தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2)

5
(6)

“என்ன மச்சி ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்ற பிரகாஷிடம், “ஆமாம் சந்தோஷமா தான் இருக்கேன்” என்றான் குகநேத்ரன். “என்ன விஷயம் சொன்னால் நானும் தெரிஞ்சுக்கவேன் இல்லை ” என்றவன்”ஆமாம் யார் அந்த விஷ்ணு அவனோட ஆபரேஷன்க்கு நீ ஏன் பணம் கட்டின” என்றான் பிரகாஷ்.

” அந்த விஷ்ணுவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வேண்டப்பட்டவங்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கு” என்றான் குகநேத்ரன்.

” வேண்டப்பட்டவங்கனா யாரு அந்த பொண்ணு சஷ்டிப்ரதாவா” என்றான் பிரகாஷ் .

“பாருடா இந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்க என்ன என் ஆபீஸ்ல எனக்கே தெரியாமல் ஸ்பை வேலை  பாத்துட்டு இருக்கியா” என்றான் குகநேத்ரன்.

” ஸ்பை வேலை பார்த்து தான் கண்டுபிடிக்கணுமா என்ன அந்த பொண்ணோட குவாலிபிகேஷன்க்கு இந்த வேலை அதிகப்படி. அவளுக்கு இந்த வேலையை நீ போட்டு கொடுத்த அன்னைக்கே தெரியும் அவள் உனக்கு சம்திங் ஸ்பெஷல்” என்றான் பிரகாஷ் .

“ஸ்பெஷல் தான்” என்ற குகன் தன் இதழை தடவி பார்த்துக் கொண்டிருந்தான் . என்ன மச்சி “என்ன ஸ்பெஷல்” என்ற பிரகாஷிடம், “இட்ஸ் மை பர்சனல்” என்ற குகநேத்திரன் கையில் இருந்த மதுக்கோப்பையை தன் வாயில் கவிழ்த்தினான்.

“இந்த பையனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்ங்க” என்றார் சித்ராதேவி .

“உன் பையனுக்கு தானே கல்யாணம்னு பொண்ணு போட்டோ எடுத்து புரோக்கர் வந்தால் கூட அவனை அடிச்சே விரட்டி விட்டுடுவான்” என்ற அருள் வேந்தனிடம், “அப்படியெல்லாம் சொல்லாதீங்க அவனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றார் சித்ராதேவி .

“யாருக்கு கல்யாணம்” என்று வந்தாள் துவாரகா. “யாருக்கு உன் அண்ணனுக்கு தான்” என்ற சித்ராதேவியிடம், “அண்ணனுக்கு கல்யாணமா வேண்டாமே அம்மா ஏற்கனவே ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணி தான் அண்ணன் இந்த அளவுக்கு மோசமா இருக்காரு திரும்பவும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி அண்ணனோட லைஃப்ல சிக்கல் உண்டு பண்ணிடாதீங்க” என்றாள் துவாரகா.

“உன் வேலைய பாருடி நீ எங்களுக்கு அட்வைஸ் பண்ணாத அவனுக்கு கால காலத்துல ஒரு கல்யாணம் பண்ணுனா மட்டும்தான் அவனுடைய வாழ்க்கை நல்லா இருக்கும் இல்லனா குடிச்சு குடிச்சு நாசமா போயிருவான் எவ்ளோ சம்பாதிச்சாலும் இந்த குடி மட்டும் அவனை விட்டு போகவே மாட்டேங்குது எதுக்காக தான் குடிக்கிறானோ வெறுப்பா வருது பொண்ணு கேட்க போன உங்க பையன் தான் வேலை நேரம் தவிர முழு நேர குடிகாரனா இருக்கான்னு சொல்றாங்க குடி மட்டுமா இன்னும் வேற என்னென்ன பழக்க வைத்திருக்கிறானோ தெரியல ராத்திரி ஃபுல்லா வீட்டுக்கு வர்றதே கிடையாது எப்ப பாத்தாலும் கெஸ்ட் ஹவுஸில் சுத்திட்டு இருக்கான் கெஸ்ட் ஹவுஸ்ல யாரையும் வேலைக்கு கூட வைக்க மாட்டேங்குறான். வாட்ச்மேன் கூட வைக்க மாட்டேங்குறான் அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு” என்ற சித்ராதேவியிடம், “கவலைப்படாதே சித்ரா சீக்கிரமே நல்லதே நடக்கும் என்று நம்புவோம்” என்றார் அருள் வேந்தன்.

சாப்பிட்டு முடித்த சஷ்டிப்ரதா தனது அறையை நன்றாக தாளிட்டாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது இரவு வந்தாலே அவளது உடலில் நடுக்கம் தானாகவே வந்து விடுகிறது . இறந்து போன தன் தாய், தந்தையின் போட்டோவை பார்த்தவள் நீங்க ரெண்டு பேரும் சாகறதுக்கு முன்னாடி என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருந்திருக்கலாம். என்னை பெத்து போட்டு நீ செத்துப் போயிட்ட என்ன வளர்க்கிறதுக்காக சித்தியை கல்யாணம் பண்ண கொஞ்ச நாளில் அப்பாவும் செத்துப் போயிட்டாரு . இந்த வீட்டில் நான் வேண்டாத விருந்தாளி இந்த வீடு மட்டும் என் பெயரில் இல்லாமல் போயிருந்தால் என்னைக்கோ என்னை வித்துருப்பாங்க இல்லைனா கொன்று இருப்பாங்க இவங்க பண்ணுற பிரச்சனை பத்தாமல்  இப்போ புதுசா ஒருத்தன் கிளம்பி வந்து இருக்கான் . ஆபீஸ்ல என்னை டார்ச்சர் பண்றான் அவன் கூட ஒரு மாதம் என்னை இருக்க சொல்லி தொல்லை பண்ணிட்டு இருக்கிறான். என்னைக்கு கூப்பிடுறானோ அன்னைக்கு நான் போய் தான் ஆகணும் காண்ட்ராக்ட் சைன் பண்ணி வச்சிருக்கேன்” என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் சஷ்டிப்ரதா.

சஷ்டிப்ரதா சக்திவேல், தெய்வானை தம்பதியரின் ஒரே மகள்.  சஷ்டிப்ரதா பிறந்த உடனே அவளது அன்னை தெய்வானை இறந்து போய்விட குழந்தையை வளர்க்க வேண்டும் என்று தெய்வானையின் பெற்றோர் இளைய மகளான கார்த்திகாவை சக்திவேலிற்கு மணமுடித்து வைத்தனர் . ஆரம்பத்தில் கார்த்திகா அக்காவின் மகளை அன்பாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள். போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.

மனைவி இறந்த ஒரு வருடத்திலேயே சக்திவேலும் இறந்து போய்விட கார்த்திகாவின் வாழ்க்கை இருண்டு போய் விடக்கூடாது என்று நினைத்து அவளது பெற்றோர் அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தனர் .

கார்த்திகாவின் கணவன் ராஜேஷ். கார்த்திகாவிற்கும், ராஜேஷிற்க்கும் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ஷர்வன், இளையவள் பிரனிதா. சக்திவேலின் பணம் ,வீடு இரண்டையும் அனுபவிக்க வேண்டும் என்றால் சஷ்டிப்ரதாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கார்த்திகாவின் பெற்றோர் கூறிவிட்டனர். வேறு வழி இல்லாமல் கார்த்திகாவும் சஷ்டிப்ரதாவை வளர்த்து வருகிறார். ஆனால் இந்த வீட்டில் அனைத்து வேலையும் அவள்தான் பார்க்க வேண்டும். அவள் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகவும், சஷ்டிப்ரதாவிற்கு ஒரு மாதிரியாகவும் தான் அவள் பார்த்து செய்வாள்.

சஷ்டி பிரதாவிற்கு இருந்த ஒரே ஒரு ஆதரவு அவளது நண்பன் விஷ்ணு தான். விஷ்ணு வேறு யாருமில்லை கார்த்திகாவின் அண்ணன் மகன் தான் விஷ்ணு. கார்த்திகாவின் அண்ணன், அண்ணி இருவரும் ஒரு விபத்தில் இறந்து போய்விட விஷ்ணுவும் கார்த்திகாவின் தாய், தந்தையரிடம் வளர்ந்தான். சஷ்டிப்ரதாவும், விஷ்ணுவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தனர். சக்திவேல் இருந்தவரை விஷ்ணுவையும் தன்னுடைய பிள்ளை போல் தான் பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பிறகு அவரது மகள் சஷ்டிப்ரதாவிற்கே இந்த வீட்டில் அடிமை வாழ்க்கை தான் அப்படி இருக்க விஷ்ணுவிற்கு மட்டும் என்ன ராஜ மரியாதையா கிடைத்துவிடும். விஷ்ணுவையும் ஒரு அடிமை போல தான் கார்த்திகா நடத்தினார் .விஷ்ணு ,சஷ்டிப்ரதா இருவரும் நன்றாக படித்தனர். விஷ்ணுவிற்கு கிடைத்த ஸ்காலர்ஷிப்பில் அவன் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்தான். சஷ்டி பிரதாவிற்கு விஷ்ணு அளவிற்கு படிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் விஷ்ணுவின் தாத்தா விஷ்ணுவின் படிப்பிற்காக ஒரு பெரும் தொகையை சேமித்து வைத்திருந்தார். அதனால் விஷ்ணுவால் அவன் நினைத்த படிப்பை படிக்க முடிந்தது. ஆனால் சஷ்டிப்ரதாவால் அவ்வாறு படிக்க முடியவில்லை. அவள் ஒரு டிகிரி மட்டும் முடித்து இருந்தாள். அவள் வாங்கிய டிகிரிக்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பானது.

அவளும் பல கம்பெனிகளில் ஏறி இறங்கி கடைசியாக அவள் வந்து சேர்ந்த இடம் தான் குகநேத்ரனின் அலுவலகம். அங்கும் அவளது தகுதிக்கு அவள் பார்க்கும் வேலை அதிகம் தான். அந்த வேலையும் குகநேத்ரன் அளித்த பிச்சைதான் என்று சொன்னால் மிகையாகாது.

ஆனால் அந்த வேலைக்கும் அவன் கேட்ட விலையோ அதிகமானது அதை நினைத்து நினைத்து அவள் ஒவ்வொரு நாளும் நொந்து கொண்டிருந்தாள் . இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது தோழன் விஷ்ணுவிற்கு ஒரு விபத்து ஏற்பட்டு அவனும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் . அவனது மருத்துவ செலவுக்கும், ஆபரேஷன் செலவுக்காகவும் அவள் கொடுத்த விலை மிக மிக அதிகம் அதை நினைக்கும் பொழுது அவள் உள்ளம் வலிக்க ஆரம்பித்தது. ஆனால் வேறு வழி இல்லையே சிறுவயதிலிருந்து தனக்காக இருந்த தனது இன்பம், துன்பம் அனைத்தும் தெரிந்த ஒருவன் உயிர் பிழைத்து எழுந்து வருவதற்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய துணிந்து விட்டாள் சஷ்டிப்ரதா.

ஆனால் அவள் அறிய மறந்த ஒரு விஷயம் அவளது இந்த இழிநிலைக்கு விஷ்ணுவின் உடல்நிலை மட்டும் காரணம் இல்லை அவள் செய்த சிறிய தவறும் தான் என்பதை அவள் அறிய மறந்து விட்டாள்.

“என்ன குகன் இதுதான் வீட்டுக்கு வர டைமா” என்ற சித்ராதேவியிடம், “என்னமோ நான் புதுசா இன்னைக்கு மட்டும் தான் லேட்டா வர்றது மாதிரி பேசிட்டு இருக்கீங்க. டெய்லி இந்த டைம் தான வருவேன்” என்றான் குகநேத்ரன் .

“இது என்ன பதில்” என்ற சித்ராதேவியிடம் , “வேற என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க உங்களுக்கு தெரியும் தானே நைட் நான் வீட்ல தங்க மாட்டேன். கெஸ்ட் ஹவுஸில் தான் ஸ்டே பண்ணுவேன்னு” என்ற குகனிடம் அவர் ஏதோ சொல்ல வர, “சித்ரா முதல்ல அவனை சாப்பிட விடு சாப்பிட்டு முடிக்கட்டும் எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்” என்றார் அருள் வேந்தன்.

சித்ராதேவி அமைதியாக மகனுக்கு உணவினை பரிமாறிட அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் குகன். “குகன்” என்ற சித்ராவிடம் என்ன என்பதை போல் பார்த்தான் குகன்.

“அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று அவர் தயங்கிட ,பாதி சாப்பாட்டிலே கையை கழுவி விட்டு எழுந்து கொண்டான் குகநேத்ரன்.

” குகன் என்ன சாப்பிடாமல் கை கழுவிட்டு இருக்க” என்று சித்ரா தேவி கேட்டிட “நீங்க சொன்ன விஷயத்தையும் சேர்த்து கை கழுவுறேன்.  இனிமேல் கல்யாணம், காது குத்து இந்த மாதிரி பேச்சு இந்த வீட்ல எடுக்க கூடாது சொல்லிட்டேன் திரும்பத் திரும்ப என்னால அசிங்கப்பட்டு இருக்க முடியாது” என்று கூறியவன் கோபமாக சென்றுவிட்டான்.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!