தேவை எல்லாம் தேவதையே…

4.7
(39)

தேவதை 13

 

ஜெய் தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென வசி வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு போட்டின் ஓரத்திற்கு ஓடினான்….

தர்ஷியும், ஜெய்யும் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருக்க,, வலையை கடலில் போட்டுக்கொண்டிருந்த தேவா அதை அப்படியே விட்டுவிட்டு வசியின் அருகில் செல்லவதற்குள்..

வசி உஹ் உஹ் என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்குறேன் பேர்வெழி என தலை குப்புற கடலுக்குள் விழப் பார்க்க தேவா தான் ஓடி சென்று அவனை பிடித்தான்….

வசியின் தலையை பிடித்துக் கொள்ளவும், வாமிட் செய்து முடித்த பின் தேவா அவனின் நெஞ்சை தடவி விட.. மற்ற இருவரும் வேடிக்கை பார்த்தப் படி, உட்காந்த இடத்தை விட்டு நகராமல் கம் போட்டது போல் அமர்ந்திருந்தனர்….

சப்பை அவர்கள் அருகில் வந்து தண்ணீர் பாட்டிலை கொடுத்தவன், கூடவே ஒரு எலுமிச்சை பழத்தையும் அவன் கையில் திணித்து, இந்தாங்க இத மூக்குல வச்சி முகர்ந்து பார்த்துக்கிட்டே வாங்க.. திரும்ப வாந்தி வாராதுண்ணோவ்….என்றதும்

வசி சரி என வாங்கிக் கொண்டவன் சோர்ந்து காணப்பட்டான்…

ஏன் சீனியர் உங்களுக்கு தான் இந்த கடல் போட்டிங் ஒத்துக்கலையே அப்புறம் ஏன் வந்திங்க? என்றாள் தர்ஷினி

நா முன்ன பின்ன போயிருந்தா தான தெரியும் எனக்கே இதான் முதல் முறை பயணம்…

சப்பை வசியிடம் எண்ணோவ் நா மீன அலசிட்டேன், இப்ப மசாலா போட்டு வறுக்க போறேன்.. அந்த மீன் வாசனையில உங்களுக்கு துளி கூட குமட்டுற பீலிங் வராது பாருங்க… என்றவன் மீனில் மசாலாவை தடவி, சிறிய அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மீனை போட, உண்மையாகவே அதன் கமகம வாசனை நாசித்துளையில் சென்று நாவில் எச்சிலை ஊற வைத்தது அவர்களுக்கு….

சப்பை மீனை நன்கு வறுத்து எடுத்து, முதலில் வசிக்கு தான் சிறிய தட்டில் வைத்துக் கொடுத்தான்… அதைப் பார்த்ததும் கண்கள் மின்ன வாவ் வாவ் டெலிசியஸ் கலர்புல் என்றவன் ஒரு வாய் எடுத்து வைக்க,, ருசியில் அப்படியே மெய் மறந்து தான் போனான்…

ஜெய் சப்பையை திரும்பி முறைத்து, அவன் காதருகில் எங்கள பாத்தா மனுஷனா தெரியலையா! முதல்ல அவனுக்கு வச்சி குடுக்குற.. நீ எனக்கு பிரெண்டா அவனுக்கு பிரெண்டா டா… என பல்லைக் கடிக்கவும்

ஏலே ஜெய்யு நாம தினமும் இந்த மீன தான சாப்பிடுறோம், அந்த பையன் சாப்பிடுற அழக பாரு.. பாவம் நல்லா சாப்பிடட்டும் என்றவன் அடுத்த மீனையும் வறுத்து எடுத்து வசியிடம் கொடுக்க அதையும் சப்புக் கொட்டி வாங்கிக்கொண்டான் வசி… ஜெய்க்கு சகலமும் பற்றி எரிய, தர்ஷினி வாயில் எச்சில் ஊற அமர்ந்திருந்தாள்…

அவளின் முக மாற்றத்தை கவனித்த தேவா சிரித்தப் படி ஒரு தட்டை எடுத்து கலா செய்துகொடுத்த சாதம், சிக்கன் கிரேவியை தட்டில் போட்டு, ஒரு மீனையும் வறுத்து அதையும் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டவன் தர்ஷி அருகில் சென்று அமர்ந்தான்..

சாதத்தில் சிக்கன் கிரேவியை வைத்து பிசைந்தவன் வண்டு இந்தா ஆஹ் காட்டு என அவள் வாயருகில் எடுத்து செல்ல, தர்ஷியும் வாங்கிக் கொண்டாள்…

ஹம்ம்ம் செம டேஸ்ட் டா.. மீனையும் முள்ளு இல்லாம ஊட்டி விடு என்றதும் தேவா புன்னகைத்தப் படியே ஊட்டி விட்டான்…

என்ன டா ஆளாளுக்கு சாப்பிட போய்ட்டீங்க, இதுக்கு பிறகு சரிப்படாது, நானே எனக்கு போட்டு சாப்பிட்டுக்கிறேன்.. தள்ளு டா என சப்பையை தள்ளியவன், மீனை சட்டியில் போட்டு வறுக்க ஆரம்பித்தான்…

தேவா தர்ஷி க்கு ஊட்டுவதை கண்ட வசி, டேய் என்னடா அவளுக்கு மட்டும் ஸ்பெஷலா தர.. எனக்கு ஒரு வாய் குடு என கையை நீட்டவும், தேவா வேணாம் சீனியர் இது எச்சில்,, நா உங்களுக்கு ஒரு தட்டுல சாப்பாடு வச்சி கொண்டு வரேன் இருங்க என்றவன் எழுந்து சென்று தட்டில் சாதமும், சிக்கன் கிரேவியும் வைத்துக் கொடுக்க.. அதை ஆசையாய் வாங்கிய வசி ஒரு வாய் எடுத்து வாயில் வைக்கவும், ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளி விட்டான்….

தேவாவிற்கு அவனின் எளிமை குணம் மிகவும் பிடித்துப் போனது.. ஜெய்க்கு தான் கடுப்பாய் இருந்தது…

இவன் தர்ஷி விஷயத்துல தான் தேவாக்கு டஃப் குடுக்குறான்னு பாத்தா, சாப்பாட்டு விஷயத்துலயும் எனக்கே டஃப் குடுப்பான் போல… விட கூடாது ஜெய் சாப்பாடு தான் முக்கியம் அதுல கை வச்சா பொங்கி எழுந்திரனும் என எண்ணியவாறு மீனை வறுத்து எடுத்தவன் தட்டில் போட்டு கொண்டு வசி அருகில் சென்று அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்..

     வசி தேவாவிடம் கொஞ்சம் சிக்கன் கிரேவி வை என கேட்டு வாங்கிக்கொண்டவன், உங்க அம்மா கிட்ட சொல்லிரு ரொம்ப நல்லா சமைக்குறாங்க.. ஹியர் ஆப்ட்டர் சமைக்கிறப்ப முடிஞ்சா எனக்கும் கொண்டு வா,, நீ ரொம்ப லக்கி தெரியுமா? உங்கம்மா சாப்பாட சாப்பிட என்றப்படி ஒரு பிடி சாதம் எடுத்து வாயில் வைத்தான்…

      தேவா சரி சீனியர் என புன்னகைக்க.. ஜெய் தான் சிறிது நக்கலுடன் ஏன் ப்ரோ உங்க வீட்ல உங்கம்மா செய்ற சாப்பாடு நல்லா இருக்காதா? ரொம்ப மோசமோ என கலாய்க்க…

ஹ்ம்ம் எங்க அம்மா சமைச்சத சாப்டா தான! என அசால்ட்டாக சொல்லவும்

மூன்று பேரும் அவன் முகத்தைப் பார்த்து, புரியல… நீங்க என்ன சொல்றீங்க? உங்க அம்மா சமைச்சி இது வரை சாப்பிட்டதே இல்லையா? வேற எப்புடி சாப்பிடுவீங்க! என தர்ஷினி ஆர்வமாய் கேட்டாள்…

ஹ்ம்ம் எங்க அம்மா நா சின்ன புள்ளையா இருக்கும் போதே இறந்துட்டாங்க… அவங்க முகம் கூட எனக்கு எப்படி இருக்கும்னு தெர்ல.. என சாதாரணமாக சொல்லிவிட்டு எழுந்து சென்று கை கழுவ… மூவரும் ஒருவரை ஒருவர் திகைப்பாக பார்த்துக்கொண்டனர்..

தேவாவிற்கு பாவமாய் இருக்கவும், ஜெய்யிக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது…

சாரி சீனியர் என தேவா சொல்ல…

ச ச அதெல்லாம் ஏதும் யோசிக்காதீங்க… எப்பவோ நடந்தது நாம என்ன பண்ண முடியும்… என்றவன் வலையில் சிக்கிய மீனை சப்பை ஒரு பெட்டியில் போட அதை ஆர்வத்துடன் பார்க்க சென்று விட்டான்…

அன்றைய நாள் 4 பேருக்கும் கலகலப்பாக சென்றது.. தர்ஷினி நன்றாக வசியுடன் ஒன்றி விட்டாள்.. இருவரும் சந்தோசமாக சிரித்து பேசுவதை பார்க்க, தேவாவிற்கு ஏக்கமாக இருந்தாலும் வசியின் மீது கழிவிரக்கம் பிறந்ததால் அவன் மீது கோவப்பட முடியவில்லை…

பொழுது சாயும் முன் கரைக்கு வந்திறங்கியவர்கள்..  அவர் அவர் வீட்டிற்கு செல்ல முனையவும் ,, ஜெய் தன் வண்டியில் சப்பையை ஏற்றிக் கொண்டு செல்ல, எப்போதும் தேவாவுடன் தர்ஷினி ஏறிக் கொண்டாள்..

வசி தேவாவிடம் சரி டா நா கிளம்புறேன்.. எப்பலாம் நீங்க போட்டிங் போறீங்களோ! எனக்கு சொல்லுங்க நானும் வரேன் என்றதும், தேவாவும் சரி என தலையாட்ட,

பை டா, பை தர்ஷி அப்புறம் தேங்க்ஸ் என்றவன் தனது காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்…

தர்ஷினிக்கு ஏனோ வசியின் நினைவாக இருக்கவே, அதை தேவாவிடமும் சொல்லி அவன் மனதை மேலும் நோகடித்தாள் அவன் தேவதை….

டேய் தேவா….

சொல்லு டி வண்டு…

எனக்கு ஏன்டா வசி நெனப்பாவே இருக்கு.. என்றதும் தேவாவிற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது… பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வண்டி ஓட்ட… அவன் தோளில் தன் தாடையை வைத்தவள், என்னடா எதுமே சொல்ல மாட்டுற., என சிணுங்க

என்ன சொல்ல சொல்ற? அவன் நியாபகமா இருக்குன்னா, ஒரு வேள அவனுக்கு அம்மா இல்லனு சொன்னான்ல அதுனால கூட இருக்கலாம் என சமாளித்து வைத்தான்… வேற ஏதும் சொல்லிடாத டி நான் தாங்க மாட்டேன் என எண்ணி கண்ணாடி வழியே அவள் முகம் பார்க்க…

அவள் கண்கள் மூடி அரை தூக்கத்திற்கு சென்றிருந்தாள்….வண்டியில் செல்வதால் காற்றில் கண்கள் சொக்க அவன் தோளில் முகம் தலை சாய்த்து கண்ணே அசந்து விட்டாள் போலும்….

அவனின் முதுகில் தர்ஷி தூக்கத்தில் நன்றாக சாய்ந்து இருக்கவும், தேவாவிற்கு கூச்சமாக இருந்தது… வண்டியை ஓரமாக நிறுத்தியவன், அடியே கும்பகர்ணி, எழுந்திரு டி.. கீழ விழுந்துட போற…

ப்ளீஸ் டா கண்ணு சொக்குது டா ஒரு 10 மின்ஸ் டா என கெஞ்சவும்,.

அரைவேக்காடு இப்டியே போனா யாரும் பாத்தா ஏதும் சொல்லுவாங்க டி.. கொஞ்ச நேரம் வீட்டுக்கு போய் தூங்கேன்..

அவளிடம் பதில் இல்லை… ஆழ்ந்த சீரான மூச்சிக் காற்று மட்டுமே இருக்க.. அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்து புன்னகைத்தவன், என் தேவதை டி நீ.. என கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்திற்கு முத்தமிட்டான்…

அவள் இரு கைகளையும் தன் இடுப்பின் வழியாக இழுத்து நன்றாக பிடித்துக் கொண்டவன்… அவளின் உள்ளங்கையில் மெதுவாக உதடுகள் உரச முத்தமிட்டான்… அதற்குள் அவன் இதயமே வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு பயம் ஆட்கொள்ள.. அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டான்…

பால் வடியும் முகமும், மாதுளை நிற உதடுகளும் அவனை கொஞ்ச சொல்லி கெஞ்ச… கொல்ற டி என் அழகி என கொஞ்சினான்…

இப்டியே இரு டி என்ன விட்டு மட்டும் விலகிடாத, இந்த நெருக்கம் மட்டும் போதும்.. என் கண் காணும் தொலைவில் நீ இருந்தால் மட்டும் போதும் உனக்கும் சேர்த்து நானே காதலித்துக் கொள்கிறேன்!  என மனதில் அவளை நினைத்து எண்ணங்களை படர விட… இமைக்காமல் அவள் முகம் பார்த்தான்…

 

எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…

காதலை நான் உணர்ந்தேன்…

நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…

சட்டென்று நான் விழுந்தேன்…

என்ற பாடல் வரிகளை முனுமுனுத்தப் படி காதலோடு அவள் முகம் பார்க்க…

ஒரு 15 நிமிடம் கழித்து கண் விழித்தது அவன் தேவதை.. எழுந்ததும் முதலில் தேவா தன்னை கண்ணாடி வழியாக பார்ப்பதை தான் பார்த்தாள்.. பின் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தவள், அப்போது தான் அவன் இடுப்பை சுற்றி தன் கையால் அணைத்திருப்பதையும், அவன் மேல் மொத்தமாக சாய்ந்து இருப்பதையும் அறிந்தவள், திட்டுக்கிட்டு அவனிடமிருந்து விலகி அமர்ந்துக் கொண்டாள்..

தேவா அவள் முகம் சிவந்து இருப்பதை பார்த்தவன், அவளிடம் ஏதும் பேசாமல் வண்டியை எடுத்திருந்தான்..

முத்தம் குடுத்தத கண்டு பிடிச்சிருப்பாளோ! ச ச் ச இருக்காது.. அப்டினா உடனே ரியாக்ஷன் குடுத்திருப்பா.. இப்ப அவ என் இடுப்ப புடிச்சிருந்ததால கூச்சத்துல தான் கன்னம் சிவந்து பேசாம அமைதியா இருக்கணும் என சரியாக கணித்திருந்தான்..

தர்ஷினி வீடு வந்ததும், தேவாவின் முகம் கூட பார்க்க கூச்சப் பட்டு வீட்டிற்குள் ஓட.. தேவாவிற்கு தான் சிரிப்பாய் வந்தது…

ஓஹ் மேடம்க்கு கூச்சம் கூட வருமா என நினைத்து வண்டியை எடுத்திருந்தான்…

 

 

படிச்சி பாத்துட்டு உங்களுக்கு புடிச்சிருந்தா, மறக்காம ஸ்டார்ஸ் குடுங்க டியர்ஸ் 🥰🥰🥰🙏🙏🙏

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!