குருஷேத்திரனின் மாளிகை போன்ற வீடோ வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அவனுடைய மகன் அர்ஜுனின் முதலாவது பிறந்தநாள் விழா அல்லவா இது.
அவனுடைய தொழில் முறை நட்புகள் தொடக்கம் அபர்ணாவின் உறவுகள் என அனைவரையும் அவன் விருந்துக்கு அழைத்திருக்க விழா ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது.
தயாராகுவதற்கு முதல் கீழே எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காக வந்தவனுக்கோ அலங்காரத்தில் ஏதோ குறை இருப்பதைப் போலத் தோன்ற கோபத்தில் முகம் சிவந்து போனது.
“ஏய் டெக்கரேஷன் டீம் எங்க..? என்ன இது..? இந்த ஃப்ளவர்ஸ்ஸ முதல்ல மாத்துங்க.. என் பையனோட ட்ரஸுக்கும் இந்த பிளவர்ஸ்கும் கொஞ்சம் கூட செட்டே ஆகாது…
ப்ச்.. அறிவு இருக்கா இல்லையா யோசிச்சு பண்ண மாட்டீங்களா இடியட்ஸ்..” என அவன் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க பயந்து போனவர்களோ கடகடவென அவன் கூறியதை செய்யத் தொடங்கினர்.
விருந்துக்காக சமைக்கப்பட்ட உணவுகள் யாவும் சரியாக இருக்கின்றதா என பதார்த்தங்களை பரிசோதித்தவாறு அவன் அங்கே உலா வரத் தொடங்க அவனைக் கண்டதும் அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
வார்த்தைகளை வாள் போல அல்லவா குருஷேத்திரன் வீசுவான்.
அவனுக்கு அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தொலைத்து விடுவான் என்பதை அறிந்து வைத்திருந்த வேலையாட்கள் யாவரும் பம்பரம் போலத்தான் தங்களுடைய வேலையை செய்து கொண்டிருந்தனர்.
“வாட் த ஹெல்… இது ஏன் கலர் இப்படி இருக்கு..?” என மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கியவன் தன்னுடைய கரத்தை பிடித்துக் கொண்ட மென்மையான கரத்தின் உணர்வில் அப்படியே நொடியில் சாந்தமாகிப் போனான்.
அவன் முகத்தில் இருந்த கோபம் அப்படியே மறைந்து புன்னகை ததும்ப, “அபிம்மா..” என்றவாறு திரும்பினான் அவன்.
“என்னங்க இது..? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி மிரட்டாதிங்கன்னு.. அங்க பாருங்க உங்கள பார்த்தாலே எல்லோரும் ஓடி ஒளியுறாங்க.. கொஞ்சம் சாஃப்ட்டாதான் பேசலாம்ல…” என அவள் அவனுடைய கரத்தை அழுத்தியவாறு கூற,
அவள் கூறும் அனைத்திற்கும் சரி சரி என தலையாட்டி நின்றவனைக் கண்ட வேலையாட்களுக்கு சிரிப்பாக இருந்தது.
அனைவரையும் ஆட்டிப்படைப்பவனை ஒரு வழியாக்கும் திறமை தங்களுடைய முதலாளி அம்மாவிற்கு மட்டும்தான் இருக்கின்றது என எண்ணி அவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள அவனோ வேலைகள் அனைத்தையும் மறந்து விட்டு அவளின் பின்னே சுற்றத் தொடங்கினான்.
“அச்சோ என்னங்க பண்றீங்க.. எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க.. முதல்ல போய் ரெடியாகுங்க..” முகம் சிவந்தவாறு அவள் மெல்லிய குரலில் கூற
“உத்தரவு மகாராணி.. நான் ரெடியாகப் போறேன்..”
“ம்ம் போங்க…”
“நீ எனக்கு ஹெல்ப் பண்ணு… நீதான் வந்து எனக்கு ட்ரஸ் போட்டு விடணும்..” என அவன் சிறுவன் போல அடம் பிடிக்க,
“இன்னும் கொஞ்ச வருஷத்துல உங்க பையனே வளர்ந்து ட்ரஸ் போடப் பழகிடுவான்.. இப்போ உங்களுக்கு நான் ட்ரஸ் போட்டு விடணுமா..? வர வர நீங்கதான் குழந்தையா மாறிட்டே வர்றீங்க..” என்றவளின் பார்வை அவனை ஏகத்துக்கும் ரசித்து வைத்தது.
“ஹேய் அதெல்லாம் போட்டுவிடலாம் தப்பு இல்ல வாடி…” என்றவன் கீழே நின்றவர்களைப் பொருட்படுத்தாது அவளுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு அவளைத் தோளோடு அணைத்தவாறு மேலே தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“யோவ் அரைக்கிழவா..! எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வெளிய ஆளுங்க நின்னா இப்படி ஹக் கிஸ் பண்ணாதீங்கன்னு கேட்கவே மாட்டீங்களா..? எனக்கு ஷையா இருக்கு குரு…” என சிணுங்கியவளின் உதடுகளில் அவசர அவசரமாக முத்தத்தைப் பதித்து விடுவித்தவன்,
“யார் நின்னா எனக்கு என்னடி..? நீ என் பொண்டாட்டி… உன் கிட்ட நான் இப்படித்தான் இருப்பேன்… யாருக்காகவும் என்னுடைய இயல்ப நான் இனி மாத்திக்க முடியாது.. யு ஆர் ஆல்வேஸ் மைன்…” என்றவன் அவள் அடுத்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்னர் மீண்டும் அவளுடைய இதழ்களில் முத்தம் பதித்தான்.
மொத்தமாக சிவந்து போனாள் அவள்.
அவளுடைய உதடுகளோ உதட்டுச் சாயத்தை பூசாமலேயே அவனுடைய முத்தத்தில் தடித்து சிவந்து போயின.
திகட்டா பேரின்பம் அல்லவா காதல்.
அந்தக் காதலின் முத்தங்கள் யாவும் தீரா போதைதான்.
அவனுடைய முத்தத்தில் மயங்கி நின்றவளின் இடுப்பில் அழுத்தமாக தன் கரத்தைப் பதித்தவன்,
“சேர்ந்து குளிக்கலாம் வாடி..” என அவளை இழுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விட அவனுடைய சேட்டையில் மீண்டும் அவளுக்கு சிணுங்கல்தான் வந்தது.
“மாட்டேன் விடுங்க..” என்றவளைத் தன்னுடைய அணைப்புக்குள் நிறுத்தி ஷவரைத் திறந்தவன் அவளுடனேயே குளித்து முடித்து அவள் வெட்கிச் சிவந்து விடும்படி சில இம்சைகளை புரிந்ததன் பின்னரே அவளைக் குளியல் அறையில் இருந்து வெளியே விட்டான்.
அவனுடைய பார்வையோ துவாலையைத் தன் உடலில் சுற்றியவாறு நின்ற மனையாளின் மீது மோகமாய் படிய,
ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரித்தவள்,
“நோ குரு… கிட்ட வந்தா கொன்னுருவேன்… என்னால மறுபடியும் குளிக்க முடியாது… இன்னைக்கே ரெண்டு தடவை குளிக்க வெச்சிட்டீங்க… அப்படி பாக்காதீங்க குரு ப்ளீஸ்…” என அவள் சிணுங்க,
“உன்ன பாக்கும் போதெல்லாம் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப் தங்கம்மா…” எனக் கொஞ்சலானான் அவன்.
“அதெல்லாம் கண்ட்ரோல் பண்ணலாம்.. அங்கேயே நில்லுங்க.. உங்க ட்ரஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டேன்.. போட்டுட்டு நம்ம பையன போய் பாருங்க.. போங்க..” என்றவளை நெருங்கி அவள் சுதாரித்து விலகுவதற்கு முன்பு அவளுடைய ஆடையற்ற வெற்றுத் தோள்களில் அழுத்தமான முத்தத்தை பதித்து அவளை சிலிர்க்கச் செய்தான்.
“நான் வேணும்னா உனக்கு ட்ரஸ் பண்ணி விடவா..?” என அவன் கேட்க,
“போயா அரைக்கிழவா..” என சிரித்தவாறே அவனைத் திட்டியவள் தன்னுடைய ஆடையை எடுத்துக் கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள்.
“ஹேய் ரொம்ப பண்ணாதடி.. எப்படியும் நைட் என்கிட்ட வந்துதானே ஆகணும்.. அரைக்கிழவனா நான்..? நைட்டு வாடி நான் யாருன்னு காட்டுறேன்…” எனச் சிரித்தவாறு கூறியவன் நேரமாகியதால் தன்னுடைய ஆடையை மாற்றத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் இருவரும் அழகாக தயாராகி ஒருவரை ஒருவர் ரசிப்போடு அணைத்து விட்டு கீழே தங்களுடைய பையன் தயாராகி விட்டானா எனப் பார்க்க பத்மாவைத் தேடிச் சென்றனர்.
அங்கே அர்ஜுனோ குட்டி இளவரசன் போல தயாராகி பத்மாவின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
“குட்டி இளவரசரே தந்தையிடம் வருகிறீர்களா..?” என குறும்போடு கேட்டவாறு தன் மகனைத் தூக்கி குரு கொஞ்சத் தொடங்க இருவரையும் தாய்மை பொங்கப் பார்த்தாள் அபர்ணா.
அவளுக்கு இருவரும் குழந்தைதான்.
அதே கணம் சாதனாவோ தன் புதிய இணையுடன் அங்கே வந்திருக்க அவளைக் கண்டதும் அபர்ணாவின் மனம் நிறைந்து போனது.
எங்கே பாலைவனமாக போன அவளுடைய வாழ்க்கை அப்படியே போய்விடுமோ என எண்ணிப் பயந்திருந்த போது தானாகத் தேடி வந்த சம்மந்தத்தை ஏற்றுக்கொண்டனர் பத்மாவும் ரகுவும்.
முதலில் வேண்டாம் என மறுத்த சாதனாவோ அதன் பின்னர் விக்ரமின் நல்ல குணங்களில் வெகு தாமதமாக தன்னுடைய சம்மதத்தைக் கூறியிருந்தாள்.
அவளை சம்மதிக்க வைப்பதற்குள் அவர்களுக்கோ போதும் போதுமென்றாகி விட்டது.
இதோ சாதானாவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகின்றது.
அவர்களுக்கென குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
என்னவோ முன்பு போல இல்லாமல் முகம் முழுக்க புன்னகையோடு மகிழ்ச்சியாக இருந்த தன் அக்காவைக் கண்டு குருவிற்கு பார்வையால் நன்றி கூறினாள் அவள்.
ஆம் அந்த வரனைத் தேடிக் கொடுத்தது குருதான்.
அவளுடைய நன்றி நவிழல் பார்வையை வேண்டாம் என தலையசைத்து மறுத்தவன் ஒற்றை விரலால் தன் இதழைத் தொட்டுக் காண்பிக்க அவனைப் பார்த்து செல்லமாக முறைத்து வைத்தாள் அவனுடைய மனையாட்டி.
அதே கணம் பெரிய பரிசுப் பொதியோடு மாதவன் உள்ளே வர அபர்ணாவுக்கு முகம் கொள்ளாப் புன்னகை.
அண்ணா இல்லை என்ற குறையே தெரியாத அளவிற்கு அவளோடும் அவளுடைய குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகி இருந்தான் மாதவன்.
குருவுக்கோ அவன் உற்ற நண்பனாகிப் போயிருந்தான்.
தன்னுடைய மனைவி எங்கே போவது எனத் தெரியாது தவித்த போது சொந்த தங்கை போல அவளுக்கு வழிகாட்டிய மாதவனை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதவனின் ஆட்டோ விபத்துக்குள்ளாகி இருக்க ஆட்டோவை திருத்துவதற்காக சங்கடத்துடன் சிறிய தொகையை குருவிடம் கடனாக கேட்டிருந்தான் மாதவன்.
இரண்டு மாதத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடுவேன் என வந்து நின்றவனுக்கு அவன் கேட்ட தொகையோடு புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து அதையே டாக்ஸியாக ஓட்டும்படி குரு கூறிவிட ஒரேடியாக மறுத்து விட்டான் மாதவன்.
பின் அபர்ணாவின் அன்புத் தொல்லையை தாங்க முடியாது விழிகளில் கண்ணீரோடு குரு கொடுத்ததை வாங்கிக் கொண்டான் அவன்.
“ஹேய் வாடா மாதவா.. இதுதான் நீ வர்ற நேரமா..?” என குரு கேட்க,
“ஃபங்ஷன் ஆரம்பிக்க முதலே வந்துட்டனேடா..” என்றவனை அணைத்து விடுவித்தான் குரு.
அந்த இடமே மகிழ்ச்சியில் கலகலக்கத் தொடங்கியது.
எல்லாரும் ஒன்று கூடி பிறந்தநாள் பாடலைப் பாடத் தொடங்க அர்ஜுனின் குட்டிக் கரத்தைப் பிடித்து அபியும் குருவும் மேஜையில் இருந்த பெரிய பிளாக் பாரஸ்ட் கேக்கை வெட்டி அர்ஜுனுக்கு ஊட்ட அவர்களுடைய குடும்பப் புகைப்படத்தை அழகாக கிளிக் செய்து கொண்டார் போட்டோகிராபர்.
இனி என்றும் என்றென்றும் அவர்களுடைய வாழ்க்கையில் காதலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கும்.
பொங்கட்டும்..!
(ஹாங் நம்ம தாரவோட குழந்தைங்க என்னாச்சுன்னுதானே தின்ங் பண்றீங்க..? அவ பண்ண தப்புக்கு அந்த சின்னஞ்சிறுசுங்க என்ன பண்ணுவாங்க பாவம்ல.. அதனால தாரா புருஷனோட அம்மா அந்த குழந்தைங்கள அவங்களோட அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க..
நிச்சயமா தாரா மாதிரியோ தாராவோட கணவன் மாதிரியோ இல்லாம அந்த குழந்தைங்கள நல்ல வழில வளர்ப்பாங்கன்ற நம்பிக்கையோடு நானும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.)
நற் குணம் கொண்ட ஒருவருக்கு கூடாத நட்பு சேரும் போது விளைவு விபரீதமாகித்தான் போகும்.
குணசீலனாக இருந்த குருவும் கூட அப்படித்தான்.
அவனுடைய முதல் காதலால் உண்டான வலி அவனை சுயநலம் மிக்க அரக்கனாக மாற்றியிருந்தது.
அபர்ணாவின் தூய காதல் மீண்டும் அவனை அன்பு மிக்க மனிதனாக மாற்றி விட்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
ஆகவே தீயவர்களின் நட்போ காதலோ உறவோ எதுவாயிருந்தாலும் அதை நீடிக்காது நிறுத்தி விடுவதே நல்லது.
முற்றும்
என்றும் அன்புடன்
உங்கள் ஸ்ரீ வினிதா.
“அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!” என்ற புதிய புதினத்துடன் உங்களை விரைவில் சந்திக்கின்றேன்.
nice Story
Awesome akka…… Lovlyyyyyyyyyy ❤️❤️❤️❤️