மான்ஸ்டர்-7

4.9
(8)

அத்தியாயம்-7

அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து  மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது…

வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர் யாருனு பாத்தியா.. அவங்க கிட்ட பேசிட்டியா…”என்று அவரின் மேனேஜரிடம் கேட்க..

அவரின் மேனேஜரோ எஸ் சார்.. இதோட ஓனர் இங்கதான் பக்கத்துல இருக்காரு… அவரு வீட்டுக்கு போலாமா சார்..” என்று கேட்க..

யா யா கோ அஹெட்..”என்றவறோ மறுபடியும் ஸ்டைலாக காரில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு போகஅவனிடம் வசமாக மாட்டிக்கொண்டது என்னவோ மைத்ரேயி தான். கார் நேராக மாணிக்கவாசகத்தின் வீட்டின் முன்னால் நின்றது.

அந்த அம்பது வயது மதிக்கத்தக்க நிவாஸ் சேட்டின் பார்வையோ மாணிக்கவாசகத்தின் வீட்டையே அளந்து கொண்டிருந்தது.. தன்னுடைய கூர்மையான கண்களால் அந்த வீட்டையே பார்வையால்ங்குள அங்குளமாக ஆராய்ந்து கொண்டிருந்தவருக்கு கண்டிப்பாக இந்த ஊரில் குளிர்பான ஃபேக்டரி ஆரம்பித்தே ஆகவேண்டும் என்றுதான் தோன்றியது.

அதற்காகத்தான் மாணிக்கவாசகத்தின் இல்லை இல்லை மைத்ரேயின் பேரில் இருக்கும் அந்த நாற்பது ஏக்கர் இடத்தை வாங்குவதற்காக இப்போது மாணிக்கவாசகத்தின் வீட்டில் உட்கார்ந்து இருந்தார்.. மாணிக்கவாசகமோ கையை கட்டிக்கொண்டு பம்மிக் கொண்டு தான் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவரின் மனதில் எப்படியெனும் இந்த இடத்தினை இந்த நிவாஸிடம் விற்று விட வேண்டும் அதனால் வரும் பல கோடியே எப்படி சுருட்ட வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதற்கு பெரும் தடையாக இருப்பது தன்னுடைய மகளாயிற்றே மைத்ரேயியின் அழுத்தத்தை நினைக்க நினைக்க மாணிக்கவாசகத்திற்கு கோவம் பல மடங்காக ஆகியது.

பின்னே கிட்டதட்ட இந்த ஒரு வார காலமாக அவளை எவ்வளவோ கொடுமை செய்து இடத்தை வாங்க முயன்று கொண்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் காஞ்சனா கொடுமை செய்தாலும் இன்னொரு பக்கம் மாணிக்கவாசகம் அவளை பாசமாக இல்லை இல்லை நயமாக பேசி அதனை வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சி கொண்டிருந்தார்.. ஆனால் அவளோ ஒரே பிடியாக இடத்தை கொடுக்க முடியாது அது என் தாயின் கோவில் என்று அதே பாட்டினை பாட்டி கொண்டிருக்க.. வீணாக அவள் உடல் தான் புண்ணாகிக் கொண்டு இருந்தது..

ஒரு நேரம் அதிகமாக அடி வாங்கியவள் அப்படியே மயங்கி சரிந்து போயிருக்க பாவம் அவளை தூக்க கூட அங்கு நாதியே இல்லை.. சிறுவயதில் இருந்தே மைத்ரேயிக்கு இருட்டு என்றால் பயங்கர பயம்.. பல நாள் காஞ்சனா அவளுடைய அறையில் இருக்கும் பல்பினை கழட்டி கொண்டு வந்து வைத்துவிடுவார்.. எப்படியெனும் பெண்ணவளை சிறு வயதிலிருந்து இருட்டிற்கு பயமுறுத்தி வளர்க்க வேண்டும் என்று நினைத்துதான் இதை செய்தார்.

அந்த சின்னஞ்சிறு வயதில் தன் அறையில் இருக்கும் லைட்டினை கழட்டிக்கொண்டு சென்ற பிறகு அவளுக்கு பயம் பத்திக் கொண்டு வரும்.. “சித்தி என் ரூம்ல லைட் இல்ல சித்தி…” என்று சிறுவயதில் காஞ்சனாவிற்கு முன்னாள் பாவமாக வந்து நிற்பவளை பார்க்க பார்க்க காஞ்சனாவிற்கு குஷியாக இருக்கும்.

சரி அதுக்கு என்னென்ன பண்ண சொல்ற வந்து லைட் மாட்ட சொல்றியா…” என்று திட்டியவள் போடி போய் இருட்டுல போய் படு…” என்று அதட்ட பாவம் அச்சிறு பெண்ணே பார்க்க பயத்தினால் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அல்லது தன்னுடைய அறையின் கதவை திறந்து விட்டு படுத்துக் கொள்வாள் அல்லது தன்னுடைய சித்தி வைத்திருக்கும் மெழுகுவத்தியில் ஒற்றை தெரியாமல் எடுத்து வந்து பத்த வைத்துக்கொண்டு அந்த ஒரு நாள் முழுவதும் மெழுகுவர்த்தியிலேயே தன்னுடைய இருட்டினை கழிப்பாள்.

இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவளை இப்போது ஒரு பொட்டு வெளிச்சம் கூட வராத அந்த இருட்டு அறையில் போட்டு வைத்திருக்க.. அந்த இருட்டு வேறு இத்தனை நாள் தன்னுடைய சித்தியிடம் வாங்கிய அடி மயக்கம் வேறு ஒன்றாக சேர மொத்தமாக வதங்கியே போயிருந்தாள் அந்த சிறுப்பெண்.

ராகவ்வோ என்ன அறையிலிருந்து எந்த சத்தமுமே வரவில்லையே என்று எட்டிப் பார்க்க அவள் மயங்கி இருப்பது தெரிந்தது..

அய்யோ அம்மா…”என்று ராகவ் பதற…

ம்ச் ஏன்டா எதுக்காக இப்படி பதறுற…”என்று சத்தம் போட்டார் காஞ்சனா..

அம்மா அவ மயங்கிட்டாம்மா…”என்று பதற்றமாக கூறியவனை கண்டு இளக்காரமாக உதட்டை வளைத்தவறோ… ஓஓஓ.. அதுக்கா பதறுற… ஆனா எதுக்காக நீ பதறனும்ஒரு வேலை அக்கான்ற பாசமோ…” என்று நக்கலாக கூறி சிரித்தவரை கண்டு…

அட அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.. அக்காவும் கிடையாது ஒன்னும் கிடையாது அவ செத்துப்போயிட்டானா எப்படி இடத்தை எழுதி வாங்குறது.. அதுனால தான் பதறுறேன்..” என்று கூறிய ராகவுக்கும் கேலி சிரிப்பு சிரித்தான்இத்தனைக்கும் இவனுக்கும் மைத்ரேயிக்கும் ஒன்று பெரிதாக வித்தியாசம் எல்லாம் இல்லை கிட்டத்தட்ட இருவருக்கும் மூன்று மாதம் மட்டுமே வித்தியாசமாக இருந்தது. மூன்றே மூன்று மாதம் மட்டுமே பெரியவளாக இருந்தாள் அவள். இவன் எப்படி அவளை பார்க்கின்றானோ ஆனால் அவளோ ராகவை தன் சொந்த தம்பியாக தான் பார்த்தாள்.. அவனிடம் பாசமாக பேச முயன்றாலும் அவனோ இவளை எதிரியாக அல்லவா பார்த்துவிட்டு செல்கின்றான்.

அப்படிப்பட்ட அவளுக்கு ராகவ் கொஞ்சமும் கருணை பார்க்கவே இல்லை..

அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நம்ம இடத்தை எப்படி மா வாங்குறது.. அதனாலதான் சொல்றேன் உடனே ஏதாவது டாக்டர் வர வச்சி அவளை பார்க்க சொல்லுங்க..” என்று கூற..

மாணிக்கவாசகமும் அதேதான் காஞ்சனாவிடம் கூறினார். எனவே அவர்கள் குடும்ப மருத்துவர் ஒருவரை வரவைத்து பார்க்க ஏதோ அதிர்ச்சியில் தான் மயக்கம் போட்டு விழுந்துட்டா…” என்று கூறி ஒரு ஊசியை போட்டுவிட்டு செல்ல..

அதன் பிறகு மைத்ரேயிக்கோ இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் வாட்டி வதைத்தது.. அதனாலயே காஞ்சனாவின் அடியிலிருந்து அந்த இரண்டு நாளும் தப்பித்தவளால் அடுத்த மூன்றாவது நாளில் இருந்து மறுபடியும் அடி பின்னி எடுத்தார்கள்..

அட இவ்ளோ அடி வாங்கி மாடு மாதிரி நிக்கிறியேடி அந்த இடத்தை எழுதி கொடுத்தா என்ன செத்தா போயிடுவ..” என்று காஞ்சனா வெறுப்பாக கூறமைத்ரேயி அப்போதும் தன்னுடைய அண்ணே இருக்கும் இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை..

என்கிட்ட இவ அடிபட்டே சாகப் போறா..” என்று காஞ்சனா கத்தி கொண்டு இருக்க. அதனை எல்லாம் நினைத்தவாறு நின்று கொண்டிருந்தார் மாணிக்கவாசகம்..

எப்படி இந்த கழுதைக்கிட்டு இருந்து அந்த இடத்தை எழுதி வாங்குவது என்று யோசனை செய்து கொண்டே இருந்தார் அவர். ரமணியை வைத்தும் மைத்ரேயியை எவ்வளவோ பிளாக்மெயில் செய்து விட்டனர்.. ஆனால் ரமணியோ தன்னுடைய பேத்தியிடம் உறுதியாக கூறியிருந்தார் அதுவே அவளிடம் பழிக்காமல் போக இப்போது என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவில்லை..

வாட் மிஸ்டர் மாணிக்கம்.. பிசினஸ் பத்தி பேசலாமா..”என்று திமிராக கேட்ட நிவாஸோ… “அந்த இடம் எனக்கு வேணும்நான் அங்க பெரிய பேக்டரி ஆரம்பிக்கணும். உன் இடம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… டீல் பேசுவோமா…” என்று அந்த சேட்டோ ஹிந்தியும், தமிழும் மாற்றி மாற்றி பேசஅது ஓரளவுக்கு புரிந்து கொண்ட மாணிக்கவாசகத்தின் முகம் முழுதும் புன்னகை அப்பிக்கொண்டது.

அந்த இடத்த தரதுக்கு நாங்க தயாராதான் இருக்கோம்.. ஆனா கொஞ்சம் டைம் வேணும்..” என்று அவர் இழுக்க

அதனை கேட்டு புருவம் சுருக்கிய நிவாஸோ… ம்ச் லுக் மேன் எனக்கு டைம் எல்லாம் இல்ல இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல நான் ஃபாரின் போறேன் அதுக்குள்ள அந்த இடத்துல பேஸ்மெண்டாவது போட்டுட்டு போனும்… ஆர் யூ அன்டர்ஸ்டான்ட்..” என்று அவர் ஸ்ட்ரிக்ட்டாக கூற…

மாணிக்கவாசகம் தான் அதில் தலையை சொரிந்து கொண்டிருந்தார். இதை எல்லாம் கேட்டவாறே சேட்டிற்கு ஜூஸை கொடுத்தவாறு வந்து நின்ற காஞ்சனாவிற்கு கேட்க கேட்க வெறியாக வந்தது…

எல்லாம் இவளால வந்தது..” என்று அவளை திட்டியவாறே வேகமாக மைத்ரேயியை வைத்திருக்கும் அறைக்குள் ஓடியவரோ.. உள்ளே படுத்து அழுதவாறே இருந்த பெண்ணவளை போட்டு வெளுத்து எடுத்தார். “ஆஆஆ சித்தி என்ன விட்டுடுங்க சித்தி ப்ளீஸ் சித்தி…” என்று அவளோ கெஞ்சிக் கொண்டிருந்தாள்

பொட்டக் கழுத ஒரு இடத்தை எழுதி கொடுக்கிறதுக்கு உன் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கணுமாடி..” என்று மறுபடியும் எகிறிக் கொண்டே இருக்கபாவம் பெண்ணவளின் உடலோ அடிவாங்காத இடமே இல்லை என்பது போல தான் ஆயிற்று..

இதனை ஹாலில் உட்கார்ந்து மாணிக்கவாசகத்திடம் திமிராக பேசிக்கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டும் இருந்த சேட்டிற்கு ஏதோ ஒன்று தவறாக பட… உள்ள என்ன நடக்குது.. ஏன் ஒரே நாய்ஸா இருக்கு…” என்று கேட்க மாணிக்கவாசகம் திருத்திருவென விழித்துக் கொண்டிருந்தார்… அதுஅது ஒன்னும் இல்ல சார்… அது…” என்று அவர் இழுக்க.

நிவாஸோ உள்ளே இருந்து வந்த அழுகை சத்தம் கண்டு புருவம் சுருக்கியவறோ…”ம்ச் உள்ளே என்ன நடக்குதுன்னு கேட்டேன்..”என்று கேட்டவாறே வேகமாக எழுந்தவர் அந்த அறைக்குள் நுழைய.. அங்கு பூப்போன்ற முகத்துடன் முகம் எல்லாம் கன்றி சிவந்து போய் கிடக்கும் பெண்ணவளை பார்த்த வேகத்திற்கு அப்படியே அசையாமல் நின்று விட்டார்.

காஞ்சனாவோ திடீரென்று உள்ளே நுழைந்த நிவாஸை அவர் எதிர்பார்க்கவே இல்லை… அப்படியே தன்னுடைய கணவனை பார்த்து முறைக்க அவரோ கையை விரித்தவாறே நின்று இருந்தார்…

சார் அது ஒன்னும் இல்லை வாங்க நம்ம வெளியில போய் பேசுவோம்..” என்று காஞ்சனா அந்த சேட்டினை அந்த அறையில் இருந்து வெளியேற்ற முயல அவரும் சட்டென்று கையை காட்டி நிறுத்துமாறு கூறியவர் எதுக்காக இந்த பொண்ண போட்டு இவ்ளோ அடிக்கிறீங்க..” என்ற சேட்டின் பார்வையோ அந்த பெண்ணை விட்டு அங்கும் இங்கும் அசையவே இல்லை.

அப்படியே அவள் உடலை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் மனக்கண்ணிலோ மைத்ரேயியே அப்படியே ஒட்டிக்கொண்டாள். “அது ஒன்னும் இல்லை சார்…”என்று மாணிக்கவாசகம் இழுக்க..

காஞ்சனாவோ அட நீ சும்மா இருய்யா…” அதட்டலை போட்டவளோ.. “பின்ன என்ன சேட்டு இந்த கழுதையை அடிக்காம என்ன பண்றதுஇந்த கழுதை பேர்ல தான் நீங்க பாக்க வந்த இடமே இருக்கு.. அந்த இடத்தை இதோ நிக்கிறாறே இவரு பேர்ல எழுதிக் கொடுனு கேட்டதுக்கு இவ என்னவோ முடியவே முடியாதுனு அடிச்சு பேசிகிட்டு இருக்கா… ஏன்னு கேட்டா அவங்க அம்மாவோட சமாதி அங்க இருக்காம்அதனால அத தரவே மாட்டேன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கா… ம்ச் நாங்களும் எவ்வளவோ அடிச்சு பாத்தாச்சு சொல்பேச்சே கேட்க மாட்ற…” என்று காஞ்சனா அவள் மீது குற்றத்தை அடிக்கியவாறே கூற.

அதை கேட்ட அந்த சேட்டின் மூளையிலோ ஏதோ ஒரு திட்டம் பளபளத்ததுபெண்ணவளை கண்டு ஒரு வஞ்ச சிரிப்பு சிரித்த அந்த சேட்டோ திரும்பி மாணிக்கவாசகத்தை பார்த்து… “அட நீயெல்லாம் மனுசனா… அதுக்காக ஒரு சின்ன பொண்ண போட்டு இப்படித்தான் அடிப்பீங்களா…” என்று அந்த அறையை அதிர கத்தியவரோ வேகமாக சென்று மைவிழியை தூக்க முயலமைத்ரேயியோ அவரைக் கண்டு இன்னும் மிரண்டே போனாள்…

ஏன் என்றால் அவர் உள்ளே வந்ததிலிருந்து தன்னை பார்த்த அவரின் பார்வை அனைத்தையும் பார்த்து அவன் நல்லவனாக அவளுக்கு தோன்றவே இல்லை… அதும் தன் உடலில் மேயும் அவனின் பார்வை பாவையவளோ கூனிக்குறுகிப்போனாள்..

தன் கையை தட்டிவிட்ட பெண்ணவளை கண்டு.. “அட என்னமா என்னாச்சு என்ன பார்த்து ஏன் பயப்படுற..”நயமாக பேசிய சேட்டினை அவளோ தன்னை தொடவே விடவில்லை.. அதனை பார்த்த அவருக்கும் நல்ல விவரமான பொண்ணு தான் என்று அவளை மெச்சிக்கொண்டவறோ

மாணிக்கவாசகத்தை பார்த்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வெளியில போய் பேசலாமா..” என்று கேட்கமாணிக்கவாசகமோ புரியாமல் பார்த்தவர் சரி என்று அந்த சேட்டினை அழைத்துக் கொண்டு வெளியில் வர

காஞ்சனாவோ மைத்ரேயியை அனல் பார்வை பார்த்தவாறே… ம்ம் உனக்கு ரொம்ப திமிருடி உடம்பு ஃபுல்லா திமிர் ஆயிடுச்சு இது எல்லாத்தையும் ஒரே அடில குறைக்கிறேன் இரு….” என்று அதட்டியவாறு அந்த அறையை விட்டு வெளியில் சென்று விட்டார்.

இங்கு மைத்ரேயியோ அழுது கொண்டிருக்க.. அடுத்து அவள் தலையில் இடி எல்லாம் என்ன வானமே இடிந்து விழப்போகிறது என்று பாவம் அவளுக்கு தெரியாமலே போனது.

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!