வேந்தன்… 29

4.7
(10)
வேந்தன்… 29
அதெப்படி பார்த்த செக்கன்ல லவ் வரும்? அதும் லிப் டூ லிப் கிஸ் பண்ணுற அளவுக்கு? அதுமட்டுமா? இன்னும் டச்சிங் டச்சிங் வேற பண்ணிட்டு, எவ்ளோ தைரியம் இவனுக்கு. அந்தப் பொண்ணு திருப்பி அடிச்சிருந்தா கூட சிங்கிள் பசங்க மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்.
அன்னைக்கு கூட அதே பொண்ணு நம்ம துருவ் கன்னத்துல, ஹீல்ஸ் செருப்பால அடிக்கலையா. எதுக்கும் முக ராசி வேணும். அது நமக்கில்ல
ஒரு பெருமூச்சோடு நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் யோசித்தார்கள்.
“டேய் எந்த உலகத்துக்குப் போனீங்க?” துருவ் அழைக்க.
“ஹான் என்னடா?” சுயநினைவுக்கு வந்த நண்பர்கள் இருவரும் என்னவென அவர்களைப் பார்த்தார்கள்.
“நீதாண்டா சொல்லனும்” மிரா அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தாள்.
ஆத்மா ரவிக் இருவர்கள் மீதும் நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் அந்தக் குடும்பமே.
அவர்கள் இருவருக்கும் துருவ் கூட அடித்து விளையாடும் அளவிற்கான நெருங்கிய நட்பு இருக்கும்.
அதே சிபின் கூட சொல்லு மச்சான் என்று பணிவான நம்பிக்கையான நட்பு இருக்கும். சிபினின் அழுத்தமான நடவடிக்கையே அவர்களின் விளையாட்டை தள்ளி நிப்பாட்டும்.
ஆரியன் மீரா, துருவ் மூவரும் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் ஆத்மா ரவிக் இருவரும் அமர்ந்திருந்தனர்.
சிபினை நினைத்தாலே கிட்டத்தட்ட பேய் அடித்த மாதிரி ஆனது அவர்களுக்கு. அவர்கள் நேருக்கு நேராகப் பார்த்த காட்சிகள் அப்படிப்பட்டது. சிபினா இது? கண்ணை கசக்கிக்கிட்டு பார்த்தாலும் அதே காட்சிகள்தான் கண் முன்னே வந்து போனது.
ஆம் சிபின் அவர்களைப் போகுமாறு துரத்திவிட்டாலும், போகாமல் அங்கேயேதான் சுற்றினார்கள் இருவரும். நளிரா அப்பாவியாக முழிப்பதும், சிபின் அவளை அரட்டி உருட்டுவதும் பார்க்கவே பாவமாகப் போனது.
பீச்சில் வைத்து நளிராவுக்கு சிபின் முத்தம் கொடுக்கவும், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டான் ஆத்மா. ஹீரோ ஹீரோயின் கூட தோற்றுதான் போகணும் இவன் தரும் முத்தத்திற்கு முன்பு.
ரவிக் அதிர்ந்தாலும் அதையும் வீடியோ எடுத்தான் மொபைலில்.
“டேய் கிஸ் இப்படித்தான் தருவாங்களாடா?” ரவிக் எச்சில் விழுங்கக் கேட்க.
“தெரியலையேடா. நானெல்லாம் படத்துல கூட இந்தக் காட்சியை ஸ்கிப் பண்ணிடுவேண்டா” ஆத்மா.
“அவ்ளோ நல்லவனாடா நீ?”
“நம்புடா நம்பு” ஆத்மா சிரிக்க.
“நம்பிட்டேன் நம்பிட்டேன். பச்சப்புள்ளைங்க பார்க்குற சீனாடா இது?” ரவிக் அங்கலாய்த்தான்.
“பார்க்குற நமக்கே பத்திக்கும் போலடா. ஆமா இதெல்லாம் எங்க கத்துக்கிட்டான் இவன்?”
“நீ வேணா பக்கத்துல போய் கேட்டுட்டு வாயேன்”
“இருக்கட்டுடா. கொஞ்சம் அவன் முகத்தைக் காட்டினா தேவலை. ரெண்டு பேர் முகமும் தெரிய மாட்டிங்குது” ரவி உற்று உற்றுப் பார்த்தான்.
அவள் முகத்தை இரு கரத்திலும் பொத்தி வைத்திருக்க, அவளது கூந்தல் கற்றைகள் அவன் முகத்தை நன்றாக மறைத்திருந்தது.
“அடச்சீ நாயே. இதைப் போய் வீடியோ எடுப்பியா?” கேட்டுட்டே அதை வாங்கி டெலீட் பண்ணிட முயல.
“இருக்கட்டுடா. இதெல்லாம் நமக்கு ஆதாரமா இருக்கும்” ரவிக் தடுத்துவிட்டான்.
“பாவம்டா பேயைப் பார்த்த மாதிரி ஒடுது அந்தப் பொண்ணு” ஆத்மா பரிதாபப்பட.
“பட் நம்ம சிபின்குள்ள இப்படியொரு ரொமான்டிக் ஹீரோ இருப்பான்னு நம்பவே முடியலைடா” நண்பர்கள் இருவருக்குமே அந்த சந்தேகம் எழுந்தது.
“வா அங்கிள்கிட்ட இந்த வீடியோவை காட்டுவோம்” ரவி அழைக்க.
“நாயே உன்னாலதான் அந்தப் பொண்ணுக்கு இந்த நிலைமை. ஒழுங்கா இங்கயே இருந்து பாதுகாப்பு தருவோம். நீ இதுவரைக்கும் பண்ணிக் கிழிச்சது போதும். ஏதாவது அவன்கிட்ட உளறிக்கொட்டி வச்சிக்க. அப்புறம் உனக்கு இருக்குடா” ஆத்மா ரவியை மிரட்டி வைத்தான்.
ஆனால் அடுத்து வந்த இரண்டு நாளும் நளிராவுக்கு மூச்சு விடக் கூட நேரம் கொடுக்காது சிபின் படுத்தியெடுக்க.
“இவன் கூப்பிட்டா அந்தப் பொண்ணுக்கு எங்கடா போச்சு அறிவு?” ஆத்மா.
“மிரட்டி கூப்பிட்டிருப்பான் போலடா. நம்மையே கட்டிவச்சு மிதிக்கறவன் இவங்களை விட்டு வைப்பானா?” ரவிக் இப்போது நன்றாகவே கோபப்பட.
“அங்கிள்கிட்ட சொல்லிடலாம் ரவி”
“எஸ் டா” அவனும் ஒப்புக்கொண்டான்.
இனி இப்படியே விட்டால் சரிவராது என்று இதோ வந்துவிட்டார்கள், சிபினின் பெற்றவர்களிடம் சொல்வதற்காக.
நண்பர்கள் இருவருக்குமே இதை எப்படி எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்வது என்றே புரியவில்லை. எதிலிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. முதலில் இருந்து சொல்வதென்றால் ஆருயிர் நண்பன் துருவ் அவமானப்பட்ட சரிதமும் சொல்லியாகணும். முழித்தார்கள் இருவரும்.
“டேய் நம்மளைத்தான் பார்க்கறாங்க. விஷயத்தைச் சொல்லுடா” என்று ரவி ஆத்மாவின் தோளை சுரண்டினான்.
“நாயே உன்னால வந்த வினையை நீதான் அறுக்கணும்டா. மூடிட்டு நீயே சொல்லு”
“பயமா இருக்கேடா. துருவ்வ நினைச்சாதான் பகீர்னு இருக்குடா” ரவிக் ஆத்மாவிடம் சொல்லிட்டே துருவ்வை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை சிரிக்க.
“டேய் இப்படி சிரிச்சு வைக்காத. அசிங்கமா இருக்குது” ஆத்மா ரவியை அடிக்காத குறையாகப் பேசினான்.
பொறியில் மாட்டிய எலி மாதிரி சிக்கிக்கொண்டான் ஆத்மா. சொல்லலைன்னா அவன் கட்டிவச்சு அடிக்கறான்.
ஆனால் சொல்லித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை சிக்கல்ல இருக்கு.
இங்கே சொன்னதற்காக சற்று நேரத்தில் பேச்சும் வாங்கப் போகிறார்கள்.
நண்பர்கள் இருவருக்கும் கண்ணைக் கட்டியது. திருட்டு முழி முழிக்க.
“டேய் என்ன விஷயம்னு சொல்லுங்கடா” ஆரியன் அதட்டலாகக் கேட்டான். என்னவோ ஏடாகூடமாகப் பண்ணிட்டு வந்து நிற்பது நன்றாகவே புரிந்தது.
“பயபடாதீங்க. எதுவானாலும் சொல்லுங்க பார்த்துக்கலாம்” அவர்களுக்கு தைரியம் கொடுத்தாள் மிரா.
“அதான் நீங்க இருக்கப்ப வந்தோம் மிராம்மா. எதுக்கும் எங்க பக்கம் வந்து உட்காருங்க” ரவிக் மிராவை அழைக்க.
“டேய் என்னடா” ஆரியன் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டான். “உதை வாங்காம போக மாட்டீங்கடா” கண்ணில் நெருப்பைக் கொட்டினான்.
“சாரி அங்கிள் அதுவந்து” ஆத்மா தயங்க.
செய்யாத தப்புக்கு விளக்கம் சொல்ல நேர்ந்த, ஆத்மாவின் சங்கடம் பார்த்த ரவிக் தானே சொல்ல முன்வந்தான். “நானே சொல்லிக்கறேன். தப்பு என் மேலதான. அப்போ நான்தான் இதுக்கான தீர்வைக் கண்டுபிடிக்கணும்” என்று சொன்னவன் அவர்களை நிமிர்ந்து பார்த்தான்.
“நான் சொல்வேன்” என்று ஆரம்பிக்க.
“சொல்லித் தொலைடா” துருவ் உதட்டை மட்டும் அசைத்து, அவர்களுக்கு புரியும்படி சொல்ல.
“எல்லாம் என்னாலதான் அங்கிள். நட்பு விசுவாசம் அப்படின்னு தப்பு பண்ணிட்டேன். இப்போ என்னால ஒரு பொண்ணுக்கு பாதிப்பு வந்திருச்சு” குற்ற உணர்வுடன் சொன்னவனுக்கு தப்பு பண்ணிட்டோமே என்ற எண்ணமே நெஞ்சை அறுத்தது.
“என்னடா பண்ணி வச்சிங்க?” பெண் என்றதும் மிராவுக்கு பதறிப்போக. சற்றே குரலை உயர்த்தி அவனிடம் விசாரித்தாள்.
“அய்யய்யோ நீங்க நினைக்கறது போல ஒன்னுமில்லைம்மா, நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுறேன்ம்மா. டென்ஷன் ஆகாதீங்க பிளீஸ்” என்ற ரவிக் ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் சொல்ல வர.
ஆத்மாவோ இடையிலே புகுந்து “நீ பேசாதடா. எல்லாம் உன்னாலதான். அப்பவே அவன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். கேட்காம சொல்லிட்டு இப்ப நெஞ்சை அறுக்குதுன்னு நல்லவனாட்டம் நடிக்காத” தடுத்தான்.
“சொல்லாம என்னடா பண்ணச் சொல்லுற. அவன் தலைகீழா கட்டி வச்சு விசாரிக்கறான். நண்பன்னு பாவம் பார்த்தானா நம்மளை?” ரவி சொல்ல.
“பயந்து சாவுறான்டா” அவனை முறைத்தான் ஆத்மா.
“அப்போ உனக்கு பயம் வரலையா. நான் மட்டும் சொல்லாம விட்டிருந்தா இன்னும் காக்கா மாதிரி கம்பத்துல தலைகீழா தொங்கிக்கிட்டு இருக்கணும் பாத்துக்க” ரவிக்கும் ஆத்மாவும் விவாதம் பண்ண ஆரம்பிக்க.
இவர்களுக்கோ பொறுமை எல்லையைக் கடந்தது. என்ன விஷயம்னு சொல்லாம ஆட்டம் காட்டுறாங்களே என்று அவர்களை முறைத்தார்கள்.
“கொஞ்சம் நிறுத்துங்கடா” துருவ் அவர்களை சத்தம் போட்டான்.
“என்னாச்சு? யாரு உங்களை கட்டிவச்சு மிரட்டினா?” துருவ் கேட்டிட.
“அது சொன்னா உனக்கு கோவம் வரும்டா” ஆத்மாவுக்கு அந்த நேரத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்டது.
“சொல்லித் தொலைடா…. ம்ம்ம்…” என்றவன் அதற்கும் மேல் ஏதோ பேச வந்து அமைதியானான் தாய் தந்தை அருகில் இருப்பதால்.
“நீ இவ்ளோ கேட்டதால நாங்களும் எல்லாத்தையும் சொல்றோம். பட் தப்பு என்மேல இல்லடா. எல்லாம் இவனால வந்த வினை” என்ற ஆத்மா சொல்ல ஆரம்பித்தான்.
“அன்னைக்கு நீ செருப்படி வாங்குனதான” எனவும் ரவிக் சட்டென சிரிப்பு வந்து அடக்கிக்கொள்ள. ஆத்மாவோ சிரித்தேவிட்டான்.
“அதெதுக்குடா இப்ப?” துருவ் சட்டென தாய் தந்தையைப் பார்த்தான். அவனது கையோ கன்னத்தைப் பற்றிக்கொண்டது.
அவர்கள் இருவரும் மகனை அதிர்வாய் பார்த்தாலும், அவன் கன்னத்தின் காயத்தை முன்பே பார்த்திருந்ததால் அவ்வளவுக்காக ரியாக்சன் ஏதும் காட்டவில்லை. துருவ் கன்னத்தை பிடித்துக்கொள்ளப் பார்த்த மீராவுக்கு, சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
மகன் அடிவாங்கிட்டு வந்திருக்கான் என்ற ஆதங்கத்தை விடவும் சிரிப்புதான் அதிகமானது. ஏனெனில் துருவ் மீது எப்போதுமே தப்பு இருக்காது என்பதை அவர்கள் அறிவார்கள். பாவம் பார்த்து பிழைச்சுப் போகட்டும் என்று விடும் ரகம் இவன்.
தனக்காக அட்லீஸ்ட் கோபமாவது படலாம்ல. துருவ்கு அவர்களின் சிரிப்பை அடக்கிய முகம் பார்த்து ஏமாற்றம் வர,
“மாம் டாட். என்ன இதெல்லாம்? இதுக்காக கோபப்படனும் நீங்க” கேட்டான்.
“என்னடா?” மிராவால் மகனின் முகம் பார்த்துவிட்டு சிரிக்காது இருக்கவே முடியவில்லை.
“அதுல இருந்துதான் ஆரம்பிக்கணும்டா. அப்போதான் ஒரு ப்ஃளோ கிடைக்கும்” ரவி சொல்ல.
“பாவிங்களா இதெல்லாம் கேட்டாங்களாடா” அவர்களை அடிக்கப் பாய்ந்தவனைத் தடுத்தான் ஆரியன்.
“டேய் துருவ். அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கேளுடா” அழுத்திச் சொல்லவும், நண்பர்களை கேள்வியாய்ப் பார்த்தான் துருவ்.
“ஆமா அங்கிள். துருவ் சோகமா இருக்கவும், சிபினுக்கு டவுட் வந்துருச்சு. அதான் என்ன விஷயம்னு எங்ககிட்ட அன்பா கேட்டுகிட்டான். அதான் ரவி எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிட்டான்” ஆத்மா ரவியை போட்டுக் குடுத்தான்.
“எப்படி சொல்லாம இருக்கட்டும்? சிபின் தலைகீழா கட்டிவச்சுக் கேக்கறான். அதும் மொட்டை வெய்யில்ல” ரவி தன் நிலையை அவர்களுக்கு விளக்கினான்.
துருவ்க்கு கோபம் வந்தாலும் சிபினின் குணம் தெரிந்ததால்
“ஓகேடா. அடுத்து என்னாச்சு?” ஆர்யனுக்கு அடுத்து என்னவாகி இருக்கும்னு புரிந்தது. மிராவை பார்த்தான்.
“அப்படியே அப்பன் புத்தி” மிரா முனுமுனுக்க.
“நான் என்னடி பண்ணுனேன்?” ஆர்யன் மனைவியின் காதோரம் குனிந்து கேட்டான்.
“என்னதான் பண்ணாம விட்டீங்க. இப்ப உங்க மகன் விஷயத்துக்கு வாங்க” கணவன் கவனத்தை மகன்கிட்டே திருப்ப.
மூவரும் அவர்களின் ரொமான்ஸ் பார்த்து கண்சிமிட்டிட.
“விஷயத்துக்கு வாங்கடா” அவர்களை மிரட்டினான் ஆரியன்.
“சோ சிபின் அவங்களை மிரட்டி வைக்க கிளம்பிட்டான்” ரவிக் விஷயத்தை உடைத்துவிட்டான்.
“வாட்?” துருவ் அதிர்ந்து போனான்.
“டேய் அவங்க அப்பாவிடா. எதோ தெரியாம நடந்துருச்சு அதுக்காக பழி வாங்கறது தப்புடா” படபடத்தான்.
“அப்படின்னு போனான்தான். ஆனால் அந்தப் பொண்ணு பின்னாடியே காதல் மன்னன் போல சுத்துறத நேருக்கு நேர் பார்த்தேன்” ஆத்மா வியப்புடன் சொல்ல.
“நிஜமாவா?” துருவ்க்கு அண்ணனா இப்படியென்று ஆச்சரியமாக இருந்தது.
“ஆமாப்பா. இவன் தலைய கண்டாவே அந்தப் பொண்ணு அலறியடிச்சு ஓடுதுன்னா பாரேன்” ஆத்மாவும் ரவியும் சொல்லிட.
ஆர்யனுக்கும் மிராவுக்கும் வியப்பு. சிபினா இப்படி? நம்பவே முடியவில்லை.
“எனக்கு தெரியும் நீங்க யாரும் நம்பவே மாட்டிங்கன்னு. அதான் வீடியோ எடுத்திருக்கேன்” ரவிக் தன் மொபைலில் அந்த வீடியோவை ஆன் பண்ணி அவர்கள் முன் நீட்டிட.
“அச்சச்சோ” மிரா அதிர்ந்து போனார்.
ஆரியனும் துருவ்வும் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்க்க.
“அப்படிப் பார்க்காதீங்க அங்கிள். ஒரே சங்கட்டமா இருக்கு” முகத்தை மூடிக்கொண்ட நண்பர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி அடிக்க ஆரம்பித்தான் துருவ்.
“நல்லா அடி கண்ணா” மிரா முறைத்தார்.
“நல்லதுக்கு காலம் இல்லையாடா?” ஆத்மா கால்கள் வலிக்க ஓடினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!