்.
“நீ பண்ண வேலைக்கு இந்த இடத்திலேயே உன்னைக் கொன்னு புதைச்சிருப்பேன்… ஆனா அதோ அங்க நின்னு உன்னையே எதுவும் புரியாம பார்த்துகிட்டு இருக்காங்களே உன்னோட ரெண்டு குழந்தைங்க… அவங்களுக்காக மட்டும்தான் உன்ன உயிரோட விடுறேன்… இதுக்கு மேல என்கிட்ட இருந்து தள்ளியே இரு தாரா… முன்னாடி மாதிரி நீ திட்டினா கெஞ்சி அழுற குரு நான் இல்ல… கொலை கூட பண்ணத் தயங்க மாட்டேன்.. ஜாக்கிரதை..” என எச்சரித்தான் குரு.
“நோ… நோ.. தப்புதான் நான் பண்ணது எல்லாமே தப்புதான்.. அழகு பணம் சுகம் மட்டுமே முக்கியம்னு இருந்துட்டேன்.. ஆனா இத்தனை வருஷம் போனதுக்கு அப்புறம்தான் உண்மையான சந்தோஷம் எதுல கிடைக்குதுன்னு புரிஞ்சுகிட்டேன்.. நிஜமாவே எனக்கு உன்ன மட்டும்தான் பிடிச்சிருக்கு ஷேத்ரா..” என்றவள் மீண்டும் அவனை நெருங்க முயன்ற கணம்,
அவர்களுக்கு இடையே வந்த நின்ற அபர்ணாவின் விழிகளிலோ நெருப்பு பற்றி எரிந்தது.
“போதும் நிறுத்து… காமம் மட்டுமே முக்கியம்னு நினைக்கிற உனக்கு காதலோட சக்தி என்னன்னு தெரிய வாய்ப்பே கிடையாது… லவ் பண்ணும் போது இவருக்குத்தான் நீ உண்மையா இல்லை… இப்போ கட்டின புருஷனுக்காவது உண்மையா இருக்கலாம்ல…?
இதுக்கு மேல என்னோட வாழ்க்கைல நீ தலையிடாம இருக்கிறதுதான் உனக்கு நல்லது தாரா… ஏன்னா நான் இவரை காதலிக்கிறேன்.. என்னோட காதலன எதுக்காகவும் யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லை…” என எச்சரித்தவள் தன்னவனை நோக்கித் திரும்பி,
“வாங்க குரு போகலாம்…” எனக் கூற,
இவ்வளவு நாட்களும் தன்னை மாற்றிக் கொண்டிருந்தாலும் கூட அவ்வப்போது தன் மீது ஏதும் குறை இருக்கிறதோ என மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அபர்ணாவின் வார்த்தைகள் மூலம் முற்று முழுதாக அழிந்து விட,
அபியின் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன் வேகமாக அவளைத் தன்னருகே இழுத்து அழுத்தமாக அவளுடைய இதழ்களில் முத்தத்தைப் பதித்து விட்டு விலக இவளுக்கோ முகம் சிவந்து போனது.
உலகத்தையே வென்றவன் போல தலை நிமிர்ந்து நின்றான் குரு.
அபர்ணாவின் வாயில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் போதுமே இதைவிட ஒரு கணவனுக்கு வேறு என்ன கௌரவம் கிடைக்கப் போகின்றது..?
“நீ நம்ம காருக்குப் போ… இவகிட்ட நான் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு…” என பல்லைக் கடித்துக்கொண்டு கூறியவனின் கரத்தை வலுக்கட்டாயமாக அழுத்திப் பிடித்துக் கொண்டவள்,
“நாம யாரையும் எதற்காகவும் பழி வாங்க வேண்டாம் குரு… போகலாம்…” என்றவள் அவனை அழைக்க,
தாராவின் விழிகளில் இருந்தோ பொறாமை தாங்க முடியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது.
“போகாத ஷேத்ரா… போகாத… என்னோட ஈகோவை விட்டுச் சொல்றேன்… நா.. நான் இங்கே ச.. சந்தோஷமா இல்ல.. என்ன விட்டுட்டுப் போகாத.. அ. அவன் என்னை அடிச்சு கொடுமப் படுத்துறான்.. ப்ளீஸ் போகாத… நான் பொய் சொல்லலை.. இங்க பார்..” என்றவள் வேகமாக தன்னுடைய ஆடையை நெகிழ்த்தி தன் முதுகுப் புறத்தை அழுகையோடு காண்பிக்க அவளுடைய பேச்சை சிறிதும் செவிமடுக்காமல் அபியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான் குருஷேத்திரன்.
தான் கூறியதை முழுவதுமாகக் கூட கேட்காது அங்கிருந்து சென்று விட்டிருந்த தன்னுடைய பழைய காதலனைக் கண்டு அவளுடைய இதயம் ஏங்கித் தவித்தது.
மிகப்பெரும் வைரத்தை சில்லறை காரணத்துக்காக இழந்து விட்டோம் என்பது புரிந்து அழுதாள் அவள்.
அதுவும் அபர்ணாவைத் தோளோடு அணைத்தவாறு அவன் அழைத்துச் செல்லும் விதத்தையும் அவனுடைய அக்கறையையும் கண்டு அவளுக்கோ நெஞ்சும் வயிறும் பற்றி எரிந்தது.
இந்த அக்கறையும் அன்பும் கிடைக்காமல்தான் அவள் வாடிக்கிடக்கிறாளே.
காலம் கடந்து போய்விட்டது.
முன்பு போல அவள் அதட்டிப் பேசினால் அடங்கிப் போகும் ஷேத்ரா அல்லவே இவன்.
இவன் முற்றிலுமாக மாறிப் போய் அல்லவா நிற்கிறான்.
தன்னுடைய விழிகளைப் பார்த்துப் பேசும் திடகாத்திரமான ஆண்மகனாய் நிற்பவனை எதிர்த்துப் பேசவே அவளுக்கு உள்ளம் நடுங்கியது.
அவனுடைய விருப்பம் இல்லாமல் அவனை நெருங்கவே முடியாது என்பதை உணர்ந்து வேதனையுற்றவள் மீண்டும் வீட்டிற்குள் செல்லத் தொடங்கினாள்.
அங்கே கதவில் சாய்ந்தவாறு நின்ற தன்னுடைய முதல் பிள்ளையையும் வேலைக்காரியின் கரத்தில் இருந்த கைக்குழந்தையையும் பார்த்தவளுக்கு எரிச்சல் அதிகரித்தது.
“மேடம் குழந்தை ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருக்கு… என்னால சமாளிக்க முடியலம்மா…” என அவளிடம் குழந்தையை கொடுக்க முயன்ற வேலைக்காரியைப் பார்த்து முறைத்தவள்,
“ஏய் இதுக்குத்தானே உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்..? இது கூட உன்னால பண்ண முடியாதா..? குழந்தைய அழாம பாத்துக்கோ….” என அவளைத் திட்டி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
முன்பு போல அவளிடம் பணம் கொட்டிக் கிடக்குமாக இருந்திருந்தால் இவனைத் தூக்கி எறிந்து விட்டு தன்னுடைய இஷ்டப்படி இந்த வீட்டை விட்டு சென்றிருப்பாள் தாரா.
ஆனால் அவளுடைய தந்தைதான் பிஸ்னஸில் குருஷேத்ரனிடம் தோற்று நடுத்தெருவுக்கு வந்ததும் இல்லாமல் தான் சேர்த்து வைத்திருந்த நகைகளைக் கூட விற்று இறுதியில் நோயில் விழுந்து இறந்து விட அவள் அல்லவா பணச் செழுமை நிறைந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்து விட்டாள்.
அப்போதும் தன்னுடைய அழகைப் பயன்படுத்தி கோடீஸ்வரர்களில் ஒருவனைத் திருமணம் முடித்துக் கொண்டவளுக்கு நிம்மதிதான் இல்லாது போனது.
அவள் பேசும் வார்த்தைகளை அவன் செவிமடுப்பதே இல்லை.
ஏன் அந்த வீட்டில் இருக்கும் உயிரற்ற பொருட்களுக்கு உள்ள மதிப்பு கூட இங்கே இவளுக்கு கிடைப்பதில்லை.
சில நேரத்தில் அனைத்தையும் விட்டெறிந்து விட்டு செல்ல வேண்டும் போலத்தான் இருக்கும். ஆனால் பணம் இல்லாமல் அவளால் வாழ முடியாதே.
நடுத்தெருவில் நின்று பிச்சை எடுப்பதற்கு அவள் என்ன முட்டாளா..?
வேறு வழி இன்றி இந்தக் கசப்பான வாழ்க்கையை சகித்துக் கொண்டவளுக்கு பல வருடங்களின் பின்பு குருஷேத்திரனைக கண்டதும் மீண்டும் அவன் மீது ஏக்கம், ஆசை துளிர்விட்டது.
என்னதான் இருந்தாலும் இப்பொழுது முற்றிலுமாக மாறிப் போய் கம்பீரமாக திடகாத்திரமாக இருக்கும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இவளுக்கு மிகப்பெரிய இழப்பை சந்தித்து விட்டோம் என்றே தோன்றும்.
அதிலும் மிகப்பெரிய புகழ் வாய்ந்த ஓவியனாகவும் இலங்கையிலேயே மிகப்பெரிய பணக்காரனாகவும் விளங்கும் அவனை இன்னொரு பெண்ணின் அருகில் கண்டதும் அவளுக்கு வயிறு எரிந்தது.
இது தான் வாழ வேண்டிய வாழ்க்கை அல்லவா என மனம் மருகித் தவித்தது.
மீண்டும் அவனிடம் சென்று விடலாம் என்றால் இப்போது புதிதாக வந்திருக்கிற மனைவியை விரட்டி அடிக்க வேண்டுமே ஆதலால்தான் அவளால் இனி ஒருபோதும் குழந்தையே பெற்றுக் கொள்ள முடியாது என வைத்தியரிடம் கூற வைத்தாள்.
ஆனால் இதோ நிறைமாத வயிற்றுடன் வந்து தன்னையே எச்சரித்து விட்டு செல்பவளின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் பெருகியது தாராவுக்கு.
“ச்சை… வயிறெரிஞ்சு சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க… சந்தோஷம் உங்க வாழ்க்கைல கிடைக்கவே கிடைக்காது…” என வெளிப்படையாக வாய்விட்டு திட்டிக் கொண்டவாறு வீட்டுக்குள் நுழைந்தவள் பித்துப் பிடித்ததைப் போல ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
சில மணி நேரங்களுக்குப் பின் வீட்டுக்கு வந்த அவனுடைய கணவனோ அவள் அருகே வந்தவன் கையில் வைத்திருந்த ஒரு பையை அவளிடம் கொடுத்து
“நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்கு… ரொம்ப அழகா நீ ரெடி ஆகணும்… வேணும்னா இன்னைக்கு நைட்டே பார்லர் போயிட்டு வந்துரு..” என அவளிடம் கூற,
“என்னால வர முடியாது…” என்றிருந்தாள் அவள்.
“நீ சொல்றத கேக்குறதுக்கு நான் ஒன்னும் உன்னோட அடிமை கிடையாது மைண்ட் இட்.. இந்த ட்ரஸ்ஸ போட்டுட்டு நீ வந்துதான் ஆகணும்..”
“நான் எதுக்கு வரணும்..? அதுதான் உன் கூட சுத்துறதுக்கு எத்தனையோ பொண்ணுங்க இருக்காளுங்களே.. எத்தனை வெப்பாட்டிங்கள வெச்சிருக்க உனக்கு நான் எதுக்கு..? அவங்களையே கூட்டிட்டு பார்ட்டிக்குப் போ..” என எதிர்த்துப் பேசினாள் தாரா.
ஒவ்வொரு முறையும் பார்ட்டிக்குப் போய் ஏதோ மனம் ஒத்த தம்பதிகளைப் போல மகிழ்ச்சியாக பேசிச் சிரித்து நடித்துவிட்டு வர இனியும் அவளால் முடியாது.
தன்னைப் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று விட்டு அப்படியே அம்போவென கைவிடுபவன் வேறு பெண்களுடன் இழைந்துவிட்டு வருவதைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்தாள் தாரா.
அவனோ அவள் விட்ட வார்த்தைகளில் கொதித்துப் போனான்.
அடுத்த கணம் அவனுடைய கரம் அவளது கன்னத்தில் வேகமாகப் பதிந்தது.
பளாரென விழுந்த அறையில் திணறிப் போனாள் தாரா.
“உன்னோட இஷ்ட ம****த்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது..” என்றிருந்தான் அவளுடைய கணவன்.
கூடுதலாக நான்கைந்து கெட்ட வார்த்தைகளாலும் அவளைத் திட்டி விட்டு அன்று இரவும் வீடு தங்காமல் அவன் வெளியே சென்று விட,
Wowwwwww super epiiiiii ❤️❤️❤️❤️ super abii nd guruu…… Interesting…. Waiting……
Superb 😍 👌 👏 😍 👌