தேவை எல்லாம் தேவதையே…..

5
(17)

தேவதை        வண்டு வா டி எக்ஸாம்க்கு டைம் ஆகிருச்சு என வாசலில் பைக்கை முறுக்கி கொண்டு தேவா கத்தவும், வந்துட்டேன் டா என கத்திக் கொண்டே ஓடி வந்தாள் தர்ஷி…      மாதுளை நிற சுடிதாரில் மிக அழகாக இருந்தாள் அவன் தேவதை.. காதல் பித்து தலைக்கேற சற்று தடுமாறி தான் போனான்..தேவாவின் தோளில் கைவைத்து பின்னால் ஏறி அமர்ந்துக் கொள்ளவும்.. சைடு மிர்ரர் வழியாக அவள் முகம் பார்த்து சைட் அடித்தவன்…என்னடி படிச்சிட்டியா? என கேட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்..       படிச்சேன் டா என்றவள் தன் கையில் உள்ளதை எடுத்து அவன் வாயில் திணிக்க.. அவன் உதட்டில் இவள்  மென் பிஞ்சு விரல் பட்டதும் பட்டும் படாமல் இதழ் உரசி முத்தமிட அவளுக்கு வண்டியில் செல்வதால் ஒன்றும் தெரியவில்லை… 

      என்னடி இது டேஸ்ட் நல்லாருக்கு.. என அவள் விரலை சொல்ல… 

        தேங்காய் முட்டாய் டா.. சாப்பிடு என அவளும் வாயில் திணித்துக் கொண்டு, மீண்டும் மாற்றொன்றை எடுத்து அவன் வாயில் திணிக்கவும், புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.. 

        என்ன மேடம் இன்னைக்கு செம க்யூட்டா வந்திருக்கிங்க? குறும்பு மின்ன கேட்க…

     ரொம்ப கிண்டல் பண்ணாத டா.. எனக்கு என்ன டா குறைச்சல் நல்லா தானே இருக்கேன்.. வசி நேத்து நைட் கூட என்ன எப்படி தெரியுமா வர்ணிச்சான் என்றதும் தேவா மனதிற்குள் புழுவாய் துடித்து போனான்..

       எத்தனையோ முறை அவள் அழகை வர்ணித்து கூறியிருக்கிறான்… அவள் தான் தன்னை கிண்டல் செய்கிறான் என நினைத்துக்கொள்வாள்.. வசி சொல்லும் போது சந்தோஷப்படுபவள், உண்மை என நம்புவள், தான் சொல்வது மட்டும் எதற்கு கிண்டலாக தெரிய வேண்டும்.. அப்போது என்னையும் அவனையும் அவள் எந்த இடத்தில் வைத்திருக்கிறாள் என்பது இதுலயே தெரிந்து விட்டது… 

      அறை நொடி கூட என்னை சந்தோசமாக இருக்க விட மாட்டேன்றா என் தேவதை என நொந்தவன், எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வண்டியை ஓட்டினான்.. அதற்கு மேல் பேசினால் மீண்டும் வசியுடன் ஒப்பிட்டு விடுவாளோ! என்ற பயம் தான்..        கல்லூரிக்கு சென்றதும், எப்போதும் போல் மரத்தடியில் வசி தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்க, இவர்களை பார்த்ததும் ஹாய் டா தேவா, ஹாய் தர்ஷி என அருகில் வந்தவன்…

      வாவ் இந்த ட்ரெஸ்ல செம க்யூட்டா இருக்கடி என்றதும் தர்ஷி தேவாவை திரும்பிப் பார்த்து, மெச்சுதலாக புருவத்தை உயர்த்த… தேவாவிற்கு உயிர் அடி வரை சென்று வலித்தது.. தன் முன்னால் தன் தேவதையை ஒருவன் வருணிப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, அதற்கு இவள் சந்தோஷப்படுவதை எண்ணி வேதனையுடன் நின்றிருந்தான்… 

     டேய் தேவா டுடே ஈவ்னிங் நீயும் ஜெய்யும் வந்துருங்க என்றதும் வசியை புரியா பார்வை பார்த்து வைத்தான் தேவா…

        என்னடா முழிக்குற!? உன்கிட்ட இவ எதுவுமே சொல்லலையா? என தர்ஷியை பார்க்க…

      அவள் தலையை சொறிந்து அசடு வழிந்தவள், ஈ ஈ ஈ ஈ சாரி சீனியர் மறந்துட்டேன்..

       போடீங், என அவளின் மண்டையில் வலிக்காமல் கொட்டிய வசி, தேவாவிடம் திரும்பி.. டேய் தேவா இன்னைக்கு ஈவ்னிங் மூவிக்கு போகலாம் டா, நேத்து தர்ஷிகிட்ட சொன்னேனே! நீயும் ஜெய்ய கூப்டு வந்திரு என்றதும்..

       சரி சீனியர் இப்ப எக்ஸாம் போறேன்.. டைம் ஆகிருச்சு என ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் சென்று விட்டான்… அங்கு நிற்கும் வரை அவனுக்கு தான் நெருப்பில் நிற்பது போல் இருந்தது… சோர்ந்த மனதுடன் சென்று எக்ஸாம் ஹாலில் அமர்ந்தவன், ஜன்னல் வழியாக தர்ஷியும், வசியும் சிரித்து பேசி கலாய்த்துக் கொள்வதை பார்த்தவன்., மனம் வெம்பி போனான்… 

    முடியல டி சத்தியமா செத்துருவேன் போல! இரு துளி நீர் கண்களை விட்டு இறங்கி வர, இருக்கும் இடம் கருதி சட்டென துடைத்துக் கொண்டான்.. 

        அப்போது      அவன் அருகில் வந்த ஜெய்,, டேய் தேவா இன்னைக்கு எக்ஸாம் முடிச்சதும் அந்த பொண்ணு என்ன வந்து பாக்குறேன்னு சொல்லிருக்கா டா,  

  எந்த பொண்ணுடா? என உண்மையாகவே புரியாமல் கேட்டான்.. அவன் தான் ஒரு மன நிலையில் இல்லையே..  

  என்னடா கலாய்க்குறியா? அதான் டா அந்த புள்ள அமுலு டா.. என ஜெய் சொன்னதும் தான் தேவா புரிந்துக் கொண்டவன்   

  ஓஹ் சூப்பர் டா போய் பாரு என்றான் சாதாரணமாக.. 

  தேவா அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் டா… என ஜெய் இழுத்தான்.. 

    சொல்லுடா என்ன விஷயம்?  

    அந்த புள்ள, அந்த புள்ள என தலையை சொறிந்து வெட்கப்படவும்… 

    சொல்லு டா என்ன அந்த புள்ளைக்கு?  எழவு வெட்கம் மட்டும் படாத என தேவா சீரியஸாக சொன்னான்… 

  அந்த புள்ள என்ன லவ் பண்ணுதாம் டா.. என்றதும் தேவா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஓஹ் அப்டியா?? என கேட்க ஜெய் முகம் மாறியது.. 

  டேய் எம்புட்டு பெரிய விஷயம் சொல்லிருக்கேன் சாதாரணமா அப்டியானு கேக்குற? என கோபித்துக் கொள்ள 

     டேய் மாங்கா மண்டை அந்த புள்ள உன்ன விரும்புதுனு உன் நம்பர் எடுத்து உன்கிட்ட பேசுனப்பவே எனக்கு தெரியும்.. நீ தாண்டி லேட் பிக்கப்பு என கிண்டல் அடிக்க 

    அசடு வழிந்தவன் சரி சரி வுடு டா… ரொம்ப கலாய்க்காத நா என் இடத்துக்கு போறேன் என தன் இடத்தில் சென்று ஜெய் அமரவும்…. தர்ஷியும் கிளாசிற்குள் நுழைந்து தனது இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.. 

      எக்ஸாம் முடியும் வரை தேவாவின் கண்கள் அடிக்கடி தர்ஷியை தழுவி சென்றது… ஒரு வழியாக எக்ஸாம் முடித்ததும் ஜெய் முதலில் பேப்பரை கொடுத்தவன் மரத்தடியில் சென்று அமர, தேவாவும் அவனை பின் தொடர்ந்து சென்று விட்டான்… 

     ஜெய் வசி நம்மல படத்துக்கு கூப்டான் டா என்றதும் ஜெய் தேவாவை முறைத்து பார்த்தவன்… நீ போக போறியாக்கும், என கேட்கவும்  .

    தேவா ஆமாம் என தலையாட்ட… ஜெய்க்கு கோவம் புசு புசு வென வந்துவிட்டது… மானங்கெட்டவனே போய் அவங்க ரெண்டு பேரும் கொஞ்சி குழாவுறத பாக்க போறியாக்கும்… மூடிட்டு என்கூடவே வீட்டுக்கு வந்திரு கடுப்பேத்தாத நல்லா மூட்ல இருக்கேன் ஜெய் பற்களை கடிக்க… 

    டேய் நாம இல்லாம அவ எங்க டா போயிருக்கா..!அவளை தனியா அனுப்பிட்டு என்னால முடியாது டா… ஏதாச்சும் ஆபத்து வந்தா என்ன பண்றது?  

    ஐயோயோ பாத்து டா பெரிய ஆபத்து வந்திர போகுது…. ஆள பாரேன் அந்த குட்டி சாத்தானால தாண்டா எல்லாருக்கும் ஆபத்து வரும் அவளுக்கு ஒன்னும் ஆகாது.. பேசாம இங்கயே நில்லு..   

      டேய் அத பத்தி அப்புறம் பேசிக்கலாம் டா நா பார்க்கிங் போறேன், நீ உன் ஆள பாத்துட்டு அங்க வா என்றதும் தான் நீங்க தனியா நில்லுங்க நா வரேன் என அமுலு சொன்னது ஜெய்க்கே நியாபகம் வந்தது… ஹ்ம்ம் என தலையாட்டிக் கொண்டான்… 

  தேவா பார்க்கிங் சென்றதும் ஜெய் எக்ஸாம் முடித்து நடந்து வரும் சில மாணவிகளை பார்த்தப் படியே விழி விரித்து காத்திருந்தான் தன் அமுலுவுக்காக… 

      ஒரு பெண்கள் கூட்டம் வரவே இதுல அந்த புள்ள இருக்குமோ! என வைத்த கண் வாங்காமல் அவர்களை பார்க்க, அப்போது அதில் ஒரு மாணவி, எப்படி பாக்குறான் பாரு, பொண்ணுங்கள பாத்ததே இல்லாத மாதிரி, பொறிக்கி என அவன் காதில் விழும்படியே திட்டி விட்டு செல்ல, போங்கடி பீத்தீங்களா என ஜெய் பதிலுக்கு திட்டவும் அந்த பெண்கள் முறைத்து கொண்டே சென்றனர்…. 

   அட. எம்புட்டு நேரம் எழுதுவ சீக்கிரம் வாயேன் டி என மனதிற்குள் நினைத்த வண்ணம் இருக்க அவன் நம்பிக்கையயை பொய் ஆக்காமல் அங்கு வந்து சேர்ந்தாள் அவன் அமுலு….

     உருண்டையான முகம்,மாநிறமும், அடர்த்தியான புருவமும், மீன்குட்டி கண்களும், செம்மாதுளை இதழும், இடுப்புக்கு கீழ் வரை முடி என பார்க்கவே லக்ஷனமாக இருந்தாள்… ஜெய் வாயை பிளந்து நின்று விட்டான்…

      ஹாய் ஜெய் வாய மூடு கொசு புகுந்துற போகுது என சாதாரணமாக பேச்சு கொடுக்க… ஜெய் அப்போது தான் பிளந்த வாயை மூடி சுயநினைவுக்கே வந்திருந்தான்.. இந்த புள்ளைக்கா நம்மள புடிச்சிருக்கு! இவள நம்பலாமா இல்ல கழட்டி விட்டுட்டு போயிருவாளா! தேவா மாதிரி நானும் எந்த வலி வேதனையும் அனுபவிக்க விரும்பல எதற்கும் கொஞ்சம் உஷாரா இருப்போம்.. கவுந்துடாத டா ஜெய் என மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான்….

    புள்ள நீதான் அமுலுவா? நம்பவே முடியல.. நீ என்னமோ பல்லு பெருசா இருக்கும், கருப்பா பயங்கரமா இருப்பேன்னு சீன் போட்ட என சிடு சிடுப்பாக தான் கேட்டான்…

முதல் தடவ பாக்குற இப்படியா சிடு சிடுப்பா பேசுவ? நா எதுக்கு அப்டி சொன்னேனா! நீ என்ன ஒரு வேள தமன்னா ரேஞ்சுக்கு நினைச்சி வச்சிருந்தனா? என்றதும் ஜெய் இடுப்பில் கை வைத்து அவளை பார்த்து முறைத்தான்..

ஹீஹீஹீ சும்மா சொன்னேன்.. அசடு வழிந்தாள்..ஆமா உன் பிரெண்ட்ஸ் எங்க?

தேவா பார்க்கிங்கல நிக்குறான்.. வண்டு இன்னும் வரல.. ஆமா கேட்கணும் நெனச்சேன் உன் ரியல் நேம் என்ன? என நெற்றி புருவத்தை நீவினான்..

அட பாவி கிளாஸ்ல அட்டெண்டன்ஸ் எடுக்குறப்ப கவனிக்கலயா? விழி விரித்து குழந்தை போல் கேட்டாள்…

ஆமா டி எனக்கு இது தான் வேலை பாரு.. எவ பேரு என்னனு பாக்க தான வந்திருக்கேன்..

ஹ்ம்ம் என் பேரு ஸ்ருதி…. என்றாள்

ஓஹ் சுருதியா!? கிண்டலாக கேட்க

அயே சுருதி இல்ல ஸ்ருதி டா….

ஏதோ ஒன்னு… சரி வா என் பிரெண்ட் தேவாகிட்ட கூப்டு போறேன் என அழைத்து செல்ல அமுலுவும் சரி என அவனுடன் சென்று விட்டாள்…

டேய் வசி டைம் ஆகிருச்சு டா இப்ப போனா தான் டைம்க்கு போய் சேர முடியும் என அவனது நண்பர்கள் கத்திக் கொண்டிருக்க… எதையும் காதில் வாங்காமல் வசியோ தர்ஷி தேவாவுக்காக தான் தன் காரில் சாய்ந்து நின்று காத்திருந்தான்…..

டேய் வசி யாருக்காக வெயிட் பண்ற? என வசியின் நண்பன் கேட்க

டேய் தர்ஷி வரணும் டா கொஞ்சம் இருங்க இப்ப வந்திருவாங்க..

டேய் மச்சான் உனக்கே ஓவரா இல்ல.. அதுங்க நம்ம ஜுனியர் டா அதுங்களோட சேர்ந்து சுத்த ஆசைப்படுற… நாங்க எத்தனை பேரு இருக்கோம் உன் கண்ணுக்கு தெர்லயா.? என கடுப்படிக்க

டேய் ஒரு 5 மினிட்ஸ் டா இரு வந்திருவாங்க என மீண்டும் அவர்களை எதிர்பார்த்து நின்றான்…

தொடரும்……

படிச்சி பாத்துட்டு மறக்காம staars கொடுங்க 🙏🙏🙏

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!