வேந்தன்… 66, 67
மக்களே🤗. அடுத்த அத்தியாயத்தில் கதையை முடிச்சுக்கலாமா?💕 இந்த அத்தியாயம் உங்களுக்கு ஓகேதானே? கொஞ்சம் கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்கப்பா.
மன்னிப்பு…
இந்த ஒற்றை வார்த்தையில்தான் உலகமே சுற்றுகிறதோ, எனில் தவறு செய்யாத மனிதர்களே இங்கு கிடையாதா. ‘சாரி, மன்னிச்சுக்கோ” இந்த வார்த்தை மட்டும் இல்லாமல் போயிருந்தால்?…
ஏதோ ஒண்ணுங்க, ஆனால் இந்த வார்த்தையை சொல்லும் தருணங்கள், அச்சமயத்தில் அவர்களின் முகபாவங்கள் இதை ஒரு வரியில் அடக்கிட முடியாது.
மொத்தத்தில் “போனது போகட்டும் இனி வர்ற தருணங்களை வாழத் தொடங்குவோம் வா” என்று அழைப்பதற்கான சாவியாக மாறிவிட்டது மன்னிப்பு என்ற சொல்.
மன்னிச்சுட்டேன் என்று சொல்வது எழிதான ஒன்றுதான், வெறும் சொற்களை யார் வேணும்னாலும் சொல்லலாமே. ஆனால் நடந்ததை மறக்க முடியுமா?
மன்னிப்புக் கேட்பவருக்கு அதை மறக்க வைக்கும் சக்தி இருப்பின் அது அற்புதமான ஒன்றே…
நளிரா தன் வாழக்கையை வாழவே விரும்பினாள். ரணங்கள் ஆறாத வடுவாக நெஞ்சில் குடியிருந்தாலும், தனக்காக தன் மீது அன்பு வைத்த சுற்றத்திற்காக, தன் குழந்தைகளுக்கு தந்தையின் அன்பு வேண்டுமே என்பதற்காகவும், அவனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தாள்.
அவன் முழுதாக மாறிவிட்டான் என்பதில் அவளுக்கு நிச்சயமில்லைதான், ஏனெனில் பொசசிவ் குணமென்பது அவ்வளவு எளிதில் போகாது, ஆனால் இந்தப் பிரிவு நிச்சயம் அந்த குணத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அவனைத் தூண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
அவனது ஒற்றைக் கண்ணீர்த் துளிகளே அவனை மன்னிக்கப் போதுமானதாக இருந்தது அவளுக்கு. வாழ்ந்துதான் பார்ப்போமே, என்று துணிந்தாள்.
தான் மட்டுமே அவன் கன்னங்களில் முத்தம் வைத்துக் கொஞ்சிட, அவன் எந்த உணர்வையும் வெளியே காட்டிக் கொள்ளாது இருக்கவும், படுத்திருந்தவாக்கிலேயே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் “என்னாச்சு?” என்று கேட்கவும் செய்தாள்.
“எத்தனை பிழைகள், உன்னை சம்மதிக்க வைத்தாலும் நீயா சம்மதிக்கலையே. சரின்னு சொல்லுற நிர்பந்தத்துக்கு உன்னை தள்ளிவிட்டேன். அதுக்கப்புறம் உன்னைத் தப்பு சொல்லி, நம்பாம அவமானப்படுத்தி, யாரகிட்டயும் உன்னை நெருங்க விடாம பண்ணிட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்குடி.
மனசுல எந்தக் குற்றமும் இல்லாத உனக்கு என்னை ஏத்துக்க ஈஸியா இருக்குடி. ஆனால் தப்பு பண்ண எனக்கு அது முடியலையே. ரொம்ப கில்ட்டயா பீல் பண்ணுறேன்” என்று சொன்னவன்,
“உண்மையை சொல்லணும்னா எங்கே நீ மனசு மாறிடுவியோன்னுதான் துருவ் அங்கே கோமாவுல இருக்க, உன்கூட ஒண்ணா வாழ்ந்தேன் நளிரா. அவனைப் பார்க்கப் போலாம்னு சொன்னப்ப எனக்கு அத்தனை கோபம் பொறாமை வந்துச்சு. அதான் உன்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போனேன். எங்கே என்னை விட்டுப் போயிடுவியோன்னு பயந்தே தப்பு மேல தப்பா பண்ணிட்டேன்”
தவறுகளின் சுவடுகள் மனதைக் குத்திக் கிழித்திட, மன்னிப்புக் கேட்கவும் அருகதை இல்லாதது போல அவனது விழிகளில் கண்ணீர் வழிந்தது. ஆணின் கண்ணீர் இதயத்தை நடுங்கச் செய்திடும் என்பது உண்மைதானோ, நளிராவுக்கு அவனது அழுகையில் கலங்கிப் போனது.
இந்தக் கண்ணீருக்காகவா இவனை சாடினோம்? இல்லையே! அவனை இழுத்து தன் மார்போடு அணைத்தாள் நளிரா. தன் வயிற்றில் அவன் கரத்தைப் பதித்தவள், “எதுமே வேணும்னு பண்ணது இல்லையேங்க. என்னைக் காயப்படுத்திட்டு நீங்களும் வேதனைப்பட்டது எனக்குத் தெரியும். நான் உங்க கண்ணுல தெரியுற வலியைப் பார்த்திருக்கேன்” அதற்கு மேல் என்ன பேசுறதுன்னு புரியாது தடுமாறினாள் நளிரா.
அவன் சொல்வதைக் கேட்கும் பொழுது அவளுக்குமே வலிக்கத்தான் செய்தது. அவள் விழிகளில் இருந்தும் கண்ணீர் வலிந்து கன்னங்களை நனைத்தது. காயம் பட்ட வலிகள் அவ்வளவு எளிதில் போகுமா?
“உன்னால என்னை மன்னிக்க முடியுமா நளிரா. இப்படிக் கேட்கவே தகுதியில்லாத ஆம்பளைதான் நான். ஆனால் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு, புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம், நான் முழுசா மாறி வந்துட்டேனான்னு தெரியாதுடி. ஆனால் உன்னை சந்தோஷமா பாத்துக்குவேன்” அவள் கண்ணீரை தன் விரல்களால் துடைத்தான் சிபின்.
“உங்களை நம்பாம வேற யாரை நம்பப் போறேன், எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, நம்மளோட காதல் எல்லாத்தையும் மறக்க வைக்கும்னு நம்புவோம்” அவனைக் கட்டிக்கொண்டு சொன்னாள் நளிரா.
ஒருவர் அணைப்பில் ஒருவர் இருந்தாலும், நளிரா எப்போதும் போல தன்னிடம் இயல்பாகவே இருந்தாலும் அவனுக்கு எல்லாவற்றையும் எளிதாய் கடந்து ஆவலுடன் ஒன்றிவிட முடியவில்லைதான்.
எந்த தவறும் செய்யாதவளால் எளிதாக மன்னிக்க முடிந்தது, அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆனால் அவளைப் பார்த்ததில் இருந்து அவளுக்கு காயங்களை மட்டுமே கொடுத்தவனால் குற்ற உணர்வில் இருந்து மீள முடியவில்லை.
இருகரங்களையும் தலைக்குக் கீழ் கொடுத்து அதில் தலை வைத்துப் படுத்திருந்தவன், விழிகளை மூடியிருந்தாலும் மனதில் எரிமலையாய் குமுறியது.
“என்னாச்சு” அவனிடம் எந்த அசைவுமில்லாதிருக்க யோசனையாகக் கேட்டாள்.
“நீ எதுக்கு என்னோட கண்ணுல படனும், நீ ரொம்ப ஸ்பெஷல்டி” என்னவோ சொல்ல வந்து சொல்லாது பாதியில் நிறுத்தினான் வார்த்தைகளை.
அவன் விழிகளில் இருந்த உண்மையும், செய்த தவறுக்கான வருத்தமும் கண்டவளுக்கு திருந்தி வந்தவனை ஏன் இன்னும் வதைக்க வேண்டும், வரும் நாட்களை நிம்மதியாக கழிக்கலாமே என்று நினைத்தவள் தன் மனதில் இருக்கும் ரணங்களை மீறி அவனை மன்னிக்க முற்றிலும் தயாராகவே இருந்தாள்.
வேந்தன்… 67
மக்களே🤗. அடுத்த அத்தியாயத்தில் கதையை முடிச்சுக்கலாமா?💕 இந்த அத்தியாயம் உங்களுக்கு ஓகேதானே? கொஞ்சம் கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்கப்பா.
“நளிரா எழுந்திரு தங்கம்” மலர்விழிதான் அவள் தோள் தொட்டு எழுப்பினார். வெகுநாள் கழித்து நன்கு உறங்கும் பெண்ணை எழுப்பிடவே அவருக்கு மனதில்லைதான். ஆனால் சைத்ரா கட்டிலும் மெத்தையும் வரவைத்திருக்க, எடுத்து வந்தவர்களை வெகுநேரம் இருக்க வைக்கவும் முடியாதே.
அதுவுமில்லாமல் அப்படியே வைத்துவிட்டுப் போகச் சொன்னாலும் திரும்பவும் யார் அறைக்குள் எடுத்து வந்து வைப்பார்கள்? மாப்பிள்ளையிடமோ அல்லது அவனை சேர்ந்தவர்களிடமோ வேலை ஏவினால் அது மரியாதையாக இருக்காதே. எடுத்து வைக்கும் அளவிற்கு தங்களுக்கும் உடம்பில் வலு இல்லையே.
அதனால் மனதேயில்லாது மகளை எழுப்பி விட்டார்.
“என்னாச்சும்மா” என்று கேட்டுவிட்டு, அருகில் தொட்டுப் பார்த்தவளுக்கு அவன் இல்லாதிருக்கவும், நேற்று நடந்ததும், இரவில் அவன் தன்னருகில் படுத்திருந்ததும் எல்லாம் கனவுதானோ என்றே தோன்றிற்று.
அப்போ அவர் என்னைத் தேடி வரவே மாட்டாரா? நொடிக்குள் எதைஎதையோ மனசு கற்பனை செய்திட, உதடுகள் அழுகையில் துடித்தது. விழிகளில் இருந்து கண்ணீர் மிதந்திட, தாயை ஏக்கமாய்ப் பார்த்தாள் நளிரா.
“தங்கம் என்னடா?” மலர் மகளின் கண்ணீரில் பரிதவித்துப் போனார், எல்லாம் சரியாகிவிட்டது என்று மகிழ்ந்திருக்க, மகளின் இந்தக் கண்ணீர் உறுத்தியது அவருக்கு.
“நைட் ஒரு கனவு கண்டேன்மா. அவரு இங்கே வர மாதிரி, இதோ இங்கே அவர் படுத்திருந்த மாதிரியெல்லாம்” சொல்லச் சொல்லவே அவள் தேம்பி அழுதிட.
நீளமாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சை இழுத்துவிட்ட மலர்விழிக்கு ஒருகணம் நெஞ்சமே ஆடிப்போனது.
“கனவில்ல நளி. அவரும் மிராவும் பண்ணை வீட்டுக்குப் போயிருக்காங்க. அவங்களோட திங்ஸ் அங்கதான இருக்கு. குளிச்சுட்டு கிளம்பி வரேன்னுட்டு போயிருக்காங்க” மகளைத் தேற்றியவர் அவளை எழுப்பினார்.
“சரிடி எழுந்து வா. கட்டிலும் மெத்தையும் எடுத்துட்டு வராங்க. அவங்க போன பிறகு குளிச்சுக்க”
“எதுக்கும்மா தேவையில்லாத செலவு, அவர் தரையில் படுத்தார்மா. சிரமம் இல்லைன்னுதான் சொன்னார்”
“பொறந்ததுல இருந்து பஞ்சு மெத்தையிலயே படுத்த மனுஷன் தரையில படுத்தார்தான். ஆனால் நல்லா தூங்குனாருன்னு நீ பார்த்தியா. வாய் பேசாம எந்திருச்சு வெளிய வா” மலர் அவளை கையோடு அழைத்துக் கொண்டே வெளியேறினார்.
அதன் பிறகு அப்படி இப்படின்னு கட்டிலை பூட்டிகொடுத்துட்டு மெத்தையை காட்டில் மீது சரியாய் வைத்துவிட்டுச் செல்ல ஒரு மணிநேரம் ஆக்கிவிட்டார்கள்.
அறைக்குள் சென்று, தானும் குளித்து வெளியே வந்தவளுக்கு,
சிபினுக்கு புடவை கட்டினால் பிடிக்கும் என்ற நினைவு வரவும், வெட்கத்தில் முகம் பூவாக சிவந்து போனது. லேசாய் உதடு கடித்தவளுக்கு, இப்போ கட்டிக்கலாமா எண்ணம் தோன்றிட புடவையை கையில் எடுத்தவள் கட்டிக்கொள்ளத் தயாரானாள்.
முந்தானையின் மடிப்புகளை எடுத்துக் கொண்டிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தவனும் அவளைப் போலவே நினைத்திருப்பான் போலும்.
அவளுக்குப் பிடித்த நிறத்தில், ஜீன்ஸ் சர்ட், டிரிம் செய்யப்பட்ட தாடியும், அவளை மயக்கிடும் கள்வனாக நிற்பவனைப் பார்த்தவளுக்கு எதிர்பார்ப்பில் தேகம் உறைந்து போனது. பக்கம் வருவான் தன்னை வழுவாய் இழுத்து அணைப்பான் என்ற கற்பனையில் விழிகளில் எதிர்பார்ப்பைத் தேக்கி அவனையே பாவையவள் பார்த்திட.
அவனோ கதவை சாத்திவிட்டு வெளியே செல்ல முயன்றான்.
“கதவை சாத்திட்டு இங்க வாங்க” அவளின் அழைப்பில் நின்றவன் அவளைப் பார்ப்பதையே தவிர்த்தான், எங்கே தன்னை மீறி அவளை ஆண்டு விடுவோமோ என்று பயந்தான். செய்த தவறுகள் போதாதா? என்று அஞ்சி நின்றான்.
“புடவையைக் கட்ட எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” முந்தானையை அவன் கையிலேயே தந்துவிட்டாள்
நானா? விதிர்த்துப் போய், சேலை மறைக்காத தேகத்தைக் கண்டவனுக்கு, விழிகளை மூடவே முடியாமல் இமைக்கவும் முடியாமல் போனது. எச்சில் விழுங்கிவிட அவளையே வெறித்துப் பார்த்தவன் தலையை உலுக்கி அசைத்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயன்றான்.
கள்ளன் கையில் சாவியைக் கொடுத்தது போல ஆனது அவன் நிலை.
“ஒண்ணும் வேணாம் நீங்க கிளம்புங்க. என்னை விட்டுட்டு வாழப் பழகிட்டீங்க போல. அதான் எல்லாத்துக்கும் யோசிச்சுட்டே இருக்கீங்க. பொம்பளை நான் எவ்வளவுதான் இறங்கிப் போகட்டும். எங்கே வெளியே போய்த் தப்பு செய்யாத மனுசங்களை கைகாட்டுங்க. அப்போ ஒத்துக்கறேன் நீங்க தப்பு செஞ்சவர்ன்னு. அதான் செஞ்ச தப்பை உணர்ந்ட்டீங்க, என்கிட்டே மன்னிப்பும் கேட்டுத்தீங்க. அதுக்குப் பிறக்கும் அதையே பிடிச்சுத் தொங்கிட்டு இருந்தா நான் என்னதான் பண்ணட்டும்” ஆவேசமாக அவன் முன் நின்றாள் நளிரா.
“நேத்து நானாய் உங்களை அணுகினேன். இப்போ உங்க முன்ன இதோ இப்படி நிக்கறேன். கொஞ்சம் கூட ஆசை வரலையா” அவன் சட்டையை பிடிச்சு நன்றாக உரைக்கும் படி கேட்டாள் அவனிடம்.
“ஹனி!” அவள் கோபத்தில் தடுமாறி நின்றான் சிபின்.
“ஹனி! இதைக் கூப்பிடக் கூட இவ்வளவு நேரம் ஆச்சா” அவனிடம் சீறினாள் பெண் புலியாய்.
“நீதான அப்படிக் கூப்பிட வேண்டாம்னு சொன்ன?’ குற்றம் செய்த சிறுவனாக நின்றான் அவள் முன்பு.
“பிளீஸ் போதும். நடந்த எல்லாத்தையும் மறந்து வெளிய வாங்க. எனக்கு இனிமேல் இருக்க வாழ்க்கையை வாழனும்” கையெடுத்துக் கும்பிட்டவள் அவனிடம் கெஞ்சும் பார்வை பார்க்க.
அவளையே அசையாது பார்த்து நின்றான் சிபின்.
“நான் முதன் முதல்ல பார்த்த அந்த சிபின்தான் வேணுங்க. இந்த சிபின் வேண்டவே வேண்டாம். ஐ வான்ட் ரொமான்டிக் ஹீரோ. ஆன்ட்டி ஹீரோவும் வேணாம், இந்த சாப்ட் ஹீரோவும் வேணாம்” தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டே விட்டால், அவனின் அலப்பறை தாங்காமல்.
“எனக்குப் புடவை கட்டத் தெரியாதுடி. ஆனால் அவிழ்க்கத் தெரியும். அதான் என் பொண்டாட்டி அழகாய் சொல்லித் தந்திருக்காளே” முந்தானையை கையில் ஏந்தியவன் அதை அப்படியே சுருட்டிப் பிடித்து இழுத்தான்.
“காட்!” அதிர்ந்த விழிகளுடன் நின்றவளைப் பார்த்து கண் சிமிட்டியவன், “ஆரம்பிக்கலாமா?” வரவைத்துக் கொண்ட சிரிப்புடன் கேட்டான் அவளிடம்.
அவன் பார்வையும் சிரிப்பும் சொன்ன செய்தியில் கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள, புடவையை அள்ளி மார்போடு கட்டிக்கொண்டாள் பெண்.
“ஹேய் புடவையை கட்டிவிடறேன்னு சொன்னேன். ஈஸி” என்றவன் அவள் புடவையை அள்ளி கையில் வைத்திருக்கவும், கால்கள் தடுக்கி அவள் மீதே சரிந்தான்.
அவளை விழாமல் கையில் தாங்கி நின்றவனுக்கு இதற்கு மேலும் தன்னைக் கட்டுக்குள் வைக்க முடியாத நிலைதான்.
“ஐம் சாரி ஹனி” என்றவன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்திட, உலகம் மறந்திட ஒருவருக்கொருவர் பிரிவின் தவிப்பு போக, ஆவேசமாய் தழுவிக் கொண்டார்கள்.
ஒருவருக்கொருவர் சளைக்காது காதலைக் காட்டிட அறையை விட்டு வெளியே வரவே மனதில்லாமல் காதலில் மூழ்கிப் போனார்கள்.
வேந்தன், மனதில் காயம் கொடுத்தவனாக இருந்தாலும், நளிராவின் தன்னலமற்ற அன்பும், அவளாய் அவனை அரவணைத்து தரும் சின்னச்சின்ன முத்தங்களும் சிரிப்புகளும்
அவனைத் குற்றம் செய்த உணர்விலிருந்து மாற்றிக் கொண்டே இருந்தது.
யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவேயில்லை. டீபாய் மீது “நாங்கள் வெளியே செல்கிறோம். சாப்பாடு எடுத்து வச்சிருக்கோம். சாப்பிடவும்” என்று எழுதி வைத்துவிட்டு, மனோகரியின் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள்.
மிரா இன்னும் ஒருதடவை கூட அங்கே சென்றது இல்லையென்பதால், இன்றைய பொழுதை அங்கே கழித்திடக் கிளம்பிவிட்டார்கள் வீட்டினார்.