திருதிருவென முளித்த ஆதிரனை அன்பரசி சொல்லுடா… எதுக்கு அவ இங்க வேலை செய்யுறா?…அதுவும் உனக்காகனு சொல்றா?…
அவ வேலை செய்யறதுக்கு நான் என்னமா பண்ண முடியும்….
அப்புறம் எதுக்காக அவ உனக்காக தான் வேலை செய்கிறேன் என்று சொல்கிறாள்.
அது நீ அவளை கேட்டு தான் முடிவு எடுக்கணும் எனக்கு தெரியாதுப்பா…
அன்பரசியை எப்படியாவது சமாளித்து விடலாம் என ஆதிரனும் மழுப்பினான்.
அன்பரசி அன்பினியிடம் திரும்பி இப்போ உண்மையை சொல்லப் போறியா இல்ல உங்க டாடிக்கு கால் பண்ணவா?…
பாஸ்கரிடம் அன்பினி இதுனால் வரை ஒரு பொய் கூட சொன்னதில்லை. ஆதலால் அன்பரசி அவளை மிரட்டினாள்.
ஆதி மட்டும் தாம்மா இதுக்கெல்லாம் ரீசன்…
உண்மையை சொல்லிவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டால் அன்பினி.
அன்பரசிக்கு பின்புறம் இருந்த ஆதிரனும் சொல்லக்கூடாது…. வாய் மீது கை வைத்து கொள் என்று சிக்னல் எல்லாம் கொடுத்தான்..
இவை அனைத்தையும் கண்டு அன்பினி உண்மையை மறைக்கவில்லை.
இதுனால் வரை ஆதிரன் தன்னிடம் நடத்தியது…. நடந்த விதம் , அவனுக்கு தன்னை பிடிக்காதது, தாங்கள் உங்கள் வீட்டில் இருப்பது எதுவுமே அவனுக்கு பிடிக்காததை ஒன்று விடாமல் அவனிடம் சொல்லிவிட்டாள்.
பள்ளிகளில் கூட சண்டை வருவது எல்லாம் ஆதிரனால் தான். ஆனால் தாங்கள் அங்கு வந்து கேட்கும் போது என்னால் தான் என்று வகுப்பு ஆசிரியர்கள் வரை என்னால் தான் இந்த சண்டையே என்ற அளவிற்கு அவன் நாடகமாடி விடுவான்.
இப்போது வரை அவன் அப்படித்தான் என்னிடம் சண்டை செய்கிறான் என்று ஒட்டு மொத்த கதையையும் கூறி விட்டாள்.
அன்பரசி ஆதியை என்னடா இதெல்லாம் என்று மிரட்டினார்…
இதற்கும் அன்பினியே பேசத் தொடங்கினாள்…
ஆதி சொல்றதுல எந்த தப்பும் இல்லையே அம்மா… ஆதி எனக்கு முன்னாடி பிறந்தான்… அது இல்லாம அவங்க உங்களோட குடும்ப வாரிசு.. நீங்க சம்பாதிக்கிற காசு , இல்லை இதுக்கு முன்னாடி இருக்க சொத்துலாம் அனுபவிக்கிற உரிமை அவனுக்கு முழுசா இருக்கு.. ஆனா நாங்க அப்படி இல்லையேம்மா… ஆதி பிறந்ததுக்கு அப்புறம் தானே நாங்க பழக்கமானம்… ஆனா ஆதிக்கு கொடுக்கிற அதே உரிமை எங்களுக்கு கொடுக்கும் போது அவனுக்கு கோவம் வருவதில் எந்த தவறும் கிடையாது… ஏன் ஆதி இருக்க இடத்துல அன்பினியா நான் இருந்தா கூட எனக்கு கோவம் வரும்….
ஆதரனின் எண்ணங்களை அறிந்தவள் அவன் இப்படித்தான் யோசித்து இருப்பான் என்று அவனுக்காக வாதாடினாள்…. ஏன் இதில் அன்பினியாக நானும் இருந்திருந்தால் கூட இப்படித்தான் செய்திருப்பேன் என்று தன்மீதே பழியை கூட போட்டுக் கொண்டாள்…
ஆனால் அவனோ போட்டுக் கொடுத்ததும் அல்லாமல் தனக்காக வாதாடுவது போல அவளுக்கு நன்மை செய்து கொள்கிறாளா என்று அவளை முறைத்துக் கொண்டு நின்றான் ஆதிரன்.
அன்பரசிக்கோ கண்கள் கரித்துக் கொண்டு வந்தன… ஸ்ரீஜாவை அவள் உடன் பிறவாத சகோதரியாகத் தான் கருதுகிறாள்… தான் அப்படி நினைக்கிறேன் என்றால் தன் புதல்வனும் அப்படி நினைக்க வேண்டும் என்று அவள் எண்ணிய கணக்கு தவறு தானே…
ஒரு வேளை ஆதி இப்படி அடமாக மாறுவதற்கு தான் இடம் கொடுத்து விட்டோமா என்று அவளுக்குள்ளே கேள்விகள் அவளை கொத்தி தின்றன..
என்ன இருந்தாலும் பையன் கிட்ட ஒரு தடவ கேட்டு இருக்கனுமோ…. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்தால் அன்பரசி…
அப்படி இருந்தாலும் அவன் சின்ன குழந்தையாச்சே அப்ப… அப்படின்னா இதுல இன்னும் என்னமோ ஒன்னு ஒழிஞ்சி இருக்கு….
ஆதி அன்பினி உனக்கு அப்புறம் மூனே மாதத்தில் பிறந்திட்டா… இதுநாள் வர அன்பினியோ அவங்க பேமிலியும் நம்மளோட சொந்த பந்தம் இல்லன்னு நான் சொன்னதே இல்லை…. அதையும் தாண்டி உனக்கு அவங்க மேல இவ்வளவு வெறுப்பு வந்து இருக்குன்னா என்ன காரணம்?.. நீ யாராயாவது சொல் பேச்சு கேட்டு இந்த வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்கியா?.. என்னன்னு சொல்லு இல்லனா நான் அப்பாகிட்ட சொல்லி உன்ன ரெண்டுல ஒன்னு பாத்துருவேன்…
அன்பரசி அப்பொழுதும் தன் மகன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்று ஒரு துளி கூட விசாரிக்கவில்லை. அதுவே அவனுக்கு கோபத்தை கொடுத்தது..
இப்ப நீங்க எதுக்கு அவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க.. சும்மா ஓசில சாப்பிடறதுக்கு நாம ஒன்னும் சத்திரம் நடத்தலமா.. அவ சாப்பிடற சாப்பாட்டுக்கு மட்டும் தான் காசு தறா… அதையும் தாண்டி அவன் நம்ம வீட்டுல தங்கறது தூங்குறது தண்ணி யூஸ் பண்றது மத்ததுக்கு எல்லாம் நான் ஒண்ணுமே சொன்னது கிடையாது….
ஆதிரனின் பேச்சைக் கேட்டு அன்பரசிக்கு மட்டுமல்ல ஸ்ரீஜாவிற்கும் அதிர்ச்சி தான்.
அன்பரசி ஸ்ரீஜாவும் அறிந்த அளவு அன்பினியும் ஆதிரனும் நல்ல நெருங்கிய நண்பர்கள் என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறார்கள். ஏன் சில சமயங்களில் அன்பரசி ஆதி தான் அன்புக்கு வருங்கால புருஷன் என்று கூட சொல்லி கூட சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பிறப்பிலேயே இருவரிடமும் வேற்றுமை ஆரம்பித்துள்ளது என்பதை தற்போது தான் இருவரும் அறிகின்றனர்.
அப்ப நானும் சாப்பிடுகிறேன். நானும் உங்க வீட்டுக்கு நானும் உழச்சி கொடுக்கனுமா?…
ஆதிரனின் பேச்சுக்களால் ஏற்பட்ட காயத்தின் வடுக்களோடு ஸ்ரீஜா அவனிடம் கேள்வி கேட்டாள்…
ஶ்ரீமா என்ன இப்படி பேசுறீங்க… நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது… எனக்கு இன்னொரு அம்மா… உங்களை போய் நான் கஷ்டப்படுத்த விடுவனா..
தனது கோபம் அனைத்தும் அன்பினி மீது மட்டும் தான் என்பதை அந்த இடத்தில் அவன் நிரூபித்தான்…
என் மேலயே உனக்கு கோவம் இல்லன்னா என்னோட பிள்ளை மேல மட்டும் உனக்கு எப்படி ஆதிரன் கோவம் வரும்…
இப்போது பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறினான்.
அன்பரசியும் அவனிடம் அதே கேள்வியில் தானே கேட்டாள்…
அதற்குள் அந்த ரெசார்ட் இன் ஓனர் அன்பினி ரொம்ப டைம் நின்னுட்டு இருக்க போய் வேலைய செய் அன்பினி…. நிறைய கஸ்டமர்ஸ் வராங்க மசமசன்னு நின்னுட்டே இருந்தீன்னா எப்படி வேலை செய்வ…. ஃபர்ஸ்ட் வேலையை செய் அதுக்கப்புறம் யார இருந்தாலும் நின்னு பேசு…
ரெசார்டின் ஓனர் வேலையை செய் என்று கட்டளையை கொடுத்து விட்டு நகந்தார்….
அன்பினியும் அந்த இடத்திலிருந்து நகர்ந்து பில் சென்டருக்குள் நுழைந்து கொண்டாள்…
அன்பரசியும் ஸ்ரீஜாவும் அவள் வேலை செய்யும் வேகத்தையும் செய்யும் வேலைகள் அனைத்தையும் அந்த இடத்தில் சிலை போல் நின்று கல் நெஞ்சோடு கவனித்தார்கள்.
மட மடமென ஓடுவது அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை குறித்து கொண்டு சமைப்பவர்களிடம் கொடுத்துவிட்டு பில் சென்டருக்குள் சென்று பில் போட்டுவிட்டு தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு என அனைத்து வேலைகளிலும் அவள் ஈடுபாடு இருந்தது.
வெறும் இரு நூறு ரூபாய்க்காக செக்கு மாடாக உழைக்கும் அன்பினியை கண்டு இருவரும் அங்கே கலங்கி நின்றார்கள்… ஆனால் குரோதம் கொண்ட ஆதிரனின் கண்களில் அங்கே குளிர்ச்சி நிறைந்தது…
அன்பரசி அவற்றை கண்டு விட்டு நீ அவளை நின்னு கூட்டிட்டு வர நாங்க இப்ப போறோம்…
சொல்லிவிட்டு ஸ்ரீஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள் அவ்விடத்தை விட்டு…அவளால் அங்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை தன் பிள்ளை ஓடி ஓடி வேலை செய்வதை கண்டு அவர்கள் கலங்கி போய் அங்கே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்கள்
ஒரு நாற்காலியை தன்னிடம் வசமாக இழுத்துப் போட்டு அவள் செய்யும் வேலைகள் அனைத்தையும் கண் குளிர கண்டு நிமிர்த்தமாக அமர்ந்து கொண்டிருந்தான் ஆதிரன்.
கர்மா இஸ் பூமராங் என்ற பொன் மொழியை மறந்த நிலையில் அவன் அங்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தான்.
வீட்டுக்கு சென்ற அன்பரசி முதலில் தனது கணவரை அழைத்து இன்று மாலை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டாள்.
அன்பினியும் ஆதிரனும் சரியாக பத்து மணிக்கு மேல் கிளம்பினார்கள் வீட்டிற்கு..
எதுக்கு அம்மா கிட்ட என்ன மாட்டி விட்ட…
அவங்க கிட்ட பொய் சொல்ல எனக்கு இஷ்டம் இல்ல ஆதி.. உனக்கு நாங்க இந்த வீட்ல இருக்குறது தான பிரச்சனை.. அன்பரசி அம்மாக்கு தெரிஞ்சா கண்டிப்பா நாங்க இந்த வீட்டை விட்டு வெளியே போயிடலாம் இல்ல… அவங்களுக்கு தெரிஞ்சதுனால உனக்கு எந்த பாதிப்பும் இல்லை புரிஞ்சுக்கோ..
எதற்காக அவளுக்கு தெரியும் படி செய்தால் என்பதை அவனிடமும் புரிய வைத்து விட்டாள்.
அன்பினி நீ என்ன தப்பா நினைச்சுட்டு இருக்க… எனக்கு நீங்க வீட்ல இருக்க கூடாது என்கிற எந்த நினைப்பும் இல்ல.. என் வீட்ல முதலாளி மாதிரி நீங்க நடந்து கொள்வது மட்டும் தான் தப்பு… சங்கீதா அக்காவை அதை செய்யனும் இதை செய்யனும்னு அவ்ளோ அசால்டா வேலை வாங்குறீங்க…. அதுதான் எனக்கு பிடிக்கல… வீட்டுக்கு எங்களை விட நீங்க தான் அதிக அக்கறைக்க சாப்பாடு போடுறீங்க…. மீனுங்கள அடிக்கடி மாத்திட்டே இருக்கீங்க எங்க உரிமையில்லை… மடத்தனமாக பேசினான் ஆதி…
இப்ப அன்பரசி அம்மா கிட்ட நான் சொன்னது நல்ல பூகம்பம் எல்லாம் வராது… மிஞ்சி போனா நாங்க மூணு பேரும் இந்த வீட்டை விட்டு போவோம் அவ்வளவுதான்… என்ன ஆதி.. உங்க வீட்டில நாங்க இல்லை என்றாலும் சங்கீதா அக்காக்கு யாரும் வேலை வைக்க முடியாது இல்ல… நோ ப்ராப்ளம் நீ நெனச்சது கண்டிப்பாக நடக்கும்..
அப்படின்னா நீ மட்டும் இந்த வீட்டை விட்டு போ என்னால ஸ்ரீமா இல்லாம இருக்கவே முடியாது…
ஸ்ரீமா ஒன்னும் வானத்தில் இருந்து குதிக்கல அவங்க என்னோட அம்மா….
நீ முட்டாள் தனமா நடந்துக்கிற அன்பினி..
முட்டாள்களுக்கு முட்டாள்கள் மாறி தான் நடந்துக்கணும்…
நீ ரொம்ப பேசுற வாய் அளந்து பேசு இல்ல பல்ல உடச்சிடுவேன்…
என்ன வேணா பண்ணிக்கோ எல்லாத்துக்கும் நான் ரெடி தான்… பை தி வே பல்லொடைக்கிற வரைக்கும் என்னோட கைப் பூ பறிச்சுட்டிருக்காது ஆதி…சும்மா பொண்ணுங்கன்னா அடங்கி போகணும் பேச கூடாதுன்ற அதெல்லாம் என் டயலாக் இல்ல… நீ பல்ல உடச்சின்னா நான் வாயவே உடச்சிடுவேன்…
சொல்லி முடித்துவிட்டு அவனுக்கு முன்னதாக நடக்க தொடங்கினாள்…
இவள் மீது அளவு கடந்த கோபம் பெருகிக்கொண்டே இருந்தது.. கூடுதலாக தற்போது குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்று குழப்பம் வேறு அவனை சூழ்ந்து இருந்தது.
எது எப்படி ஆனாலும் சரி ஸ்ரீ மாவை என்னிடம் இருந்து தனியாக அனுப்ப எனக்கு சுத்தமாக விருப்பமில்லை என்று மட்டும் தீர்க்கமாக முடிவெடுத்தான்.
ஶ்ரீமாவை பிடித்திருக்கிறது என்றால் அவள் பெற்ற சீம புத்திரியையும் பிடிக்க வேண்டும் அல்லவா!…
ஸ்ரீஜாவாக இருந்தாலும் தனது மகளுக்கு தானே முதல் உரிமை கொடுப்பாள்.. அதிலும் தன் மகள் இவ்வளவு துயரம் பட்டு இருக்கிறாள் என்னும் போது இனி மேலும் அந்த வீட்டில் அவள் எப்படி இருப்பாள்.. அல்ல அவளது மனசாட்சி தான் அவளை அங்கு இருக்க ஒப்புக்கொள்ள விடுமா?..
இதை எதையும் அறியாத முட்டாளாக தனது வீட்டிற்குள் சென்றான்…
உன்ன அன்பினிய கூப்டுட்டு தானடா வர சொன்ன எங்க அன்பினி…
அம்மா அவளை கூப்பிட்டு தான் வந்த … கொஞ்சம் வேகமா வாந்தா… சோ அவ எனக்கு முன்னாடி தான் வந்திருப்பான்னு நினைச்சேன் இன்னும் வரலையா எங்க போன அவ….
அன்பரசியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவே அவன் வாயை திறந்து விட்டான்….
அவன் வந்து பத்து நிமிடம் கழித்து தான் அன்பினியும் வீட்டிற்கு வர அனைவரும் அவளை எங்கே சென்றாய் என்ற கேள்வியில் முதலில் தாக்கினார்கள்…
அம்மா… ஒரு ஃபுட் டெலிவரி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்க சொல்லி இருந்தாங்க அம்மா அது தான் கொடுத்துட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு…
ஆதிய கூட்டிட்டு போனா என்ன ஶ்ரீமாவின் ஆதங்கமான கேள்வி.
ஆதி இன்னைக்கு வருவான் …நாளைக்கும் என் கூடவே வருவானா… ஒரு நாள் அவன் வந்து பழகிட்டானா எனக்கு அதுவே பழகிடும் இல்ல…. தன் கையே தனக்கு உதவி என்கிற பாலிசியை ஃபாலோ பண்றவமா நான்… ஆதிய நம்பி நான் ஒன்னும் இந்த வேலைக்கு ஜாயின் பண்ணலையே…. ஒன்றரை வருடமாக போகிறேன்…இது கூடவா எனக்கு தெரியாது…
அன்பினி ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்கிறாளா….
அங்கே நின்று கொண்டிருந்த அன்பரசி ஸ்ரீஜா, இன்பரசன், பாஸ்கரன் கூடுதலாக சங்கீதாவுக்கும் இந்த செய்தி தலை சுற்றாத கொடுமை மட்டும் தான்.
சுத்தம்…. இரண்டு மாதமாக தான் வேலைக்கு செல்கிறாள் என்று சமாளித்து விடலாம் என்று இருந்த ஆதிரனுக்கு மண்டையில் அடித்தார் போலானது…
இன்பரசன் தான் முதலில் கேள்வி எழுப்பினார்…
ஆதி அன்பினி மேல உனக்கு எதுக்கு இவ்வளவு வஞ்சகம்…
அடுத்தது அன்பரசி கேட்டாள்…
ரெண்டு வருஷமா அவ வேலைக்கு போறாளா… கண்டிப்பா அது உன்னால தானே…. அப்ப ஆரம்பத்தில் இருந்தே அன்பினிமாவா உனக்கு பிடிக்கவே பிடிக்காதா…. அப்புறம் ஏன் எங்க முன்னாடி எல்லாம் வேஷம் போட்டுட்டு இருந்த…
தற்போது ஸ்ரீஜாவின் சமயம்…
அன்பினிமா வேலைக்கு அனுப்பும் போது என்னையும் சொல்லி இருந்தா நானும் ஒரு வேலைக்கு போய் உனக்கு டெய்லி இரு நூறு ரூபாய் கொடுத்து சாப்பிட்டு இருப்ப இல்ல தம்பி…. அவ அடுத்தவங்களோட எச்சி தட்டையை கழுவறா….
தனது புடவையின் நுனியில் அழுகாட்சியை கட்டுப்படுத்திய அளவு நின்று கொண்டிருந்தால் ஸ்ரீஜா.
பாஸ்கரன் மட்டும் சும்மா விட்டு விடுவாரா இதோ அடுத்த கேள்வியை மரத்தில் பாயும் அம்பாக எய்தார்…
உனக்கு எங்கள புடிக்கலைன்னா முன்னவே சொல்லி இருக்கலாம் இல்ல தம்பி…. நாங்க வேற வீடு பார்த்து கூட போயிருப்பம்ல…. மனசுக்குள்ளேயே வஞ்சகமா இருந்துட்டு பொண்ணு கிட்ட மட்டும் இப்படி நடந்து இருக்கையே தம்பி மனசு ரொம்ப வருத்தமா இருக்குப்பா….
அங்கே பாய்ந்து வந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தெரியாத குழந்தையாய் நின்றான் ஆதிரன்… குழந்தை என்பதை விட வளர்ந்து கொழுத்த கோமாளி என்று சொன்னால் சரியாக இருக்கலாம்.
ஆரம்பத்திலிருந்து அன்பினி மீது அவனுக்கு சற்று கோபம் தான்… அந்தக் கோபத்திற்கு தீனி போட்டதெல்லாம் வேறு விதம்.
முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பதை தற்போது தான் அவர்களின் பெற்றோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.. இதில் ஆதிரன் தவறு தான் முழுமை என்று சொல்லிவிட முடியாது.
ஆதிரனுக்கு அன்பினி மீது இந்த அளவு வெறுப்பு வர
என்ன காரணம் என்பதை அறிந்து அவற்றை சரி செய்தால் மட்டுமே அவனுக்கு ஏற்பட்டு இருக்கின்ற வெறுப்பு தீர வாய்ப்பு உண்டு…
செந்தனலா?… மழையா?…
கௌசல்யா வேல்முருகன் 💝