நாட்கள் வெகு வேகமாக நகர தொடங்கின. இப்போது அன்பினியும் ஆதிரனும் பன்னிரண்டாம் ஆம் வகுப்பின் காலாண்டு தேர்வில் அமர்ந்திருக்கிறார்கள்.
இன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் முடிந்து கணித வகுப்பு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆதி அனைத்து கணக்குகளையும் கனகச்சிதமாக நியாபகம் வைத்திருந்தான். அன்பினி நிலை தான் அந்தோ பரிதாபம்.
தினம் செய்யும் மூன்று மணி நேர வேலையோடு இந்த தேர்வும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போராடி ஓரளவுக்கு எழுதி இருந்தவளுக்கு கணிதம் சுத்தமாக வராது.
தனது வேலையை முடித்து விட்டு ஆதிரனிடம் சொல்லிக் கொடுக்குமாறு பணிந்தும் கேட்டு விட்டாள். உன் இஷ்டத்துக்குலாம் என்னால சொல்லித் தர முடியாது.
நான் படிக்கும் போதே வந்து என்ன நீ கேட்கிற டவுட் மட்டும் நான் சொல்லித் தருவேன். அதர் தென் என்னை நீ டிஸ்டர்ப் பண்ணவே கூடாது. இவ்வாறு வேறு சொல்லி விட்டான் படுபாவி.
ஆங்கிலத் தேர்வு முடிந்து பணியை முடித்துவிட்டு வருவதற்குள் ஆதிரன் உறங்கி விட்டான். அதன் விளைவாக இப்போது வினாத்தாளில் உள்ள ஏதோ ஓர் இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே அவளுக்கு பதில் தெரிந்திருந்தது.
ஆதி அன்பினியின் முகத்தை பார்த்து கேவலமாக சிரித்துவிட்டு தனது வினாத்தாளினில் ஒரு மதிப்பெண்களின் பதில்களைக் குறித்து வகுப்பு ஆசிரியர் கவனிக்காத சமயத்தில் அதை அவளுக்கு மாற்றிக் கொடுத்தான்.
இவன் இதையெல்லாம் சும்மா செய்து விடவில்லை. சற்று நேரம் முன்பாக தேர்வரைக்குள் நுழைவதற்கு முன்பு நீ எனக்கு இந்த எக்ஸாம்க்கு ஹெல்ப் பண்ணுனா இன்னும் உனக்கு நூறு ரூபா சேர்த்து தரேன் டெய்லி என்று அன்பினி ஒற்றுக் கொள்ளவும் தான் இதை செய்தான்.
தேர்வர் கவனிப்பதற்கு முன்பாகவே வினா தாளை பெற்றுக் கொண்டவள் ஒரு மதிப்பெண்கள் அனைத்திலும் அவன் குறித்து இருந்த விடையையே எழுதினான்.
இரண்டு மதிப்பெண்களிலும் கூட ஆங்காங்கே சின்ன சின்னதாக கிறுக்கி அவளுக்கு ஹிண்ட் கொடுத்து இருந்தான். அதாவது அந்த வினாவிற்கு தேவையான ஃபார்முலாவை எழுதி வைத்து விட்டான்.
தேர்வு முடிந்து வெளியே வந்ததும் ஆதிரனை கட்டி அணைத்து நன்றி கூறினாள்…
ஹலோ ஹலோ ஓவரா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத… எங்க என்னுடைய எக்ஸாம் ஆன்சர் சீட்டு… கூடவே இன்னையில இருந்து நீ எனக்கு இரு நூறு ரூபாய் கொடுக்கணுங்குறதை மறந்துடாத.
சரி ஆதி நான் உனக்கு கண்டிப்பா கொடுத்துடறேன்… நீ இன்னைக்கு எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணி இருக்க தெரியுமா …எனக்கு சுத்தமா ஒரு கணக்கு கூட தெரியல…. நல்ல வேலை குவெஸ்டின்ஸ் பக்கத்து பக்கத்தில நீ ஃபார்முலா எழுதி கொடுத்திருந்தே.. இல்லைனா என் நிலைமை அதோ கதி தான்.. அவனை பாராட்டி தள்ளிக் கொண்டிருந்தாள்.
ஹேய் ரொம்ப பண்ணாத நகரு முதல்ல…
உன் கூட பேசினாலே மண்ட பிரஷர் ஏறுது.. எப்படி நீ எப்ப பார்த்தாலும் தொணதொணனு பேசிட்டே இருக்கே… நான் போனா போகுது நீ பாஸ் ஆகிற அளவுக்கு தான் எழுதி கொடுத்தேன்.. இதுக்கு மேலயாவது உருப்பிடியா நல்ல ரேங்க் வாங்குற அளவுக்கு படிக்கிற வழிய பாரு…
அவன் ஏதோ தேவன் ஆசிர்வாதத்தை வாசித்ததை போல சிரித்து கொண்டிருந்தாள். அவன் எரிந்து விழுந்து விட்டு செல்கிறான் ஆனால் அவளுக்கு அதுவே சந்தோஷத்தை கொடுக்கிறது.
அதன்பின் வந்த பாட்டனி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய தேர்வுகளிலும் அவனால் முடிந்த உதவியை மட்டும் அவளுக்கு செய்தான்.
ஏதோ ஒரு இடத்தில் அவனுக்கு ஈரத்தன்மை அவள் மீது உள்ளது போல…
ஆனால் அன்பினி இதை அவன் அன்பின் வெளிப்பாடு என்று நம்பி அவன் மீது மனக்கோட்டை கட்டிக் கொண்டு இருந்தாள்.
தேர்வு முடிந்து காலாண்டு விடுமுறை பத்து நாட்களுக்கு என்று ஆதிரன் வீட்டில் சொல்லி விட்டான். அந்த சமயத்திலும் அவனுக்கு தவறாது பணம் கொடுத்து விட வேண்டும் எனவும் அன்பினிக்கு கட்டளையிட்டு விட்டான்.
இப்போது அன்பினி எப்படி வீட்டை சமாளிப்பாள் என்றெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. ஏய் இங்க பாரு நீ சொன்னதை செஞ்சா உனக்கு சாப்பாடு… இல்லைனா நோ சாப்பாடு அவ்வளவு தான்… என்ன பொறுத்த வரைக்கும் உனக்கு நோ செண்டிமெண்ட் …நோ பரிதாபம்… பிகாஸ் யூ ஆர் த ஒன் அண்ட் ஒன்லி எனிமி ஃபார் மீ…
தேர்வுகளில் நண்பனாக உதவி கரம் நீட்டுகிறான்… வீட்டினுள் எதிரியாக தன்னை கொத்தி எடுக்கிறான்…
சிந்தித்துவிட்டு கிளிகளுக்கு உணவளிக்க சென்றாள் அன்பினி.
அவள் பின்னாலே வேகமாக வந்த ஆதிரன் இன்னைக்கு நீ எப்படி இங்க இருந்து கிளம்ப போறே.. என்ன ஐடியா அவங்க கிட்ட சொல்ல போற சொல்லு…
தெரியல ஆதி நீ வேற ஹாலிடேனு சொல்லிட்ட… இப்ப நான் எப்படி தப்பிக்க போறேன்னு தெரியல…
ஏய் ரொம்ப யோசிக்காத சி பிளஸ் இல்லன்னா சிஇஓ ஏ கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு கிளம்பு…
எப்படி ஆதி நம்ம பேரண்ட்ஸ் கிட்ட பொய் பேசுறது…
எம்மாடி யம்மோ மேடம் பொய்யே பேச மாட்டாங்க…. சும்மா என் காதுல வந்து பூ சுத்துற வேலைய நிறுத்திட்டு நான் சொன்ன ஐடியாவ சொல்லிட்டு போயிட்டு வந்தேன்னா உனக்கு சாப்பாடு இல்லைன்னா நோ….
என்னது எப்ப பாத்தாலும் சும்மா சோறு சோறுன்னு பிளாக்மெயில் பண்ற… நான் ஒன்னும் மூணு நேரம் சாப்பாட்டுக்காக இந்த வேலைய செய்யல…
ஹேன்..அப்புறம் நீங்க சம்பாதிக்கிற டைம்ல குடுக்குற சேலரியை வைத்து கோட்டையா கட்ட போறீங்க…
அவனது பேச்சுகளும் அவனது சிலாங்குகளும் அவளை மேலும் எரிச்சல் படுத்திக் கொண்டே இருந்தது.. ஏதோ சிலசமயம் விளையாட்டுக்கு செய்வதை போலவே அவளை கலாய்ப்பது வேண்டுமென்றே அவன் சீண்டி கொண்டே இருந்தான் மீண்டும் மீண்டும் அவளை…
கோட்டையை கட்டலைனாலும் நீ சாப்பிடுற ஸ்நாக்ஸுக்கு நான் தானே உனக்கு காசு தரேன்…
என்னடி என்னை எதிர்த்து பேசுறியா?..
இல்ல உண்மையை சொல்றேன்..
அவளும் அவனை போலவே திமிராக பதில் பேசினான்…
ம்ம்ம்…உனக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டவன் அவளை விட்டு நகர்ந்து சென்றான்.
பின்னர் மாலை ஐந்து மணி ஆனதும் அன்பினியும் தனது தோழியை சென்று பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அன்பினி புறப்பட்டு அரை மணி நேரத்திலேயே ஸ்ரீமா எனக்கு வீட்டிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குது… ஏதாவது ஸ்பைசியா ரெசார்ட்ல போய் நிம்மதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வரலாமே…
எந்த இடத்தில் இருந்து காரியத்தை தொடங்கினால் நகருமோ அங்கிருந்து காயை நகற்றினான்.
சரி ஆதி நீ சொல்றதும் ரைட் தான்… பட் அன்பினி வெளிய போய் இருக்காளே அவ வந்த அப்புறம் போலாம் …
இல்ல ஸ்ரீமா அவ வர லேட் ஆகும்னு சொல்லிட்டு போனா…
இந்த பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு போனாலும் ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்டுனு திரியுதுங்க… ஃபிரண்ட் கூடவே சுத்துதுங்க ….வீட்டுக்கு வந்தாலும் ஃபிரண்டு ஃபிரண்டு என்று சுத்துதுங்க… ஆம்பள பையனே அவன் ஃப்ரண்ட போய் பாக்காமல் வீட்டிலேயே பொட்டி பாம்பா இருக்கான்… அன்பினிக்கு தலைக்கு மேல கொழுப்பு வந்துருச்சு போல…வரட்டும் அவள கவனிக்கிற விதத்தில கவனிக்கிறேன்…
அன்பரசி அப்பொழுதுதான் அவளது பேச்சை கவனித்தாள்.
அவ ஒன்னும் சும்மா ஊர் சுத்தறதுக்காக போகல இவன மாதிரி. நோட்ஸ் வாங்கறதுக்காக போயிருக்கா…
அன்பினிக்காக வாதாடினாள் அன்பரசி அங்கே..
என்ன அன்பு விவரம் புரியாதவளா இருக்கிற நீ.. நம்ம ஆதி தம்பியும் அவ கிளாஸ் தான்….இவன் கிட்ட இல்லாத நோட்ஸ்சா அந்த பிள்ளைங்க கிட்ட இருக்க போகுது…
இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறிங்க… பசிக்குது ரெண்டு பேரும் ஏன் சண்டை போட்டுட்டு இருக்கீங்க… அன்பினிக்கு நம்ம பார்சல் வாங்கிட்டு வந்துடலாம் வாங்க இப்ப நம்ம போலாம்…
பாஸ்கரனும் இன்பரசனும் வர தாமதமாகும் என்பதால் இம்மூவரும் கிளம்பினார்கள். சங்கீதாவிற்கு விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
ஆதிரன் வேண்டுமென்றே அன்பினி வேலை செய்யும் ரெஷார்ட்டிற்கு அழைத்துச் சென்றான்…
அவன் மனதிலோ என்னையவா வம்புக்கு இழுத்த இனிமே எப்பவுமே ஆதிகிட்ட வம்புக்கு போகவே கூடாது என்று தான் உனக்கு ஞாபகம் வரணும்… அப்படியே என்கிட்ட வம்புக்கு வந்தாய் என்றால் உன் நிலைமை என்னங்கிறத நீ இன்னைக்கு புரிஞ்சிப்ப… கர்வத்தோடு சொல்லிக்கொண்டே ரெசார்ட்டிற்குள் நுழைந்தான்.
இன்று அன்பினி ரெஷார்ட் வரவேற்பு அறையில் இருந்தாள். அங்கே சாப்பிட்டு முடித்து விட்டு வருபவர்கள் பில் கொடுத்து அமௌன்ட் பே செய்யப்படும் பகுதி அது…
அவன் வந்ததில் இருந்தே அன்பினி எங்கே என்று தனது கண்களை சுழல விட்டு தேடினான்.. எங்குமே அவள் சிக்காத தால் அவ இந்த ரெஷார்ட்ல தான் வேலை செய்யுறாளா?… இல்ல நம்ம கிட்டயே பொய் பேசுறாளா?…
ஸ்ரீமா அன்பினி அவங்க ஃபிரண்டுக்கு நீங்க கால் பண்ணி பாருங்களேன் எங்க இருக்கான்னு கேட்டுக்கலாம்… வேண்டுமென்றே அவளைப் பற்றி நினைவுகளை அவன் நினைவு படுத்தினான்.
தேங் காட்.. நல்ல வேலை ஞாபகப்படுத்தனும் தங்கம்… இந்த ரெஷார்ட்ல எல்லா ரெசிபீசும் சூப்பரா இருக்கு சாப்பிட்டதுல்ல மெய் மறந்து போயிட்டன்… அவள மறந்தே போயிட்ட…அதான் அவளுக்கும் ஒரு சிக்கன் ரைஸ் அண்ட் தந்தூரி ஆர்டர் பண்ணிக்கலாம்…
ஸ்ரீமா பேசிவிட்டு அவளுக்கான ஆர்டரை பேக்கிங் செய்து தருமாறு கேட்டுவிட்டு நகர்ந்தாள்…
மேம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்… வெல்கம் அகைன்… என்று சொல்லிவிட்டு ஸ்ரீமாவிடம் பொட்டலத்தை ஒப்படைத்தால் அன்பினி..
பணத்தினையும் சேஞ்சாக கொடுத்திட அங்கு வந்திருந்த மூவரிடமும் மாட்டிக் கொண்டாள்… அதுவும் இல்லாமல் அன்புக்கு கண்கள் பணிக்கவே ஆரம்பித்துவிட்டது..
அச்சோ..இப்ப எப்படி இவங்களை சமாளிப்பேன்….
உள்ளுக்குள் பதறி கொண்டு இருந்தாள் அவள்..
மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு காப்பாத்தணும் கர்த்தரு… என்ற சிலாங்கை அவன் மனதிற்குள் பாடிக்கொண்டே என்ன இருவரும் சொல்வார்கள் என்று ஆசையோடு வேடிக்கை பார்த்தான்.
அன்பரசி தான் அன்புமா இங்க என்ன பண்ற. ஃப்ரண்ட பாக்க போறேன்னு தான பர்மிஷன் கேட்டே… மறைக்காமல் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டு விட்டாள் .
ஸ்ரீமாவோ கோபத்தில் இங்க என்ன பண்ற… ஓ இத்தன நாளா இப்படித்தான் ஸ்பெஷல் கிளாஸ் போறன்னு எங்கயாவது போய் சுத்திட்டு வரியா… நான் ஸ்பெஷல் கிளாஸ் விட்டு கூட்டிட்டு வரும் போது எல்லாம் ஆதி மட்டும் தான் இருப்பான்….நீ இருக்கவே மாட்ட… என்னடான்னு யோசிச்சா நீ இங்க வந்து ஹாப்பியா சந்தோசமா இருக்க போல….
உன்னை யார் இங்க வந்து சம்பாதிச்சே ஆகணும்னு சொன்னது… படிக்கிற வயசுல படிக்கிறத விட்டுட்டு உனக்கு இங்க என்ன வேலை?…..
இப்பொழுது அன்பரசி ஆதங்கமாக அவளிடம் பேசினாள்…
இவர்கள் இருவருக்கும் பின்னால் அதுவும் இடையிலும் நின்றிருந்தவன் அன்பினியை கண்டு தனது வாயின் மீது வலது கையை வைத்து மறைத்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான்.
அப்படி எனில் தான் வேலை செய்வதை போட்டுக் கொடுக்க வேண்டும் என்றே இன்று இவன் தனது பெற்றோர்களை அழைத்து வந்துள்ளான் என்பதை புரிந்து கொண்டாள் அன்பினி…
அதிலும் அவன் சிரிக்கும் நமட்டு சிரிப்பு மேலுமாக அவளை எரிச்சல் படுத்தியது…
ஆதிக்காக தான் நான் இந்த ரெஷார்ட்ல வேலையே செய்கிறேன்….
போட்டு கொடுத்து விட்டாள் அவனை!..
என்ன ஒரே அடியா என்ன மாட்டி விட்டுட்டா என குமுரிக் கொண்டு இருந்தான் உள்ளுக்குள்.
இப்போது இருவரின் பார்வையும் ஆதிரனை நோக்கியது. ஆத்தாடி இவங்க ரெண்டு பேரும் பார்வையே என்ன வயிறு கலங்க வைக்குதே… பாவி என்ன கோர்த்து விட்டுடாதன்னு சொல்லி இருந்தன்… இப்ப நீ என்னையவே காட்டி கொடுத்துட்டாலே….
இப்போது இவ்விருவருக்கும் பின்னால் இடையில் நின்றவாறு தனது கட்சிப்பினை சுற்றி விசில் அடிப்பது போல சாளாக்கு பண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.
அவனுக்கோ புகைச்சல் தான் வராத கொடுமை. கோர்த்து விட்டதையும் விட்டுவிட்டு எவ்வளவு அசால்ட் பார் இவளுக்கு.
என்ன ஆதி மரம் மாதிரி நிக்கிற… எதுக்கு அவ இங்க வேலை செய்றா…அதுவும் உனக்காகனு சொல்றாளே என்ன விஷயம்?..
அன்பரசி எடுத்ததுமே ஆதங்கமாக அவனிடம் கேள்வியை எழுப்பி அவனை உலுக்கினாள்.
செந்தனலா?…மழையா?…
கௌசல்யா வேல்முருகன் 💝.