தேவை எல்லாம் தேவதையே…

4.7
(23)

தேவதை 17

தேவாவிடம் அவன் அமுலுவை அழைத்து சென்ற ஜெய், அவனுக்கு அறிமுகப்படுத்தினான்…

டேய் மச்சான் இவ தான் டா அந்த பொண்ணு, அதான் டா அமுலு என சொல்லவும் தேவா புன்னகையுடன் ஹாய் மா எப்படி இருக்க? என கேட்டான்..

நல்லாருக்கேன் தேவா.. உனக்காச்சும் என் ரியல் நேம் தெரியுமா? என சிரிப்புடன் கேட்டாள் தேவாவிடம்…

உதடு பித்துக்கியவன் தெரியாதே என்றதும்… ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஏண்டா நீங்க 2 பேரும் களாஸ்ல தான் இருக்கீங்களா? இல்ல கிளாஸ்க்குள்ள நுழைஞ்சதும் வேற உலகத்துக்கு போயிருவீங்களா? என கிண்டல் செய்யவும் தேவா புரியாது பாத்தான்…

பின்ன என்ன! நாம எல்லாம் காலேஜ் வந்து பாதி மாசம் முடிஞ்சு முதல் செமஸ்டரே எழுதிட்டோம்… இன்னும் உங்க கூட படிக்குற பொண்ணு பேர் தெர்லனா எப்புடி? உங்க பேர்லாம் நீங்க காலேஜ் சேர்ந்த 3 நாளுல எங்களுக்கு தெரியும்.. ஆனா நீங்க என்னனா இவ்ளோ தத்தியா இருக்கீங்க என நக்கலாக சிரித்தாள்…

உடனே ஜெய் ஏ புள்ள நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல, வி ஆர் குட் பாய்ஸ்.. என காலரை ஏத்திக் கொண்டான்…

ரொம்ப நல்ல புள்ளைங்க தான் அங்கலாய்த்துக் கொண்டவள்.. சரி அப்ப நா கிளம்புறேன்.. பஸ்க்கு டைம் ஆகிருச்சு ஒரு மாசம் கழிச்சி பாக்கலாம் என்றதும் ஜெய் முகமும், தேவா முகமும் வாடியது… அதை கவனித்தவள் ஜெய் நா இடையில எப்பவாச்சும் வெளில மீட் பண்ண கூப்டா வா உங்கப்பாக்கு பயந்து வர முடியாதுனு சொல்லாத.. என்றவள் பை சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு கிளம்பினாள்…

தேவா முகம் தான் வாடிக் கிடந்தது… விடு டா நீயும் நானும் சேர்ந்து இனிமேல் தர்ஷி வீட்டுக்கு போவோம், இல்லனா அவளை நம்ம வீட்டுக்கு வர வைப்போம் என ஜெய் தேவாவை அப்போதைக்கு தேற்றினான்…

ஜெய் வாடா ப்ளீஸ் டா படத்துக்குப் போயிட்டு வந்துருவோம்…

டேய் நாய திருந்த மாட்டியா? நீ வேணாம் னு சொன்னா கேக்க மாட்டியா? அங்க போய் அது ரெண்டும் அடிக்கிற கூத்தை பார்த்து நீ ரொம்ப மனசு வருத்தப்படுவ.. என்னால அதெல்லாம் பாத்துட்டு சகிச்சிக்க முடியாது…

டேய் நா அவள மறந்துட்டேன் டா அதான் அன்னைக்கே சொன்னேன்ல இப்ப அவகூட போகணும்னு சொன்னது அவளோட சேப்டிக்கு தாண்டா டா என தேவா மழுப்ப ஜெய் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவன், நம்பிட்டேன் டா நல்லவனே! வந்து தொலை என பல்லைக் கடித்து கொண்டு தேவாவை வசியிடம் இழுத்து சென்றான்..

இரு டா தர்ஷி எக்ஸாம் முடிச்சிட்டு வந்துரட்டும், இங்க வந்து என்ன தேடுவா என்றவனை கையை பிடித்து இழுத்து சென்றவன்…

ஓஹ் சார்க்கு இப்டி வேற எண்ணமோ! மூடிட்டு வா டா, அவளாம் முன்னாடியே எக்ஸாம் முடிச்சிட்டு வசிக்கூட போய் நின்னு அரட்டை அடிச்சிட்டு இருப்பா, அவ்வளவு ஏன் நம்மள விட்டு அவ மூவிக்கு போனாலும் பரவாயில்லைன்னு ரெடியாகியிருப்பா என சரியாக சொல்லி கணித்திருந்தான்…

டேய் அவ என்ன பாக்காம,, கூப்பிடாம போ மாட்டா டா என்றவனை தலையில் அடித்துக் கொண்டு திரும்பி பார்த்த ஜெய்… டேய் வேணாம் டா என்ன மிருகம் ஆக்காத.. நீ தான் இன்னும் அவளை நம்பிட்டு கெடக்க.. ஆனா அவ மாறிட்டா டா என்றவனை தேவா அலுப்பாக பார்த்ததும் ஜெய்க்கு மேலும் அது ஆத்திரத்தை மூட்டியது…

டேய் என்ன நம்பலல! சரி வா என தேவாவை அழைத்து சென்று பார்க்க, ஜெய்யின் கூற்றை உண்மையாக்கினாள் தர்ஷி… வசி அவன் நண்பர்களுடன் இருக்கும் இடத்தில் தான் தர்ஷினியும் நின்றிருந்தாள்..

அவ நமக்காக தான் டா வெயிட் பண்றா வா போவோம் என செல்லப் பார்த்தவனை பிடித்து ஓரமாக நிற்க வைத்திருந்தான் ஜெய் …

வசியின் தோழி ஷில்பாவிற்கு ஏற்கனவே தர்ஷினி வருவதில் பிடிக்காமல் முகத்தை சுழித்து கொண்டு நின்றிருந்தாள்.. இதில் அவர்கள் இருவருக்காகவும் காத்திருப்பது மேலும் ஆத்திரத்தை மூட்ட, வேக எட்டாக வசியிடம் வந்தவள், வசி நீ போயிட்டு வா நாங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புறோம் என்றவளை புரியாமல் பார்த்தான் வசி..

ஓய் வாட் ஹேப்பண்ட் டி, இன்னும் கொஞ்ச நேரம் தான் மூவிக்கு போயிரலாம் என்றவனை எதுக்கு இன்டெர்வல் அப்புறம் மூவி பாக்கவா? என ஏகத்தாலமாய் கேட்க மற்றவர்களும் ஆமாம் டா டைம் ஆகிருச்சு அவங்க ரெண்டு பேருக்காக எங்க பிரெண்ட்ஷிப்ப மதிக்க மாட்டுற என குற்றம் சாடவும் வசிக்கும் ஒரு மாதிரியாய் போனது

தர்ஷி என்ன ஆச்சு? அவனுங்களுக்கு போன போடு என்றதும் தர்ஷியும் சரி என தலையாட்டியவள் தேவாவுக்கு முதலில் போன் செய்து பார்க்க புல் ரிங் போய் கட்டானது,ஜெய் தான் அட்டென்ட் பண்ணாத என தேவாவின் போனை பிடுங்கிவிட்டான்…பின் ஜெய்க்கு அடித்து பார்க்க அவனும் போனை எடுக்கவில்லை….

ரெண்டு பேருமே போனை எடுக்கவில்லை..என விழி விரித்து நகத்தை கடித்தவாறு தர்ஷினி கூற…

வசி நெற்றியை நீவியவன் என்ன இப்டி பண்றானுங்க? மார்னிங்கே சொன்னே! இடுப்பில் கையை வைத்து யோசிக்க…

தர்ஷினி பரவாயில்லை விடுங்க.. எங்க போனானுங்கனு தெர்ல.. நாம போகலாம் வாங்க என்றதும் வசி அவள் முகத்தை அதிர்ந்து பார்த்தவன் உனக்கு ஷியோரா? ஒன்னும் ப்ராப்லம் இல்லையே?

ச்ச ச்ச இதுல என்ன ப்ராப்லம் வர போகுது! நா பாத்துக்குறேன் வாங்க கார்ல ஏறுங்க என்றதும் அனைவரும் எறிக்கொள்ள வசி தான் காரை ஓட்டினான்,, தர்ஷி வசியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்…

தேவா தான் இதயத்தில் யாரோ சுருக்கென குத்துவது போல் உணர்ந்தான்.. கண்களில் நீர் வழியவும் ஜெய் தன் கட்டை விரலால் அவன் கண்ணீரை சுண்டியவன்… என்ன சார் நா சொன்னது நடந்துச்சா? என அவன் முகத்தைப் பார்த்து கேட்கவும்…

தேவாவிற்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.. ஆத்திரத்தில் ஓங்கி அருகில் இருக்கும் மரத்தை குத்தவும் விரலின் முட்டியில் அடிபட்டு ரத்தம் வரவே ஜெய் பதறிவிட்டான்…

லூசு பயலே! சைக்கோ கம்னாட்டி அறிவு மயிறுனு ஏதாவது இருக்கா? என பற்களுக்கிடையில் வார்த்தையை கடித்து துப்பியவன் தன் பாக்கெட்டில் இருந்து கை குட்டையை எடுத்து அவன் கையில் வைத்து அழுத்தினான்…

தேவா கண்கள் சிவக்க ஜெய்யின் கையை உதறியவன்,, உன்னால தான் டா எல்லாம்.. பாரு அவ தான் போன் பண்ணினால அப்போவே எடுத்து பேசிருந்தா இன்னேரம் அவகூட நானும் போயிருப்பேன் என்றவனின் இயலாமையை கண்ட ஜெய் தான் பாவம் துடி துடித்து போனான்…

டேய் மச்சான் உண்மையாவே லூசாகிட்டியா டா? பின்ன என்ன டா இதே இடத்துல நீ இருந்து அவ வரலன்னு சொன்னா நீ அவள தனியா விட்டுட்டு போயிருப்பியா? மாட்டல்ல.. அவ மட்டும் எதுக்கு டா தனியா போறா..! நிதர்சனத்தை புரிஞ்சிக்க டா.. அவ மாறிட்டா இப்போ நீயும், நானும் அவளுக்கு தேவை இல்ல டா.. அவ மனசுல முழுசா வசி மட்டும் தான் இருக்கான்… இல்லனா சின்ன வயசுலேந்து பிரியாத நம்மள விட்டுட்டு போயிருக்கானா? அவ காதலோட ஆழத்த புரிஞ்சிக்க டா என எடுத்து சொல்ல…

தேவா தான் உயிரற்ற ஜடமாய் நின்றிருந்தான்.. கண்கள் சிவக்க, ரத்தம் நரம்போட நின்றிருந்தவனின் மனம் துவண்டு போனது… இதுவே முதல் முறை அவனை விட்டு அவன் தேவதை தனியே செல்வது.. இனி காலை, மாலை என்னுடன் தேவதை வரமாட்டாளா? அவ்ளோ தானா எல்லாம் முடிஞ்சிட்டா? என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள்.. தர்ஷினியின் இந்த செய்கை அவன் இதயத்தை வெகுவாக ஆயுதமின்றி தாக்கிவிட்டது.. உடைப்பெடுத்து அழுகை வர, கீழ் உதட்டை கடித்து அதை அடக்கி தன்னை சரி செய்து கொண்டவன்..  வேகமாக ஓடி சென்று தனது பைக்கை எடுக்க ஜெய் அவன் பின்னால் நாலே எட்டு வைத்து அவனை பிடித்து அவன் வண்டியில் ஏறிகொண்டான்…

உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நா தான் மாட்டிகிட்டு முழிக்குறேன்.. நீ உன் காதல சொல்லியும் தொலைய மாட்டேன்ற,, சரி அவ விருப்பத்துக்கு விட்டாலும் அத பாத்து பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகுற.. என்ன தான் டா தேவா உன்ன பண்றது….

ஜெய்யின் கேள்விகளுக்கு பதில் இல்லை… வண்டியை படு ஸ்பீடாக ஓட்ட.. ரைட்டு இன்னைக்கு என்ன முடிக்க போறான்.. என முனுமுனுத்தவன்,, எங்க டா கூப்டு போற? அதையாவது சொல்லேன் சலித்தவாறு   கேட்க அடுத்து தேவா சொன்ன பதிலில் ஜெய் அரண்டு விட்டான்…

இங்கு தர்ஷி ஒரு மாதிரியாக எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்தாள்.. முதல் தடவை தனது இரு நண்பர்களையும் பிரிந்து தனியே செல்கிறாள்.. கஷ்டமாக இருந்தது.. அவள் முக மாற்றத்தை வைத்து வசியும் கண்டு கொண்டான், ஆனால் எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை …

 

 

பின்னால் அமர்ந்திருக்கும் வசியின் நண்பர்கள் அடி வயிற்றில் ஒரு விறகடுப்பே எரிந்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு தர்ஷியை சுத்தமாக பிடிக்கவில்லை… இதில் அவள் உரிமையாய் அவன் அருகில் அமர்ந்திருப்பது பொறாமையையும்,, அவள் மேதான வெறுப்பையும் மேலும் வளர செய்தது….

எங்கடா போய் தொலஞ்சிங்க ரெண்டு பேரும்? மனதிற்குள் அவர்களை வறுத்தவள், விண்டோ வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க,, ஷில்பா அவளை அசிங்கப்படுத்தி பார்க்க முடிவு செய்திருந்தாள்..

என்னடா உனக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுமே இல்லையா? இம்புட்டு சொல்லியும் அவ பின்னால தான் போவேன்னு போனா என்ன அர்த்தம்? கத்தியப் படி வரவே தேவா பதில் பேச வில்லை..

சொல்லி தொலை டா, இப்ப எதுக்கு அவளை பால்லோ பண்ண போற? அவ தான் நம்மள பத்தி யோசிக்காம போய்ட்டாளே! சொல்றியா இல்லை பைக்கிலேந்து கீழ குதிக்கவா? என அவனை மிரட்டினான்   ஜெய் …

டேய் அவ வேணும்னா இப்டி இருக்கலாம் ஆனா என்னால முடியாது டா…   வீட்டுக்கு போனா அவ நியாபகம் என்ன கொன்றும் டா…. ப்ளீஸ் டா டேய் அவளுக்கு  துணைக்கு நான் இருக்கணும் டா.. அவங்களுக்கு நாம வந்ததே தெரியாத படி ஒரு ஓரமா நின்னு அவளை பாதுக்காத்துக்கிறேன் டா என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் இருந்தது ஜெய்க்கு….

 

 

தொடரும்,……

படிச்சு பார்த்துட்டு மறக்காம ஸ்டார்ஸ் கொடுங்க டியர்ஸ் 🙏🙏🥰

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!