33. காதலோ துளி விஷம்

4.7
(107)

‌விஷம் – 33

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாழவனுக்கு அலைபேசியின் சிணுங்கல் சற்றே எரிச்சலை மூட்டியது.

இந்தக் காலை நேரத்தில் யார் அழைப்பது என எண்ணியவாறு தன்னுடைய ஃபோனை எடுத்தவன் கிளாராவின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டு தன் புருவங்களைச் சுருக்கினான்.

முடிந்து போன அத்தியாயங்கள் மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் திறப்பதை அவன் சிறிதும் விரும்பவில்லை.

இப்போதுதான் அர்ச்சனாவின் மனம் மாறி வருகின்றது என்பதை நன்கு உணர்ந்தவன் கிளாராவின் அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் படுக்கையில் படுத்து விழிகளை மூட முயன்ற கணம் மீண்டும் கிளாராவிடமிருந்து அழைப்பு வந்தது.

எரிச்சலாக இருந்தாலும் சில நொடிகள் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி விட்டு படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் அவளுடைய அலைபேசி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

அக்கணம் சற்று தள்ளி இருந்த சிறிய மேஜையில் காபி இருப்பதைக் கண்டதும் தனக்காக அர்ச்சனா தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து புன்னகை புரிந்தவாறு நடந்து சென்று அதைத் தன் கையில் எடுத்தவன்,

“என்ன விஷயம் கிளாரா..? எதுக்கு கால் பண்ண..?” எனக் கேட்டான்.

“எப்படி இருக்க டார்லிங்..?”

“நான் எப்படி இருந்தாலும் இப்போ உன்னோட டார்லிங்கா இல்லை..” என்றான் அவன் சிரித்தவாறு.

“தெரியும்.. நீ கல்யாணம் பண்ணிட்டேன்னு எனக்கு நேத்துதான் தெரியும்..” என சோகமான குரலில் கூறினாள் கிளாரா.

“சோ எனக்கு விஷ் பண்றதுக்காகத்தான் கால் பண்ணியா..?” எனக் கேட்டான் அவன்.

“விஷ் பண்றதா..? உனக்கா நோ வே.. நீ என்னத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்… பட் இந்தியால இருந்து கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு கூட வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல டார்லிங்..”

“ஸீ கிளாரா… உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் உனக்கு எந்த விதமான ப்ராமிஸும் பண்ணல.. எனக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஆல்ரெடி உன்கிட்ட சொல்லிதானே இருந்தேன்…”

“எஸ்… முன்னாடி நீ சொன்னதெல்லாம் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு… ஆனா இப்போ நான் பிரக்னண்டா இருக்கேன்.. உன்னோட பேபி என்னோட வயித்துல வந்து நாலு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு.. நான் பிரக்னன்ட்டா இருக்கிறது தெரிஞ்சா நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சேன்.. உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..” என கிளாரா அவனுடைய தலையில் இடியை இறக்கிக் கொண்டே போக அவன் கரத்தில் இருந்த காபிக் அப்போ தரையில் விழுந்து உடைந்து சிதறியது.

“வாட் த ஹெல்..? இது எப்படி பாஸிபிள் கிளாரா..? வீ வேர் கேர்ஃபுல் ரைட்..?”

“நானும் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன்.. பட் தட் டே.. ஐ ஃபார்கெட் டு டேக் தி பில்..” என அலட்சியமான குரலில் கூறினாள் கிளாரா.

“வாட்..? யு ஃபார்கெட்..? ஹவ் த ஹெல் குல்ட் யு ஃபார்கெட் கிளாரா..? நமக்குள்ள எல்லாமே எப்பவோ முடிஞ்சு போச்சு.. இப்போ வந்து இப்படி சொன்னா என்ன அர்த்தம்..? பேபிஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கவே கூடாதுன்னுதானே நான் ஆல்ரெடி உன்கிட்ட சொல்லி இருந்தேன்..”

“சாரி.. இத பத்தி எனக்கே தெரியாது டார்லிங்.. ப்ராமிஸ்ஸா தெரியாது.. நான் பிரக்னண்டா இருக்கேன்னு லாஸ்ட் வீக்தான் எனக்கே தெரிஞ்சுது.. இப்போ நான் இன்னொரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்.. நீ என்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா இப்பவே அந்த ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிட்டு உன்கிட்டயே வந்துடுவேன்.. உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னா நான் இந்த ரிலேஷன்ஷிப்பை இப்படியே கண்டினியூ பண்ணுவேன்..”. என்றாள் அவள்.

அவன் இல்லை என்றால் இவன்.. இவன் இல்லை என்றால் அவன் என அவள் முடிவெடுப்பது அவனுக்கு அந்த நிலையில் கூட சிரிப்பை வர வைத்தது.

“வெல்… வாட் அபௌட் பேபி..?” எனக் கேட்டான் அவன்.

“பேபியை இனி அபார்ட் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. ஆல்ரெடி நான் மூணு தடவை அபார்ஷன் பண்ணி இருக்கேன்.. இனியும் பண்ணினா என்னோட உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லிட்டாரு.. நான் உன்னோட குழந்தையை பெத்துதான் ஆகணும்..” என்றாள் அவள்.

அவளுக்கு மூன்று தடவை அபார்ஷன் ஆகி இருக்கின்றது என அறிந்ததும் அதிர்ந்தான் அவன்.

இதைப் பற்றி எதுவுமே அறியாது எப்படி இவளுடன் நெருங்கிப் பழகினேன் என்ற எண்ணம்தான் அவனுக்குள் எழுந்தது.

ஆறு மாத பழக்கம்தான் கிளாராவுடன் அவனுக்கு இருந்தது.

அதற்கு முன் அவள் மூன்று முறை அபார்ஷன் செய்திருக்கிறாள் என்றால் எத்தனை நபர்களுடன் பழகி இருப்பாள் என எண்ணி தன் நெற்றியை அழுத்தமாக வருடிக் கொண்டவன்,

“வாட்… மூணு முறை அபார்ஷன் பண்ணி இருக்கியா..? பட் நீ இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே..” சற்று அழுத்தமான குரலில் கேட்டான் அவன்.

“என்ன பேசுற டார்லிங்..? திஸ் இஸ் அவர் கல்ச்சர்… இங்க இதெல்லாம் சிம்பிள்.. நான் எப்படி வாழ்ந்தேன்னு நீ கேட்கவே இல்லையே.. மே பி நீ கேட்டிருந்தா என்ன பத்தி சொல்லி இருப்பேன்..” என அவள் கூறியதும் அவனுக்கோ சட்டென முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.

இதே வார்த்தைகளைத் தானே அவனும் அர்ச்சனாவிடம் கூறியிருந்தான்.

அவனைப் பற்றி அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவள் கேட்கவில்லையே அவள் கேட்டிருந்தால் அனைத்தையும் கூறியிருப்பேனே என மிகவும் இயல்பாக அவளிடம் பதில் கூறியிருந்த தன்னுடைய வார்த்தைகளை மீண்டும் மீட்டிப் பார்த்தவனுக்கு சாட்டையால் அடித்தது போல இருந்தது.

கிளாரா தனக்கு முன் வேறொருவருடன் தொடர்பு வைத்துள்ளதையும் அவள் கருவை மூன்று முறை அழித்ததையும் தன்னிடம் கூறி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அவன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும் அர்ச்சனாவிடம் கூறி இருக்க வேண்டும் அல்லவா..?

மற்றவருக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா..?

அக்கணம் தெள்ளத்தெளிவாக அவனால் அர்ச்சனாவின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தக் கலாச்சாரத்தில் ஊறி இங்கேயே வளர்ந்த அவனுக்கே கிளாராவின் இச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கும்போது இந்திய கலாச்சாரத்தில் பல கட்டுப்பாடுகளுடன் வளர்ந்த அர்ச்சுனாவுக்கு தன்னை ஏற்றுக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பது நன்றாகவே புரிந்தது.

“ஹலோ.. ஆர் யு தேர்…?” எனக் கேட்டாள் கிளாரா.

“எஸ்..” என்றான் அவன்.

“உன்னோட குழந்தைய அபார்ட் பண்ண முடியாதுன்னு சொன்னேன்..” என்றாள் அவள்.

உன்னோட குழந்தை என அவள் கூறிய வார்த்தைகளில் அவனுக்கோ இதயம் நடுங்கி விட்டது.

“லிசன் கிளாரா.. என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது.. உன்ன மட்டும் இல்ல இனி எந்த பொண்ணு கூடவும் என்னால ரிலேஷன்ஷிப் வெச்சுக்க முடியாது..”

“பட் வை..?”

“ஏன்னா நான் இப்போ கல்யாணம் பண்ணிட்டேன்.. என்னோட வைஃப்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்.. அவ உன்ன மாதிரியோ என்னை மாதிரியோ கிடையாது கிளாரா.. அவ ரொம்ப சென்சிடிவ்.. என்னோட பாஸ்ட் லைஃப்ப அவளால ஏத்துக்க முடியல.. இப்போதான் எல்லா பிரச்சினையும் சரி பண்ணிட்டே வரேன்.. இந்த டைம்ல உன் கூட என்னால ரீஜாயின் ஆகவே முடியாது சாரி..”

“வாட்..? ஆர் யூ சீரியஸ்..? நீ இப்படி இல்லையே டார்லிங்.. நம்ம ஊர்ல கல்யாணம் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது.. ஈசியா டைவோர்ஸ் பண்ணிட்டு மூவ் ஆன் ஆகிடலாமே.. உன்னோட கடந்த காலத்தைப் பிடிக்காத பொண்ணுகிட்ட எதுக்கு நீ போராடணும்..? நீ யாருக்காகவும் உன்னை மாத்திக்க மாட்டியே டார்லிங்.. இப்போ என்ன ஆச்சு..?”

“பிகாஸ் ஐ லவ் ஹெர்..” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.

“நாமளும்தான் லவ் பண்ணினோம்.. லவ்வர்ஸ் பிரியறதுக்காகத்தானே பிரேக்அப்னு ஒன்னு இருக்கு..” என்றாள் அவள் சிரித்தபடி.

“வாட் நாம லவ் பண்ணோமா..? நோ.. நமக்கு இடையே இருந்தது லவ் கிடையாது.. அது வெறும் லஸ்ட் மட்டும்தான்.. காதல்னா ஒருத்தருக்காக ஒருத்தர் வாழ்றது.. அவங்களுக்காக உயிரையே கொடுக்கிறது.. அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா எப்பவுமே அவங்களுக்கு துணையாக நிற்கிறது.. இதுதான் காதல்..

அந்தக் காதல் வந்துச்சுன்னா நாம அப்படியே மாறிடுவோம்.. யாருக்காகவும் நம்மளை மாத்திக்காத நாம அந்த காதலுக்காக எப்படி வேணும்னாலும் மாறுவோம்.. நானும் மாறிட்டேன்… என்னோட அர்ச்சனாக்காக நான் மாறிட்டேன்..” என உணர்ந்து கூறினான் அவன்.

அவளுக்குத்தான் அவனுடைய பேச்சு முட்டாள்தனமாக தெரிந்தது.

“இட்ஸ் ஓகே ஃபைன்.. அப்படின்னா குழந்தையை பெத்து உன் கிட்டயே கொடுத்துடுறேன்.. நீயே அதை பாத்துக்கோ.. உன் குழந்தையை பெத்து அதை பார்த்துக்கிறதுக்காக என்னோட மொத்த வாழ்க்கையையும் வீணாக்க என்னால முடியாது யாழ்..” என்றாள் அவள்.

“வெல் கிளாரா.. இன்னைக்கு ஈவினிங் நான் சொல்ற ஹாஸ்பிடல் வந்துடு.. டெஸ்ட் பண்ணி பார்த்து அது என்னோட குழந்தைதானான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்..”

“நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறியா..?”

“நாட் லைக் தட் கிளாரா.. ஒரு பொறுப்பை ஏத்துக்க முன்னாடி அத பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கறதுதான் நல்லது.. இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணலாம் பை..” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு இறுகிப் போய் நிற்க,

அப்போதுதான் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் அர்ச்சனா.

அவளோ என்ன நடந்தது எனக் கேட்டுவிட இருந்த மனக்குழப்பத்தில் கிளாராவின் விடயத்தை அவளிடம் அப்படியே போட்டு உடைத்தவன் அவளுடைய கரத்தில் இருந்த ஏதோ ஒன்று கீழே விழுந்த சத்தத்தில்தான் சுயம் அடைந்தான்.

அவளோ இடிந்து போய் நின்ற விதத்தைக் கண்டதும் அவனுக்கோ உள்ளம் நொறுங்கியே போனது.

“பேபி நீ எதுக்கும் கவலைப்படாத, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. ட்ரஸ்ட் மீ..” என்றான் வேதனை மிகுந்த குரலில்.

அவளுக்குத்தான் அவளுடைய உயிர் சில நொடிகளுக்கு முன்னரே அவளை விட்டு போய்விட்டதே..

அவள் அப்படியே உறைந்து நிற்க அவளின் நிலையைக் காண முடியாது துடித்தவன் அப்போதுதான் தரையில் விழுந்து இருந்த பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை விழி விரித்துப் பார்த்தான்.

கரங்கள் நடுங்க அதனைத் தன் கையில் எடுத்தவனுக்கு அதில் தெரிந்த இரு கோடுகளும் தன்னவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை உறுதி செய்ய அவனுடைய விழி நீர் சரேலென வழிந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 107

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!