அத்தியாயம் 3
“ஏனாம்” என்ற அபிநயாவிடம், “தெரியவில்லை” என்ற பல்லவி, “சரி நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கூறி விட்டு திரும்பிட, “அப்போ சாம்பவியும், ஆண்ட்டியும் தான் உன்னை என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா பல்லவி. அவங்க சொன்னதால் தான் என்னை அவாய்ட் பண்ணுறியா?) என்றான் ராகவ்.
(ராகவ் நீங்க) என்ற பல்லவியிடம் , “கார் சாவியை மறந்துட்டேன் அது எடுக்க தான் வந்தேன்” என்றவன், “ஏன் ஆண்ட்டியும், சாம்பவியும் அப்படி சொன்னாங்க” என்றான் ராகவ்.
(அதை நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும் எனக்கு எப்படி தெரியும்) என்றவள் தன் வேலையை கவனிக்க, “அவங்க சொன்னது இருக்கட்டும் உனக்கு என் கிட்ட பேச என்ன தயக்கம்” என்றான் ராகவ்.
“ராகவ் இது வேலை செய்யும் இடம் என்னை என் வேலையை பார்க்க விடுறீங்களா ப்ளீஸ்” என்றாள் பல்லவி. “நீ பதில் சொல்லு உன் சித்தியும், தங்கச்சியும் சொன்னால் என்னை அவாய்ட் பண்ணிட்டு போய்ருவியா” என்றான் ராகவ்.
“பைத்தியமா ராகவ் நீங்க உங்க உட்பிக்கு நான் உங்க கூட நட்பா பழகுவது பிடிக்க வில்லை அப்படினா நான் ஒதுங்கி தான் போவேன்” என்று அழுத்தமாக கூறியவள் எழுந்து சென்று விட அவளை முறைத்து விட்டு சென்று விட்டான் ராகவ்.
“ஏன்டா கார் சாவியை எடுத்து வர இவ்வளவு நேரமா” என்ற ரஞ்சித்திடம், “பல்லவி என்னை அவாய்ட் பண்ணுற ரீசன் தெரிஞ்சுருச்சு. சாம்பவி தான் அவளை என் கிட்ட பேசக் கூடாது என்று சொல்லி இருக்கிறாள். ஆனால் ஏன்” என்றான் ராகவ்.
“ஒருவேளை நீ பல்லவி கிட்ட நட்பாக பழகி அந்த நட்பு அகைன் காதலா முடிந்து விட்டால் அதான்” என்று சிரித்தான் ரஞ்சித்.
“இதெல்லாம் ஒரு ரீசனா பல்லவியை நான் லவ் பண்றதா இருந்தால் என் என்கேஜ்மென்ட்டை ஏன் ஸ்டாப் பண்ண போறேன். எனக்கு அவளை லவ் பண்ணுற ஐடியா சுத்தமான இல்லை” என்றான் ராகவ்.
“அப்பறம் ஏன் அவள் உன் கிட்ட பேசவில்லை என்று துடிக்கிற” என்றான் ரஞ்சித். “ஸீ வாஸ் மை ஃப்ரெண்ட். அவளோட நட்பு எப்போதும் எனக்கு வேண்டும்” என்ற ராகவ்விடம், “அது உன் வாழ்க்கைக்கு நல்லதில்லை” என்று கூறிய ரஞ்சித், “உன் மேரேஜ்க்கு நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிடுவ தானே” என்றான் .
“கண்டிப்பா நம்ம பசங்க எல்லோரையும் கூப்பிடுவேன்” என்று கூறிய ராகவ் காரை இயக்கினான்.
“இவன் என்ன பைத்தியமா உன் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்கிறான் ஆனால் உன் கிட்ட பேசு பேசுன்னு தொங்கிட்டு இருக்கான்” என்றாள் அபிநயா.
அவள் சிரித்து விட்டு காஃபியை பருகிட, “உன் லைஃப்ல இந்த லவ் எல்லாம் வந்ததே இல்லையா பல்லவி” என்றாள் அபிநயா.
“வந்ததே இல்லை என்று சொல்ல முடியாது. ஒருத்தன் மேல இருந்துச்சு” என்று புன்னகைத்தாள் பல்லவி.
“யாரு அந்த லக்கி பாய்” என்ற அபியை பார்த்து புன்னகைத்தாள் பல்லவி.
“நான் தான் வேற யாரு திலீப் வர்மன் தான் சொல்லுங்க என்ன வேண்டும்” என்றான் கண்களில் கூலிங் கிளாஸை அணிந்து கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டு ஸ்டைலாக நடந்து வந்தான்.
“ராங்க் நம்பரா இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் டைம் ரைட் நம்பரா பார்த்து கால் பண்ணுங்க” என்றவன் தன்னுடைய மொபைல் ஃபோனை ஏரோப்ளேன் மோடில் போட்டு விட்டு அந்த விமானத்தில் ஏறினான். தன் இருக்கையில் அமர்ந்தவன் அந்த புகைப்படத்தை பார்த்தான். அமுல் பேபி உடலுடன், கொழு கொழு கன்னத்தில் தன் முட்டைக் கண்களை விரித்தபடி எதையோ வியந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் பத்தொன்பது வயது பல்லவி. “தக்காளி உன்னை பார்க்க தான் டீ வரேன்” என்று அவளது புகைப்படத்திற்கு முத்தமிட்டான் திலீப் வர்மன்.
“சொல்லு பல்லவி யாரு அவன்” என்று அபிநயா நச்சரிக்க, “சொல்றேன் டீ இன்னொரு நாள் இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கு வெட்டிக் கதை பேசி டைம் வேஸ்ட் பண்ண முடியாது” என்ற பல்லவி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஏன் டீ சஸ்பென்ஸ் வைக்கிற அளவுக்கு உன் லவ் ஸ்டோரி அவ்வளவு சூப்பரா இருக்குமா என்ன” என்றாள் அபிநயா. “அது வெட்டிக் கதைன்னு சொல்லிட்டேன் அப்பறம் என்ன விடு” என்றாள் கசந்த புன்னகையுடன்.
“என்ன பிரச்சினை சாம்பவி உனக்கு. ஏன் நீயும், ஆண்ட்டியும் பல்லவியை என் கூட பேசவே கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க” என்றான் ராகவ்.
“ஏன்னு கேட்டால் அவள் உங்களை விரும்புறாள் அதனால் தான்” என்ற சாம்பவி அவனை அணைத்துக் கொண்டாள். “எனக்கு உங்களை யார்கிட்டேயும் இழந்து விடக் கூடாது ராகவ். நான் உங்களை அவ்வளவு லவ் பண்றேன். நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம். அந்த பல்லவி உங்க கிட்ட பேசினால் எதாவது ஒரு சூழலில் உங்களை பேசியே மயக்கி என் கிட்ட இருந்து உங்களை பிரிச்சுட்டான்னா நான் செத்துருவேன்” என்றாள் சாம்பவி.
“என்ன சாம்பவி நீ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்ற ராகவ்விடம், “எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு ஆனால் அம்மா பயப்படுறாங்க பல்லவியை நிச்சயம் பண்ண வந்துட்டு என்னை பிடிச்சுருக்குன்னு சொன்னீங்களே அது போல நாளைக்கு திரும்பவும் பல்லவி பக்கம் சாய்ந்து விடுவீங்களோன்னு அதான்” என்று சாம்பவி கண் கலங்க பேசிட, “சரி ஓகே என்னால புரிஞ்சுக்க முடியுது” என்றான் ராகவ்.
“நீ எதையும் யோசிக்காமல் இரு நம்ம என்கேஜ்மென்ட் இன்விடேசன் எப்படி இருக்கு” என்று காட்டினான் ராகவ். “நல்லா இருக்கு ராகவ் இந்த டிசைன்” என்றாள் சாம்பவி.
“என்கேஜ்மென்ட்டுக்கு ஏன் இன்விடேசன் அடிக்க சொன்ன” என்ற ராகவ்விடம், “நம்ம லைஃப்ல நடக்கிற அதுவும் நம்ம கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லாமே கிராண்டா மெமரபிளா இருக்கனும்” என்றாள் சாம்பவி.
“ஏன் ராகவ் உங்களுக்கு பிடிக்கலையா?” என்ற சாம்பவியிடம், “பிடிக்காமல் தான் நீ சொன்னதும் இன்விடேசன் ப்ரிண்ட் பண்ண கொடுத்திருக்கேனா” என்ற ராகவ்விடம், “ஐ லவ் யூ சோ மச் ராகவ்” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள் சாம்பவி.
அவன் புன்னகைத்து விட்டு, “சரி கிளம்பலாம்” என்று அவளுடன் சென்றான். அவளை அவளது வீட்டில் இறக்கி விட்டவன் தன் வீட்டிற்கு சென்றான்.
“என்ன சாம்பவி கோபமா இருக்க” என்ற வைதேகியிடம், “எங்கே அந்த குண்டச்சி” என்றாள் சாம்பவி. “இன்னும் வரவில்லை” என்ற வைதேகியிடம், “உங்க புருஷன் வீட்டில் இருக்காரா?” என்றாள்.
“என்ன டீ இது வாய் நீளுது என் புருஷனா அவர் உன் அப்பா” என்ற வைதேகி , “மரியாதையா பேசு பழகு” என்றார். “அவரு அந்த குண்டச்சிக்கு தான் அப்பா. அப்படி தானே நடந்துக்கிறாரு என்ற சாம்பவி எங்கே அவரு” என்றாள்.
“உன் நிச்சயதார்த்தம் பற்றி சொல்ல அவங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காரு நாளைக்கு தான் வருவாரு” என்றார் வைதேகி. “நீங்க போகலையா?” என்று சாம்பவி கேட்டிட, “உன் அத்தை பற்றி உனக்கு தெரியாதா பல்லவி இருக்கும் போது ஏன் சின்னவளுக்கு கல்யாணத்தை பேசி இருக்கீங்க, உன் பொண்டாட்டி மாற்றாந்தாய் கொடுமை பண்ணுறாள் அது இதுன்னு ஆரம்பிக்கும் அதான் வரலைன்னு சொல்லிட்டேன்” என்றார் வைதேகி.
“நல்லது தான் இன்னைக்கு இருக்கு உங்க புருஷனோட சீமந்தபுத்ரிக்கு” என்று பற்களைக் கடித்தாள் சாம்பவி.
“அவளை என்னடீ பண்ண போற” என்ற வைதேகியிடம், “வரட்டும் அவள்” என்று கடுப்புடன் அமர்ந்திருந்தாள் சாம்பவி.
“என்ன பல்லவி வீட்டுக்கு போகலையா?” என்று கேட்டாள் அபிநயா. “நீ கிளம்பு அபி நான் போக நேரம் ஆகும் கொஞ்சம் வொர்க் இருக்கு” என்று அவள் கூறிட, “சரிப்பா சீக்கிரம் வீட்டுக்கு போ” என்று கூறி விட்டு அபிநயா சென்று விட்டாள்.
பல்லவிக்கு ஏனோ இன்று வீட்டிற்கு செல்ல மனமே இல்லை. தந்தை வீட்டில் இல்லாத நாள். போதாக்குறைக்கு ராகவ் வேறு சாம்பவியிடம் ஏன் பல்லவியை என் கூட பேசக் கூடாது என்று சொன்ன என்றும் கேட்டிருப்பான். தங்கையும், சித்தியும் அவளை என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அவளுக்கு தெரியாதா என்ன அதனால் அவள் வீட்டிற்கு செல்லாமல் தனது அலுவலகத்திலேயே இருந்து விட முடிவு செய்தாள்.
“ருக்மணி கார்ட்ஸ்” என்று பலகை பொருத்தப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் மட்டும் திடீரென பவர்கட் ஆனது.
“அச்சோ இது வேறையா” என்று நினைத்துக் கொண்ட பல்லவி மெழுகுவர்த்தியை தேடிக் கொண்டு இருந்தாள். “கடவுளே நேரங் கெட்ட நேரத்தில் கரண்ட் வேற போயி அட ராமா ஃபோன் வேற சார்ஜ் இல்லாமல் செத்துப் போச்சு” என்று நொந்து கொண்டாள் பல்லவி.
“என்ன சொல்லுற வாசு பல்லவிக்கு கல்யாணம் முடிக்காமல் சாம்பவிக்கு என்ன அவசரம்” என்றார் செல்வராணி. “என்ன பண்ண சொல்லுற அக்கா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வில்லை என்றால் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுவேன் என்று மிரட்டுகிறாள். அவளுக்கு வைதேகியும் ஒத்து ஊதுறா என்னை என்ன பண்ண சொல்லுற பல்லவியை அவள் பேசுற பேச்சு தாங்க முடியாமல் தான் இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணுறேன்” என்றார் வாசுதேவன்.
“தாயில்லா பொண்ணு அவளுக்கு அவள் அம்மா தான் தெய்வமா நின்று நல்லதை நடத்தி வைக்கனும். எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் என் தம்பி மகளை என் வீட்டுக்கு விளக்கேத்த அழைச்சிட்டு வந்திருப்பேன். என்ன செய்ய ஆண்டவன் எனக்கு ஆண் பிள்ளையை கொடுக்கவில்லையே” என்று வருந்தினார் செல்வராணி.
“விடுக்கா அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்கப் போகிறான்” என்று வாசுதேவன் கூறிட அவளுக்காக பிறந்தவன் வந்த விமானம் மெல்ல தரையிறங்கியது.
“அச்சச்சோ இந்த ஏரியாவில் அடிக்கடி திருட்டு நடக்குமே அதை மறந்துட்டு நான் வேறு தனியா இருக்கேனே” என்று நினைத்த பல்லவி , “சரி சித்தியும், சாம்பவியும் சண்டை போட்டாலும் பரவாயில்லை இங்கே இருந்து போயிடலாம்” என்று அவள் நினைத்துக் கொண்டு இருந்த போது சரியாக
அந்த கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி சில உருவங்கள் குதித்தன.
(…. அடியே..)