“என்ன அப்படி பார்க்கிறீங்க” என்றவளை முறைத்தவன், “அறிவு இல்லையா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பின்னாடியே வந்து நிற்கிற” என்றான் அரவிந்தன்.
“பிடிச்சிருக்கு அதான் பின்னாடியே வரேன் அது கூட தெரியலை நீங்களாம் ஐபிஎஸ் படிச்சு என்ன தான் கிழிச்சீங்களோ?” என்றாள் மயூரி.
“உன் வாயை தான் கிழிக்கப் போறேன்” என்றவன் , “உன்னை தான் பிடிக்கவில்லைனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன?” என்ற அரவிந்தனிடம், “நீங்க பிடிக்கலைனு சொன்னா உடனே நான் எங்கிருந்தாலும் வாழ்கனு உங்களை வாழ்த்திட்டு ஒதுங்கி போகனுமா? அதெல்லாம் என்னால முடியாது மிஸ்டர் அரவிந்த் உங்களுக்கு என்னை பிடிக்கும் வரை உங்க பின்னாடியே சுத்துவேன்” என்றாள் அவள்.
அவளை முறைத்த அரவிந்த் , “லூசா நீ” என்றிட , “ஆமாம் போலீஸ்கார் உங்களை என்னைக்கு முதல் முதலாக பார்த்தேனோ அன்னையிலிருந்து லூசா தான் சுத்துறேன் அதுவும் உங்க மேல” என்று அவள் கன்னக்குழி விழ சிரித்தாள்.
“உன்கிட்ட பேச வந்தது என் தப்பு” என்று அவன் தலையில் அடித்துக் கொண்டு கிளம்ப, “ஹலோ போலீஸ்கார் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்க சொல்லாமலே போறீங்க” என்றவளிடம், “முட்டாள் உன்னை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான் அரவிந்தன்.
“முட்டாளா யோவ் போலீஸ்கார் மீ டீச்சர் மேன்” என்றாள் மயூரி. “பிஇடி டீச்சர் தானே அதான் உனக்கு மூளை வேலை செய்யலை” என்று கூறிய அரவிந்தன் சென்று விட அவனை சும்மா விடுபவளா என்ன “ஹலோ போலீஸ்கார் நில்லுங்க” என்று விரட்டிக் கொண்டே சென்றாள் மயூரி.
…. தொடரும்…
மக்களே இது வெறும் டீஸர் தான். கதையை விரைவில் நம்ம தளத்தில்
பதிவிடுகிறேன்.