விடாமல் துரத்துராளே 18

4.6
(19)

பாகம் 18

தேவா வெண்ணிலா நிச்சயதார்த்திற்கு ஒரு மாதம் முன்பு 

“இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட்.‌ அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா ஃசீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க” என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா…

அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்… ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத அளவு சோர்ந்து போனவளை பார்த்து பதறி பயந்து போன பாலகிருஷ்ணன் யமுனா இருவரும் உடனடியாக ஆரோக்கியம் மருத்துவமனை அழைத்து வந்தனர். அங்கு அவளை பரிசோதித்தது டாக்டர் ஜீவா…

அவன் தான் ஆரோக்கியம் மருத்துவமனையில் புற நோயாளிகளை கவனிப்பான்… 105 டிகிரி காய்ச்சல் தியாவிற்கு இருந்தது. அதனால் அவளுக்கு  இரத்த பரிசோதனை சிறுநீரக பரிசோதனை எல்லாம் பார்க்கப்பட்டது.‌ பரிசோதனை முடிவை பார்த்த ஜீவா அவளுக்கு டெங்கு ஃபீவர் உள்ளதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கூறினான்…

 பயந்து போன தியா பெற்றோர்கள் அவளை மருத்துவமனையில் அனுமதிக்க இதோ ஒரு வாரம் கடந்து தியாவிற்கு காய்ச்சல் குறைந்து பரிபூரணமாக குணமடைந்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல கூறுகிறான் ஜீவா…

“இனி எந்த தொந்தரவும் இருக்காது இல்ல டாக்டர்… சாப்பிடுறதுக்கு எல்லாமே கொடுக்கலாமா?” என்று ஒரு தாயாக மகள் உடல்நிலை பற்றி மீண்டும் ஒரு முறை கேட்டார் யமுனா..

“எந்த ப்ராப்ளமும் இல்ல. நார்மலா நீங்க எப்பவும் கொடுக்கிற எல்லா ஃபுட்டையும் கொடுக்க” என்று ஜீவா கூறியதும் “சரி” என்ற யமுனா தியா வை ரெடியாக இருக்கும்படி கூறி விட்டு பில்லை கட்டி டிஸ்சார்ஜ் பார்மாலிட்டி முடிக்க ரிசப்ஷன் சென்றார்… 

யமுனா சென்றதும் அங்கிருந்த தியா ஜீவாவை பார்த்து முறைத்தாள்.. 

 ஜீவா தியாவின் செயலை பார்த்து சிரித்தான்… இந்த ஒரு வாரத்தில் தியா தன்னை கவனித்து கொண்ட டாக்டர் நர்ஸ் அனைவரையும் தன் பேச்சால் நண்பர்களாக்கி இருந்தாள்… அதில் ஜீவாவும் ஒருவனே. தேவா இதய சம்மந்தப்பட்ட நோயாளிகளை மட்டுமே பார்ப்பதால் தியா தேவாவையோ தேவா தியாவையோ இந்த ஒரு வார காலத்தில் பார்த்தது இல்லை.‌..

“சிரிக்காதீங்க டாக்டர் நான் உங்க மேல்ல செம கோவத்தில் இருக்கேன்” என்று தியா மேலும் முறைக்க… 

“ஓய் குட்டி பொண்ணே என் மேல்ல என்ன கோவம் உனக்கு” என்று அதன் காரணம் தெரிந்து கொண்டே தெரியாதது போன்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க,

“நான் ஒன்னும் குட்டி பொண்ணு இல்ல… என்னது என்ன கோவமா நான் உங்க கூட டூ… டாக்டரே, உங்க கிட்ட நான் நேத்து என்ன சொன்னேன்” கண்ணை உருட்டி முறைத்த வண்ணம் கேட்டாள்…  

“என்ன சொன்ன?” என யோசித்த போல பாவனை செய்தவனை மேலும் மேலும் முறைத்த தியா, 

“எனக்கு இன்னும் டூ டேஸ்ல எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடும் அதனால் என்னோட மம்மி கிட்ட இன்னும் 10 டேஸ்க்கு ஹாஸ்பிட்டல்லயே இருக்கும்னு சொல்ல சொன்னா, நீங்க மம்மி கிட்ட இன்னைக்கே கூட்டிட்டு போக சொல்றீங்க. நான் உங்களை எவ்ளோ நம்புனேன்… நீங்க என்னை ஏமாத்தீட்டிங்க.. போங்க டாக்டர் நான் உங்க கிட்ட பேச மாட்டேன்” என முகத்தை தூக்கினாள் தியா..

“குணமான அப்புறமும் உன்னை பத்து நாள் ஹாஸ்பிட்டலில் வச்சு இருக்கிறது ரொம்ப தப்பு. அதை நான் செய்ய மாட்டேன்.. அப்புறம் பத்தாவது பொது தேர்வு தான் ரொம்ப முக்கியமானது. உன் ப்யூச்சர்ல நீ என்ன படிக்க போற அப்படிங்கிறதை தீர்மானிக்கிறது. அதனால் உன்னை இங்க வச்சிருக்க முடியாது” என்று தொடர்ந்து பேசி கொண்டு இருந்தவனை கை நீட்டி தடுத்தாள் தியா…

“டாக்டர் இன்னும் நாலு ஊசி வேணா குத்திக்கோங்க. ஆனா இந்த கருத்து ஊசி மட்டும் வேணாமே,இவ்வளோ பேசுறீங்களை வந்து மேக்ஸ் எக்ஸாம் எழுதி பாருங்க. அப்ப தெரியும் எங்களை மாதிரி ஸ்டூடண்ஸ் நிலைமை, அதற்கு அப்புறம் நீங்க இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேச மாட்டீங்க”  என்றவளை தலையில் செல்லமாக தட்டி விட்டு வாசலை நோக்கி மெல்ல நகர்ந்தான்.‌..

வாசல் வரை வந்தவன் திரும்பி தியாவை பார்த்தான். அவள் தனது மொபைலை நோண்டி கொண்டு இருக்க.  அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக சிரித்து விட்டு சென்றான். அந்த பார்வைக்கும் சிரிப்பிற்குமான காரணம் அவன் மட்டுமே அறிவான்.. 

தேவா வெண்ணிலா திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு:

“வெண்ணிலா தேவா அண்ணாக்கு கால் பண்ணி பாரு, எவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் காணோம் ஒரு வேளை அண்ணா மறந்து போயிட்டிங்களோ என்னவோ” என்றாள் சாரூ  வெண்ணிலாவுடன் படித்தவள்.

“ஆமா ஆமா தேவா அண்ணா மறந்து தான் போயிட்டாங்க போல இல்லைனா நாமா வந்து ஒன்றை மணி நேராமாகியும் வரமா இருப்பாங்களா, வெண்ணிலா நீ அண்ணாவுக்கு கால் பண்ணி ஞாபகப்படுத்து” என்றனர் அங்கு இருந்த மற்ற தோழிகளும்,

_ஏய் எல்லாரும் என் மாமாவ என்னை நினைச்சிட்டு இருக்கீங்க. அவங்க ஒரு தடவை சொன்னா சொன்னது தான். எதையும் மறக்க மாட்டாங்க ரொம்ப பர்பெக்ட்… அதுவும் நான் அவரோட உயிர்… அப்புடி இருக்கும் போது நான் ஒரு விஷயத்தை அவங்க கிட்ட சொல்லி அதை மறந்துருவாங்களா? கண்டிப்பா மாமா வருவாங்க. உங்க எல்லாத்துக்கும் எங்க மேரேஜ்க்கானா டீரிட் கொடுப்பாங்க, அமைதியா இருங்க” என்று கூறி கொண்டே இருக்கும் போதே வந்தான் தேவா…

“ஹாய் சாரி சாரி ஒரு எமர்ஜென்சி கேஸ்ப்பா அதான் வர லேட்டா ஆகிருச்சு. நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சா சாரி கேர்ள்ஸ்” என்றான். 

“அச்சோ அண்ணா‌ நாங்க வெட்டி தான் அதான் சீக்கிரமா வந்துட்டோம். எங்களுக்கு வெயிட் பண்ணுனதுல எந்த பிரச்சினையும் இல்லை.‌ வெண்ணிலாவுக்கு தான் நீங்க லேட்டா வந்ததுல உங்க மேல்ல கோவம்” என்றாள் சாரூ…

“என்ன நிலா என் மேல்ல கோவமா” என்று கேட்டவனிடம்,  

“அய்யோ  மாமா அப்புடி எல்லாம் எதுவும் இல்லை.‌ நான் எப்பவாவது உங்க மேல்ல கோபப்பட்டு இருக்கானா, இவ பொய் சொல்றா நம்பாதீங்க” என பதறினாள் வெண்ணிலா…

“அண்ணா இவ தான் இப்ப பொய் சொல்றா இவ்வளவு நேரம் உங்களை நல்லா திட்டிட்டு இப்ப மாத்தி பேசுறா” என்று சாரூ சொல்ல மற்றவர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணடித்து கொண்டு ஆமாம் போட்டனர்..

அதை கேட்டு வெண்ணிலா பதற தேவாவோ சிரித்து கொண்டே என் நிலா என்னை திட்டாமா வேற யார் திட்ட போறா. அவளுக்கு தான் என்னை திட்ட முழு உரிமையும் இருக்கு.‌ திட்டுறதுக்கு என்ன அடிக்க கூட செய்யலாம் என் நிலாவுக்கு இல்லாத உரிமையா” என சிரித்து கொண்டே கூற. 

பார்த்தீங்களா என் மாமாவா என்றபடி வெண்ணிலா கர்வமாக இல்லாத காலரை உயர்த்தி காட்ட, அவளின் தோழிகளும் “நீ கொடுத்து வச்சவ தான்” என்றபடி அதன்பின் அமைதி ஆகினர். 

அதன்பிறகு அனைவருக்கும் பிடித்ததை ஆர்டர் செய்து, சிரித்து பேசியபடியே உண்டனர். மற்றவர்களை எல்லாம் அனுப்பி விட்டு வெண்ணிலாவை தன்னுடன் அழைத்து வந்தான்.

கார் பார்க் செய்த இடதுக்கு வந்த போது வெண்ணிலா முகம் ஒரு மாறி இருக்க என்னவென்று தேவா கேட்டான்…

“மாமா நான் உங்க மேல்ல கோவம் படவே இல்ல. அவளுக சும்மா தான் சொன்னாளுங்க.. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே மாமா” என்று சற்று தயக்கத்துடன் கேட்டாள்.. 

“ரொம்ப வருத்தம்” என்று தேவா கூறியதில் வெண்ணிலா முகம் சுருங்க.‌ அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்  அவளின் நெற்றி முட்டி “நீ ஏன் என் மேல்ல கோவம் படல அதான் என் வருத்தம்” என்றதும்

அவனை விழி விரித்து பார்த்தவளிடம் “ஆமாடா நிலா நீ என்கிட்ட கோபப்படனும், சின்ன சின்னதா சண்டை போடனும், அப்ப நான் உன்னை கெஞ்சி கொஞ்சி சமாதானம் பண்ணணும். இந்த மாதிரி எல்லாம் நிறைய ஆசை இருக்கு. இப்புடி சின்ன சின்ன ஊடல் அப்ப அப்ப நடந்தா தான் நம்ம வாழ்க்கை போர் அடிக்கமா  இண்டஸ்டீரிங்க போகும்” 

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ நிறையா என்கிட்ட சண்டை போடுற, மாமா விதவிதமான முறையில் உன்னை சமாதானம் பண்றேன் என்றான் அவளின் இடையை அழுத்தி  கண் அடித்தபடி, அதில் வெக்கம் எழ “போங்க மாமா” என்று சிணுங்கிய படியே அவன் மார்பில் தஞ்சம் அடைந்தவளை  இறுக்கி அணைத்து கொண்டான்.

இதை எல்லாம் சீனீ மிட்டாயை மொய்க்கும்  ‘ஈ’ போல எந்நேரமும் வெண்ணிலா வை பின் தொடரும் திவேஷ் தூரத்தில் இருந்து பார்த்து உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தான்….

அடுத்த நாள்:

“உங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாத?”

“ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்க போற பொண்ணுங்கிட்ட அடிக்கடி வந்து லவ் பண்றேன் லவ் பண்றேன் சொல்லி ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”

“நான் தேவா மாமாவை தான் லவ் பண்றேன் உங்களுக்கு தெரியும் தானே. அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க.. இங்க இருந்து போங்க” தன் எதிரே இருக்கும் திவேஷை பார்த்து கோபமாக சத்தம் போட்டாள் வெண்ணிலா…

“வெண்ணிலா ப்ளீஸ் என்னை புரிஞ்ச்சுக்கோ. நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். என்னைக்கு உன்னை பார்த்தேனோ அப்ப இருந்து. உன் மேல்ல பைத்தியமா சுத்துறேன். என் அளவுக்கு யாரும் உன்னை லவ் பண்ண முடியாது. அந்த தேவாவால கூட,  நான் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். எந்த விதத்திலும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்…இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலைன்னு  சொல்லிட்டு, ப்ளீஸ் வெண்ணிலா நீ இல்லைனா நான் செத்துருவேன் என்னை என் காதலை புரிஞ்ச்சிக்கோ” என்று அவள் இருகைகளையும் பற்றி கொண்டு அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தான் திவேஷ்..

அவனிடம் இருந்து தன் கைகளை கடினப் பட்டு உருவியவள் அடுத்த‌ நொடி அவனை ஓங்கி அறைந்து இருந்தாள்… “இன்னோரு தடவை என்கிட்ட இப்புடி நடந்துக்கிட்டீங்க அவ்ளோ தான்” என்றாள் தன் கைகளை ஒரு முறை காட்டி, 

“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நீங்க என்கிட்ட வந்து இப்புடி பைத்தியக்கார தனமா உளறுனா முதல் நாளே மாமா கிட்டயோ இல்ல சூர்யாக்கிட்டயோ சொல்லி இருக்கனும்… என்னால ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள எந்த சண்டையும் வரக்கூடாதுன்னு நினைச்சு சொல்லமா விட்டது என் தப்பு தான். இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமே என்னை ஏதாவது தொந்தரவு பண்ணுனீங்க அவ்ளோ தான்‌” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றாள் வெண்ணிலா…

வெண்ணிலா தன் காதலை உதறி தள்ளியதற்கும், இப்போது நடந்து கொண்டதற்கும் தேவா மீதே வெறுப்பை வளர்த்து கொண்டான்…

“டேய் ஜீவா ஏன்டா ஏன்டா வெண்ணிலாவுக்கு என் காதல் புரிய மாட்டேங்குது… நான் அவளை அவ்ளோ லவ் பண்றேன்டா புரிஞ்ச்சிக்க மாட்டேங்கிறாடா, இன்னைக்கு என்னை அடிச்சிட்டாடா, அடிச்சது கூட பரவாயில்லைடா, ஆனா வார்த்தைக்கு வார்த்தை மாமாவ லவ் பண்றேன். மாமாவை லவ் பண்றேன் சொல்றதை கேட்கும் போது அந்த தேவாவை கொல்லும் அளவுக்கு செம கோவம் வருதுடா”, என்று எப்போதும் போல் திவேஷ் குடித்து விட்டு ஜீவா விடம் புலம்பி கொண்டு இருக்க..

ஜீவாவோ அவன் புலம்பலை எல்லாம் காதில் வாங்காமல் செல் போனில் இருக்கும் தியா புகைப்படத்தை பார்த்தபடி  எதையோ பலமாக சிந்தித்து கொண்டு இருந்தான்… 

“என்னடா நான் பேசிட்டு இருக்கேன். நீ எந்த பதிலும் சொல்லாமா போனையே பார்த்ததுட்டு  இருக்க” என்றபடி ஜீவா கையில் இருந்த மொபைலை திவேஷ் பிடுங்க போக ஜீவாவின் யோசனை தடை பட அது அவனுக்கு எரிச்சலை கொடுத்தது.‌

திவேஷ் மேல் கோவம் எழ “என்னடா உன் பிரச்சினை எப்ப பார்த்தாலும் வெண்ணிலா வெண்ணிலான்னு பைத்தியம் மாதிரி உளறிட்டு சுத்துற”,

“என்னடா காதல் மயிர் மண்ணாங்கட்டிட்டு இன்னோருத்தன் பின்னாடி சுத்துற பொண்ணு தான் உனக்கு வேணுமா? வேற யாருமே கிடைக்கலையா உனக்கு?”

“அந்த வெண்ணிலாவும் தேவாவும் எல்லார் முன்னாடியுமே ஃபேப்பிகால்(Fevicol) போட்டு ஒட்டுனா மாதிரி, ஓட்டிட்டு சுத்துங்க. ஆள் இருக்கும் போதே இப்புடினா, தனியே இருக்கும் போது என்ன நிலையில் இருக்குங்க. இந்நேரத்துக்கு அந்த தேவா விருந்தே சாப்ட்டு முடிச்சு இருப்பான்.. இன்னோருத்தன் சாப்பிட்ட எச்ச இலை தான் உனக்கு வேணுமா? 

எல்லாத்தையும் விட்டு தொலை, இந்த ஒரு வெண்ணிலா இல்லன்னா என்ன, ஆயிரம் வெண்ணிலா வாழ்க்கையில் உருப்படற வழியை பாருடா” என கோவப்பட்டான் ஜுவா…

“என் காதல் உனக்கு அவ்ளோ கேவலமா போயிருச்சாடா, எனக்கு ஆயிரம் வெண்ணிலா வேண்டாம். இந்த ஒரு வெண்ணிலா போதும்… அவளை தான் நான் காதலிக்கிறேன். அவ மேல்ல என் உயிரையே வச்சு இருக்கேன்டா… நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ ஜீவா… வெண்ணிலா மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நான் செத்துருவேன்டா” என்று பைத்தியக்கார தனமாக பேசியவன் மேல் பயங்கர கோவம் எழுந்தாலும், இந்த பைத்தியக்காரத்தனமான காதலை வைத்தே, தான் இப்போது யோசித்த திட்டத்தை செயல்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணமும் உண்டானது…

ஜீவா எழுந்து திவேஷ் அருகில் அமர்ந்து அவனின் தலையை வருடி விட்டு, “உன் நிலைமை என்னனு எனக்கு புரியுது திவா.. நீ என் ப்ரெண்டுடா உனக்கு ஒரு கஷ்டம்னா நான் பார்த்துட்டு இருப்பேனா, இவ்வளோ நேரம் நான் என்ன யோசிட்டு இருந்தேன் தெரியுமா? தேவா கல்யாணத்தை எப்புடி நிறுத்துறதுன்னு தான்” என்று பொய்யான கரிசனத்துடன் திவேஷ் தலை வருடி கூற, 

அதை உண்மை என்று நம்பிய திவேஷ் ஜீவா கையை பிடித்து கொண்டு “உண்மையாவே  இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா?”  ஜீவா… எப்புடின்னு சொல்லுடா” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டான்… 

“முடியும் என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு அதை சரியா எக்ஸ்க்யூட் பண்ணுனோம்னு வை தேவா வெண்ணிலாவா பிரிச்சரலாம்” என்று ஜீவா கூற…

“என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு ஜீவா என் வெண்ணிலா கிடைக்கிறதுகாக நான் என்ன வேணா பண்ணுவேன்” என்று தீவிரமாக கூறிய திவேஷை பார்த்த ஜீவா, வாடா மவனே  இது தான்டா எனக்கு வேணும் என்று மனதிற்குள் நினைத்தவன்,

தன் மொபைலில் இருந்த தியா புகைப்படத்தையும்  அவளின் மெடிக்கல் ரிப்போர்டையும்  காட்ட, திவேஷிற்கு ஜீவா சொல்லாமலே புரிந்தது தன்னை என்ன செய்ய சொல்கிறான் என்று, 

“டேய் உனக்கு ஏற்கெனவே நிறைய தடவை சொல்லி இருக்கேன்.. இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டேன் சொல்லி, இது ரொம்ப தப்பு பெரிய பாவம்.. மாட்டுனா அவ்ளோ தான் ஜென்மத்துக்கும் ஜெயில்ல உக்கார்ந்து களி தின்னனும்… ஆளை விடு நான்லாம் இதை செய்ய மாட்டேன்” என்று கோவமாக கூறினான் திவேஷ்…

“செய்யலனா போடா எனக்கு எந்த நஷ்டமும் இல்லை…நஷ்டம் உனக்கு தான்”…

“இது எல்லாம் நான் உனக்காக தான் செய்றேன்…தேவா கல்யாணத்தை நிறுத்துறதுன்னா ரொம்ப சாதரணமா, அதற்கு பணத்தை தண்ணியா செலவு செய்யனும்… சொல்லு அந்த அளவு பணம் உன்கிட்ட இருக்கா, இல்லைல”.

“இது எல்லாம் உனக்காக திவா. உன் காதலுக்காக. உன் வெண்ணிலா உனக்கு கிடைக்கனும்கிறதுக்காக” என்று திவேஷை தன் திட்டத்தில் விழ வைக்க வெண்ணிலா என்னும் அம்பை சரியாக ஜீவா திவேஷ் மேல் எய்தினான். அது சரியாக வேலை செய்தது. அடுத்த நாளே பள்ளி சென்ற தியா கடத்தப்பட்டாள்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!