அன்னமே 46, 47

4.9
(14)

அன்னமே 46, 47

தங்கங்களே இன்னைக்கு அத்தியாயம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். fb ல அப்டேட் ஒரு முறைதான் தர முடியும். பட் என்னோட வாட்சப் சேனல்ல அப்போ அப்போ link சேர் பண்ணிடுவேன். முடிந்தால் அங்கே ஜாயின் பண்ணிக்கோங்க.

சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..!
அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..!
கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..!
முடியுமே..!
ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…!

சத்தியசீலன் அன்னத்தின் அங்கங்களில் வேட்கையுடன் இரு கரம் கொண்டு உணர்ந்தான். இது போதாதே வேக மூச்சுடன் பின் அழகை உள்ளங்கையால் வதைத்தான்.

ஒரு கரம் அங்கே தேங்க அடுத்தது இடையில் இருந்து மேலே சென்று வதைக்க, அங்கே எச்சில் தடம் பதிக்க அவன் அதரங்கள் ஊர்ந்து சென்றது.

தேகம் முழுவதும் அவன் ஆளுமைக்குள் அடங்கி அடிமையாய் சரண் புக, வலியும் இன்பமாய் போக அவன் மார்பில் அடர்ந்திருந்த ரோமங்களை விரல்களால் சுருட்டி இழுத்தாள்.

அவன் மோகக்காய்ச்சல் அவளையும் பிடிக்க பற்களால் அவன் மார்பெங்கும் கடித்தாள்.

அவள் இடையை தன் உடலோடு சேர்த்து அடக்கினான் அவளை.

சத்தியசீலன் அணைப்பில் சிக்கிய அன்னம் விட்ட அனல் மூச்சில் அவனுக்கு தேகம் மொத்தமும் மோகத்தீ பற்றி எரிய அவளை அடைந்து விட தவித்தான்.

அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க செய்தவன் விழிகளால் அவள் விழிகளுக்குள் ஊடுருவினான். அவன் பார்வைக்கு பதிலடி தர நாணம் வந்து தொலைக்க இரு கரத்தாலும் அவனைக் கட்டி மார்பில் முகம் புதைத்தாள் அன்னம்.

மனைவியாய் அன்னம் அடுத்த கட்டம் போக தயாராகத்தான் இருந்தாள். பொண்டாட்டின்னா இதுவும் கடமைதான் என தெரிஞ்சது அவளுக்கு.

ஊதக்காத்து குளிருல அவன் தேக வெம்மை இதமா இருந்துச்சு, ஒட்டிக்கொண்டாள் அவனோடு.

அவள் இடையோடு கரம் வைத்து காட்டுப்புயலா ஆவேசமாய் சுற்று வளைத்து அங்கேயே அவளை அறிய முயற்சி செய்ய,
தளிர் மேனி அஞ்சி நடுங்க அவனுக்குள் புதையுண்டாள் அச்சமும் ஆர்வமுமா.

பலத்த காற்றுக்கு தேங்காய் தொப்பென்று விழும் சப்தம் காதில் விழ, அவளை விடுவித்தவன், தப்பு செஞ்சவன் போல நெற்றியில் அரைந்து, அவள் பார்வையை தவிர்த்தான்.

“என்னாச்சு” அவன் பக்கத்துல வந்தாள் அன்னம்.

அவள் நெருக்கத்த பாம்பை கண்டவன் கணக்கா நகர்ந்து விலகி,
“அட சாவி இங்க இருக்கு” அவள் கையை விடுவிச்சிட்டு அதுவரை நடந்தது எல்லாமே கனவு என்று இல்லாத சாவிய நோக்கி அவன் போவ.

“என்னாச்சுன்னு கேக்கறேன்” அவன் பக்கம் போவ.

வெரசா வீட்டுக்கு உள்ள போய்ட்டான் சத்தியசீலன்.

தன் தொடுகையை அவன் தவிர்ப்பது தெள்ள தெளிவா தெரிய செருப்படி வாங்கிய மாதிரி ஆச்சு அவளுக்கு.

வீட்டுக்குள் போனவன் நிலை எப்படியோ, இங்க நின்ன அன்னத்துக்கு பாதியில கைவிடப்பட்ட நிலை. அவள் ஆசைய தூண்டிவிட்டுட்டு பாதியில விட்டுப் போனவனை என்னாச்சுன்னு கேட்கவும் அவளுக்கு நாணம் தடுத்துச்சு.

கலைந்து தரையில் கிடந்த முந்தானைய எடுத்து போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளே போனாள்.

இதுக்கு எதுக்கு அம்புட்டு கஷ்டப்பட்டு கட்டிக்கணும், காப்பாத்தணும். இப்ப விலகி விலகிப் போவனும்னு என்ன அவசியம்? கண்களில் கண்ணீர் அரும்பியது.

புதுசா வாங்கிப்போட்ட கட்டில் ஒய்யாரமா கெடக்க, அதை வெறிச்சுப் பாத்தவ அதில படுக்காம தரையில விரிச்சுப் போட்டு படுத்தாள்.

தொட்டாவே பாவம்னு விலகிப்போற மனுஷனுக்கு பக்கத்துல படுத்தா மட்டும் ஆவுமா. எதுக்கு தேவையில்லாம தொந்தரவு பண்ணிக்கிட்டுன்னு நெனைக்க நெனைக்க கண்ணீர் அரும்ப எத்தன தடவ துடைக்க, முந்தானையை இழுத்து முகத்தை மூடி படுத்தாள்.

பாதுகாப்பை ஒரு முறை உறுதி செஞ்சுட்டு உள்ள வந்தவன் அன்னம் தரையில படுத்திருக்க பாத்து, ஒன்னும் கேக்காம சட்டைய கழட்டி மாட்டினான்.

அவன் வந்தது தெரிஞ்சும் அசையாம படுத்திருந்த அன்னத்துக்கு அவன் இருக்கற சத்தம் இல்லாம போவவும் ‘அப்ப நாம நெனச்சதுதான் சரி. பக்கத்துல படுக்கறது கூட புடிக்கல இவருக்கு’ கண்ணை துடைத்தாள்.

அவள் மீது ஏதோ இதமாய் படரவும் அசையாம கவனித்தாள் என்னவென்று. அவன் போர்த்தி விட்டிருந்தான் அவளுக்கு.

அவ பக்கத்துலயே விலகிப் படுத்தான் வெறும் தரையிலயே.

அவன் தன்னை விட்டுக் கொடுக்காம இருக்கான்னு நெஞ்சுக்குள் நிம்மதி பிறந்தது அவளுக்கு.

எதையும் விரிக்காம படுக்கறார் தரை சில்லுன்னு இருக்குமே அவளுக்கு அவன் மேல அக்கறை வந்துச்சு.

அவ பக்கத்துல படுத்தவன் “படுக்க ஆவாத கட்டிலும் மெத்தையும் எதுக்கு. வெளியே தூக்கி போட்டு எரிச்சுப்புடலாமா?” அமைதியா அவன் குரல் ஒலிக்க,

அத்தன வசவு வாங்கிட்டு வாங்கி போட்டது எரிக்கறதுக்கா, எந்திரிச்சு உக்காந்து அவனை பாத்தாள்.

“அனாவசியமா பேசிட்டு இருக்காத சொல்லிட்டேன். அம்புட்டு காச போட்டு வாங்கிட்டு எரிக்கறேன்னு சொல்ற?”

“நீ படிச்சவதான?” கேட்டான்.

“இப்ப எதுக்கு அது?” புரியல அவளுக்கு.

“நீ பேசறத நீயே யோசி தெரியும்” அவனும் எந்திரிச்சு உக்கார.

“இப்ப என்ன இங்கயே படுக்கறதா இல்ல கட்டில்லயா?” அவகிட்ட கேட்டான்.

அவனுக்கு பதில சொல்லாம எதுக்கு இங்க வந்து படுத்தோமுன்னு அவள் சிந்தித்தாள்.

அவனுக்கோ செலவு பண்ணிட்டான்னு சண்ட போட்டதுக்கு கோச்சிட்டு தனியா படுக்கறான்னு நெனச்சிட்டான்.

“போய் படு வரேன்” அவனை போகச் சொல்லிட்டு எந்திரிச்சவள் லைட்ட அணைச்சிட்டு கட்டில்ல வந்து படுத்தாள்.

அத்தனை இடம் இருக்க கட்டில்ல ஓரமா படுத்திருந்த அவன் பக்கத்துல உரசுராப்புல படுத்தாள் அன்னம். ஒருவேள அவனா நெருங்க தயக்கமா இருந்தாலும் நாமளா போனா அது மறையுமோன்னு நெனச்சாள்.

அவள் தேகம் உரச, எந்திரிச்சான், “எனக்கு தூக்கம் வருது அன்னம். நாளைக்கு தலைக்கு மேல வேல கெடக்கு. உங்கூட ராவு முச்சூடும் படுத்து எந்திருச்சி விளையாண்டா காலம்பற நேரத்துல எந்திரிக்க உடம்பு வளையாதுடி. வெளியே கூட போய் படுத்துக்கறேன் என்னை விட்டு தள்ளிப் போய் படு அன்னம்” சொன்னான்.

“தள்ளிப் போறதா?” திட்டுக்கிட்டு கேட்டாள்.

அவளை பார்த்தவன், “சொல்லி உன் மனச காயப்படுத்த வேண்டாமேன்னு பாக்கறேன். என்ன விட்டு தள்ளி இரு” சொன்னான் அவள் முகத்த பாக்காம.

“என்னாச்சு நா என்ன தப்பு பண்ணே” கேட்டாள். புருஷன் தள்ளிப் போன்னு சொல்றது எம்புட்டு அசிங்கம் ஒரு பொண்ணுக்கு அன்னத்துக்கு முகமெல்லாம் அவமானத்துல சுண்டிப் போச்சு.

திரும்ப படுத்தவன், “நா பொறுக்கிதான் முரடந்தான் அன்னம். ஆனாக்கா பொம்பளை பொறுக்கி இல்ல. உன்ன கட்டிக்கிட்டு நல்லா வச்சிக்க ஆசைப்பட்டேன். அம்புட்டு ஆச உம்மேல. என்னடா அடிச்சு துன்புறுத்துனவனுக்கு ஆசை காதலான்னு உனக்கு தோனும். ஆனா அப்பவும் இப்பவும் நா தேடுன ஒரே பொண்ணு நீதான் அன்னம்” வெறுமையா சொல்லிட்டு,

“ஒரு நா படுத்தா உன் மேல இருக்க ஆச வடிஞ்சு போவுமுன்னு சொன்னடி நீ. நீ சொன்னா மாதிரி அவுசாரிகூட படுக்கத்தான் ஆவேன் நா. உன்ன மாதிரி கோவில் செலைய தொட்டு பாக்க கூட தகுதி இல்லடி எனக்கு”

அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கொல்லாமல் கொன்னது. அதெல்லாம் தன் வாய் மொழியாக வந்தவைன்னு பட அவனையே வெறிச்சு பார்த்தாள்.

“நா கோவத்துல சொன்னது அது. இன்னும் மறக்கலையா” கண்ணீர் குரலில் கேட்டாள்.

“மறக்க அது ஒண்ணும் கணக்கு பாடம் இல்லையே புள்ள. வாழ்க்கைகாக உங்கிட்ட கெஞ்சிட்டு நின்ன நேரம் அது. பிடிக்காத ஒருத்தன் கூட பொழைக்க நா என்ன வக்கத்து போனவளான்னு கேட்டு எம்மனச நொறுக்கிட்ட புள்ள” இரைந்தான்.

“எதுக்கு என்ன கட்டிக்கிட்ட. அப்படியே போ வேண்டியதுதான. இப்படி கட்டிக்கிட்டு வந்து நடந்தத சொல்லிக் காட்டனுமுன்னு என்ன வந்துச்சு” அவளும் பதிலுக்கு சீற.

“உங்கண்ணன் எங்கால்ல விழுந்துட்டான். அவனுக்காக புள்ள. கட்டிக்கிட்டாச்சு நீ ஒரு ஓரமா நா ஒரு ஓரமா ஒரே வீட்டுக்குள்ள பொழைப்போம்” சுளுவா சொல்லிட்டான் ஆனா முடியுமான்னுட்டு யோசிக்கல.

“எனக்கு உன்ன புடிக்கும்” அன்னம் தவிப்போடு தங்கள் வாழ்க்கைய சீர் படுத்த நெனச்சாள்.

“எப்ப இருந்து” அவன் கேள்வி.

“நீ என் கழுத்துல தாலி கட்டுன அப்ப இருந்து. அதுக்கு முன்ன உன்ன பத்தின நெனப்பு குழப்பமா வந்துட்டு போச்சு. புரியல அப்ப” அன்னம் பதிலுறைத்தாள்.

“இல்ல அன்னம் உனக்கு இன்னும் குழப்பமாத்தான் இருக்கு. தாலி கட்டிக்கிட்டதுக்காவ என்கூட வாழ பாக்குற. உன் கண்ணுல காதல் இல்ல” மறுத்தான் அவளை.

“அப்படி இல்ல” அன்னம் மறுத்தாள்.

“உம் மனசுல நா வந்துட்டேன்னா எனக்கே தெரியும் அன்னம். அப்ப முடிவெடுப்போம் நாம ஒண்ணா இருக்கறத பத்தி” சொன்னவன் “இப்ப தூங்கு. மனச போட்டு குழப்பிக்காத. குறை மனசோட வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லதுக்கில்ல அன்னம்” கண்களை மூடினான்.

அவனை விட்டு தள்ளி போய் படுத்த அன்னம் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராம அழுதாள். தன் விதிய நெனச்சு.

புருஷன் தள்ளி வைக்கறது எம்புட்டு கொடுமைன்னு அன்னத்துக்கு புரிய வலிச்சது அவளுக்கு.

 

அத்தியாயம் 47

நடைமுறையில இல்லாத அதிசயமா காலம் கூட மாறுச்சு. மார்கழி மாசத்துல மழை கொட்டு கொட்டுன்னு கொட்ட, வதவதன்னு சகதியா கெடந்துச்சு. நல்லவேள இளவரசன் வாயில்லா பிராணிக்கு பாவம் பாத்து பட்டிக்கு சிமெண்ட்டு சீட்டை கூரையா போட்டு விட்டான். இல்லாங்காட்டி அதுங்களுக்கும் அவதி அதைப் பாத்து வெசனப்பட்டுட்டே கெடக்க வேண்டியதுதான். 

 

மாடு ஒண்ணு செனைக்கு நிக்க பக்கத்துல இருக்க கால்நடை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்தார் கண்ணப்பன். ஊரு மக்க நல்ல மனுசங்களா இருக்க ஒத்த வார்த்த ஏப்பா என்னப்பா இப்புடி ஆவிடுச்சுன்னு கேக்கல யாரும்.

 

பெருசுங்க மனசு கேக்காம செவ்வந்திய பத்தி கவலைப்படாதப்பு அவ வாழ்க்கை நல்லாருக்கும்னு ஆறுதலா பேசி அனுப்பினாங்க அவரை.

 

எப்பயும் போல அவர்கிட்ட சகஜமா பேசப்புடிக்க இருக்க, மனசுக்கு ஆறுதலா போச்சு அவருக்கு.

 

வீட்டுக்கு வந்தவரோட தெளிஞ்ச முகத்த பாத்த அமுதாக்கு, ஆறுதலா இருந்துச்சு. வெளியே போற மனுசன யாராச்சும் மனசு நோவ பேசிப்புடுவாங்கன்னு பயந்து வாசல்லயே நின்னுட்டிருந்தார் அமுதா.

 

திரும்ப வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டார் கண்ணப்பன்.

 

தை மாசம் பளிச்சின்னு விடிய, கண்ணப்பன் வீட்டுக்கும் அப்பத்தான் வெளி உலகம்ங்கிறது ஒண்ணு இருக்குன்னு பட்டுச்சு. போனத நெனச்சு கவலைப்பட்டுட்டே கெடந்தா பொழப்ப ஆரு பாக்கறது.

 

மகளைப் பத்தின கடமை முடிஞ்சுதுன்னு மூச்சை இழுத்து வெளியே விடறதுக்குள்ள இல்லைன்னு ஆவ. அதையே நெனச்சு அழுது மனசை போட்டு வாட்டியெடுத்ததுதான் மிச்சம்.

 

உழவுக்கு ஆள் பத்தலைன்னு பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிட, இனி இப்படியே இருந்தா வேலைக்கு ஆவாதுன்னு, “கெளம்பி வரேன். நீ முன்ன போ” குரல் கொடுத்தார் கண்ணப்பன்.

 

“வரேன்னு சொல்லிப்புட்டு கெடையிலேயே கெடக்காத கண்ணப்பா. காலம் இப்படியே போவாது, உம் மவளுக்கு நல்ல காலம் வரும். அதை மனசுல வச்சுட்டு எந்திரிச்சு வேலையப் பாரு” முதியவராய் கண்ணப்பனை எழுப்பிய கையோட

அமுதா வாசப்படியில உக்காந்து கீரைய ஆய்ஞ்சுட்டு இருக்க பாத்தவர்

 

“யே கண்ணு அவனுக்குத்தான் புள்ள பத்துன வெசனம் வேல வெட்டி குடும்பம்ன்னு உறைக்காம இருக்கான். உனக்கென்ன புத்தி கொமட்டுலயா இருக்குது. எங்க செவ்வந்தி? அவளையும் எழுப்பி விடு. வேலை வெட்டின்னு இருந்தாத்தான் மனசுக்கு தெளிவு வரும்” னு கடவுளா அனுப்பி விட்ட மாதிரி அவர் போட்ட சத்தம் அந்த குடும்பத்துக்கே தெம்பு குடுத்துச்சு.

 

கண்ணப்பன் அப்பயும் படுத்தே கெடக்க, “இப்ப எந்திரிக்கறயா இல்லையாடா. வந்தன்னா நாலு அடி போடுவேன் பாத்துக்க” அவன் பக்கத்துல வந்து உரிமையா கையோங்கிட்டு நிக்க.

 

“நீ கெளம்பி போ பெருசு. மேலுக்கு சுடு தண்ணிய ஊத்திட்டு வரேன்” எந்திருச்சு உக்காந்தவருக்கு காப்பி தண்ணி வைக்க ஓடினார் அமுதா.

 

அவருக்கே இப்படி ஊமையாட்டம் இருந்து இருந்து கோட்டி புடிச்சதாட்டம் ஆவிடுச்சு. இப்படியாச்சும் நல்ல காலம் பொறக்கட்டுமென்னு நெனச்சவர் இன்னைக்கு கோயிலுக்கு செவ்வந்திய கூட்டிட்டு போய் விளக்கு போட எண்ணினார்.

 

அமுதா அரைமனசா எந்திரிச்சுப் போயி அண்டாவுல தண்ணிய ஊத்தி காய வச்சார். யாரோ குளிக்கரவங்க குளிக்கட்டும். நாம குளிச்சுட்டு கோயிலுக்காவது போவோமுன்னு நெனச்சவர், அடுப்பை பத்த வச்சுட்டு வர.

 

செவ்வந்தியை பாத்து மனசு வெந்தவர் விளக்குமாறை எடுத்துட்டு வந்து ரெண்டு அடி போட்டே விட்டார்.

 

“கூறு கெட்ட சிறுக்கி மவ. என்ன சாவடிக்கறதுக்குன்னே பொறந்து தொலைச்சிட்ட. பொறந்த அன்னைக்கே செத்து ஒழிய வேண்டியதுதானே. கண்ட கண்ட நாய்ங்ககிட்ட உங்கப்பன் மானங்கெட்டு போய் நிக்கறான்” அதுவரை அடக்கி வச்ச பொறுமை மகள் செய்த வேலையில் காற்றாக பறந்து போவ,

 

ஆவேசமா அவளை அடிச்சார் அமுதா. தடுக்காம அப்படியே நின்னுட்டா செவ்வந்தி.

 

இவங்களுக்கு தான் வாங்கி கொடுத்த அவமானத்துக்கு இந்த அடியெல்லாம் பத்தாதுன்னு நெனச்சவளுக்கு நெருப்பு வச்சு கொன்னாலும் பரவாயில்லைன்னு தோணுச்சு.

 

“ஏய் புள்ள எதுக்கு அடிக்கற அவள” கண்ணப்பன் ஓடி வந்து தடுக்கலைன்னா செவ்வந்தி உடம்பு தடிச்சுப் போயிருக்கும் அம்புட்டு ஆத்திரத்துல இருந்தார் அமுதா.

 

“என்ன ஆவனும். இந்த சிறுக்கிக்கு அப்பனும் ஆத்தாலும் செத்துட்டாங்கன்னு நெனப்பாட்டம் இருக்குய்யா. என்ன வேல பண்ணிப்புட்டா பாருய்யா” அமுதா தலையில் அடிச்சுக்கிட்டு அழுதார்.

 

“அம்மாம்மா அப்படி பேசாதம்மா. நா போய் அப்படி நெனப்பனா. நாந்தேன் சாவனும். என்னாலதான் உங்களுக்கு இம்புட்டு அவமானம். கடனுன்னு சேர்ந்துடுச்சு. நீ சொன்ன மாதிரி நா ஒண்ணுத்துக்கும் ஆகாத கழுதைம்மா” செவ்வந்தியும் அழுதாள்.

 

அவள் தலைமுடிய கொத்தோட புடிச்ச அமுதா, “பின்ன என்னடி கோட்டி சிறுக்கி. ஒரு நாள்ல அத்துப்புட்டு போனவனுக்காக எம்மனச சாகடிப்பியாடி விளங்காத கழுத. மாட்ட அடிக்கற மாதிரி அடிக்கறேன். எரும மாதிரி நிக்கற. எதுக்கெடுத்தாலும் சிலுப்பிட்டு நிக்கறவதான் எம்மவடி” ஆத்திரம் அடங்காம திரும்ப அடிக்க போவ.

 

“பின்ன என்னடி உன்ன இத்தன வருசமா ஒரு வேல வாங்காம வளத்துனவடி நானு. இத்தன நாளா பாத்தவ இனிமேட்டு பாக்க மாட்டனா. சீமாற கையில தொட விட்டிருப்பனாடி ஒரு நாளாச்சும். இன்னைக்கு மகாராணி வேலைய நெட்டி தள்ளுறீங்களோ” அமுதா அவளை அடிக்க பாய.

 

“அட வா புள்ள. எப்ப பாரு அவகிட்டயே சண்டைக்கு நில்லு” கண்ணப்பன் அமுதாவ இழுத்து நிறுத்தினார்.

 

“இத பாரு புள்ள முன்ன எப்படி இருந்தியோ அப்படியே இனிமேட்டு இரு. உன்ற வாழ்க்கைய அடுத்தவன் கையில விடாத கண்ணு. நீ என்னைக்கும் என்ற மவதேன். ஒரு நாயி எம்மவள கைநீட்டி பேச உட மாட்டேன் சொல்லிப்புட்டேன்” அமுதா சொல்ல அவளை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் செவ்வந்தி.

 

“இனிமேட்டு யாரும் அழாதீங்க. போதும் அடுத்தது என்னன்னு பார்க்கலாம்” இளவரசனும் சொல்லிட்டான் உறுதியாக.

 

கண்ணப்பனும் கருப்புச்சாமியும் விஷயத்தை ஆறப்போட நெனச்சு விட்டுட்டாங்க. ஆனாக்கா பெருசுங்க எப்படியோ அவங்க வாழ்க்கைய காப்பாத்தி தர நெனச்சாங்க. ராமாயி கெழவி ஆசையாச்சே செவ்வந்தியை பேரனுக்கு கட்டி வைக்கணும்னு. அது நடையா நடந்தது ஊருக்கே தெரியுமே.

 

பங்கும் பங்காளிங்க மாமன் மச்சான் முறையில இருக்க சொந்தப்பந்தம் எல்லாம் அப்பத்தா செத்து நாப்பதாவது நாலு சாமி கும்பிட வந்தாங்க கருப்புச்சாமி வீட்டுக்கு.

 

சாமி கும்பிட எல்லாம் கெளம்பிட்டாங்க.

 

பெருசுங்க மட்டும் காத்தாட உக்கார்ந்து பேசிட்டிருக்க கருப்புச்சாமியை கூப்பிட்டு உக்கார சொன்னார்கள்.

 

“வந்து உக்காரு கருப்பா. பேச வேண்டியத பேசித்தான ஆவனும்” னு வம்படியா இழுத்து விட்டாங்க பேச்சில.

 

ஓடியாடி எல்லாத்தையும் பாத்துகிட்டவன் வியர்வையை துடைச்சுட்டு அவங்களுக்கு எதிர்ல அமர்ந்தான்.

 

“அப்புச்சி சொல்லு. பேரனுக்கு என்ன வச்சிருக்க?” விளையாட்டா கேட்டுட்டே பணிவா அவர்கிட்ட கேட்டான்.

 

“எம் பேத்தியையே உனக்கு தாரை வார்த்துட்டோமே கருப்பா. வைரத்தையே கையில உன்னை நம்பி கொடுத்துட்டோம். வச்சு நல்லபடியா பாத்துப்பன்னு. ஆனாக்கா வைரத்த அறுத்துப் பாக்க நெனைக்கயேப்பா” பெருசு வேதனையோட கேட்டது.

 

புரிஞ்சுக்கிட்ட கருப்புச்சாமி தலை குனிஞ்சுட்டான். யாரோ வாய் மீறி பேசட்டும் வீட்டு ஆம்பளையா செவ்வந்திக்கு புருஷனா அவளுக்கு துணையா நிக்காம போய்ட்டானே.

 

“கருப்பா” பெருசு தயங்க. அறிவில்லாதவனுக்கு எடுத்துச் சொல்லி, மிரட்டி வாழ்க்கை இதான்னு சொல்லலாம். ஆனா கருப்பன் பொறுப்புள்ள மனுஷன் இப்படி பண்ணது அவங்களுக்கு நம்பவே முடில.

 

“அதான் அன்னைக்கே முடிஞ்சதே. அந்த புள்ள பாத்திரம் பண்டம் சீரு எல்லாம் அனுப்பி வைக்கறோம். மொத்தமா முடிச்சுக்கலாம் எல்லாத்தையும்” ஆம்பளைங்க பேசற சபையில சுலோச்சனா வாயடங்காம பேசினார்.

 

“என்ன கருப்பா” பெருசு குரல் ஓங்க.

 

தாயை கண்டுக்காம “என்ன நம்புங்க. உங்க மனசு போல நடக்கும் எல்லாம்” னு சொல்லி அவங்களை நிம்மதியா அனுப்பி வச்சான் கருப்புச்சாமி.

 

செவ்வந்திய பாக்க அவன் மனசு துடிக்க அந்தப் பக்கமா போவ நெனச்சவனுக்கு சாமியே வரம் தந்த மாதிரி அவளே எதிர்க்க வந்தாள்.

 

வீட்டுலயே இருந்து மூளை இத்துப் போன மாதிரி ஆச்சு செவ்வந்திக்கு.

தாவணியையே கட்டிக்க, கழுத்துல தேன் கலர் பாசிமாலையை அணிந்தாள். அதை போட்டுக்கும் போதே அழுகை உதட்டை விட்டு வெளியே வர, மஞ்சள் சரடு இல்லாத கழுத்தை வருடினாள் வேதனையாக, விம்மலை உதட்டை மென்று அடக்கினாள். எதுக்கு அழுவனும் என்னை வேண்டாமுன்னு அத்துவிட்டவங்கதான் வருந்தனும். எனக்கு என்ன குறை? நெனச்சவ புடிவாதமா அழுகைய அடக்கினாள்.

 

அவளை பார்த்த அமுதா ஒண்ணும் சொல்லல. சேலைய கட்டுனா மட்டும் போனது வரப் போவுதா இப்ப விரக்தியா நெனச்சுட்டு அவ காணாம கண்ணீரை துடைச்சார்.

 

“அம்சாக்கா ஊடு வரைக்கும் போயிட்டு வரேன்மா. கூப்பாடு போட்டுட்டு இருக்காத காணமுன்னு. நேரமாவும் வரதுக்கு. அப்பனை வரச் சொல்லு பொழுது சாயறப்ப” சொல்லிட்டு வீதியில இறங்கி நடந்தாள் செவ்வந்தி.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!