7) செந்தனலாய் பொழிந்த பனிமழை

4.5
(2)

ஆண்டு விழாவில் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம் அங்கே இருந்தன. முன்னால் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள், முன்னால் மாணவர்களாக இருந்து தற்போது அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த மாணவர்கள், கூடுதலாக அங்கு வேலை செய்த பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவியில் இருந்த உயர் அதிகாரிகள், மாணவர்களின் நண்பர்கள், பக்கத்து பள்ளி மாணவர்கள் என அனைவரும் அங்கே கூடி இருந்தார்கள்.

 

அத்தோடு அந்த ஊரின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் உள்ளூர் தலைவர் என்று அனைவரும் அங்கே இருந்தனர்.

 

ஆதிரன் மற்றும் அன்பினியோடு ஸ்ரீஜா _பாஸ்கரன், அன்பரசி- இன்பரசன் ,சங்கீதாவோடு குடும்பமும் அந்த பள்ளியில் ஆஜராகி இருந்தது

 

தி நெக்ஸ்ட் ப்ரோக்ராம் இஸ் த டான்ஸ்…

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் பதினோராம் வகுப்பு மாணவர்களும் இணைந்து நடனமாடும் டான்ஸ் இதோ உங்களுக்காக…

 

மைக் முன்பு தமிழ் ஆசிரியர் ஒருவர் நவ நாகரிகமாக பேசி முடித்துவிட்டு அவர்களை மேடைக்கு வந்து ஆடி செல்லும்படி அழைத்து அவரது நாற்காலையில் அமர்ந்து கொண்டார்.

 

இதில் ஆதிரன் முதன்மை வரியில் மூன்றாம் ஆணாக ஆட கூடியவன்.

 

கரத்த பல கோஷத்துடன் கொண்டாடு கொண்டாடு கொட்டி மேளம் கொட்டி கொண்டாடு என்ற பாடலுக்கு அவர்கள் மயிலைப் போன்று துள்ளி குதித்து ஆடினார்கள்.

 

 

அந்தப் பாடல் வெகு விரைவில் அந்த பள்ளியில் உள்ள அனைவரையும் கவர்ந்து இழுத்து அவர்களது நடனத்தோடு அனைவரையும் இணைத்தது . இதில் பலத்த கரகோஷம் எழுந்தது அந்த பள்ளியில்.

 

சிரித்த முகத்தோடு நடனமாடி முடித்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு மேடை விட்டு இறங்கினான் ஆதிரன்.

 

அந்த சமயம் தான் ஆதியின் நல்ல தோழனும் அவனிடம் வந்து நெருங்கி கட்டி அணைத்து சூப்பரா பண்ணிட்டடா என்று பேசிக் கொண்டிருந்தான்.

 

பெற்றோர்களிடமிருந்து ஆதிரன் பக்கம் வந்த அன்பினியும் கையை நீட்டி அவனுக்கு கங்கிராட்ஸ் தெரிவித்தாள்.

 

ஆதி சூப்பர்டா டான்ஸ் பயங்கர பர்ஃபெக்ட்டா இருந்தது.  இன்னொரு தடவை பார்க்கலாம் போல ஆசையா இருக்குது.

 

அவளது மனதில் தோன்றியதை மறைக்காமல் அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டாள்.

 

அடுத்ததாக கண்ணாலனே பாடலுக்கு பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு மாணவிகள் தங்களது நடன கலையை காட்டப் போகிறார்கள் என்று சொல்லி அதே தமிழ் ஆசிரியர் மீண்டும் நாற்காளியில் அமர்ந்து கொண்டு இவர்கள் நடனத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

 

இவர்கள் நடனம் ஆடுவதை கண்டதும் அன்பினியின் கண்கள் கலங்கிவிட்டது.  நடனமாடுபவர்களில் குறிப்பிடத்தக்கவளாக அவள் இருந்தாள்.

அதாவது சொல்ல வேண்டுமென்றால் கண்ணாளனே என்று ஆரம்பிக்கும் அந்த பாடலுக்கு நாயகியாக அவளை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

 

மாணவிகள் ஒப்புக்கொண்டனர் . ஆசிரியர் கூட நீ சரியா வருவாய் என்று ஒப்புக்கொண்ட சமயத்தில் தான் ஆதி  தனது வேலையை காட்டி ஸ்ரீஜாவின் மூலம் அவளுக்கு நடனமாட வாய்ப்பு அளிக்காதவன் தனது சட்டை காலரை தூக்கி பீத்திக் கொண்டிருந்தான்.

 

அவளது கலங்கிய கண்களை கவனித்த அன்பரசி என்னடா ஆச்சு ஏன் உனக்கு கண்ணு கலங்கி இருக்கு என்று ஆறுதலாக கேட்டாள்.

 

தாய் தன்னை நடனம் ஆடக் கூடாது என்று தடுத்த அனைத்தையும் அன்பரசியிடம் சொல்லி விட்டாள்‌ அன்பினி…

 

அன்பரசி நேராகவே சென்று  ஸ்ரீஜாவிடம் எதுக்கு நீ இப்படி பண்ண?…ஏன் அன்பினி நடமாடுனா அதுல என்ன இருக்கு…..

 

என்ன அன்பு நீ இலகுவா பேசுற.  காலம் எப்படி கெட்டுப் போய் கிடக்குது.  எனக்கு தெரியாமலே அன்பினி நான் டான்ஸ் ஆடணும்னு பேர் கொடுத்துட்டா.  நல்ல வேலையா ஆதிரன் எனக்கு போன் பண்ணி சொன்னதுனால நான் வந்து அதை தடுத்தேன். எது எப்படியோ அன்பினி எனக்கு தெரியாம என்ன செஞ்சாலும் ஆதிரன் மூலமா எனக்கு வந்து சேர்ந்தது.

 

நீ பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல ஸ்ரீஜா.  பொம்பள பிள்ளைங்களுக்கு ஒரு நியாயம். ஆம்பள பிள்ளைகளுக்கு ஒரு நியாயம் . எந்த நியாயமும் இல்லை.  ஆதிரன்னு சொல்லி நீ அன்பினிய தடுத்திருந்தா நீ ஆதிரனையும் தானே தடுத்து இருக்கணும்…..

 

அக்கா அவன் பையன் அது இல்லாம அவனுக்கு நிறைய திறமை இருக்கு அவன் வளரட்டும்.

 

அப்படின்னா நீ அன்பினி வளரக்கூடாதுனு நினைக்கிறாயா?..

 

நீங்க என்ன வேணா சொல்லுங்க ஆதிரன்  ஆடலாம். ஆனால் அன்பினி ஆடக்கூடாது…

 

இருவருக்குள்ளும் தர்க்கம் ஏற்பட்டு விட்டது.  அன்பினிக்காக அன்பரசி இதோ மீண்டும் ஸ்ரீஜாவிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

இவர்கள் இருவருக்கும் பின்னால் அழுதபடி இருந்தவளுக்கு தெரிந்த முக்கிய காரணம் நான் நடனம் ஆடுவதை மாட்டி விட்டவன் ஆதிரன் என்பது.

 

அப்படி எனில் எனக்காக அம்மாவிடம் பேசு என்று சொல்லும் போது தலையாட்டிய ஆதரன் எங்கே?.. அம்மாவிடமும் என்னை மாட்டி விட்டு என்னிடமும் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை என்ற ஒரு கதையை கட்டிவிட்டு என்னை நடனம் ஆடாமல் செய்து விட்டான் என்பதை அவள் ஆண்டு விழா முடியும் தருணத்தில் தெரிந்து கொண்டாள்

 

தலைமை ஆசிரியரின் உரையோடு இந்த ஆண்டு விழா முழுமை அடைகிறது என்று சொல்லிய தமிழாசிரியர் மீண்டும் அமர்ந்து கொண்டார்.

 

தலைமை ஆசிரியர் எழுந்து நின்று அனைவரும் தங்களின் விடாமுயற்சியை காட்டுகின்றனர்.  தங்களின் முன்னாள் மாணவர்கள் இப்போது அரசு அதிகாரிகளாக உள்ளார்கள்.  பலர் இதே பள்ளியில் ஆசிரியர்களாகவும் பணிபுரிகிறார்கள் இது எங்களுக்கு வாய்த்த பெருமை என்று சொல்லி கைதட்டியவாறு அமர்ந்து கொண்டு இந்த ஆண்டு விழாவை முடித்து வைத்தார்.

 

அன்பரசியோடும் இன்பரசனோடும் அமர்ந்து கொண்ட அன்பினி அமைதியாக சென்றாள்.  அதே ஆதிரன் ஸ்ரீஜாவோடும் பாஸ்கரினின் ஓடும் அமர்ந்து அவன் வாங்கிய பரிசை காட்டி சிலாகித்துக் கொண்டு வந்திருந்தான்.

 

இங்க பாருங்க ஶ்ரீமா எனக்கு எவ்வளவு பெரிய கிப்ட் இது எனக்கு கிடைக்குமுனு நான் நினைக்கவே இல்ல…

 

இது உன்னோட திறமைக்கு கிடைத்த வெற்றி தங்கம்.  வீட்டுக்கு போன உடனே உனக்கு சுத்தி போடனும். என்னோட கண்ணே பட்டு போச்சு உன்னோட டான்ஸ் பார்த்து… சூப்பரா டான்ஸ் பண்ணடா தங்கம் என்று பாஸ்கரனும் அவனை பாராட்டினார்.

 

அன்பினி உர்ரென்று என்று வருவதை கவனித்த பாஸ்கரன் என் செல்ல குழந்தைக்கு என்ன ஆச்சு.  ஏன்டா நீ டான்ஸ் ஆடவே இல்ல என்று ஆசையை கேட்டார் பாஸ்கரன்.

 

எனக்காப்பா நான் பொம்பள புள்ளையாமே.  டான்ஸ் எல்லாம் ஆடினால் நான்கு பொறுக்கிங்க என் பின்னாடி திரிவார்களாம்.  அதான் எனக்காக வச்சிருக்க பாடிகார்ட் அம்மாகிட்ட சொல்லி என்னை டான்ஸ் ஆட வேண்டாம்ன்னு தடுத்துட்டாங்கப்பா..

 

பாஸ்கரனுக்கு பதில் சொல்வது போல ஆதிரனை குத்தி காட்டினான்.

 

உன்னை யார் தங்கம் டான்ஸ் ஆட வேண்டாம்னு சொன்னாங்க…

 

விடுங்கப்பா முடிஞ்சு போன கதையை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை…

 

விட்டேத்தியாக பதில் சொல்லிவிட்டு கார் கதவின் வெளியே வேடிக்கை பார்த்தாள்.

 

என்ன இவள் குதர்க்கமாக பேசுகிறாளே ஒருவேளை தெரிந்திருக்குமோ?..ஹே தெரிந்தால் என்ன இவளுக்கு ரெண்டு கொம்பா உள்ளது.  என்னை வந்து கேள்வி கேட்டுருவாளா?…  இல்லை இவ கேட்கிற கேள்வில தான் நான் நடுங்கி போயிடுவனா?…

 

தான் செய்தது தவறுதான்.  இப்போது அந்த தவறு அவனுக்கு புரிந்து விட்டது.  தவறு செய்தவளுக்கும் இவன் தான் செய்து விட்டான் என்றும் தெரிந்து விட்டது.  இருந்தாலும் அவளிடம்  நான்  தலை குனிந்து போவதா என்ற கர்வத்தோடு அவளை லேசாக எண்ணிக்கொண்டான்.

 

வீட்டினுள் காரை நிறுத்திவிட்டு இன்னிக்கு ஆதிரனுக்கு புடிச்ச டின்னர் தான் நைட்க்கு என்ற வாரு ஸ்ரீஜாவும் சங்கீதாவும் பிளான் போட்டுக் கொண்டார்கள்…

 

பாஸ்கரனும் இன்பரசனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு நகர்ந்து விட்டார்கள்.

 

ஆனால் அன்பரசி ஆதி கொஞ்சம் நில்லு உன்கிட்ட நான் பேசணும்…

என அவனை நிறுத்தினாள்.

 

அன்பினி  தான் கேள்வி கேட்பாள் என்று காத்திருந்த ஆதிக்கு இது அதிர்ச்சி தான்.  இருந்தாலும் அன்பரசியை சமாளிக்க தெரியாத முட்டாள் அல்ல அவன்.

 

எதுக்கு நீ அன்பினி டான்ஸ் ஆடக்கூடாதுனு நெனச்சே…

 

சுற்றி வளைக்காமல் நேராக பாய்ண்டிற்கு  வந்தாள்.

 

என்னம்மா தேவையில்லாம கேள்வி கேக்குற ரொம்ப டயர்டா இருக்குமா..

உடம்பெல்லாம் வலித்துப்போனது போல அம்மாவிடம் கட்டிக் கொண்டான்.

 

இவன் நடித்தவுடன் நம்பி விடுவாளா அன்பரசியும்…

 

எனக்கு பதில் சொல்லிட்டு நீ போ…

 

இப்ப என்னம்மா உனக்கு தெரியணும்.  ஆமா நான் தான் அவ டான்ஸ் ஆடக்கூடாது என்று ஸ்ரீமா கிட்ட போட்டு கொடுத்தேன்.  போட்டுக் கொடுத்தது மட்டும் இல்ல அவ டான்ஸ் ஆடக்கூடாதுன்னு அம்மாவுக்கு அறிவுரை சொன்னது கூட நான் தான்.  இப்ப என்ன பண்ணுவீங்க வெட்டிருவிங்களா ?..குத்திருவீங்களா?…

 

என்னடா என்கிட்டயே இவ்வளவு திமிரா பேசுற..

 

பின்ன நீங்க மட்டும் என்னமா நீங்க பெத்த பையன் ஜெயிச்சுட்டு வந்து நிக்கிறேன்.  சந்தோஷப்படாமல் யாரோ வீட்டு பொண்ணு டான்ஸ் ஆட விடலையேன்னு என்கிட்ட சண்டைக்கு வரீங்க.

 

அவனது முகத்திரை கிழிந்த நேரம் அது.  அப்படியெனில்  அவனுக்கென்று யோசிக்கும் அவன் அவளுக்காக எதையும் செய்யப் போவதில்லை என்பதை அன்பரசி அப்போது தான் புரிந்து கொண்டாள்.

 

யாரோ வீட்டு பொண்ணா அவ என்னோட பொண்ணு டா…

 

ஹோ அவளும் என்ன மாதிரி உங்க வயித்துல பிறந்தவளா?..

 

நக்கலும் நையாண்டியமாக அவனது பேச்சுக்கள் இருந்தது.

 

உன்னோட பிஹேவியர் சரியில்ல ஆதி…

 

நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணீங்கன்னா எனக்கு உங்க மேல இருக்கிற ரெஸ்பெக்டே குறைஞ்சு போயிடும்மா.  சோ அவள பத்தி என்கிட்ட டோன்ட் டாக் டு யு என்று சொல்லியவன் நகர முயற்சி தான்.

 

அப்ப எனக்கு பதில் சொல்லிட்டு போ ஆதி…

 

அன்பரசியின்  பின்னால் நின்று இவன் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அன்பினி கேள்வி எழுப்பினாள்.

 

உனக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.  நீ யாரோ வீட்டு பொண்ணு தானே.  நீ கேக்குற சில்லி கேள்விக்கெல்லாம் என்னோட டைம்ம வேஸ்ட் பண்ண முடியாது…

 

அவளிடம் துளி கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் பேசினான் ஆதிரன்.

 

ஆதி… அவ வேற யாரோட பொண்ணு இல்ல என்னோட உயிருக்கு உயிரான தோழியோட பொண்ணு. அப்ப என்னோட பொண்ணும் தான்.  இனிமே அவளோட பிரைவசிக்கு நீ குறுக்கிட்டனு வச்சுக்கோ என்னோட கோபத்துக்கு நீ ஆளாகிடுவ…

 

விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அன்பரசி வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

 

எச்சரிக்கை செய்த தனது தாயையே நோக்கியபடி நின்று கொண்டிருந்தான் ஆதிரன்.

 

அவன் அருகில் வந்த அவன் தோள் மீது மெலிதாக கை வைத்து ஏன் ஆதி இப்படி பண்ண… உனக்கு டான்ஸ் ஆடுறது எப்படி பிடிக்குமோ அதே மாதிரி தான் எனக்கு டான்ஸ் ஆடுவது பிடிக்கும்.  எதுக்காக அம்மா கிட்ட போட்டு கொடுத்து இப்படி பண்ண…உனக்கு நான் இங்க இருக்கிறது பிடிக்கலையா சொல்லிடு நான் இங்க இருந்து எங்கேயாவது போய்டுறேன்….

 

துளி கூட தயக்கம் இல்லாமல் ஆமா நீ எங்க வீட்ல ஓசில உட்கார்ந்து சாப்பிடறது எனக்கு சுத்தமா பிடிக்கல…

 

அப்படின்னா நான் பார்ட் டைம் ஜாப் பாத்துட்டு நான் சாப்பிடுற சாப்பாட்டுக்கு இங்க காசு கொடுத்து சாப்பிட்டால் ஓகேவா….

 

இந்த டீல் நல்லா இருக்கே… கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாத ஜடமாக நடந்து கொண்டான் அவன்.

 

சரி இனிமே நீ வந்து டெய்லி மூணு நேரம் சாப்பிடற சாப்பாட்டுக்கு தின கூலியா  நூறு ரூபாய் என்கிட்ட கொடுத்துடனும்.  அது மட்டும் இல்ல இந்த விஷயம் உன்னையும் என்னையும் தாண்டி வேற யாருக்கும் தெரிய கூடாது.  ஒருவேளை அப்படி இந்த விஷயம் வெளியே தெரிஞ்சுச்சுன்னா இது நான் கம்பெல் பண்ணதால இல்ல என்னோட விருப்பத்தினால தான்னு  அப்படின்னு சொல்லி நீ ஒத்துக்கணும்… கூடவே எங்க அம்மாவுக்கு இதுல எந்த சந்தேகமும் வராத அளவுக்கு நீ நடந்துக்குற.  என்னைக்காவது நீ காசு தர மறந்துட்டேன்னு வச்சுக்கோ அன்னைக்கு உனக்கு சாப்பாடே கிடையாது.  இத்தனை நாளா மூணு நேரமும் மூக்கு முட்ட சாப்பிட்டு ஏமாத்திட்டு இருந்த இல்ல.  இனிமே கொடுக்கிற காசுக்கு மட்டும் தான் உனக்கு சாப்பாடு.  அதுக்கு மேல ஒன்னும் இல்ல…

 

சிறு வயதிலேயே ஆதிரனுக்கு அன்பினி மீது வெறுப்பேறும் அளவிற்கு ஆளாகி விட்டான்.

 

அன்பினி மனது சுக்கு நூறாய் உடைந்து போனது.  நான் உயிராய் நேசிக்கும் ஒருவன் என்னை துளி அளவு கூட மதிக்கவில்லையே என்று நொடிந்து போனாள்.  ஆதிரனின் மீது அன்பினிக்கு கொல்லை இஷ்டம்….   ஆனால் அவனது  வெறுப்புக்கு மட்டுமே உரித்தானவளாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

 

காலங்கள் செல்லச் செல்ல இருவரும் மாறிவிடுவார்கள்  என்று நால்வர் போட்ட முட்டாள் கணக்கு பொய் என்பது எப்பொழுது நால்வருக்கும் தெரிய வருமோ அச்சமயம் இரு குடும்பமும் பிரிய நேரிடும் என்பது விதி வகுத்து வைத்த வாழ்க்கை.

 

ஆதிரனின் குணம் முழுவதுமாக மாறத் தொடங்கியது.  அன்பினி என்று எடுத்தாலே எறிந்து விழும்  அளவிற்கு அவன் உருவெடுத்துக் கொண்டிருந்தான்.

 

அன்பினியும் ஆதிரனிடம் சொல்லி முடித்த பிறகு தினம் நூறு ரூபாய்க்காக மூன்று மணி நேரம் வேலை பார்த்தாள் ரெஷார்ட் ஒன்றில்.

 

அங்கு வந்த கஸ்டமர்கள்  சாப்பிட்டு விட்டு போட்ட பொருட்களை கழுவி வைப்பது, அவற்றை துடைத்து வைப்பது, கூடவே தண்ணீர் நிறைத்து வைப்பது, தேவையான மளிகை சாமான்கள் லிஸ்ட் களை எழுதி வைப்பது,  வரும் கஸ்டமர்களை அவ்வப்போது கவனிப்பது என்று அனைத்து வேலைகளையும் அங்கு செய்து கொண்டிருந்தாள்.

 

மாலை நேரம் ஸ்பெஷல் கிளாஸ் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு இப்போது  ரெஸார்ட்டில் வேலை செய்து தினம் நூறு ரூபாய் ஆதிரனிடம் ஒப்படைத்து விடுவாள்.

 

ஸ்பெஷல் கிளாஸ் என்று பெற்றவர்களிடம் அன்பினி சொல்லி விட்டதால் ஆதிரனும் நண்பர்களோடு சேர்ந்து வாலிபால் ஆட தொடங்கினான்.  அவள் ரிசாட்டில் வேலை பார்க்கும் சமயம் எல்லாம் இவன் ப்ளே கிரவுண்டில் நண்பர்களோடு குதூகளித்துக் கொண்டு இருந்தான்.

 

அவள் செக்குமாடாய் உழைத்துக் கொண்டிருந்த தருணம் எல்லாம் அவன் நண்பர்களோ

டு ஸ்பெஷல் கிளாஸ் என்று பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டிருந்தான் வாழ்க்கையை!….

 

 

செந்தனலா?…மழையா?..

 

கௌசல்யா வேல்முருகன் 💝.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!