நெருக்கம் – 68
வெகு நேரம் அவளுடைய மடியிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கிடந்தான் அவன்.
அவளும் எதுவுமே பேசாது அவனுடைய தலையை போதிவிட்டவாறு அப்படியே அமர்ந்திருந்தாள்.
இருவருக்கும் இடையே மௌனங்கள் மட்டுமே உறவாடிக் கொண்டிருக்க இருவரும் அந்த நொடியை வெகுவாக ரசித்தனர்.
சற்று நேரத்தில் அவன் எழுந்து அவளுடைய முகத்தை காதலோடு ஏறிட்டான்.
அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வையை அவளும் பரிசாகக் கொடுத்தாள்.
“என் மேல இருந்த கோபம் போயிருச்சா..? நான் இருந்தா நிம்மதி இல்லைன்னு சொன்னியே அபி..?” என அவன் தவிப்போடு கேட்க,
“நீங்க இல்லைனாலும் நிம்மதி இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..” என்றாள் அவள்.
மெல்ல எழுந்து அவளுடைய கரத்தைப் பற்றி அவளையும் எழுப்பியவன் அவன் வரைந்த ஓவியத்தைக் காட்ட அவளுக்கோ அதை பார்த்து உடல் சிலிர்த்தது.
அப்படியே தன்னை நேரில் பார்ப்பது போல அச்சுப் பிசகாமல் வரைந்திருந்தான் அவன்.
இருவருக்கும் நடுவில் குழந்தை இருக்க ஒருவருடைய முகத்தை மற்றவர் காதலோடு பார்ப்பது போல அழகாக அந்தப் படத்தை வரைந்து முடித்து இருந்தவன் இன்றைய திகதியையும் அதில் குறிப்பிட்டு இருக்க அவளுக்கோ இதயம் கனிந்தது.
“நூறுக்கு மேல நம்மள மட்டுமே வரைஞ்சிருக்கீங்களே ஏன் நம்ம பையனை வரையவே இல்லை..?”
“அப்போ நீ பிரக்னண்டா இருக்கேன்னு எனக்குத் தெரியாதுடி.. இவங்க எல்லாம் சேர்ந்துதான் உன்னோட ரிப்போர்ட்ட மாத்திட்டாங்களே.. உன்னை நேர்ல பார்க்கும் வரைக்கும் நீ பிரக்னண்டா இருக்கேங்குற விஷயம் எனக்கு சத்தியமா தெரியாது பேபி..
நீயும் நானும் மட்டும்தான் என்னோட கற்பனைல நிறைஞ்சிருந்தோம் அதனாலதான் உன்னையும் என்னையும் மட்டுமே வரைஞ்சேன்…”
“ம்ம்.. இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல..?”
“உன்ன பார்த்ததும் எல்லாமே எனக்கு மறந்து போச்சுடி.. இத்தனை மாசமும் எப்போடா உன்ன பாப்போம்னு தவியா தவிச்சிட்டு இருந்தேன்… உன்னை பார்த்த அந்த செகண்ட் அதுவும் வயித்துல குழந்தையோட பார்த்ததும் அந்த டைம்ல நான் எப்படி ஃபீல் பண்ணினேன்னு என்னால வார்த்தையால சொல்ல முடியாது அபி..
என்னோட பையன் இந்த உலகத்துக்கு வந்ததும் எப்படி நான் உணர்ந்தேனோ அதே மாதிரிதான் அன்னைக்கு உன்னப் பார்த்ததும் பீல் பண்ணினேன்..
இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் எப்படி எனக்குள்ள வந்துச்சுன்னு சத்தியமா தெரியல அபி.. நீ சொல்ற மாதிரி உன்னோட காதலுக்கு நான் தகுதியானவனான்னும் எனக்கு தெரியல..
முன்னாடியே ஒருத்திய லவ் பண்ணி அவ கூட..” என அவன் தடுமாறி கூற முயல,
சட்டென தன் கரத்தால் அவனுடைய வாயை மூடியவள்,
“முடிஞ்சு போனதெல்லாம் வேணாம்.. உங்களோட வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் நீங்க என்கிட்ட சொல்லிட்டீங்க.. எனக்கும் அது தெரியும்… கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க இதெல்லாம் என்கிட்ட சொல்லாதது தப்புதான்.. பட் விட்ருங்க.. நீங்களும் விரும்பி எதையுமே பண்ணலையே.. சோ விட்ருங்க..” என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அவள்.
அவனோ தயங்கி,
“உன்ன வீட்டை விட்டு அனுப்பினதுக்கு அப்புறமா கல்யாணத்துக்காக இன்னொரு பொண்ணை பார்த்து அவ கூட….” என இழுக்க,
அவ்வளவுதான் காளியாக மாறிப்போனவள் கோபத்தில் அவனுடைய கன்னத்தில் சப்பென அறைந்துவிட அதிர்ந்து தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டவன்,
“ஹேய் நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லடி.. அவளை கிஸ் பண்ண சொன்னேன்… அவ பண்ணினா நானே தள்ளி விட்டுட்டேன்.. அதுக்கு அப்புறமா அவளைப் பக்கத்துல கூட எடுக்கல… ப்ராமிஸ் அபி… எதையுமே உன்கிட்ட மறைக்க கூடாதுன்னு நினைக்கிறேன் அதனாலதான் சொன்னேன்..’ என்றவன் தன் கன்னத்தை பிடித்தவாறு பேச,
“போதும் லிஸ்ட் இவ்வளவு தானா..? இல்ல இன்னும் இருக்கா..?” என அவள் கோபத்தோடு கேட்க அவ்வளவுதான் என பம்மியவாறு பதில் கூறினான் அவன்.
“ஓகே பை..” எனக் கூறிவிட்டு அவள் நடக்கத் தொடங்க,
“ஹேய் அபி..” என அழைத்தவாறே அவள் முன்னால் வந்து வழியை மறைத்தாற் போல நின்றவன்,
“எங்க போற..?” எனக் கேட்டான்.
“இதென்ன கேள்வி..? எங்க வீட்டுக்குப் போறேன்..”
“அதான் இங்க வந்துட்டல்ல இனி இங்கேயே இருந்துடேன்..” என அவன் கொஞ்சலாகக் கூற தன்னுடைய கைகளை கட்டிக் கொண்டவள் முறைத்துப் பார்த்தவாறு “மாட்டேன்..” என்றாள்.
“அடிப்பாவி என்ன மன்னிச்சிட்டேன்னு சொன்ன… ஐ லவ் யூ ன்னு சொன்ன..?”
“ஆமா ஐ லவ் யூ தான்..”
“அப்போ எதுக்குப் போற..?”
“ஏதோ பாவமா இருந்துச்சு அதனாலப் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்… பாத்துட்டேன் இப்போ போகப் போறேன்..” என வந்த சிரிப்பை அடக்கியவாறு இதழ்களை கடித்து பேசியவள் மீண்டும் நடக்க அவளுடைய கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான் அவன்.
அடுத்த நொடியே அவளுடைய கரத்தைப் பிடித்து அவன் இழுக்க அவன் மீது வந்து பூமாலையாக மோதியவளை இடையினூடு கையிட்டு அணைத்துக் கொண்டவன்,
“ஐ லவ் யூ டி..” என்றான்.
அவனுடைய கழுத்தில் தன்னுடைய கரத்தைக் கோர்த்து தாடி அடர்ந்திருந்த அவனுடைய முரட்டுக் கன்னத்தில் தன் பட்டு இதழ்களை அழுத்தமாக பதித்துவிட்டு நிமிர இவனுக்கோ ஆகாயத்தில் பறக்கும் உணர்வைக் கொடுத்தது அவளுடைய ஒற்றை முத்தம்.
சில நொடிகள் விழி மூடி அந்த முத்தத்தை முழுவதுமாக ரசித்தவன் மீண்டும் விழிகளைத் திறந்து அவளைப் பார்க்கும்போது அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவளுடைய விழிகளைப் பார்க்க முடியாது அவனுடைய மார்பில் தன் பார்வையை அவள் பதிக்க அடுத்த நொடியே அவன் குனிந்து அவளுடைய செவ்விதழ்களை மென்மையாகக் கவ்விக் கொண்டான்.
அவளுக்கோ வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகுகளைப் படபடத்துப் பறப்பது போல இருந்தது.
இருவரின் காதலும் முத்தத்தின் வழியே இன்னும் அதிகரிக்க அவளைத் தன் உடலோடு இறுக்கியவன் இதழ் முத்தத்தை நிறுத்தும் எண்ணமே இன்றி தொடர்ந்து கொண்டே போக இவளுக்கோ கன்னங்கள் சிவந்து மூச்செடுக்கவே சிரமமாகிப் போனது.
வெட்கப் புன்னகையை சிந்தியவாறு அவனைத் தள்ளி விட்டவள் படபடத்துப் போனாள்.
அவனோ இரும்பை ஒட்டிக் கொள்ளும் காந்தம் போல மீண்டும் அவளுடைய உடலோடு ஒட்டிக் கொண்டவன் தன்னுடைய பெருவிரலால் அவளுடைய சிவந்த கன்னத்தை அழுத்தி வருட அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.
“குரு ப்ளீஸ்…” விழிகளை மூடியவாறு தவிப்போடு கூறினாள் அவள்.
“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டி..” என்றவனின் விரல் அவளுடைய கன்னத்திலிருந்து சிவந்த உதடுகளுக்குப் பயணித்தது.
அவளுக்கோ உடல் படிப்படியாக நடுங்கத் தொடங்க தன்னுடைய மற்றைய கரத்தை அவளுடைய வளைந்த இடையில் வைத்து அழுத்தியவன் உதடுகளையும் விரலால் வருடி அதிலிருந்து சிறிய ரேகைகளை எண்ணுவது போல வருடிப் பார்க்க,
கூச்சம் தாங்காது தன்னுடைய முகத்தை அவனுடைய மார்பில் புதைத்துக் கொண்டாள் அந்த மாது.
அவளைத் தன்னுடைய கரங்களில் தூக்கிக் கொண்டவன் அங்கிருந்த சோபாவில் தான் அமர்ந்து தன்னுடைய மடி மீது அவளை அமர்த்திக் கொள்ள அவனைப் பார்த்தவளுக்கு ஏனோ விழிகள் கலங்கின.
“படிச்சு முடிக்க முதலே கல்யாணம் ஆகப்போகுதுன்னு அப்போ ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஆனா கொஞ்ச நாள்லயே உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு.. உங்கள காதலிக்கிற அளவுக்கு நான் மாறுவேன்னு நானே எதிர்பார்க்கல… அப்போ எல்லாம் உங்களோட பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி இருப்பேன் தெரியுமா..?
அதெல்லாம் இனி உனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு என்ன நீங்க வீட்ட விட்டு துரத்தினப்போ வெளியே போய் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. ஒவ்வொரு நாள் ராத்திரியும் உங்களை நினைக்காம நான் தூங்கினதே கிடையாது.
மனசு முழுக்க நிறைய கோபம் இருக்கும் ஆனா அந்த கோபத்துக்கு மேலால நான் உங்க மேல வச்ச காதல் உங்கள நினைச்சு என்னை ரொம்பவே ஏங்க வச்சது.
உங்க மடில இருக்கணும் உங்க நெஞ்சுல சாயணும் உங்க கூட சந்தோஷமா வாழனும்ங்கறது எல்லாம் என்னோட கனவு.
நீங்க மனசு மாறி கண்டில என் முன்னாடி வந்து நின்னப்போ எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உங்க கூட வந்துடணும் போலத்தான் தோணுச்சு.. ஆனா காதல் இல்லாத வாழ்க்கைய மறுபடியும் ஏத்துக்க நான் தயாரா இல்லை..
நீங்க என்ன வேணாம்னு சொன்ன காரணம் எல்லாம் என்ன ரொம்ப பாடப் படுத்துச்சு குரு.. அதனாலதான் நீங்க எவ்வளவு கெஞ்சியும் என்னோட மனசு இரங்கவே இல்லை.” என்றவள் அவனுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“மறுபடியும் என்ன ஏதாவது காரணம் சொல்லி துரத்தி விட மாட்டீங்கல்ல..? இன்னொரு தடவை உங்களோட புறக்கணிப்ப சத்தியமா என்னால தாங்க முடியாது குரு..” என அவள் அழுகையோடு கேட்க துடித்துப் போனவன் அவளைத் தன்னோடு இறுகணைத்துக் கொண்டான்.
“இப்ப சொல்றேன் அபி நீ என்னோட வாழ்க்கையில இல்லாம போற நாள் நான் இறக்கிற நாளா மட்டும்தான் இருக்கும்.. நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் எத்தனை காரணங்கள் இருந்தாலும் யாருக்காகவும் எதுக்காகவும் எப்பவுமே நான் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன்.. விட்டுட்டுப் போகவும் மாட்டேன்.
என்னோட உசுருடி நீ.. எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கிற உறவு நீ மட்டும்தான்… உன்ன விட்டுட்டு நான் எங்கடி போகப் போறேன்..? செத்து வேணா போவேன் பேபி உன்ன விட்டுட்டு இனி ஒரு நிமிஷம் கூட வாழ மாட்டேன்..” என்றவன் கண்ணீரோடு அவளுடைய கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொள்ள வேறு என்ன வேண்டும் அந்த காதலிக்கு..?
மனம் இளைசாகிப் போனது.
அந்த நொடி அவள் பட்ட துயரங்கள் எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போனது போல மகிழ்ச்சி வெள்ளம் உள்ளத்தில் பெருக தானும் அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவனுடைய முகம் முழுவதும் காதலாய் முத்த ஊர்வலம் நடத்தினாள்.
வெகு நேரமாக காமம் என்பதைக் கடந்து காதலோடு இருவரும் அனைத்தவாறே அந்த சோபாவில் ஒன்றிக் கிடந்தனர்.
சிறிது நேரத்தில் அவளோ “விடிஞ்சிருச்சு…” என நேரத்தைப் பார்த்தவாறு மெல்ல முணுமுணுக்க,
அவளை மீண்டும் தன்னுடைய கரத்தில் ஏந்திக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தவன் அவளைப் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டான்.
“இப்போதான்டி காலை நாலு மணி ஆகுது. விடிஞ்சதும் போயிடலாம்.. அத்தைக்குப் ஃபோன் பண்ணி பையன் அழுதானான்னு கேட்டுட்டு வரேன்..” என்றவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டவள்,
“அவன் அழுதா அம்மாவே கால் பண்றேன்னு சொன்னாங்க.. இந்த டைம்ல நல்லா தூங்கியிருப்பான் பயப்படாதீங்க.. காலைல நேரத்துக்கு அங்க போயிடலாம்..” என்றாள் அவள்.
தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கியவள்,
“உங்க அம்மாவோட போட்டோ இருக்கா..? நான் அத பாக்கணும்..’ என ஆர்வமாய் கேட்க,
“நீ இங்கேயே இரு.. நான் எடுத்துட்டு வரேன்..” என்றவன் அந்த அறைக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்து பெரிய புகைப்படம் ஒன்றை அவளிடம் கொண்டுவந்து காட்ட விழி விரித்துப் பார்த்தவர்கள் “ரொம்ப அழகா இருக்காங்க..” என்றாள்.
ஆம் என தலையசைத்தவனுக்கு முகத்தில் சற்றே வேதனை படர்ந்தது.
அதை உணர்ந்து கொண்டவளாய் அவனுடைய கரத்தைப் பற்றிக் கொண்டவள் அவனை படுக்கையில் படுக்க வைத்து அவனுடைய மார்பில் தானும் தலை சாய்த்துக் கொண்டாள்.
“உங்களுக்கு நான் இருக்கேன்.. எப்பவுமே நான் இருப்பேன்..” என அவள் கூற அந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை சக்தி..?
நிம்மதியாய் உறங்கிப் போனான் அவன்.
******
அடுத்த நாள் காலையில் பதறி விழித்தவன் வெகு நேரம் தூங்கி விட்டேனோ என நேரத்தைப் பார்க்க நேரமோ காலை ஆறு எனக் காட்டியது.
அருகில் தன்னவள் இருக்கிறாளா எனத் தேடியவனுக்கு அவள் இல்லை என்றதும் முகம் வாடியது.
சிறு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை தன் கரத்திற்கு உள்ளேயே பொத்திப் பொத்தி பாதுகாக்குமே.. அதைப் போலத்தான் அவனுக்கு அவள்.
அவளை எப்போதும் தன்னுடைய கரங்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று எழுந்த ஆசையை அடக்கி விட்டு அவளைத் தேடிச் சென்றவன்,
“அபிம்மாஆஆ..?” என அறையை விட்டு வெளியே வந்து அழைக்க,
“கீழ இருக்கேன்பா வாங்க..” என குரல் கொடுத்தாள் அவள்.
“சீக்கிரமா எழுந்துட்டியா..? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே..?” எனக் கேட்டவாறே அவன் படிகளில் இருந்து இறங்கி வந்தான்.
அங்கே அவனுடைய அன்னையின் புகைப்படத்தை வெளியே மாட்டி அவருக்கு மலர் மாலை சூட்டி அந்தப் புகைப்படத்திற்கு கீழே சிறு விளக்கையும் வைத்து வணங்கிக் கொண்டிருந் தன் மனைவியைக் கண்டதும் அவனுக்கோ உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல இருந்தது.
அன்னையின் நினைவு தீவிரமாய் எழ,
“ஏன் இப்படி..?” என அவளைப் பார்த்துக் கேட்டவன் தன் அன்னையின் புகைப்படத்தை பார்க்க மறுத்தான்.
“இதுதான் நிதர்சனம்பா… இத நீங்க ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்… எல்லாத்தையும் மறந்துடுங்க குரு.. அவங்களோட மனசும் ரொம்பவே காயப்பட்டு இருக்கும்.. அவங்க இறந்தத ஏன் மறைக்கணும்..? எதுக்காக உங்களுக்குள்ளேயே போட்டு எல்லா வலியையும் அடக்கணும்..? அவங்க இறந்துட்டாங்க அதுதான் உண்மை… இப்போ தெய்வமா மாறி நம்ம கூடவே இருக்காங்க..” என்றவள் அவனுடைய முதுகை மெல்ல வருடி அவனுடைய இரு கரங்களையும் கூப்பியபடி செய்ய பெருமூச்சோடு தன் அன்னையை வணங்கினான் அவன்.
ஏதோ மனதில் அடைத்து வைத்த பாரம் இறங்கியதைப் போல இருந்தது அவனுக்கு.
அவளைப் பார்த்து “தேங்க்ஸ்டி..” என்றான் அவன்.
“ஏனாம்..?” என ஒற்றைப் பருவம் உயர்த்தி வினைவினாள் அவள்.
“என்னோட வாழ்க்கைல நிம்மதி சந்தோஷம் உறவுகள்னு எல்லாத்தையுமே இழந்துட்டேன்னு நினைச்சேன்… நான் இழந்த எல்லாத்தையுமே மறுபடியும் எனக்கு கொடுத்துட்ட..” நெகிழ்ந்து போனவனாய் கூறினான் அவன்.
“அப்போ எனக்கு பத்து சமோசா வாங்கிக் கொடுங்க..” என குறும்போடு கேட்டவளை அள்ளி அணைத்துக் கொண்டவன்,
“நீ கேட்டா உசுரையும் தருவேன்டி தங்கம்மா…” என்றிருந்தான் அவளுடைய காதல் கணவன்.
“உசுரே நீதானே.. நீதானே..
நிழலா உன் கூட நானே..
எதுவும் வேணாமே.. வேணாமே..
முடிவும் உன் கூடதானே..”
குரல் கரகரக்க விழிகள் கலங்கி பாடியவனைத் தாயாய் மாறி அணைத்துக் கொண்டாள் அபர்ணா.
🔥💜🔥
எபிலாக் உண்டு டியர்ஸ்
❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️ superb story lovlyyyyyyyyyy